=========
ஐந்தாம் திருமொழி - தவிப்பின் வார்த்தை
=========
தலைப்பு: புனித ஏக்கங்களின் இளிய வெளிப்பாடு
யோவான் 19:28
எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக “தாகமாயிருக்கிறேன் என்றார்”.
1. தாகமாய் இருந்தவர்
மத்தேயு 27:48
மாற்கு 15:36
கடற்காளானை எடுத்து, காடியிலே தோய்த்து அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
சங்கீதம் 69:21
சங்கீதம் 69:21
என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.
யோவான் 4:8,14
யோவான் 4:8,14
தாகத்துக்குத்தா என்று சமாரியா பெண்ணிடம் கேட்கிறார். இந்த தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது.
2. தாகத்தைத் தீர்க்கிறவர்
யோவான் 7:37,38
2. தாகத்தைத் தீர்க்கிறவர்
யோவான் 7:37,38
ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
வெளிப்படுத்தல் 21:6
நான் அல்பாவும், ஓமேகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் தாகமாயிருக்கிறவனுக்கு ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.
வெளிப்படுத்தல் 22:17
வெளிப்படுத்தல் 22:17
தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்
3. தாகம் தீர்க்க சொன்னவர்
நீதிமொழிகள் 25:21
3. தாகம் தீர்க்க சொன்னவர்
நீதிமொழிகள் 25:21
உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.
ரோமர் 12:20
உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு
மத்தேயு 25:35
மத்தேயு 25:35
பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்.
தாகமாயிருங்கள்
சங்கீதம் 42:1,2 மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது
போல... என் ஆத்துமா ஜீவனுள்ள தேவன்மேல் தாகமாயிருக்கிறது
போல... என் ஆத்துமா ஜீவனுள்ள தேவன்மேல் தாகமாயிருக்கிறது
சங்கீதம் 63:1
சங்கீதம் 143:6
ஆத்துமத்தில் தாகமாயிருங்கள்
=============
சிலுவை தியான அருட்செய்தி
=============
சிலுவை தியான அருட்செய்தி
அருட்கவி ஆயர். மு. அருள்தாஸ்
ஐந்தாம் வார்த்தை: தவிப்பு
==============
யோவான் 19:26-27அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.
1. தீர்க்கதரிசன நிறைவேறுதல்
சங்கீதம் 69:21
சங்கீதம் 22:15
யோவான் 19:26
வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக இயேசு சொன்னார்.
2. இயேசுவுக்கு மூன்று விதமான தாகம். சரீர தாகம் சரீரப்பிரகாரமாய் இயேசு களைப்போடே தண்ணீரில்லாமல் தவித்தார்.
2. இயேசுவுக்கு மூன்று விதமான தாகம். சரீர தாகம் சரீரப்பிரகாரமாய் இயேசு களைப்போடே தண்ணீரில்லாமல் தவித்தார்.
ஆத்துமாவில் தாகம்- தேவனொடு இருக்க வாஞ்சை
சங்கீதம் 42:1
ஆத்துமாக்களுக்காக தாகம்
யோவான் 7:37
யோவான் 4:8
3. இயேசுவுக்கு ஏன் தாகம் எடுத்தது? இயேசு மரணத்தை ருசி பார்த்தார், பாதாளத்தில் ஐசுவரியவானுக்கு தாகம் எடுத்தது
3. இயேசுவுக்கு ஏன் தாகம் எடுத்தது? இயேசு மரணத்தை ருசி பார்த்தார், பாதாளத்தில் ஐசுவரியவானுக்கு தாகம் எடுத்தது
லூக்கா 16:23-24
4. தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு
4. தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு
நீதிமொழிகள் 25:21
இயேசுவுக்கோ தண்ணீர் கொடுக்கப்படவில்லை, மாறாக கசப்பு காடியை குடிக்க கொடுத்தார்கள். நீங்களும் இயேசுவுக்கு கசப்பை கொடுக்காதிர்கள்
5. இயேசுவின் தாகம் எப்படி தீர்க்க போகிறீர்கள்
1. இயேசுவிடம் வாருங்கள்
2. மற்றவர்களை இயேசுவிடம் கூட்டி கொண்டு வாருங்கள்
6. ஐந்தாம் வார்த்தை "நாம் இனி ஒருபோகும் தாகமாயிருப்பதில்லை என்ற நிச்சயம் தருகிறது” “தாகம் தீர்க்கும் ஜீவ நதியாகிய இயேசுவிடம் வந்து அவர் தாகத்தை தீர்க்க வேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுக்கிறது”
5. இயேசுவின் தாகம் எப்படி தீர்க்க போகிறீர்கள்
1. இயேசுவிடம் வாருங்கள்
2. மற்றவர்களை இயேசுவிடம் கூட்டி கொண்டு வாருங்கள்
6. ஐந்தாம் வார்த்தை "நாம் இனி ஒருபோகும் தாகமாயிருப்பதில்லை என்ற நிச்சயம் தருகிறது” “தாகம் தீர்க்கும் ஜீவ நதியாகிய இயேசுவிடம் வந்து அவர் தாகத்தை தீர்க்க வேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுக்கிறது”
============
The Fifth Word : Groaning
============
John 19:28And after that Jesus knew that all things were finished, and said, So that the Scripture may be fulfilled, saying, I thirst.
