ஆசீர்வாத செய்தி
தலைப்பு
எந்த சூழ்நிலையில் இருக்கிறீர்கள்?
* * * * *
வேத வசனம்:
1இராஜாக்கள் 17: 4
அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.
* * * *
👉👉 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிரமிக்கத்தக்க அற்புதங்களை அள்ளித் தருபவராகவும், சூழ்நிலைகளையும், அவருடைய படைப்புகள் அனைத்தையும் தன்னுடைய வார்த்தைக்கு ஏற்றார்போல தன்னுடைய விருப்பத்தின்படி மாற்றும் வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார்.
👉👉 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அற்புதங்களை செய்வதற்கு மிக முக்கியமான நோக்கம்:
-- அவருடைய பரிசுத்த நாமத்தையும், அவருடைய வார்த்தையையும் மகிமைப்படுத்துவதற்காக செய்கிறார்.
-- அவருடைய மகிமை எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதற்காக செய்கிறார்.
(சங்கீதம் 138: 2; ஏசாயா 43: 21; ரோமர் 9: 17)
👉👉 எந்தெந்த சூழ்நிலைகளில் ஆண்டவர் அற்புதம் செய்கிறார்?
1) அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும் போது, அவர் சித்தத்தின்படி நடக்கும்போது அற்புதம் செய்கிறார். இந்த அற்புதம் நமக்கும் நம்மைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுக்கும் மிகுந்த ஆசீர்வாதத்தை கொடுக்கும்.
2) அவர் வார்த்தையை மீறி போகும் போது அற்புதம் செய்கிறார். மீறி சென்றவர்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்குமம் படியாகவும், மீறி சென்றவர்களை தன்னிடத்தில் திருப்பும்படியாகவும் அற்புதம் செய்கிறார்.
👉👉 எப்படி செய்வார்?
-- அவருடைய வார்த்தையினால் கட்டளையிடுவார். எவைகளுக்கு கட்டளையிடுகிறரோ! அவைகள் அப்படியே கீழ்ப்படியும். அற்புதங்கள் நடக்கும். அந்த சூழ்நிலையே மாறி விடும்.
* * * *
1) காகங்களுக்கு கட்டளையிட்டார்:
-- கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சென்றபடியால், எலியாவை போஷிக்க காகங்களுக்கு கட்டளையிட்டார்.
-- விடியற்காலத்திலும், சாயங்காலத்திலும் அப்பமும் இறைச்சியும் காகங்கள் கொண்டுவந்து கொடுத்தது. ஒரு நாள் இரண்டு நாள் அல்ல! பல மாதங்கள் இந்த அற்புதம் நடந்தது.
(1 இராஜாக்கள் 17: 2-6)
2) பேசாத கழுதைக்கு கட்டளையிட்டார் வாயை திறந்தார்:
-- பேசவேண்டிய கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாத பிலேயாமின் பாவத்தையும், முட்டாள் தனத்தையும் உணர்த்தும் படியான அற்புதத்தை செய்ய அற்பமாய் எண்ணப்பட்ட பேசாத கழுதையின் வாயைத் திறந்து கழுதையை பேசவைத்து அற்புதம் செய்தார்.
(எண்ணாகமம் 22: 28-34)
3) மீனுக்கு கட்டளையிட்டார்:
-- யோனா கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாய் கப்பல் ஏறி போனான்.
-- கப்பல் கவிழும்படியான சூழ்நிலையில், கப்பலில் இருந்தவர்கள் அவனை தூக்கி கடலில் போட்டார்கள். கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார். அற்புதம் நடந்தது. மீன் அவனை சாப்பிடவில்லை. கர்த்தர் கட்டளையிட்டபடி நினிவேவில் கொண்டு சென்று யோனாவை கக்கியது. யோனாவின் சூழ்நிலை மாறியது.
4) எறும்புகளின் சுறுசுறுப்பான உழைப்பை காண்பித்து சோம்பேறியின் சூழ்நிலையை உழைக்கும் வர்க்கத்தின் ஆசீர்வாதமாக மாற்றுகிற அற்புதத்தை செய்ய அவரால் முடியும்.
