==============
உக்கிராணக்காரன்
=============
1 பேதுரு 4:10
அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
1. தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரன்
1 கொரிந்தியர் 4:1
இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரனென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.
2. தேவனுடைய ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரன்
1 பேதுரு 4:10
அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
3. உண்மையுள்ள உக்கிராணக்காரன்
1 கொரிந்தியர் 4:2
மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவசியமாம்.
4. கண்காணியான உக்கிராணக்காரன்
தீத்து 1:7-9
7. ஏனெனில்,கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக் கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானபிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,
8. அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், நீதிமானும்,பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
9. ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களை கண்டனம்பண்ணவும் வல்லவனாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==============
உம்முடையதில் மகிழ்ச்சி
==============
சங்கீதம் 20:5
நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம், உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
1. அவருடைய சமூகத்தில் (பிரசனத்தில்) மகிழ்ச்சி
சங்கீதம் 21:6
அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர், அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
2. அவருடைய இரட்சிப்பில் மகிழ்ச்சி
சங்கீதம் 20:5
நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம், உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
3. அவருடைய கிருபையில் மகிழ்ச்சி
சங்கீதம் 31:7
உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன், நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்துமவியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==================
அநியாயம் செய்வதில்லை
================
சங்கீதம் 119:2,3
2. அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
3. அவர்கள் அநியாயம் செய்வதில்லை, அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
1. நீதிமான்கள் அநியாயம் செய்வதில்லை
சங்கீதம் 125:3
நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.
2.தேவனுக்குப் பயப்படுகிறவர்கள் அநியாயம் செய்வதில்லை
லேவியராகமம் 25:17
உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது, உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்,; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
3.வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் அநியாயம் செய்வதில்லை
சங்கீதம் 119:1,3
1. கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
3. அவர்கள் அநியாயம் செய்வதில்லை, அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
4. தேவனை தேடுகிறவர்கள் அநியாயம் செய்வதில்லை
சங்கீதம் 119:2,3
2. அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
3. அவர்கள் அநியாயம் செய்வதில்லை, அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=========
போதகம்
=========
நீதிமொழிகள் 13:14
ஞானவான்களுடைய போதகம் ஜீவ ஊற்று: அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்;.
1. தாய் தகப்பனின் போதகம் - அது அலங்காரம் , பாதுகப்பு
நீதிமொழிகள் 1:8,9
8. என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
9. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
2. ஞானவான்களுடைய போதகம் - அது ஜீவ ஊற்று
நீதிமொழிகள் 13:14
ஞானவான்களுடைய போதகம் ஜீவ ஊற்று: அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்;.
3. அப்போஸ்தலருடைய (சபை போதகர்) போதகம் - அது கபடமில்லை
1 தெசலோனிக்கேயர் 2:3
எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயிருக்கவில்லை.
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDE
(ODISHA MISSIONARY)
9437328604
==================
என் ஆபத்து நாளில்
===================
2 சாமுவேல் 22:19
என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள். கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
1. என் ஆபத்து நாளில் விடுதலை தருவார்
சங்கீதம் 50:15
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
2. என் ஆபத்து நாளில் ஜெபத்தைக் கேட்பார்
சங்கீதம் 20:1
ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
3. என் ஆபத்து நாளில் ஆதரவு தருவார்
சங்கீதம் 18:18
என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள், கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
4. என் ஆபத்து நாளில் உயர்ந்த அடைக்கலமாவார்
சங்கீதம் 20:1
ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
5. என் ஆபத்து நாளில் அநுகூலமான துணையுமாவார்
சங்கீதம் 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
================
அறிந்திருக்கிறவர்கள்
===============
சங்கீதம் 89:15
கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள், கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
1. தேவனின் நாமத்தை அறிந்திருக்கவேண்டும்
சங்கீதம் 91:14
அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன், என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
2. தேவனின் சாட்சியை(வேதத்தை) அறிந்திருக்க வேண்டும்
சங்கீதம் 119:79
உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.
3. தேவனை அறிந்திருக்கவேண்டும்
தானியேல் 11:32
உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை இச்சகப்பேச்சுகளினாலும் கள்ளமார்க்கத்தாராக்குவான். தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள்.
4. கர்த்தர் எல்லாத் தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர் என்பதை அறிந்திருக்கவேண்டும்
யாத்திராகமம் 18:11
கர்த்தர் எல்லாத் தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன். அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி,
5. கர்த்தர் நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை அறிந்திருக்கவேண்டும்
யோசுவா 22:31
அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் ரூபன் புத்திரரையும் மனாசே புத்திரரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் அப்படிக்கொத்த துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவே இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம். இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரைக் கர்த்தரின் கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.
6. கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று அறிந்திருக்கவேண்டும்
நியாயாதிபதிகள் 17:13
அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.
7. என் மீட்பர் உயிரோடிருக்கிறார் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்று அறிந்திருக்கவேண்டும்
யோபு 19:25
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
8. சகலத்தையும் செய்யவல்லவர், அவர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கவேண்டும்
யோபு 42:2
தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
9. தேவனுக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கவேண்டும்
பிரசங்கி 8:12; அப் 10:35
பாவி நூறுதரம் பொல்லாப்பைச்செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.
10. நாம் தேவனிடத்தில் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்
1 யோவான் 5:15
நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.
11. நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்
2 கொரிந்தியர் 5:1
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==================
விளங்கப்பண்ணுவார்
=================
சங்கீதம் 17:7
உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்.
1. நம் நியாயத்தை விளங்கப்பண்ணுவார்
சங்கீதம் 37:6
உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.
2. தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணுவார்
2 நாளாகமம் 16:9
தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது, இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர், ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.
3. தம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்
சங்கீதம் 17:7
உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்.
4. தம்முடைய கிரியையை விளங்கப்பண்ணுவார்
ஆபகூக் 3:2
கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று. கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப் பண்ணும். கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604