=========
முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரித்திரம்
டேவிட் பிரெய்னார்ட் (1718-1747)
==========
1718 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ம் தேதி அமெரிக்கா தேசத்தில் கனக்டிகட் (connecticut) என்ற இடத்திலுள்ள ஹாடம் (Haddam) என்ற ஊரில் சட்டமன்ற உறுப்பினரான ஜெபெடியாஹோனாஸ் மற்றும் டோரதி ஆகியோருக்கு மகனாகப் டேவிட் பிரெய்னார்ட் பிறந்தார். டேவிட் பிரெய்னார்ட் 9 வயதாக இருக்கும்போது அவருடைய தந்தை இறந்துபோனார், 14 வயதில் தாயாரும் மரித்துப் போகவே அனாதையானார். ஆகவே தனது மூத்த சகோதரியுடன் வாழ்ந்து வந்தார்.
இவர் சிறுவயது முதல் ஒரு சோக மனப்பான்மையை கொண்டவராயும் மரணபயம் பீடிக்கப்பட்டவராயும் இருந்தார். அதனால் சந்தோஷத்தையும், விளையாடும் ஆர்வத்தையும் இழந்தார். தீய பழக்கவழக்கங்கள் சந்தோஷத்தைத்தரும் என்று பிரியத்துடன் அதில் ஈடுபட்டு, தனது மன சாட்சியைக் கறைப்படுத்தி, குற்ற உணர்வுகளால் பாதிக்கப்பட்டார்.
இருபது வயதாகும்போது டேவிட் பிரெய்னார்ட் தனது சகோதரியுடன் இணைந்து ஒரு பண்ணையில் வேலைபார்த்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். பிரெய்னார்ட் வாலிப வயதில் தன்னை தீய நண்பர்களிடம் இருந்து காத்துக்கொண்டார். அதிக நேரம் ஜெபத்தில் தரித்திருந்தார். வேதம் வாசித்து தியானிப்பதில் அதிக நேரம் செலவழித்தார். ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும் மற்ற வாலிபரோடு சேர்ந்து, வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
இவ்விதம் செய்துவந்தபோதும் கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக அறிந்திருக்கவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை தேவனுடைய கோபாக்கினையைப் பற்றிய எண்ணம் அவருடைய உள்ளத்தில் ஏற்பட்டது. ஒரு நாளை உபவாச நாளாக நியமித்து ஜெபம் செய்தபோது கர்த்தர் அவரது இருதயக் கண்களைத் திறந்து, அவருடைய பாவங்களை உணர்த்தினார். பிரெய்னார்ட் தன் பாவங்களைத் தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றபோது ஒரு தெய்வீக சமாதானம் அவரைச் சூழ்ந்துகொண்டது.
1739-ல் தனது 21-வது வயதில் ஏல் கல்லூரியில் (Yale College) சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். அங்கு அவர் காசநோயால் வியாதிப்பட்டு இரத்தம் கக்கியதால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு அநேக முறை கல்வி கற்பதில் தடை ஏற்பட்டது. 1742-ம் ஆண்டு எபிநேசர் பெம்பர்டோன் என்பவர் அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் மத்தியில் மிஷனெரிப் பணி செய்யப்பட வேண்டிய அவசியத்தை சவாலாகப் பிரசங்கித்தபோது, ஆண்டவர் தன்னை மிஷனெரியாகச் செவ்விந்தியர் மத்தியில் பணிபுரிய அழைப்பதை டேவிட் உணர்ந்தார்.
'தேவனே. இதோ அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும், கரடு முரடான, காட்டு மிராண்டிகளிடமும் போக ஆயத்தமாயிருக்கின்றேன். உலகத்தின் சகல வசதி களையும் விட்டுப் போகவும், ஏன்? மரணத்தினூடேயும் செல்ல ஆயத்தம். உம்முடைய இராஜ்யத்தைக் கட்டுவதற்காக எங்கு வேண்டுமானாலும் போக ஆயத்தமாயிருக்கிறேன் என்று தன்னை அர்ப்பணித்து ஜெபித்தார்.
மிஷனெரிப் பணிக்கென தனது அழைப்டை உறுதிப்படுத்திக்கொண்ட டேவிட் ஸ்காட்லாந்து மிஷனெரி ஸ்தாபனம், செவ்விந்தியர் மத்தியில் மிஷனெரிகளை அனுப்புவதை அறிந்து அதில் இணைந்தார்.
