பாடல் பிறந்த கதை
பாமாலை பாடல்:
தூயா தூயா தூயா சர்வ வல்ல நாதா
இப்பாடலின் ஆசரியர்:
ரெஜினால்டு ஹீபர்
இவர் 1783 முதல் 1826 வரை வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேதவசனங்கள்:
ஏசாயா 6: 1 – 5
வெளிப்படுத்தல் 4: 1 – 11
பாமாலை பாடலின் வரிகள்:
1
தூய தூய தூயா! சர்வ வல்ல நாதா!
தேவரீர்க்கெந்நாளும் சங்கீதம் ஏறுமே
தூய தூய தூயா! மூவரான ஏகா!
காருணியரே தூய திரியேகரே!
2
தூய தூய தூய! அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் தம்கிரீடம் வைப்பரே
கேரூபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று
இன்றென்றும் வீற்றாழ்வீர், அநாதியே!
3
தூய தூய தூயா! ஜோதி பிரகாசா
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக்
காண யார் வல்லோர்?
நீரே தூய தூயர், மனோ வாக்குக் கெட்டா
மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்
4.
தூய தூய தூயா! சர்வ வல்ல நாதா!
வானம், பு+மி, ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே
தூய தூய தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே! ஆமென்.
பாடல் பிறந்த கதை:
ரெஜினால்ட் ஹீபர் என்பவர்
21.04.1783 ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர்கள் பெற்றோர் சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையில்
இருந்தார்கள். சிறுவயதிலிருந்தே வசதி வாய்ப்புகளுடன்
இருந்த இவர் தெய்வ பக்தி நிறைந்தவராகவும் வளர்ந்து வந்தார். தனது ஐந்தாவது வயதிலேயே முழு வேதாகமத்தையும் ஒரு
முறை வாசித்து முடித்தார். சிறுவனாக இருக்கும்போதே
வேதவசனங்களை மேற்கோள் காட்டி பேசும் அளவிற்கு ஞானம் அவருக்கு இருந்தது.
ரெஜினால்டு ஹீபர் மிகவும்
மென்மை உள்ளம் கொண்டவர். சிறுவதில் இருந்தே
தன்னோடு படிக்கும் மாணவர்களில் வசதில் வாய்ப்புகள் இல்லாதவர்களுக்கு தன்னிடம் இருந்த
பணத்தைக் கொடுத்து உதவும் குணம் உள்ளவர். தன்னைச்
சுற்றியுள்ள அனைவரும் தவறான பழக்கங்களில் ஈடுபட்டிருந்த போதும், மிகவும் பரிசுத்தம் உள்ளவராக வாழ்ந்து வந்தார். தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு
கிறிஸ்துவின் அன்பைச் சொல்லியும் அவர்களை நல்வழிப்படுத்தி வந்தார்.
தனது பள்ளிப் படிப்பை முடித்ததும், இங்கிலாந்து
நாட்டில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கழைக்கலகத்தில் உள்ள கிறிஸ்து
ஆலயம் என்ற கல்லூரியில் பயிற்சி பெற்றார்.
ரெஜினால்டு ஹீபர்க்கு கவிதைகள் எழுதுவதில் ஆர்வம்
அதிகம். சிறுவனாக இருக்கும் போதே கவிதைகளுக்கென
சிறப்பு பரிசாக வழங்கப்படும் நியுடிகேட் (நேறனபையவந Pநணைந) என்ற
பரிசை பெற்றவர். இவர் பாலஸ்தீனா என்ற தலைப்பில்
எழுதப்பட்ட தனது கவிதையை பேரறிஞர் சர்வால்டர் ஸ்காட் என்பவர் முன்னிலையில் வாசித்தார். கவிதையைக் கேட்ட சர்வால்டர் ஸ்காட் என்பர் கவிதையில்
எருசலேம் ஆலயம் கட்டப்படும் போது சம்மட்டியின் சப்தம் கேட்கவில்லை என்பதைக் குறித்த
விரிகள் இல்லை என கூறினார். இதைக் கேட்ட ஹீபர்
கூடியிருந்த அனைவரும் வியக்கத்தக்கதாக உடனடியாக அது குறித்து எழுதி கவிதையை பு+ர்த்தி
செய்து முடித்தார்.