(நீதிமொழிகள் 6: 6-8)
👉👉 அன்பானவர்களே!
நீங்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். இருக்கிற சூழ்நிலைகளைப் பார்த்து பயந்து கொண்டு இல்லாதபடிக்கு கர்த்தருடைய வார்த்தைக்கு மட்டும் எப்போதும் கீழ்ப்படிந்து நடக்கும் போது - தீமையான சூழ்நிலைகளை நன்மையான சூழ்நிலைகளாக மாற்றுவதற்கு, கர்த்தர் நமக்காக அற்புதம் செய்வதற்கு ஆண்டவர் நாம் அறியாத/யோசித்துப் பார்க்காத பல காரியங்களுக்கு கட்டளை கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பார்.
👉👉 விசுவாசமாயிருங்கள்; ஜெபியுங்கள்; தைரியமாயிருங்கள்; பயப்படாதிருங்கள். இன்றைக்கும் நம்மோடு கூடவே அற்புதர் இருக்கிறார். ஆமென்.
ஜெபம்:
பரலோக பிதாவே! இந்த நாளிலும் நாங்கள் எப்படி வாழவேண்டும் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி. நாங்களும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் அப்படிப்பட்டவர்களாக வாழ உதவி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறோம் பிதாவே ஆமென்.
* * * *
👉 *பாஸ்டர்.G.சாம்ராஜ்*,
+91 84899 74307*
Messing Message
Title:
What situation are you in?
* * * * *
Bible verse:
1 Kings 17: 4
You will drink the water of that river; He said, "I will command the crows to feed you there."
* * * *
👉👉 The Lord Jesus Christ is the one who brings amazing miracles, the circumstances, and all his creations He is the one who has the power to change according to his will as per his word.
👉👉 The most important purpose for the Lord Jesus Christ to perform miracles:
-- He does it to glorify His holy name and His word.
-- does to reveal what His glory is like.
(Psalm 138: 2; Isaiah 43: 21; Romans 9: 17)
👉👉 Under what circumstances does the Lord perform miracles?
1) When obeying His word, He works miracles when He does His will. This miracle will bring great blessings to us and the people around us.
2) He performs a miracle when he breaks the word. He works miracles to teach the transgressors a lesson and to turn the transgressors back to Him.
👉👉 How to do it?
-- He will command by His word. What commands! They will obey. Miracles happen. That situation will change.
* * * *
1) Ordered the Crows:
-- By obeying the Lord's word, he ordered the crows to feed Elijah.
-Crows brought bread and meat at dawn and dusk. One day not two days! For several months this miracle took place.
(1 Kings 17: 2-6)
2) Non-speaking. He commanded the Donkey and opened his mouth:
-- To perform a miracle that made Balaam's sin and foolish self aware of his disobedience to God's word to be spoken opened the mouth of the little dumb donkey and made the donkey speak.
(Numbers 22: 28-34)
3) Ordered the fish:
-- Jonah went into the ship against the word of the Lord.
-- When the ship was about to capsize, the people on the ship lifted him and threw him into the sea. *The Lord ordered the fish.* A miracle happened. The fish did not eat him. As the Lord had commanded, Jonah was *carried to Nineveh*. Jonah's circumstances changed.
4) ANTS:
He can perform the miracle of turning the condition of the lazy into the blessing of the working class by showing the active* labor of the Ants.
(Proverbs 6:6-8)
👉👉 Dear Ones!
Think about the situation you are in. When we always obey the word of the Lord so that we are not afraid of the existing situations - *to turn bad situations into good situations*, the Lord will do miracles for us *and bless us with many things that we do not know/think about*.
👉👉 Be faithful; Pray; Be brave; Don't be afraid. He is still with us even today. Amen.
👉 Prayer:
Heavenly Father! Thank you for teaching us how to live this day too. We pray in Jesus name that we and our family members will be helped to live like that Father Amen.
* * * *
👉 *Pastor.G.Samraj*,
+91 84899 74307