ஆசீர்வாத செய்தி
* * * * *
தலைப்பு:
பெயர் பதிவு செய்யப்பட
* * * * *
வேதவசனம்:
யாத்திராகமம் 32: 33
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவாகிய தேவனுக்கு மகிமை உண்டாவதாக
👉👉 உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்துக் கொண்டவரும், தாயின் கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்னே நம்மை அறிந்தவருமாகிய, நம்முடைய ஆண்டவர் அவருடைய பிள்ளைகளாக நாம் இருப்பதற்காக, நம்மை தனித்தனியாக பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். (எபேசியர் 1:4 ; எரேமியா 1:5)
👉👉 நம்மைப் படைத்த நம்முடைய ஆண்டவர் இருக்கிற பரலோகராஜ்யம் என்றும், மோட்சம் என்றும், சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிற இடத்தில் நம்மை அவர் கொண்டுவந்து சேர்ப்பதற்காக, அவருடைய புத்தகத்தில் நம்முடைய பெயர்களை எழுதி வைக்கிறார். அந்த புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே, அந்த இடத்திற்குள் நாம் செல்ல முழுவதும் தகுதியானவர்கள்.
👉👉 மேலே சொல்லப்பட்ட வசனத்தில் என் புஸ்தகம் என்றும், வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் புஸ்தகம் என்றும் சொல்லப்பட்டுள்ள புஸ்தகத்தின் பெயர் ஜீவ புஸ்தகம் ஆகும்.
(வெளி 20:15 ; 21:27)
👉👉 இந்த ஜீவ புஸ்தகத்திற்குள் என்ன இருக்காது?
-- நம்முடைய வாழ்க்கை வரலாறு இருக்காது.
-- நாம் செய்த நன்மைகள் தீமைகள் பற்றிய வரலாறு இருக்காது.
(இவைகளைப் பற்றி ஞாபக புஸ்தகத்தில்தான் இருக்கும்)
👉👉இந்த ஜீவ புஸ்தகத்தில் என்ன இருக்கும்?
-- உலகம் உண்டானது முதற்கொண்டு இதுவரை ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்ட பரிசுத்தவான்களுடைய பெயர்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
-- இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கர்த்தருடைய ஆரவார சத்தத்தை கேட்க தகுதியானவர்களாக யாரெல்லாம் மரித்திருக்கிறார்களோ! அவர்கள் பெயர்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
-- தேவ எக்காள சத்தத்தை கேட்பதற்கு தகுதியானவர்களாக , மறுரூபம் அடைந்த மகிமையின் சாயலோடு யாரெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் பெயர்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
(1 தெச 4:16-18 ; 1 கொரி 15:51,52)
👉👉 ஜீவ புத்தகத்தில் நம் பெயர் பதிவு செய்யப்பட நாம் எப்படி வாழ வேண்டும்?
1) கர்த்தருக்கு விரோதமான - எந்த பாவங்களையும் செய்யாதவர்களாக வாழ வேண்டும்.
2) பாவங்களை விட்டு மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு கடைசி மட்டும் நிலைத்து இருக்கிற நீதிமான்களாக வாழ வேண்டும்.
(சங்கீதம் 69: 28, ரோமர் 5: 9)
(3) தன்னுடைய இரட்சிப்பின் வாழ்க்கை நிறைவேற பிரயாசப்பட்டுக் கொண்டும், அழிந்து கொண்டிருக்கிற ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படும்படியாக, தேவ சித்தத்தின்படி பிரயாசப்பட்டு கொண்டிருப்பவர்களாகவும் வாழ வேண்டும்.
(பிலிப்பியர் 4: 3)
* * * *
👉👉 கர்த்தருக்கு விரோதமான/ நித்திய அழிவுக்கு ஏதுவான பாவங்கள் என்பது என்ன?
(1 யோவான் 5: 16; லூக்கா 12: 10)
-- தேவ சித்தத்தை அறிந்து, உணர்ந்து தேவ சித்தப்படி வாழாமல் சுய சித்தப்படி வாழ்கிற வாழ்க்கை.
(மத்தேயு 7: 21-23; லூக்கா 12: 45-47)
-- கர்த்தர் சொன்ன வார்த்தையை நம்பாமல் , அவர் வார்த்தையின்படி வாழாமல் விசுவாசிக்காமல் வாழ்கிற வாழ்க்கை.
(ரோமர் 14: 23)
-- விக்கிரக ஆராதனை செய்வது, விபச்சாரம், வேசித்தனம் செய்வது.
( 1 சாமுவேல் 2: 22,25 ; எரேமியா 16: 10,11; ஆதியாகமம் 39: 9)
-- இயேசு கிறிஸ்து என்ற நாமத்திற்கு விரோதமாக எதிர்த்து நிற்கும் வாழ்க்கை.