ஹீபர் தனது பதினேழாவது வயதில்
தான் பயின்று வந்த இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு கல்லூரியில் நடைபெற்ற கவிதைப் போட்டியில்
பரிசுகளையும், லத்தீன் மொழியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில்
பல்கலைக்கழகத்தின் சிறப்பு பரிசையும் பெற்றார்.
பின்னர் ஹீபர் கடவுளின்
அழைப்பை ஏற்று ஆக்ஸ்போர்டு இறையியல் கல்லூரியில் தனது குருத்துவப் படிப்பை முடித்தார். 1806 – 1807 ஆம் ஆண்டு ஐரோப்பா நாட்டிற்கு சுற்றுப்யணம் மேற்க்கொண்டார். சுற்றுப் பயணம் முடித்து தனது தாய் நாட்டிற்கு திரும்பியனார்
ஹீபர். 1808 ஆம் ஆண்டு
பரி. ஆசாப் (ளுவ. யுளயடிh) என்னும் இடத்தில் சபை குருவாக பணியாற்றி வந்த டாக்டர். ஷப்லி என்பவரின் மகளை
திருமணம் செய்து கொண்டார். 1809 ஆம் ஆண்டு ஹீபர் குருவானவராக அருள்பொழிவு பெற்று ஹாட்நட் (Hழனழெவ) என்னும் இடத்தில் சபை குருவானவராக நியமிக்கப்பட்டார். சபைகுருவானவராக பணியாற்றும் வேலையில் பல பாடல்களை
இயற்றினார்.
ஹீபர் ஆலயப்பணியோடு நிருத்திவிடாமல்,
திருச்சபை மக்களின் இல்லங்களுக்கு சென்று அவர்கள் பிரச்சனைகளை கேட்டறிந்து,
ஆலோசனைகளும் வழங்கினார். ஏழைகள்,
முதியோர்கள், வியாதிப்பட்டவர்களின் இல்லங்களுக்கு
சென்று அவர்களுக்காக ஜெபித்து அவர்களின் குறைகளை நிறைவாக்கி வந்தார். சமூகத்தில் நிலவிய பிரச்சனைகளை மிகவும் நேர்த்தியாய்
கையாண்டு சுமுகமாக தீர்த்து வைத்தார். தனது
திறமைகள் அனைத்தையும் இறைப்பணிக்கென அர்ப்பணித்தார்.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த
நாளிலிருந்து ஐம்பதாவது நாளை பெந்தேக்கேஸ்தே திருநாளாக கிறிஸ்தவர்கள் அனைவரும் கொண்டாடி
வருகிறோம். இதே போல் 1819 ஆம் ஆண்டு பெந்தேகோஸ்தே திருநாளன்று ஆலய ஆராதனையில் ஒரு சிறப்பு பாடல் பாட
வேண்டும என்று ஆசை பட்டார் தூய ஆசாப் ஆலயத்தின் குருவாரனவர் டாக்டர் ஷீப்லி. அவர் தனது மறுமகனான ரெஜீனால்டு ஹீபரை தொடர்புகொண்டு
பெந்தேகோஸ்தே நாளன்று பாட ஒரு பாடல் எழுதி தருமாறு கேட்டுக்கொண்டார். ஷீபர் கேட்டுக்கொண்ட நாள் பெந்தேகோஸ்தே திருநாளுக்கு
மந்தைய நாள் ஆகும். மாமனாரின் மாமனாரின் ஆசையை
நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் சில மணி நேரங்;களுக்குள்ளாகவே
ஒரு பாடல் ஒன்றை எழுதினார் ஹீபர். அந்த பாடல்
தான் தூய தூய தூயா சர்வ வல்ல நாதா என்னும் பாடல்.
