=================
ஆறாம் திருமொழி - அர்ப்பணிப்பின் வார்த்தை
=================
தலைப்பு: வெற்றி வாழ்வின் வீர முழக்கம்
யோவான் 19:30
3. பாவத்தை சுமந்து முடித்தார்
யோவான் 1:29
இயேசு காடியை கால்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார்
1. பிதாவின் சித்தத்தை முடித்தார்
யோவான் 4:34
1. பிதாவின் சித்தத்தை முடித்தார்
யோவான் 4:34
நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
யோவான் 17:4
யோவான் 17:4
பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.
2. பிசாசை ஜெயித்து முடித்தார்
2. பிசாசை ஜெயித்து முடித்தார்
ரோமர் 16:20
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்.
1 யோவான் 3:8
பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
யோவான் 16:33
யோவான் 16:33
உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
3. பாவத்தை சுமந்து முடித்தார்
யோவான் 1:29
யோவான்: இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின்
பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவஆட்டுக்குட்டி
1 பேதுரு 2:24
பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்
ரோமர் 8:3
ரோமர் 8:3
பாவத்தைப் போக்கும் பலியாக அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
எபிரெயர் 9:26
எபிரெயர் 9:26
பாவங்களை நீக்கும் பொருட்டாக ஒரேதரம் வெளிப்பட்டார்.
1 யோவான் 3:5
1 யோவான் 3:5
பாவங்களைத் சுமந்து தீர்க்க வெளிப்பட்டார்
1 யோவான் 4:10
1 யோவான் 4:10
பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி
உங்களுக்கும் முடிவு உண்டு
நீதிமொழிகள் 23:18 நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது
சங்கீதம் 138:8; 57:2
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்.
ஏசாயா 60:20
உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
சங்கீதம் 37:37
உத்தமனுடைய முடிவு சமாதானம்
யோபு 8:7
ஆரம்பம் அற்பமாயிருந்தாலும் முடிவு சம்பூரணமாயிருக்கும்.
=============
=============
சிலுவை தியான அருட்செய்தி
அருட்கவி ஆயர். மு. அருள்தாஸ்
ஆறாம் வார்த்தை: அர்ப்பணிப்பு
==============
யோவான் 19:30இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
யோவான் 19:28
“முடிந்தது” என்றால் என்ன? முடிவுக்கு கொண்டு வருவது, முடிப்பது, நிறைவேற்றுவது.
1. “முடிந்தது” இது வெற்றியின் முழக்கம் தொடங்கின அநேகர் முடித்ததில்லை, இயேசுவோ செய்து முடித்து வெற்றி சிறந்தார்
2. எவைகள் முடிந்தது? எதையெல்லாம் இயேசு முடித்தார்?
a. ஜீவனைக் கொடுக்க வந்தார்,
யோவான் 10:10
b. பலிகள் முடிந்தது
எபிரேயர் 7:27
c. பூமியிலே நியமித்த கிரியையைச் செய்துமுடித்தார்
யோவான் 17:4
d. பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து நம்மை பிதாவோடு ஒப்புரவாக்கினார்
எபேசியர் 2:14-16
e. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் சிலுவையிலே வெற்றிசிறந்தார்
கொலோ 2:13-15
f. தம்மைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றி முடித்தார்
யோவான் 19:28
g. பிதாவின் சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடித்தார
யோவான் 4:24
h. சிலுவையில் போராடி, யாவையும் செய்து முடித்தார்
சங்கீதம் 138:8
3. ஆறாம் வார்த்தை “இயேசு நமக்காக யாவையும் செய்து முடித்தார்” என்ற நிச்சயம் தருகிறது”
3. ஆறாம் வார்த்தை “இயேசு நமக்காக யாவையும் செய்து முடித்தார்” என்ற நிச்சயம் தருகிறது”
“நமக்கு இயேசுவால் நமக்கு நியமித்த பணியை செய்து முடிக்க வேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுக்கிறது”
==================
Sixth Word : Dedication [IT IS FINISHED]
==================
John 19:30When Jesus therefore had received the vinegar, he said, It is finished: and he bowed his head, and gave up the ghost.