முதலாவது நியூயார்க்-ல் கௌநாமீக் என்ற இடத்தில் தங்கியிருந்து ஜாண் சர்ஜண்ட் (John Sergeant) மூலமாக செவ்விந்திய மொழிகளைக் கற்றார். அனுபவமிக்க அந்த மிஷனெரி மூலம் ஊழியத்திற்கான பல காரியங்களைக் கற்றார். அதற்கு அடுத்த ஆண்டு அடர்ந்தகாடுகள், மலைச் சரிவுகள், பள்ளத் தாக்குகள் ஆகிய இடங்களில் வாழ்ந்து கொண்டிருந்த செவ்விந்தியர்கள் வசிக்கும் கௌநாமீக் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
இங்கு அதிகாலையில் எழுந்து ஜெபத்திலும், தியானத்திலும் நேரம் செலவழித்து பிறகு அங்குள்ள செவ்விந்தியருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க சென்றார். ஊழியப்பாதையில் இவரது வாழ்வு அதிக கடினம் நிறைந்ததாக இருந்தது. எளிமையாக வாழ்ந்த அவர் தரையில் சில மரப்பலகைகளை அடுக்கி அதின்மேல் சிறிது வைக்கோலைப்பரப்பி தனது படுக்கையாக்கிக் கொண்டார். கரடு முரடான பாதைகளில் தளராமல் நடந்து சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்.
அநேகமுறை குளிருக்கும், பசிக்கொடுமைக்கும் உட்பட்டார். வாழ்க்கை வசதிகள் ஒன்றையும் அவர் பெற்றிறாமல் சோர்வு சுகவீனம், கடின வாழ்க்கைமுறை இவற்றைத் தாங்கிக் கொண்டவராக திருப்பணியில் முன்னேறிச் சென்றார். கொட்டும் பெருமழையில் பயணம் செய்தும், மிக ஆபத்தான பாதைகளில் நடந்தும், குதிரையின் மீதும் பிரயாணம் செய்து சுவிசேஷம் அறிவித்தார்.
ஒரு நாள் இரவில் குதிரையின்மேல் பிரெய்னார்ட் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது, பாறைகளின் இடுக்கில் குதிரையின் கால் சிக்கிக்கொண்டது. வலி தாங்கமுடியாமல் குதிரை துடிக்கவே பிரெய்னார்ட் தூக்கியெறியப்பட்டு தரையில் விழுந்தார். தெய்வாதீனமாக கீழே புரண்டு ஓடும் ஆற்றில் விழாமல் தப்பினார். ஒரு முறை காடுகளில் வழிமாறிச் சென்று தொலைந்துபோய், பலமணி நேரங்களுக்குப் பின் வீடு சேர்ந்தார்.
மற்றொருமுறை ஆற்றில் மூன்று முறை மூழ்கி உயிர் தப்பிப்பிழைத்தார். பலமுறை அவருக்கேற்ற ஆகாரம் கிடைக்காது. பத்து முதல் 15 மைல்கள் பிரயாணப்பட்டு ஒரு ரொட்டியை வாங்க வேண்டியதிருக்கும். அப்படி வாங்கப்பட்ட ரொட்டியும், சாப்பிடும்முன் புளிப்பாகி பூஷணம் பூத்துவிடும். பிரெய்னார்ட் அதிகத் தனிமையில் இருந்தபோது மனபாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் கிறிஸ்தவ சகோதரர்கள் அவருக்கில்லை.
அவரோடு ஜெபிக்கவும் யாருமில்லை. ”எனக்கோ எவ்வித ஆறுதலும் இல்லை. என் அனைத்து ஆறுதல் தேறுதல்களும் கடவுளிடம் மட்டுமே உள்ளது” என்று நாள்குறிப்பில் எழுதி வைத்திருந்தார்.
பிரெய்னார்ட் ஊழியம் செய்யத் தெரிந்துகொண்ட சிவப்பிந்தியர்கள், அநாகரீகமான ஆதிவாசிகள், மூடநம்பிக்கையால் கட்டப்பட்டிருந்தவர்கள். பறவைகள், மிருகங்கள், மரங்கள், பருவகாலங்கள் ஆகியவற்றை வணங்கி வந்தனர். அவர்களது வணக்கமுறைகள் விநோதமானது.