இந்த பாடல் முதல் முறையாக பாடப்பட்டது பெந்தேகோஸ்தே திருநாளன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பாடலின் வரிகள் நிசேயா
விசுவாசப்பிரமாணத்தை உறுதிப்படுத்தும் வகையிலும், கிறிஸ்துவின்
அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும் வகையிலும் இடம்பெற்றுள்ளது. இப்பாடல் பிதா, குமாரன்,
பரிசுத்த ஆவி ஆகிய திரித்துவ தேவனை போற்றி ஆராதிக்க நம்மை வழிநடத்துகிறது. இதில் திரியேக தேவனை பராக்கிரமம் உள்ளவர்,
கிருபை நிறைந்தவர், சர்வவல்லவர், மாட்சிமை நிறைந்தவர், கர்த்தாதி கர்த்தர், தூயாதி தூயவர் என்று புகழப்பட்டுள்ளது.
பரிசுத்தத்திலும், அன்பிலும், வல்லமையிலும்,
முழுமையான நிறை உடையோராக ஒன்றாய் அரசாட்சி செய்கிற திரியேக தேவனை நன்றியுடன்
போற்றிப்படா இப்பாடலின் வரிகள் நமக்கு உற்சாகமூட்டுகிறது.
இங்கிலாந்து ஹாட்னட் திருச்சபையில்
சீரும், சிறப்புமாக தனது பணியை ஆற்றிக்கொண்டிருந்த குருவானவர்
ஹீபருக்கு இந்தியாவில் உள்ள கல்கத்தாவில் உள்ள ஆங்கிலிக்கன் திருச்சபையின் பேராயராக
பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில்
வேண்டாம் என மறுத்த ஹீபர், பின்னர் இது கர்த்தரின் அழைப்பாக இருக்கலாம்
என் உணர்ந்து ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவில் உள்ள ஆங்கிலிக்கன்
திருச்சபையின் முதல் பேராயராக டாக்டர். டி. எப். மிடில்டன் என்பவர் 1815 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இவரின்
ஓய்வுக்குப், 1823 ஆம் ஆண்டு ஜீன் மாதம் முதல் தேதியில் இங்கிலாந்து
மன்னர் அரண்மனையில் பேராயராக அருட்பொழிவு செய்யப்பட்டு, அதே ஆண்டு
அக்டோபர் மாதம் 11 தேதி அன்று கல்க்கத்தா வந்து பேராயர் பொறுப்பை
ஏற்றார்.
கடவுளின் அருளால் தனது திருமண்டிலதை
விரிவுபடுத்த தொடங்கினார். அதற்காக அயராது
உழைத்தார். இதன் விளைவாக இவராது திருமண்டிலத்தின்
எல்லை இந்தியா மட்டுமின்றி இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா வரை பரவியது. பரந்து விரிந்த தனது திருமண்டிலத்தில் உள்ள திருச்சபைகளை
உற்சாகப்படுத்தும் வகையில் அநேக ஆலயங்களுக்கு நேரில் சென்று விசாரித்தும் வந்தார். பரந்து விரிந்த தனது திருமண்டிலத்தின் அநேக பகுதிகளுக்கு
செல்லும்போது அங்குள்ள கால சூழ்நிலை, மருவநிலை மாற்றங்கள் ஹீபரின்
உடலை வெகுவாக பாதித்தது. ஆயினும் தனது முயற்சியைக்
கைவிடவில்லை ஹீபர்.
சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பின் இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் தன்னுடைய
பணியை ஆற்றுவதற்கு புறப்பட்டார். ஆகவே வட இந்தியாவின் பல
இடங்களுக்கும் சென்றும், பின்பு பம்பாய் வந்து ஊழிய பொறுப்புகளை நிறைவேற்றி, பின்னர் இலங்கைக்கும் சென்றார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வந்து 14 மாதங்கள்
கழித்து மீண்டும் 1825 ஆம் ஆண்டு கல்கத்தா திரும்பினார்.
மறுவருடம் 1876 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி சென்னை மாகாணத்திற்கு சுற்றுப் பிரயாணம் செய்யும்படி கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டார்.