1) Fulfillment of Prophecy
Psalm 69:21
Psalm 22:15
John 19:26
2) Jesus said that the Scriptures would be fulfilled.
3) Jesus was Thirsty for these three things.
Physical thirst - Physically, Jesus suffered from lack of water
Thirst in the Soul - Longing to Be With God,
Psalm 42:1
Thirst for souls
Psalm 42:1
Thirst for souls
John 7:37
John 4:8
4) Why did Jesus become thirsty?
Jesus tasted death, and the rich man was thirsty in the hell
Luke 16:23-24
5) If any one are thirsty, give him water to drink.
Proverbs 25:21
Jesus was not given water, but rather bitter gourd was given to drink. You too Should not give bitterness to Jesus. There was no one to give water
to Jesus.
Jesus was not given water, but rather bitter gourd was given to drink. You too Should not give bitterness to Jesus. There was no one to give water
to Jesus.
6) How are you going to quench Jesus' thirst?
Come to Jesus.
Come to Jesus.
John 7:37
Bring others to Jesus like Samaritan Woman.
Bring others to Jesus like Samaritan Woman.
John 4:29
7) The fifth word "guarantees that we will no longer be thirsty" "teaches us that we must come to Jesus, the river of life that quenchs thirst, and to quench his thirst"
7) The fifth word "guarantees that we will no longer be thirsty" "teaches us that we must come to Jesus, the river of life that quenchs thirst, and to quench his thirst"
8) The Fifth Word Confirms Humanity of Jesus.
==========
Pastor: Jeyaseelan
Mumbai
ஐந்தாம் வார்த்தை
==============
யோவான் 19:28
தாகமாயிருக்கிறேன்இயேசு சிலுவையில் தொங்கும் போது நான்காவது வார்த்தைக்கும் ஐந்தாவது வார்த்தைக்கும் நடுவில் மூன்றுமணி நேரக் காரிருள் சூழ்ந்திருந்தது. ஐந்தாவது வார்த்தையைக் கூறும் போதுதான் வெளிச்சம் வந்தது. அப்போது வேதவாக்கியமாகிய சங்கீதம் 22:15-ம் வசனம் நிறைவேறும்படியாகத் தாகமாயிருக்கிறேன் என்ற வார்த்தையைக் கூறினார்.
இந்த வார்த்தையின் சாராம்சம் என்னவென்று அறிந்து கொள்வோம்.
1. சிலுவை மரணத்தால் ஏற்பட்ட சரீரத்தாகம்-
இந்த வார்த்தை இயேசுவின் மனித வரையறையை எடுத்துக்காட்டுவதாய் உள்ளது. சிலுவையில் அறையப்பட்டவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் அதீத காய்ச்சல் வாரடிகள் மற்றும் ஆணிகளால் இரத்தம் வெளியேறுதல், இவைகளால் தாங்க முடியாத தாகம் ஏற்படுவது இயல்பு. அப்பொழுது அவர்கள் தண்ணீர் கேட்பது உண்டு.