செவ்விந்திய ஆதிவாசிகளின் பூசாரிகள், பிரெய்னாட்டின் மீது கோபமுற்றனர். அவர் சாகவும் நோய் வாய்ப்படவும் மூடநம்பிக்கை செயல்களால் முயன்றனர். கட்டுப்படுத்த முடியாத நடனங்கள், பெரும் கூச்சல்கள் போட்டு, அவரை வீழ்த்த எண்ணினர். அவரோ எவ்வித தீங்கும் நேரிடாமல் தைரியமாய் நின்று, கிறிஸ்துவே பூரண வல்லமையுடையவர் என்று அறிவித்தார்.
எண்ணற்ற இடையூறுகள் ஏற்பட்டும் பிரெய்னார்ட் எப்படியாவது செவ்விந்தியர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று வாஞ்சித்தார். மிகுந்த கரிசனையோட தனியாகவே காடுகளுக்குள் சென்று, பலமணி நேரம் இம்மக்களின் இரட்சிப்புக்காக அழுகையோடு மனபாரத்துடன் மன்றாடுவார். அநேகமுறை உபவாசித்து ஜெபிப்பதுண்டு. சில சமயங்களில் அவருக்கேற்படும் பலத்த எதிர்ப்புகளைத் தாங்க முடியாதவராய் மனச்சோர்வு அடைவதுண்டு.
ஒருமுறை பிரெய்னார்ட் மிகவும் சுகவீனப்பட்டதால் அவர் பட்டணங்களிலுள்ள பெரிய சபைகளுக்குப் போதகராக வந்து பொறுப்பெடுக்க அவரை அவரது நண்பர்கள் அழைத்தார்கள். ஆனால் டேவிட் அதற்கு மறுத்து செவ்விந்தியருக்காகவே வாழ்வேன் என உறுதிபடக் கூறிவிட்டார்.
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத் தோடே அறுப்பார்கள் (சங். 126:5) என்ற வசனத்துக்கேற்ப டேவிட் பிரெய்னார்ட் செய்த ஊழியம் பலன்கொடுக்க ஆரம்பித்தது. சாங்குவேர் என்ற இடத்தில் இவர் பிரசங்கித்தபோது பிரசங்கத்தைக்கேட்ட பலதரப்பட்ட மக்கள் இருதயத்தில் குத்துண்டு மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.
ஒருநாள் ஒரு முதிய பூசாரி தோல் உடை உடுத்தி கிளிஞ்சல்களாலும், இலைகளாலும் அலங்கரித்துக் கொண்டு அவரிடம் வந்தான். ”என்னுடைய இன மக்களைச் சந்தித்து, அவர்கள் பூர்வீக மதத்தையே பின்பற்ற வேண்டும் என்று போதிப்பேன் என்றான். டேவிட் பிரெய்னார்ட் அவனுக்குக் கிறிஸ்துவைப் பிரசங்கித்தார். அந்த பூசாரி மிகக் கவனமாய் கேட்டான். உள்ளத்தில் உணர்த்தப்பட்டவராய், இனி பரலோகப் பிதாவை மாத்திரமே சேவிப்பேன்” என்று தீர்மானித்தார்.
1745 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒருநாள் காலை அவர் செவ்விந்தியருக்குப் பிரசங்கித்தபோது அதைக்கேட்டவர்கள் ஆத்தும வியாகுலத்தால் நிரம்பி அழ ஆரம்பித்தனர். சில வெள்ளையர்கள் இந்த பைத்தியக்காரன் செவ்விந்தியர்கள் மத்தியில் என்ன செய்கிறான் பார்ப்போம் என்று வந்தபோது இவரது செய்தி அவர்களையும் தொட்டது. ஒரே வாரத்தில் 25 பேர் தேவபிள்ளைகளாய் தைரியமாய்ச் சாட்சி பகர்ந்தனர். செவிந்திய பிள்ளைகளுக்காக அங்கு ஒரு கிறிஸ்தவப் பள்ளியையும் நிறுவினார்.