What is definition of the word "finished"?
To end, to finish, to accomplish.
John 19:28
1) "Finished" This is the slogan of victory Many who began did not finish, but Jesus accomplished everything.
2) What's finished? What are the things accomplished or finished by Jesus on the earth?
a. He came to give life and given life on cross of calvary
John 10:10
b. Sacrifices for Sin not yet required Jesus himself offered as sacrifice and finished all sacrifices.
b. Sacrifices for Sin not yet required Jesus himself offered as sacrifice and finished all sacrifices.
Hebrews 7:27
c. He has finished the work which he appointed on earth by father
c. He has finished the work which he appointed on earth by father
John 17:44
d. He Broken down the the middle wall of Partition between God and us and made us reconciled with the Father
d. He Broken down the the middle wall of Partition between God and us and made us reconciled with the Father
Ephesians 2:14-16
e. He conquered the Principalities and powers on the cross
e. He conquered the Principalities and powers on the cross
Col 2:13-15
f. He has fulfilled the prophecies & all the promises that were told about him
f. He has fulfilled the prophecies & all the promises that were told about him
John 19:28
He did the Father's will and finished his work
He did the Father's will and finished his work
John 4:24
He fought on the cross and finished everything
He fought on the cross and finished everything
Psalms 138:8
3) The sixth word gives us affirmation that "Jesus has accomplished everything for us". "It teaches us that we must accomplish the work assigned to us by Jesus".
3) The sixth word gives us affirmation that "Jesus has accomplished everything for us". "It teaches us that we must accomplish the work assigned to us by Jesus".
=========
Pastor: Jeyaseelan
Mumbai
ஆறாம் வார்த்தை
=========
யோவான் 19:30
முடிந்தது இயேசு சிலுவையில் தொங்கும் போது முடிந்தது என்ற இந்த வார்த்தையைக் கூறினார். இந்த வார்த்தையின் சாராம்சம் என்னவென்று அறிந்து கொள்ளுவோம்.
1. பழைய ஏற்பாடு முடிந்தது:
புத்தத வரிசையின் அடிப்படையில் பழைய ஏற்பாடு மல்கியா புத்தகத்தோடு முடிவடைகிறது. ஆனால் காலங்களின் அடிப்படையில் இயேசு சிலுவையில் ஜீவன் விடும் போது, தேவாலயத்திரைச்சீலை இரண்டாகக் கிழந்தபோது பழைய ஏற்பாடு முடிந்தது. மத்தேயு 27:50,51 காண்க. இதை அடையாளப்படுத்தவே இயேசு முடிந்தது என்றார். மேலும் இந்த பழையஏற்பாடு வேதவாக்கியங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆக, முதலாவது வேத வாக்கியங்கள் முடிந்தது எனலாம்.
2. இயேசுவுக்கு நியமிக்கப்பட்ட கிரியை முடிந்தது:
இதைக்குறித்து யோவான் 17:4-ல்...... நான் செய்யும் படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன் என்பதாக இயேசு ஜெபித்தார். இது என்ன கிரியை? மீட்பின் கிரியையே ஆகும். இந்த மீட்பின் கிரியையைத் தமது சிலுவை மரணத்தால் செய்து முடித்தார்.
3. நியாயப்பிரமாணம் முடிந்தது:
பரிசுத்த பவுல் இதைக்குறித்துக் கூறும் போது ரோமர் 10:4-ல் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் என்று கூறுகிறார். ஏன், என்றும் கூறுகிறார். அப்பொழுது, இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் நீதிமானாகும் படி, நியாயப்பிரமாணத்தை முடித்தார் என்று கூறுகிறார். இந்த நியாயப்பிரமாணத்தில் பலிகள், பண்டிகைகள் போன்ற சடங்காச்சாரப்பிரமாணங்கள் முடிந்தது. இதைக்குறித்து தானியேல் 9:27-ல் வாசிக்கிறோம். இப்படியாக கிறிஸ்து செய்து முடிக்கவேண்டியவைகளைச் செய்து முடித்தார்.