இயேசு தேவ குமாரனாயிருந்தாலும், மனித வரையறைக்குட்டவராய் சிலுவையில் தொங்கியதால் அவருக்கு இயல்பான சரீரத்தாகம், ஏற்பட்டது. இதனால் மனிதனாகிய கிறிஸ்து அங்குள்ள மனிதர்களிடம் தண்ணீர் கேட்டார். தண்ணீர் வேண்டும் என்று பிதாவை நோக்கிக் கேட்கவில்லை. இந்த வார்த்தையால் மனிதனை நோக்கிக் கேட்க வேண்டியவைகள் உண்டு. அவைகளை மனிதர்களிடம் கேட்க வேண்டும் என்று கற்றுக்கொள்கிறோம்.
2. சிலுவை மரணம் வீணாகக்கூடாது என்ற தாகம்:
நான் சிலுவையில் மரிப்பதால் மனுக்குலம் மீட்கப்பட வேண்டும். ஒருவரும் கெட்டுப் போகக்கூடாது என்ற ஆத்துமாக்களைக் குறித்த தாகம் இயேசுவுக்கு இருந்தது.
I தீமோத்தேயு 2:4,
II பேதுரு 3:9
எபிரெயர் 2:10
நமக்கும் ஆத்துமதாகம் தேவை.
3. மக்கள் தம்மைப்புரிந்து கொள்ள வேண்டும் என்ற தாகம்? சரீர்த்தாகத்திற்கென்று இயேசுவுக்குக்காடி கொடுக்கப்பட்டது. அதை அவர் வாங்கினார். இதை யோ 19:30ல் வாசிக்கிறோம். இச்செயலானது, மக்களின் அனைத்துக் கஷ்டங்கள் துன்பங்கள் உள்ளானதாகங்கள் இவைகளை இயேசுவாகிய நான் புரிந்திருக்கிறேன் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தாகம் இயேசுவுக்கு இருந்தது. ஆனால் இன்றும் துன்பப்படும் நம்மில் அநேகர் இயேசுவின் இத்தாகத்தைப் புரியாமல் இருக்கிறோம்.
ஐந்தாம் திருமொழி
(அருட்பணி. ஜான்சன் அசோக்குமார்)
இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது“ என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். (யோவான் 19:28)
புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் பலரும் 5 மற்றும் 6-ம் வார்த்தைகளை ஒரே வார்த்தையாய் புரிவது கூடுதல் பொருள் தரும் என்கின்றனர். ஆயினும் “எல்லாம் முடிந்தது” ஒரு வாக்கியமாகவும், “நான் தாகமாயிருக்கிறேன்” மற்றொரு வாக்கியமாகவும் புரிவதும் தவறல்ல. ஏனெனில் இரண்டும் முழுமையான வாக்கியங்களே. இங்கு நாம் ஐந்து ஆறு என்று தனித்தனியாகவே தியானிக்கிறோம். காரணம் இறையியல் அழுத்தம் கூடுதலாக கிடைக்கும் என்பதால்.
சிலுவைத் திருமொழிகளில் ஐந்தாம் மற்றும் ஆறாம் மொழிகள் மாத்திரமே திருமறை வாக்கியம் நிறைவேற கூறப்பட்டதாகவும் நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்னவெனில் சிலுவை மரணமும் அதனால் கிடைத்த மீட்பும் திருமறையின் வெளிப்பாடே. மேசியா வருகை திருமறையின் நிறைவுறலே, அவரின் வார்த்தையும் வாழ்வும் எதிர்பார்ப்பின் நிறைவேற்றமே. அவ்வாறு இருக்கையில் இவ்விருவார்த்தைகள் மாத்திரம் நிறைவேறியது என்று புரிதல் தேவையற்றது. மேலும் சங்கீத பாடல்கள் அனுபவ வெளிப்பாடே தவிர எதிர்பார்ப்பின் பாடல்கள் அல்ல.
சங்கீதம் 69 குற்றமற்ற ஒருவர் துன்புறுத்தப்பட்ட பொழுது எழுதப்பட்ட புலம்பல் பாடலாகும். குற்றமற்ற தனக்கு தீமை செய்ய பலர் எழுகின்றனர். நான் வீழ்ந்து போவது போன்று உணர்கிறேன். என் எதிரிகளை அழியும். ஏனெனில் நீர் ஏழைகளைக் கைவிடாத கடவுள், எனவே, உம்மைத் துதிப்பேன் என்கிறது.