ஒருநாள் செவ்விந்திதிய இளம்பெண்மணி பிரெய்னார்ட் இருந்த இடத்தைத் தேடி வந்தாள். பிரெய்னார்ட் அவளுக்குத் தான் பிரசங்கித்து வந்த கிறிஸ்துவே உண்மையான ஒரே தெய்வம் என்றும், மனந்திரும்புதல் நம்மைத் தூய வாழ்வுக்கு வழிநடத்தும் என்றும் கூறினார். அவளோ கேலியாக சிரித்து அவரைப் பரியாசம் பண்ணினாள். என்றாலும் அவர் நடத்தின கூட்டத்தில் பங்கு கொண்டாள். மிகக் கவனமாய் நற்செய்தியைக் கேட்கவே பாவ உணர்ச்சி பெற்று அழ ஆரம்பித்தாள். முடிவில் கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகரும் ஆண்டவருமாக ஏற்றுக்கொண்டாள்.
பிரெய்னார்ட் பிரசங்கித்த எல்லா இடங்களிலும் உள்ள செவ்விந்தியர்களை பரிசுத்த ஆவியானவர் ஆட்கொண்டார். பரிசுத்த ஆவியானவரின் மகா வல்லமையான செயல்கள் மூலமாக தீய பாவ வாழ்க்கை வாழ்ந்து சுவிசேஷத்தை எதிர்த்த அனைவரும், பாவ உணர்ச்சி பெற்று மனம்மாறி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். பிரெய்னார்ட் எங்கெல்லாம் சுவிசேஷத்தை பிரசங்சித்தாரோ அங்கெல்லாம் மக்கள் கண்ணீர் விட்டு அழுது மனந்திரும்பினர். மலைக்காடுகளில் வாழ்ந்து வந்த செவ்விந்திய மக்கள் ஏராளமாய் கடந்துவந்து பிரெய்னார்ட் செய்த பிரசங்கத்தைக் கவனமாய் கேட்டனர். “கடவுளுடைய புத்தகத்தையுடைய வெள்ளைப் பிரசங்கியார்” என்று செவ்விந்தியர்கள் எல்லாராலும் அறியப்பட்டார்.
1745-ம் ஆண்டு கிராஸ்வீக்சங் (Cross Weeksung) என்ற இடத்தில் கர்த்தர் ஒரு எழுப்புதலைக் கட்டளையிட்டார். 1746-ஆம் ஆண்டு, நியூ ஜெர்சி (New Jersy) என்ற இடத்திலுள்ள செவ்விந்தியர்கள் கிரேன்பரி (Cran- bury) என்ற இடத்தில் குடியேறினபோது, அவர்கள் மத்தியில் ஒரு திருச்சபையை நிறுவினார். இப்படி இவரது நற்செய்திபணிமூலம் ஒன்றரை வருடத்துக்குள் 150 மக்கள் விசுவாசத்துக்குள் வந்தனர்.
இவரது ஊழியத்தின் பலனைப்போலவே பாடுகளும் பெருகின. இவர் ஆங்கிலேயருக்கு விரோதமாகச் செயல்பட்டு, செவ்விந்தியர் மத்தியில் கலகத்தை ஏற்படுத்துகிறார் என்று கூறி அவரைத் தண்டிக்க அரசாங்க அதிகாரிகள் பிரயாசப்பட்டனர். இதனால் பிரெய்னார்ட் மனச்சோர்வு, தனிமை மற்றும் உணவு பற்றாக்குறை ஆகியவற்றை அனுபவித்தார். உலகம் என்னை துன்மார்க்கன் எனக்கருதி என்னை உபத்திரவப்படுத்தினாலும், தேசத்துரோகி என்று என்னைச் சிரச்சேதம் பண்ணினாலும் ஆபத்துக் காலத்தில் தேவன் என் உயர்ந்த அடைக்கலம், அவரது வார்த்தைகளை நான் தைரியமாய் மக்களுக்குச் சொல்வேன் என்றார்.
1746-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடுமையான இருமலும் காய்ச்சலும் உண்டாயின. அவர் தொடர்ந்து ஊழியம் செய்ய முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டார். உடலில் அதிகமான வலி ஏற்பட்டது. ஆனாலும் நடந்து சென்று செவ்விந்தியருக்குப் பிரசங்கிப்பதை அவர் நிறுத்தவில்லை. தனது சுகவீனத்தைக் குறித்து அவர் எழுதும்போது, நான் பிழைத்திருக்க வேண்டுமோ அல்லது பிழைத்திருக்க வேண்டாமோ என்பது என் ஆண்டவரின் பிரச்சனை. அதைக்குறித்து நான் கவலைப்படுவது அவசியமற்றது என்று தனது டைரியில் எழுதினார்.