1. பழைய ஏற்பாடு முடிந்தது:
புத்தத வரிசையின் அடிப்படையில் பழைய ஏற்பாடு மல்கியா புத்தகத்தோடு முடிவடைகிறது. ஆனால் காலங்களின் அடிப்படையில் இயேசு சிலுவையில் ஜீவன் விடும் போது, தேவாலயத்திரைச்சீலை இரண்டாகக் கிழந்தபோது பழைய ஏற்பாடு முடிந்தது. மத்தேயு 27:50,51 காண்க. இதை அடையாளப்படுத்தவே இயேசு முடிந்தது என்றார். மேலும் இந்த பழையஏற்பாடு வேதவாக்கியங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆக, முதலாவது வேத வாக்கியங்கள் முடிந்தது எனலாம்.
2. இயேசுவுக்கு நியமிக்கப்பட்ட கிரியை முடிந்தது:
இதைக்குறித்து யோவான் 17:4-ல்...... நான் செய்யும் படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன் என்பதாக இயேசு ஜெபித்தார். இது என்ன கிரியை? மீட்பின் கிரியையே ஆகும். இந்த மீட்பின் கிரியையைத் தமது சிலுவை மரணத்தால் செய்து முடித்தார்.
3. நியாயப்பிரமாணம் முடிந்தது:
பரிசுத்த பவுல் இதைக்குறித்துக் கூறும் போது ரோமர் 10:4-ல் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் என்று கூறுகிறார். ஏன், என்றும் கூறுகிறார். அப்பொழுது, இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் நீதிமானாகும் படி, நியாயப்பிரமாணத்தை முடித்தார் என்று கூறுகிறார். இந்த நியாயப்பிரமாணத்தில் பலிகள், பண்டிகைகள் போன்ற சடங்காச்சாரப்பிரமாணங்கள் முடிந்தது. இதைக்குறித்து தானியேல் 9:27-ல் வாசிக்கிறோம். இப்படியாக கிறிஸ்து செய்து முடிக்கவேண்டியவைகளைச் செய்து முடித்தார்.
அருட்செய்தி - Grace News
===============
முடிவு தரும் விடி
================
நீதிமொழிகள் 23:18
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது
சங்கீதம் 37:37
நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.
1. வியாதிக்கு முடிவு
2 இராஜாக்கள் 20:1-5
எசேக்கியா இராஜாவின் வியாதிக்கு முடிவு தந்து, மீண்டும் 15 வருடம் ஆயுள் கூட்டி விடிவு தருகிறார்.
லூக்கா 8:43-48
பன்னிரண்டு வருடமாய் பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவைத் தொட்டவுடன் அவள் வியாதிக்கு முடிவு வந்தது.
யோவான் 5:1-9
முப்பத்தெட்டு வருட வியாதியஸ்தனுக்கு முடிவு
2. துக்கத்துக்கு முடிவு
ஏசாயா 60:20
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார். உன்
துக்கநாட்கள் முடிந்துபோம்.
எரேமியா 31:13
துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத்
தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்
1 நாளாகமம் 4:9,10
யாபேஸ் வாழ்வில் இருந்த துக்கத்துக்கு முடிவு
3. சோதனைக்கு முடிவு
யோபு 8:7
உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.
யோபு 42:12
கர்த்தர் முன்னிலைமையைப் பார்க்கிலும் பின்னிலைமையை ஆசிர்வதித்தார்.
4. தனிமைக்கு முடிவு
ரூத் 2:12,13
ரூத் 4:10,13
கணவனை இழந்து இளம்வயதிலே விதவையான ரூத்தின் தனிமைக்கு போவாஸ் மூலம் விடிவு பிறக்கிறது.