(2 தெசலோனிக்கேயர் 1: 7,8)
-- தற்கொலை செய்து சாகவேண்டும் என்கிற எண்ணத்தோடு வாழ்பவர்கள் அப்படி செய்பவர்கள் கர்த்தருக்கு விரோதமான பாவம் செய்பவர்களாகவே என்னப்படுகிறார்கள். (2 சாமுவேல் 1:31:4)
--- முடிவுபரியந்தமும் ஆண்டவருக்காக வாழ அர்ப்பணித்து, பாதியில் பின்வாங்கி போனவர்கள்.
(எபிரெயர் 10: 38)
இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
👉👉👉 அன்பானவர்களே, அற்புதமாய் நம்மைப் பெயர் சொல்லி அழைத்த தெய்வம், நம்முடைய பெயரையும் அற்புதமாய் ஜீவ புஸ்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார். கர்த்தருக்கு விரோதமான பாவங்களை செய்து எழுதப்பட்ட பெயர்கள் கிறுக்கப்படாதபடிக்கு, எப்போதும் மனந்திரும்பி, பரிசுத்தமாய் ஜாக்கிரதையாய் வாழ்வதே மிகச் சிறந்த மேன்மையான ஆசீர்வாதம் ஆகும்.
ஜெபம்:
பரலோக பிதாவே, இந்த நாளிலும் நாங்கள் எப்படி வாழவேண்டும் என்று எங்களுக்கு கற்று கொடுத்ததற்காக உமக்கு நன்றி. நாங்களும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் அப்படிப்பட்டவர்களாக வாழ உதவி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறோம் பிதாவே ஆமென்.
பாஸ்டர். G. சாம்ராஜ்,
ரெகொபோத் ஜெபவீடு,
ஜமுனாமரத்தூர், ஜவ்வாதுமலை,
திருவண்ணாமலை மாவட்டம்,
தமிழ்நாடு.
+91 84899 74307 ;
+91 97895 90593
Blessing Message
* * * * *
Title:
Name to be registered
* * * *
Scripture:
Exodus 32: 33
Then the Lord said to Moses: Whoever sins against me, I will blot out his name from my book.
Glory be to God the Father in the name of the Lord Jesus Christ.
👉👉 Our Lord, who knew us in Christ before the creation of the world, who knew us before we were formed in the mother's womb, has *called us by name individually* so that we may be his children. (Ephesians 1:4; Jeremiah 1:5)
👉👉 Our Lord who created us writes our names in his book so that he can bring us to the place called heaven If only *our names were written in that book*, we are fully qualified to go into that place.
👉👉 The name of the book which is said to be my book in the above verse and the book of the slain lamb in the special book of revelation is the book of life.
(Revelation 20:15; 21:27)
👉👉 What will not be contained in this book of life?
-- There will be no biography of us.
-- There will be no history of the good deeds done by us and the bad deeds.
(These will be in the memory book)
👉👉 What will be in this book of life?
-- Only the names of the saints known and used by the Lord since the foundation of the world are recorded.
-- In the secret coming of Jesus Christ Whoever died worthy to hear the Lord's shout! Only their names will be recorded. -- Only the names of those who are living in the image of reincarnated glory, worthy to hear the sound of God's trumpet.
(1 Thess 4: 16-18; 1 Cor 15: 51,52)
👉👉 How should we live to have our name recorded in the Book of Life?
1) To live without committing any sins - against God.
2) Repent of sins and be washed by the blood of Jesus Christ and live as the righteous who stand at the end.
(Psalm 69: 28, Romans 5: 9)
(3) He should live as one who strives to fulfill his life of salvation and strives according to God's will so that perishing souls may be saved.
(Philippians 4: 3)
* * * *
👉👉 What are the sins against God/for eternal destruction?:
(1 John 5: 16; Luke 12: 10)
-- Knowing and realizing God's will and not living according to God's will Life is living according to self will.
(Matthew 7: 21-23; Luke 12: 45-47)
-- A life of unbelieving without believing the word of the Lord, without living according to His word.
(Romans 14: 23)
-- Idolatry, fornication.
(1 Samuel 2: 22, 25; Jer 16: 10,11; Genesis 39: 9)
-- A life of opposition to the name of Jesus Christ.
(2 Thess 1: 7,8)
-- People who live with the intention of committing suicide are those who commit sins against God. (2 Samuel 1:31:4)
--- Those who have devoted themselves to the end of their life for the Lord, and have withdrawn halfway through.
(Heb 10:38)
Let's keep saying this.
👉👉👉 Beloved, the God who miraculously called us by name has miraculously written our name in the Book of Life. The best and highest blessing is to always repent and live a holy and careful life, so that our names are not written by committing sins against the Lord.
Prayer:
Heavenly Father, Thank you for teaching us how to live this day too. Help us and our family members to live like that in Jesus name we pray Father Amen.
Pastor.G. Samraj,
+91 84899 74307 ;
+91 97895 90593