ஒரு சமயம் வெட்ட வெளியில் தங்கி உறங்கியதால் அதிக சுகவீனம் அடைந்தார். டேவிட் பிரெய்னார்ட்க்குக் காச நோய் முற்றிவிட்டது என்றும் பிழைப்பது மகா கடினம் என்றும் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கூறினர். ஆனால் இவர் அதைக் குறித்துக் கவலைப்படாமல் எப்போதும் சந்தோஷத்துடனும், உற்சாகத்துடனும் சுவிசேஷம் அறிவித்துவந்தார். இந்நிலையில் காய்ச்சலும், சரீர வேதனையும் மிகுதியானதினால், இரத்தம் அவர் வாயினின்று பீறிட்டுக்கொண்டு வெளியே வந்தது. அநேகமாக மரணத்தை நெருங்கிவிட்டார். அவர் சுகவீனமடைந்ததால் அவருக்குத் திருமணத்திற்கென நிச்சயம் செய்யப்பட்டிருந்த ஜெருஷா என்ற பெண்ணும் இன்னும் சில நண்பர்களும் அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
டேவிட் பிரெய்னார்ட் 29 வயது நிரம்பியவரானார். இருண்ட குளிர் காடுகளில் நற்செய்தியைக் கேள்விப்படாத செவ்விந்தியருக்குச் சுவிசேஷத்தை அறிவிப்பது தன் கடமை; சரீர சுகத்தைவிட பிரதானமானது என்றும் கருதி, தன் சுகத்தைப் பொருட்படுத்தாது உழைப்பில் ஈடுபட்டதினால் என்றுமே சுகப்படுத்த முடியாத காசநோயின் பிடியில் சிக்கினார். சிறிது சிறிதாக அவரது இரத்தம் வெளியேறியது. மரணப்படுக்கையில் படுத்திருக்கும்போது தாங்கமுடியாத சரீர வேதனையையும் துயரத்தையும் சகித்தார்.
மரணம் நெருங்கிக் கொண்டிருந்தபோது தனக்கு சேவைசெய்துகொண்டிருந்த ஜெருஷாவிடம், நீ என்னை விட்டுப் பிரிந்திருக்க ஆயத்தமாயிருக்கிறாயா? நான் உன்னை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் இனி உன்னைக் காணாவிட்டாலும், நித்தியத்தில் நாம் சந்தோஷமாயிருப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கூறினார். வரப்போகும் கிறிஸ்து இயேசுவைப்பற்றிய சிந்தனையும், நினைவும் எப்போதும் அவர் மனதில் நின்றது. மிக மெல்லிய குரலில், ”நிச்சயமாகவே கிறிஸ்து வரப்போகிறார். தாமதம் செய்யார். நானும் தேவதூதரோடு சேர்ந்து என் தேவனை மகிமைப்படுத்துவேன்” என்று கூறினார்.
இந்நிலையில் 1749-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ம் தேதி காலை ஆறு மணியளவில் 29 ஆம் வயதில் டேவிட் பிரெய்னார்ட் தான் சேவித்து வந்த ஆண்டவரைத் தரிசிக்கவும், மகிமைப்படுத்தவும் தேவதூதரோடு சேர்ந்து துதித்து ஆர்ப்பரிக்கவும் கிறிஸ்துவின் சமுகத்தை அடைந்தார்.
பெலவீனமான சரீரத்தைக் கொண்ட ஒருவர் மிஷனெரிப் பணியில் ஈடுபட முடியுமா? என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளிக்கிறது டேவிட் பிரெய்னார்ட் என்ற மிஷனெரியின் வாழ்க்கை வரலாறு. இவருடைய ஊழியத்தை ஆய்வு செய்த ஒருவர் கூறும்போது 70 ஆண்டுகள் ஜீவித்த மனிதர்கள் சாதித்ததைக் காட்டிலும் 29 ஆண்டுகள் ஜீவித்த பிரெய்னார்ட் அதிகமாகவே சாதித்திருக்கிறார் என்றார். இவரது வாழ்வு மிகக்குறுகினது, ஆனாலும், அது முழுவதும் ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! இவரைப் பின்பற்றி வில்லியம் கேரி, ஹென்றி மார்ட்டின் ஆகிய தலைசிறந்த மிஷனெரிகள் அயல் நாடுகளில் அருட்பணியாளர்களாகத் தங்களை ஒப்புக்கொடுத்தனர்.