இந்நிலையில் 1826 ஆம் ஆண்டு தன் மனைவியையும் இரு பெண் குழந்தைகளையும் பம்பாயில் விட்டுவிட்டு, தென்னிந்தியா மற்றும் இலங்கை பகுதியிலுள்ள திருச்சபைகளை சந்திக்கப் புறப்பட்டார். மிகுந்த உஷ்ணமான வெப்பநிலையில் பல நாட்கள் தொடர்ந்து
பயணம் செய்து சென்னை, பூந்தமல்லி, கடலூர் போன்ற இடங்களுக்கு சென்று தன்னுடைய ஊழிய பொறுப்புகளை நிறைவேற்கு அங்கு நடைபெற்ற மிஷனெரி பணிகளை மேற்பார்வையிட்டு, 31/03/1826
ஆம் ஆண்டு அன்று நள்ளிரவில் திருச்சி வந்தடைந்தார். மறு நாள் காலை எட்டு மணிக்கு முன்னரே அங்கு உள்ள திருச்சபை தலைவர்களுடன் கலந்துரையாடி, ஊழியத்தின் பல பகுதிகளுக்கு சென்று,
செய்ய வேண்டிய காரியங்களை குறித்து அனேக
கடிதங்களை எழுதினார். பேராயர் ரெஜினால்டு ஹீபர் இந்திய கிறிஸ்தவர்களின் கல்வி, சுகாதாரம், சமூக முன்னேற்ற திட்டங்களை குறித்து ஆங்கிலேய உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தார்.
இந்நிலையில் 02/04/1826 2அன்று ஞாயிறு காலை திருச்சியில் உள்ள தூய யோவான் ஆலயத்தில் 42 பேருக்கு திடப்படுத்தல் ஆராதனை நடத்தி, பின்னர் திரந்த வெளியில் அங்கு கூடியிருந்த திரளான கிறிதவர்களுக்கு ஆராதனையை நடத்தி முடித்தார். அப்போது சுகவீனமாக இருந்த ஒரு உதவி குருவானவரின் வீட்டுக்கு சென்று ஜெபித்து, உற்சாகப்படுத்தினார். பின்னர் மாலை ஆராதனையும் தாமே நடத்தினார்.
பின்னர் அங்கு
இரண்டு நாட்கள் தமது பணியை செய்தூ ஆலயங்களில் திடப்படுத்தல் ஆராதனை நடத்தி, தனது ஊழியத்தை நிறைவேற்றினார். மூன்றாம்நாள் திருச்சி கோட்டையில் உள்ள கிறிஸ்துநாதர் ஆலயத்தில்
(Christ Church) திடப்படுத்தல்
ஆராதனையில் பங்கெடுத்து, அப்போது நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த குருவானவர் ஒருவரை சந்தித்து, இளைப்பாற சென்றார்.
மறுநாள் 03/04/1826 அன்று
திங்கள் கிழமை காலை ஆகாரத்திற்கு முன்பே 4 மணி நேரம் தொடர்ந்து பல வேலைகளில் ஈடுபட்டார்.
காலை 10 மணிக்கு திருச்சியில் C.F. சுவார்ட்ஸ் சிற்றாலயத்தில்
(தற்போது திருச்சி கோட்டை யில் உள்ள கிறிஸ்துநாதர் ஆலயம்) மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அக்கூட்டத்தை திறந்தவெளியில் நடத்தினார். அங்குள்ள மிஷன் வீட்டுப் படிகளில் நின்று ஜாதீய வேற்றுமை நிறைந்த திருச்சபையின் தீமைகளை வேதாகமத்தின் அடிப்படையில் எடுத்துக்கூறி, அங்கிருந்த கிறிஸ்தவர்களை சாட்சியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழும் படி, வெகுநேரம் உற்சாகப்படுத்தினார். அப்பொழுது அவர் வெயிலில் தொடர்ந்து நின்றதால் சூரிய வெப்பத்தின் பாதிப்பு பேராயர் ரெஜினால்டு ஹீபருக்கு நேரிட்டது.
பின்னர் பேராயர் ஹீபர் தன் ஊழியத்தை நிறைவேற்றி முடித்துவிட்டு, காலை உணவருந்த, மத்தியான வேளையில் அங்கு தங்கியிருந்த ஆங்கிலேய நீதிபதி
பேர்டின் இல்லம் சென்றார். அங்கு உணவருந்தும் முன்னர், தன்னுடைய களைப்பு நீங்கும்படி அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்து வர சென்றவர் மீண்டும்
திரும்பி வரவில்லை. சுமார் அரைமணி நேரத்திற்கு பின் நீச்சல் குளத்தில் பேராயர் ஹீபர் பிணமாய் மிதப்பதை கண்டார்கள். எதிர்பாராத சூழ்நிலையில் நடைபெற்ற இந்த மரணம் கிறிஸ்தவர்களை மிகவும் சோர்வுறச்செய்தது.