இச்சங்கீதத்தின் அடிப்படையில் பார்த்தல் இயேசுவுக்கு ஒத்துப்போவது போன்று தோன்றியாலும் (குதிகால் தூக்குதல் சங்கீதம் 41:9 தொண்டை வறலுதல் சங்கீதம் 69:3 வஸ்திரம் பங்கிடல் சங்கீதம் 22:18) சங்கீதக்காரன் போன்று தன் பகைவர்களை அவர் சபிக்கவில்லை என்பதையும் கவனித்தால் இது நிறைவேற்றம் அல்ல. உண்மையாய் வாழ்பவர்கள் துன்பத்திற்கு உள்ளாவது இயற்கையே. ஆனால் இறுதி வெற்றி அவர்களுக்கு கடவுள் தருவார்.
நீதிக்காய் துன்புறுகிறபோது இறுதிவெற்றி கிடைக்கும் என்றால் அது எப்பொழுது என்ற கேள்வியும் எழும்பப்படுவது நியாயமே! விண்ணகத்தில் கிடைக்கும் மாற்று கருத்தில்லை; ஆனால் இவ்வுலகில் மாற்றம் காணமுடியாதா? என்ற கேள்விக்கு விடை சில நேரங்களில் நீதிக்காய் துன்புறுகிற பொழுது துன்புறுகிறவர் கண் பார்க்கவே நீதி கிடைக்கும். சிறந்த எடுத்துக்காட்டு நிறவேறி போராட்டமும் நெல்சன் மண்டேலாவும் அதற்கு சான்றாக கூறலாம்.
இந்தியா போன்ற நாடுகளில் வகுப்பு மற்றும் சாதிக்கு எதிரான நீதிக்கான போராட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாகவே நீதி கிடைத்தாலும் மானுடம் மாறுகிறது என்ற நம்பிக்கையை நாம் மறுக்க முடியாது. ஆனால் இறுதி வெற்றிக்காய் தொடர்ந்து குரலெழுப்ப வேண்டும். இன்றும் இந்திய குடியரசின் முதல் குடிமகன் முன்னாள் குடியரசுத் தலைவரே (ராம் கோவிந்த) கோயிலுக்கு வெளியே தான் கடவுளை வழிபட்டார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இயேசுவின் வாழ்வில் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின, அதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் “ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்“ சங்கீதம் 69:21 அப்படிப்பட்ட வார்த்தைகளை தீர்க்கங்களாகத் கொள்ளத் தேவையில்லை. வியர்வையோ இரத்தமோ உடலிலிருந்து அதிகமாய் வெளியேறும் பொழுது தாகமெடுப்பது பொதுவான நியதி. இயேசுவும் இவ்வனுபவத்தினூடே கடந்து வருவதால் தாகமெடுத்தது.
“தண்ணீர் வேட்கை“ சிலுவையில் அறையப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளுக்கும் ஏற்படும் அனுபவம். எனவேதான் சிலுவையில் அருகே திராட்சைச் சாறு (காடி) வைத்திருந்தார்கள். குற்றவாளிகள் கதறும்பொழுது கொடுத்த வலியை தாங்க உதவிடுவார்களாம். கொடூர கொலைகாரர்களின் செயலில் ஓர் இரக்கச் செயல் அவ்வளவே.
யோவான் நூலில் மாத்திரம் இவ்வார்த்தை ஏன்?
இயேசுவை கிறிஸ்து என்றும் கடவுளின் மகன் என்றும் சீடர்கள் தொடர்ந்து அறிக்கை செய்தனர் (அப்போஸ்தலர் 2). இதனால் எரிச்சலடைந்த யூத மக்களும், சமயத் தலைவர்களும் சீடர்களை சமூக விலக்கமும், சமய விலக்கமும் செய்தனர் (யோவான் 9). உறவற்று திரிந்த இந்த நிலையில் ரோம அரசும் சந்தேகப் பார்வையை இயேசுவின் சீடர்களின் மீது பதித்தது. யூதர்களால் கல்லெறிதல் (persecution) ஒருபுறம், ரோம சேவகர்கள் தேடுதல் மறுபுறம் என இருதலைக் கொள்ளியாக இயேசுவின் பற்றாளர்கள் துக்கத்திற்குள்ளாயினர். யாரிடம் போய் நிற்பது திக்குத்தெரியாத நிலை. இந்நிலையில் மக்களுக்கு எழுதபபட்ட நம்பிக்கையின் வாக்கியமே “உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்“ என்பது. ஆனால் அவ்வாக்கியம் இன்று பணமாக்க பயன்படுகிறது.