✝. இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
🛐. இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
☸. கிறிஸ்துவவில் அன்பானவர்களே!.இந்த மிஷனெரிகள் சரித்திரம் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களால் வாசிக்கப்படுகின்றது. ஆகவே இந்த சரித்திர குழுவின் இனைப்பை உங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவருக்கும் அனுப்பு வைக்கும்போது, அவர்களும் உங்களைப்போல மிஷனெரி தரிசனத்தை பெற்றுக்கொள்வார்கள். நன்றி
🔯. May God Bless You and Use You for the Extensions of His Kingdom. With Love and Prayer...Rev. D. David Paramanantham B.Sc, M.A, B.D, Gamaliel Bible College, Mumbai, India 💐😊🙏
===========
The Gospel Pioneers
David Brainard (1718-1747)
==========
David Brainerd was born on April 20, 1718, in the town of Haddam, Connecticut, USA, to Jebbediahonas, a member of the legislature, and Dorothy. David Brainerd was 9 years old when his father died in 1727 at the age of 46. His mother Dorothy died when he was at the age of 14. So, Brainerd moved to East Haddam to live with his elder sister. From childhood, he had a sad attitude and was haunted by the fear of death. Consequently, he lost his joy and interest in playing as a child. David worked with his sister on a farm in Durham to support his family.
As a teenager, Brainerd protected himself from bad friends. He spent a lot of time in prayer and reading. Every Sunday evening, along with other youths, he engaged in Bible Study. On Sunday evenings, he would recall the message of God that he had heard earlier that day and deeply ponder it. However, he did not have real peace in his mind. Then one Sunday morning, the thought of God's wrath came into his heart. After spending a day in fasting and praying, divine peace enveloped Brainerd when he confessed his sins to God and received forgiveness.
In 1739, at the age of 21, he joined Yale College and began his studies. Due to physical weakness, he was often sick and hindered from studying. In 1742, when Ebenezer Pemberton preached about the need for missionary work among the Native Americans in America, David realized that the Lord was calling him to work as a missionary among them. Confirming his call to missionary work, David joined the Scottish Missionary Establishment when he learned that it was sending missionaries among the Native Americans in the USA.
He first stayed in New York at a place called Kaunameek and studied languages. The following year, he went to preach Christ to the uncivilized people of the Native American tribes, living alone in the dense forests. Here he woke up early in the morning and, after spending much time in prayer and meditation, preached the gospel to the people.
His career was full of difficulties. Living simply, he made his bed by laying some wooden planks on the floor and spreading some straw on it. He walked rugged paths and preached the gospel among the Tribal Native Americans.
David Brainerd did not have any comforts of life.
Enduring fatigue, illness, and a hard lifestyle, he progressed in his work. He traveled by foot and on horseback over very dangerous paths. Once he got lost in the woods and returned home after many hours. Another time he nearly drowned in the river but survived. Many times, he did not have suitable food. He had to travel ten to 15 miles to buy a loaf of bread, and sometimes even that was unavailable.
Being very lonely, he could only converse with his translator. He had no Christian brothers to share his burdens with, and no one to pray with him. He learned to eat Red Indian food because he had to walk 15 miles to buy good bread.
"The Native Americans whom Brainard chose to minister to were barbaric aborigines bound by superstition. They worshiped birds, animals, trees, and seasons. Their forms of worship were strange.
The Red Indian Tribal priests were furious with Brainard. They tried to kill him with superstitious practices. Through uncontrollable dances and loud shouts, they attempted to knock him down. However, he stood boldly unharmed and declared that Christ is all-powerful. Despite countless obstacles, Brainard insisted that the American Indians should somehow be saved.
Once he fell ill, many of his friends invited him to take charge of the big congregations in the local towns. But David refused and said that he would live for the Native Americans. David's ministry began to bear fruit according to the verse, "Those who sow with tears shall reap with joy" (Psalm 126:5).
