சகோதர சிநேகத்தின் உச்சிதங்கள் | எந்த விதங்களில் குமாரன் பிதாவுக்கு சமமானவர் என்று அதிகாரம் கொடுக்கப்பட்டார்? | 7 சாபங்கள் முதல் ஆதாம் மேல் | பிலேயாம் தவறான முன்மாதிரி
====================
சகோதர சிநேகத்தின் உச்சிதங்கள்
====================
தியான வசனம்
எபிரேயர் 13:1
சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.
சகோதர சிநேகத்தோடு அன்பை கூட்டுங்கள்
Add love to brotherly love
2 பேதுரு 1:7
தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.
TRIO LOGY IN BROTHERLY LOVE
சகோதர ஸ்நேகத்தில் மூன்று புதினம்
சகோதர ஸ்நேகத்தின் ஒப்புமைகள்
Comparision for brotherly love
======================
1. உள்ளம் போன்ற சிநேகம்
(ஆவியில் சிநேகம்)
பிலேமோன் 1:12
அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன். என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.
2. சரீரத்தின்படி பிரியமுள்ள சிநேகம்
(சரீர சிநேகம்)
பிலேமோன் 1:16
எனக்கு அவன் பிரியமான சகோதரனானால், உமக்குச் சரீரத்தின்படியேயும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்.
3. ஆத்துமாவும் ஆத்துமாவும் இணைந்த சிநேகம்
(ஆத்துமாவில் சிநேகம்)
1 சாமுவேல் 18:1
அவன் சவுலோடே பேசி முடித்தபின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது. யோனத்தான் அவனைத் தன் உயிரைப் போலச் சிநேகித்தான்.
சகோதர ஸ்நேகத்தின் எடுத்துக்காட்டுகள்
Evidence for brotherly love
========================
1. சகோதர சிநேகம் புதிய பிறப்புக்கு எடுத்துக்காட்டு
1 யோவான் 4:7
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
2. சகோதர சிநேகம் சீடத்துவத்துவத்துக்கு எடுத்துக்காட்டு
யோவான் 13:35
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
3. சகோதர சிநேகம் சுய நலமின்மைக்கு எடுத்துக்காட்டு
மத்தேயு 22:39
இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
4. சகோதர சிநேகம் மாய்மாலமின்மைக்கு எடுத்துக்காட்டு
ரோமர் 12:9
உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.
சகோதர ஸ்நேகத்தின் உச்சிதங்கள்
=====================
1. சகோதர ஸ்நேகத்தில் பட்சம் (kind affection)
ரோமர் 12:10
சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள், கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
2. சகோதர ஸ்நேகத்தில் ஒருமனம் (one mind)
1 பேதுரு 3:8
மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து,
3. சகோதர ஸ்நேகத்தில் அன்பு (love)
1 தெசலோனிக்கேயர் 4:9
சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்குத் தேவனாலே போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.
4. சகோதர ஸ்நேகத்தில் நிலையான தன்மை (perseverance)
எபிரேயர் 13:1
சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.
5. சகோதர ஸ்நேகத்தில் மாயமின்மை (unfeigned love)
வடிவமைக்கப்படாத அன்பு ( Unfabricated)
1 பேதுரு 1:22
ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்.
Closing thought.
உன்னதப்பாட்டு 7:12
அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம், திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப் பூத்ததோ என்றும் பார்ப்போம், அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்
shalomsteward1@gmail.com
Whatsapp:+91996505031
========================
தேவனை தம்முடைய சொந்த பிதா என்று சொல்லி தம்மை தேவனுக்கு சமமாக்கிய குமாரன்
===================
எந்த விதங்களில் குமாரன் பிதாவுக்கு சமமானவர் என்று அதிகாரம் கொடுக்கப்பட்டார்?
====================
யோவான் 5 ம் அதிகாரம் ஓர் அலசல்
=========================
1. பிதாவின் கிரியைகளை செய்வதில் சமம்
யோவான் 5:17
என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார் நானும் கிரியை செய்து வருகிறேன்.