43 வயது கூட நிறைவு பெறும் முன் இவ்வுலக வாழ்வை கடந்து சென்ற பேராயர் ரெஜினால்டு ஹீபரின் சரீரத்தை அங்கிருந்த தூய யோவான் ஆலயத்தில் அடக்கம் செய்தனர். இன்றும் அவரது ஊழியத்தின் நினைவு சின்னமாக பேராயர் ஹீபர் பெயரில் ஒரு முதல்தர கல்லூரியும், இரண்டு உயர்நிலைப் பள்ளிகளும் திருச்சியில் உள்ளன.
திரித்துவ தேவனை ஆராதிக்கும் தூய தூய தூய சர்வவல்ல நாதா என்ற இப்பாடலுக்கு நிசேயா என்ற ராகத்தை டாக்டர் ஜான் பக்கஸ் டைட்டஸ் என்ற பிரபல இசை வல்லுநர் 1861 ஆம் ஆண்டு அமைத்தார். ஆதி திருச்சபையில் திரியேக கடவுளை குறித்த இறையியல் முறண்பாடுகளை நீக்கும்படி ரோம பேரரசன் கான்ஸ்ட்டன்டைன் நிசேயா என்ற இடத்தில் முதலாவது திருச்சபை மன்றத்தை கிபி 325 ல் நிசேயா என்ற
இடத்தில் கூட்டி திரித்துவம் (Trinity) சம்பந்தப்பட்ட இறையியல் முறண்பாடுகளை களைந்து, வேத வசனங்களின் அடிப்படையில் கிறிஸ்தவத்தின் அடிப்படை போதனைகள் நிசேயா விசுவாசபிரமாணம் என்ற பெயரில் திருச்சபை ஏற்றுக்கொண்து. இதை நினைவில் கொண்டு இப்பாடலுக்கு நிசேயா என்று இசையை பெயரிட்டு அழைத்தார்.
இப்பாடலானது உலகின் மிகச் சிறந்த பாடல் என இங்கிலாந்து நாட்டின்
பெரும்புலவர் டென்னிசன் பிரபு ஆல்பிரட் வர்ணிக்கின்றார். பேராயர்
ரெஜினால்டு ஹீபர் எழுதிய இப் பாடல் இன்றும் உலகமெங்கும் பலரால் விரும்பி பாடப்படும் பாடலாக இருக்கின்றது.
இங்கிலாந்தின் சார்லஸ் வெஸ்லிக்கு பிறகு, சிறந்த பாமாலை பாடல்களை ஆங்கிலத்தில் எழுதியவர் பிஷப் ரெஜினால்டு ஹீபர் என்று திருநேல்வேலி ஆங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர் ஸ்டீபன் நீல் இவரை குறித்து சாட்சி பகிர்ந்துள்ளார்.
இப்பாடல் உலகமெங்கும் உள்ள திருச்சபைகளில் பெந்தேகோஸ்தே திருநாளின் பண்டிகை ஆராதனைகளிலும் மற்றும் திரித்துவ திருநாள்
பண்டிகை ஆராதனையிலும் பாடப்படும் சிறப்பு பாடலாக பிரபலமானது.
பேராயர் ரெஜினால்ட் ஹீபர் விடியற்காலத்து
வெள்ளியே தோன்றி மற்றும் வின் கிரீடம் பெற போருக்கு போன்ற 57 பாடல்களை எழுதினார். இதில் பதினோரு பாடல்கள் ஆங்கில திருச்சபையின் பாடல் புத்தகத்தில் உள்ளன. இவை இன்றும் பாடப்பட்டு வருகின்றன.
பேராயர் ஹீபர் எழுதிய
பாமாலை பாடல்கள், இவ்வுலகம் உள்ள வரைக்கும் நிலைக்கும் என்பதில் சந்தேகமில்லை.