யூதேயாவை விட்டு சீடர்கள் பல்வேறு திசைகளுக்கும் சிதறி ஓடி பல இடங்களில் தஞ்சம் புகுந்து பின்னர் அங்கு நற்செய்தியை வளர்த்தனர். எபேசு எனும் இடத்தைச் சுற்றிலும் இப்பணி வெகுவாய் வளர்ந்தது. அக் காலக்கட்டத்தில் திரிபுக் கோட்பாடுகள் வளர்ந்தன. நாசரேத் இயேசு ஒரு மனிதனே, இறையாற்றல் உடையவர் அல்ல என்ற நம்பிக்கையை உருவாக்க சிலர் முனைந்தனர். வேறு சிலர் இயேசு மனித தோற்றத்தில் இருந்த கடவுள் அவர் மனிதனல்ல என்றனர். (தோன்றி மறையும் ஆற்றல் பெற்றவர் எனவே சிலுவைப்பாடுகள் பாடுகளே அல்ல என்றனர். 1 யோவான் 4:2)
இத்திரிபுக் கோட்பாடுகளுக்கு பதிலுரைக்கவே யோவான் ஆதியிலே வார்த்தையாய் கிறிஸ்து இருந்தார் என்று அவரின் முன்னிருப்பு நிலையையும், பின்னர் அவர் மாம்சமானார் (யோவான் 1:14) என்பதன் மூலம் படைக்கும் முன்னர் கடவுளின் சாயலும் உலகில் வாழ்ந்தபொழுது முழு மனுடமாகவும் வாழ்ந்தார் என்பது யோவானின் புரிதலும் நம்பிக்கையுமாகும்.
இயேசு தன்னை நம்பி தன் போதனைகளை நம்பிய பெரிய இயக்கமாக்கிய பெருந்திரளான மக்கள் கூட்டத்தை காட்டிக் கொடுக்கவோ கைவிடவோ இல்லை. அவர்களுக்காக தன்னை அர்ப்பணித்தார் (யோவான் 18:8). தனது சிந்தனைகள், கடவுளின் விருப்பம், மக்களின் வாழ்வு உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதற்காக கொடுந்துயரைத் தாங்கி நின்றார் (பாபிலோனில் வாழ்ந்த யூதர்களையும், கிரேக்க மன்னன் அந்தியோகு எபிபனாசு காலத்து மக்கள் போன்றும் துயரங்களை எதிரகொள்ளல்). அத்துன்பத்தின் ஊடே தன் தண்ணீர் வேட்கையை வெளிப்படுத்தினார். அவருக்கு பசி எடுத்தது (மத்தேயு 21:28) தாகமெடுத்தது (யோவான் 4:7) சிலுவைப் பாடுகளில் இவ்வார்த்தை அவரின் மானுடத்தை வெளிப்படுத்துகிறது. முழு மனிதராக வாழ்ந்தார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
தாகமாயிருக்கிறேன் என்ற வார்த்தை இயேசு தன் வாழ்வில் இரண்டு முறை பயன்படுத்துகிறார். சமாரிய பணியைத் தொடங்கும் முன்னர் ஒரு பெண்ணிடம், ”தாகமாயிருக்கிறேன், தாகத்துக்கத் தா” என்றார்.
கிராமபுறத்தில் இன்று உரையாடலைத் தொடங்கும் முன்னர் “ஒரு வாய்க்கு பாக்கு இருக்கிறதா?” அல்லது “வெற்றிலை இருக்கிறதா? சுண்ணமாம்பு இருக்கிறதா?“ என்று ஏதாவது கேட்டு அதனூடே உரையாடலைத் தொடங்குவது வழக்கம். இயேசுவும் இந்த பழக்கத்தை பின்பற்றுகிறார். தாகத்துக்குத் தா என்று ஆரம்பித்து சமாரியரையே தன்னை மேசியா என்று உணரவைத்தார் (யோவான் 4:42). பணியின் தொடக்கம் அது. சிலுவையில் தாகமாயிருக்கிறேன் என்பது பணி தொடர்ந்திட விழைத்த தாகமாகும்.
கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வது என்பது அகலமான பாதையில் நடப்பது அல்ல, அது வரையறைகளையும், எல்லைகளையும் கொண்டது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழைய தன்னை வருத்திக் கொண்டுதான், பயிற்சி எடுத்து தன் உருவத்தை தன் உடையை குறைத்துதான் உள்ளே செல்ல முடியும். அப்படியே செல்ல முடியாது. இயேசுவே இதனைத் தன் வாழ்வில் மாதிரியை அமைத்துத் தருகிறார்.
துன்புறும் இயேசுவுக்கு சமூகத்தின் பங்களிப்பு என்ன? இயேசுவைத் சுற்றி நின்றவர்களில் ஒருசில கலிலேய பெண்களைத் தவிர ஆண்களில் நிக்கதோம், அரிமத்தியாவின் யோசேப்பு மட்டுமே நின்றுகொண்டிருந்தனர். கைதியாய் நிற்கும் இயேசுவுக்கு இவர்கள் யாரும் உதவிட முடியாது, கூடாது. இன்றும் நீதிமன்த்திற்கு அழைத்து வரப்படும் சிறைக் கைதிகளுக்கு நீதிமன்றத்தில் உறவினர்கள் எதுவும் தரக்கூடாது (சட்டத்திற்கு புறம்பாக காவலர்கள் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அனுமதிப்பது வேறு தகவல்).
சிலுவையின் அடியில் நின்றவர்களில் ஒருவன் ஓடிப்போய் கடற்காளானைக் கொண்டுவந்து காடியைத் தோய்த்து கொடுத்தான். தாகமாயிருக்கிறேன் என்று கேட்டதால் அவன் தரவில்லை (மத்தேயு 27:48, மாற்கு 15:36) அவர் வலி பொறுக்காமல் கதறுவதால் மயக்கமடைந்து விடுவாரோ அல்லது காடியை காடியை கொடுத்தாலும் மயங்கி விடுவாரோ என்ற சிந்தனையும் இருந்தது. அவர் கதறினால் தான் எலியா வருவாரோ என்று பார்க்கலாம் என்ற சிந்தனையினால் தான் கொடுக்க வேண்டாம் என்று தடுத்தனர். கதற அனுமதித்தனர். இன்னும் கொஞ்சம் கத்தினால் ஒருவேளை எலியா வருவாரா என்று பார்க்கலாம் அடையாளத்தைக் காண்பதற்காகவே. இந்த சூழலில் காடி கொடுக்கப்பட்டது. (மத்தேயு 27:49, மாற்கு 15:36)
நீதிமான் துன்புறும் பொழுது எலியா வந்து காப்பார் என்ற நம்பிக்கை யூதரிடம் நிலவியது. இயேசு உண்மையில் நீதிமானாய் இருந்தால் எலியா வருவாரா பார்ப்போம் என்றும், அப்படி வந்தால் நம்புவோம் என்றும் காத்திருந்தனர். ஏனெனில் காடியை கொடுத்தவர்கள் யூதர்கள், எலியா வருவார் என்ற நம்பிக்கைக் கொண்டவர்கள். வலியை உணராதவர்கள் எலியாவை எதிர்பார்த்தார்கள்.
அற்புதங்களினால் இயேசுவின் பின் சென்றவர்கள் (யோவான் 4:48). அவர்களிடம் ஏற்கனவே யோனாவின் அடையாளமேயன்றி வேறு அடையாளம் கிடையாது (மாற்கு 8:11,12) என்று கூறிவிட்டார் (மத்தேயு 12:39, மத்தேயு 16:4). மேலும் இயேசுவைக் காப்பாற்ற எலியா வந்தால் காலந்தோறும் கடவுளுக்காகவே இரத்த சாட்சியாய் மரித்த ஆபேல் முதல் சகரியா வரை ஏன் கடவுள் காப்பாற்றவில்லை என்ற கேள்விக்கு அவர்கள் நம்பிக்கை பொய்யோ என்றும் ஆகிவிடும். எனவே எலியா வருகையை எதிர்பார்த்து ஏமாந்த கூட்டமே இவர்கள்.