2. பிதாவின் ஒரே பேரான குமாரனாக தேவனை தம்முடைய சொந்த பிதா என்று உரிமை கோரும் விதத்தில் சமம்
யோவான் 5:17
3. பிதா எவைகளை செய்கிறாரோ அவைகளையே குமாரனும் செய்வதால் அவர் பிதாவுக்கு சமம்
யோவான் 5:19
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்ய குமாரன் காண்கிறது எதுவோ அதையே அன்றி வேறொன்றையும் தாமாய் செய்ய மாட்டார் அவர் எவைகளை செய்கிறாரோ அவைகளை குமாரனும் அப்படியே செய்கிறார்
4. பிதா குமாரன் இடத்தில் அன்பாய் இருந்து தாம் செய்கிற வகைகளை எல்லாம் அவருக்கு காண்பிக்கிறார். ஆகவே பிதாவுக்கு குமாரன் சமமாக இருக்கிறார்
யோவான் 5:20
பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்: நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.
5. மரித்தோரை உயிர்ப்பிப்பதில் பிதாவுக்கு சமமாக இருக்கிறார்
யோவான் 5:21
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறது போல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
6. கணத்தை பெற்றுக்கொள்வதில் பிதாவுக்கு சமம்
யோவான் 5:22,23
22. அன்றியும் பிதாவைக் கணம் பண்ணுகிறது போல எல்லாரும் குமாரனையும் கணம் பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்
23. குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.
7. ஜீவனில் பிதாவுக்கு சமமானவர்
யோவான் 5:26
ஏனெனில்,பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார்.
8. நியாயத்தீர்ப்பு கொடுக்கும் அதிகாரத்தை பிதாவினிடத்திலிருந்து பெற்றதால் பிதாவுக்கு சமம்
யோவான் 5:27
அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
9. பிதாவின் சித்தத்தையே செய்வதில் பிதாவுக்கு சமம்
யோவான் 5:30
நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை: நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்: எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது
10. பிதாவின் நாமத்தில் வந்ததால் பிதாவுக்கு சமம்
யோவான் 5:43
நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
==================
7 சாபங்கள் முதல் ஆதாம் மேல்
7 சாபங்கள் இரண்டாம் ஆதாம் மேல்
SEVEN CURSES ON FIRST ADAM...SECOND ADAM..
====================
1. வேர்வை (Sweat)
முதல் ஆதாம்
ஆதியாகமம் 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
இரண்டாம் ஆதாம்.
லூக்கா 22:44
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார் அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
2. முள் (Thorn)
முதல் ஆதாம்
ஆதியாகமம் 3:18
அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும். வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.
இரண்டாம் ஆதாம்
யோவான் 19:2
போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:
3. சாபம் (Curse)
முதல் ஆதாம்
ஆதியாகமம் 3:17
பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
இரண்டாம் ஆதாம்
கலாத்தியர் 3:13
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
4. வருத்தம் (Sorrow)
முதல் ஆதாம்
ஆதியாகமம் 3:17
பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
இரண்டாம் ஆதாம்
புலம்பல் 1:12
வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
5. நசுக்குதல் (Bruise)
முதல் ஆதாம்
ஆதியாகமம் 3:15
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
இரண்டாம் ஆதாம்
ஏசாயா 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார், அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
6. பட்டயம் (Sword)
முதல் ஆதாம்
ஆதியாகமம் 3:24
அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.
இரண்டாம் ஆதாம்
சகரியா 13:7
பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும். ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.
7. மண்.. மரண தூள் (Dust)
முதல் ஆதாம்
ஆதியாகமம் 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
இரண்டாம் ஆதாம்
சங்கீதம் 22:15
என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது, என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது, என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+91996505301
====================
Baalam the wrong example
பிலேயாம் தவறான முன்மாதிரி
======================
1. பிலேயாம் வஞ்சகம்
யூதா 1:11
2. பிலேயாம் வழி
2 பேதுரு 2:15
3. பிலேயாம் போதனை
வெளிப்படுத்தினத விசேஷம் 2:14
Coveting the reward will cause the coveting ones to run headlong into the error of Baalam
பிறர் உடைமையை இச்சித்தல் பிலேயாமின் தவறை துணிகரத்தினால் பின்பற்றுவதாகும்..
shalomjjj@gmail.com