One day, a Native American Tribal priest dressed in leather and decorated with feathers and leaves came to him, and David preached Christ to him. The old priest listened very attentively. He resolved to serve only the Heavenly Father as he was convinced in his heart.
One morning in August 1745, when he preached to a Native American woman, she began to weep, filled with anguish of soul. Even Native American children were touched by his message. When some white people came to see what this "madman" was doing among the Native Americans, his message touched them too.
One day, a deaf young woman came to Brainard's place, eager to know about the miracle of conversion. Brainard told her that the Christ he preached was the only true God and that repentance would lead us to a pure life. She laughed mockingly and teased him. However, she participated in the meeting held by him.
Listening to the gospel very carefully, she felt guilty and started crying. In the end, she accepted Christ as her personal Savior and Lord.
The Holy Spirit moved among the Native Americans everywhere Brainard preached. Mighty works of the Holy Spirit took place among the Native Americans in 1745. All those who had lived sinful lives and resisted the gospel had a sense of sin, repented, and accepted Christ. Wherever he preached the gospel, people wept and repented.
The cry of the Lord's mercies and the Native Americans crying out in guilt was a scene at all the meetings held by Brainard. All the Native Americans who lived in the mountain forests came in large numbers and listened intently to Brainard's sermon. He was known by all as "the white preacher of God's book." The children also came and listened to what he was saying. He also established a Christian school there.
In 1745, there was a revival at Crossweeksung. In 1746, when the Native Americans of New Jersey settled at Cranbury, he established a church among them. Through his evangelism, 150 people came to faith within a year and a half.
Government officials tried to punish him, saying that he was acting against the British and was causing riots among the Northern Native Americans. Brainard thus suffered from depression, loneliness, and lack of food.
In September 1746, he fell ill and developed a severe cough and fever.
He became too ill to continue his ministry. But he did not stop walking and preaching to the deaf. When he wrote of his illness, he said, "It is my Lord's problem whether I should survive or not." He wrote in his diary that there was no need for him to worry about it. He said that even though he could never walk, write, or read again, he felt that his spirit was renewed. His work continued in great physical infirmity and in the midst of suffering.
At one point, he fell ill after staying outside and sleeping. The doctors who examined David Brainard told him that he had tuberculosis and that it was very difficult for him to survive. But David was unconcerned about it and always looked happy and excited. The fever and bodily pains were so great that blood gushed from his mouth. He was probably close to death. As he fell ill, Jerusha, who was sure to be married to him, and some other friends attended to him. He had severe diarrhea.
David Brainard had just turned 29; he was caught in the grip of tuberculosis, which could never be cured because he was engaged in labor without regard for his health. Little by little, his blood flowed out. He endured unbearable physical pain and grief while lying on his deathbed. Death was approaching. Then he said to Jerusha, who was serving him, "Are you ready to leave me? I have come to the point where I have to leave you. Even if I don't see you anymore, I have hope that we will be happy in eternity." The thought and memory of the coming of Christ Jesus always stood in his mind. In a very soft voice, he said, "Certainly, Christ is coming. Even if he delays, I will glorify my God with the angels."
On the 9th of October 1749, at six o'clock in the morning, David Brainard, at the age of 29, went to be in the presence of Christ to visit and glorify the Lord he was serving, to praise and pray with the angels.
A person who studied his ministry said that Brainard, who lived for 29 years, achieved more than most people who lived for 70 years.
Can a person with a weak body be a missionary? The biography of a missionary named David Brainard answers this question affirmatively. Although it was a very short life, it was a life dedicated to the Lord! Following him, great missionaries like William Carey and Henry Martin committed themselves as ministers in foreign countries.
🛐.Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.
☸. My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation?
✝. The Gospel came to India 2000 years back but still we are 2.8% of Indian population. The harvest is plenty but the labourers are few. So come...let's together build the Kingdom of God in our Nation and let's evangelize our Nation in Christ in our Generation.
❇. Dear friends kindly introduce this group link to your friends, relatives and your Church members. May God bless you and use you for the extensions. With love and prayer...Rev. D. David Paramanantham, B.Sc., M.A. B.D. Gamaliel Bible College, Mumbai, India💐🙏😊