யோவான் நற்செய்தி நூலில் இயேசு கேட்ட பின்னர் காடி கொடுக்கப்பட்டது (யோவான் 19:28,29,30). இயேசு குடித்தார் என்ற குறிப்புத் தரப்படுகிறன்றது. நான் குடிக்கும் பாத்திரம் என்று இயேசு எதனைக் குறிப்பிட்டாரோ (மத்தேயு 19:22, மாற்கு 10:38) அதனைக் குடித்து முடித்தார். எதற்காக இயேசு தன் வாழ்வை கடவுளுக்கு ஒப்படைத்தாரோ அது நிறைவேறியது. தன் வாழ்வில் கடவுளுக்காக வாழ ஒப்படைத்தபொழுது எதிர்பட்ட எல்லா இன்னல்களையும் எதிர்கொண்டார். எதிர்கொள்ள இயலாத நிலையில் பின்வாங்கியும் உள்ளார் (மத்தேயு 14:21) தனித்து சென்றுள்ளார் (மத்தேயு 14:23) போராயுள்ளார் (லூக்கா 22:43) தன் வேதனைகளை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார் (மத்தேயு 16:21, மத்தேயு 26:28) கடவுளின் திட்டம் இயேசுவின் வாழ்வில் அப்படியே நிறைவேற்றப்பட்டது. இயேசு ஒரு கருவியே என்று புரிதல் தேவையில்லை. கடவுள் இயேசுவை தூரத்தில் இருந்து இயக்கினார். சாத்தானையும் யூதாஸையும் அவரே இயக்கினார் என்று கருதத்தேவையில்லை. மாறாக இயேசுவின் மரணம் அநீதிக்கு எதிராக போராடிய இயேசுவைக் கொல்ல சாத்தான் திட்டமிட்டு அதற்கு யூதாஸ் கருவியாக்கப்பட்டான் (லூக்கா 22:3) என்று புரிவது சிறப்பானது.
நம் வாழ்விலும் தெரிந்தும், தெரியாமலும் உண்மையாய் வாழ்கிற எளிய வாழ்வின் மீது நம்பிக்கைக் கொண்ட, நீதியின் மீது தாகமுடையவர்களுக்கு எதிராக அல்லது அநீதிக்கு ஆதரவாக நாம் கருவியாகிறோம்.
இதனை நாம் தெரிந்து செய்வதில்லை. இதனைத்தான் நமது இறைவேண்டல்களில் “மாம்சமோ பலவீனமுள்ளது“ எனவே எங்களை மன்னியும் என்று கடவுளை வாஞ்சிக்கிறோம். எடுத்துக்காட்டாக காற்று மாசுபட, நீர் ஆதாரம் தனியார் மயமாக்கிட, வனங்கள் அழிந்திட, மழைநீரை பொறுப்புடன் சேகரிக்காமை இவையெல்லாம் சிறிய காரியங்கள் அல்ல. மாறாக எதிர்கால மானுட வாழ்வை உறுதிசெய்வது. கடவுளே “நான் இனி படைப்புகளை அழிக்கமாட்டேன்“ என்று கூறியுள்ளார். அவ்வாறெனில் வேறு யார் அழிக்கப்போவது? நீதியின் மீது பசி தாகம் இல்லாதவர்கள் தான் அழிப்பார்கள். “கடவுளே உம்மில் இருந்த தாகத்தை எங்களுக்குத் தா என்று கேட்போம்…“ இயேசுவின் பாத்திரத்தை நாம் குடிக்க முயற்சிப்போம். வாழ்வுக்காக ஏங்கிடும் மக்களுக்காக இயேசு ஏற்ற துன்புறும் பாத்திரத்தை நாமும் ஏற்போம். தொடர் பணிக்காக அவரின் தாகத்தை நமது வாழ்வின் ஒப்படைப்பின் மூலம் இயேசுவின் தாகத்தை தனிப்போம்.