ஆதியாகமம் 18:10
ஆதியாகமம் 21:1-3
ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் கர்த்தர் ஒரு குழந்தைக் கொடுத்து சந்ததியைப் பெருகப்பண்ணினார்.
லூக்கா 2:10
சகரியா-எலிசபெத்து வயது சென்றவர்களாயிருந்தும் அவர்கள் வேண்டுதல் கேட்கப்பட்டு, குழந்தையைக் கொடுத்தார்.
5. அடிமைக்கு முடிவு
ஆதியாகமம் 37:2
ஆதியாகமம் 37:28
ஆதியாகமம் 41:38-44
யோசேப்பை அடிமையாய் விற்கப்பட்ட பிறகு, எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினார்.
=================
சிலுவை தியான அருட்செய்தி
அருட்கவி ஆயர். மு. அருள்தாஸ்
ஆறாம் திருமொழி
(அருட்பணி. ஜான்சன் அசோக்குமார்)
அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறி தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார். (யோவான் 19:30)
ஆறாம் திருமொழி யோவான் நற்செய்திக்கே உரிய சிறப்பான சொல்லாகும். பொது மொழிபெயர்ப்பில் (திருவிவிலியத்தில்) “அந்த இரசத்தை குடித்ததும்” என்ற வார்த்தையாக கூறுவார். ஆழ்ந்த பொருள் பொதிந்த, வார்த்தையாகும். “குடித்ததும்” என்ற சொல் இயேசு தனது சீடர்களுடன் உரையாடிய பொழுது பயன்படுத்திய வார்த்தையாகும். மாற்கு நூலில் 10:38-ல் “நான் குடிக்காமல் இருப்பேனோ“ என்றும் கூறியுள்ளார். எனவேதான் குடிக்க வேண்டியதை, (தான் அனுபவிக்க வேண்டியதைத) குடித்து முடித்ததும் கூறிய வார்த்தையாக யோவான் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.
சொல் விளக்கம்:
“முடிந்தது“ என்று சில மொழிபெயர்ப்புகளில் காணப்பட்டாலும் “நிறைவேற்று“ என்பதே சரியான பொருளாகும். இவ்வார்த்தை இப்பொருளில் இதற்கு முன்பும் பின்பும் திருமறையில் எங்கும் பயன்படுத்தவில்லை என்று கெமிலின் என்பவர் கூறுவதை கவனிக்க தவறக்கூடாது. படைப்பின் வரலாற்றை எழுதிய ஆசிரியர் நிறைவாக பயன்படுத்திய வார்த்தை (ஆதியாகமம் 2:1)
இதனைச் சிறப்புமிக்க வார்த்தை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இவ்வார்த்தை பொதுவாக வணிகத்துறையில் பயன்படுத்தும் வார்த்தையாகும். குறிப்பாக வங்கிக்கணக்கில் புதியதாக கணக்குத் தொடங்குமுன் முந்தைய கணக்குகள் முடிந்துவிட்டன என்று எழுதுவது போன்று பொருள்கொண்ட வார்த்தையாகும். அவ்வாறே கடன் உறுதிமொழி கொடுத்து வாங்கிய பின்னர் கடன் முழுவதும் கடன் முழுவதும் திருப்பிச் செலுத்திய பின்னர் முடிந்தது (பைசலானது) என்று கூறுவது போன்றதும் இதுவாகும். மேலும் பணியாளர்கள் பணி நிறைவுற்றதும் தங்கள் பணி நிறைவுற்றது என்று தங்கள் எஜமானர்களிடம் கூறுவது போன்ற பொருளையும் தரும் வார்த்தையாகும். இயேசுவும் கடவுளுக்குச் சிறந்த பணியாளர். அவர் தனது பணியை முடித்து அறிக்கைத் தருகிறார்.
யோவான் நற்செய்தி நூல் மற்ற நூல்களிலிருந்து மகிவும் வேறுபட்டது. இயேசுவின் முன் இருப்புநிலையை மையப்படுத்தும் நூலாகும். ஆதியில் இருந்தவர், எல்லாம் அவர் வழியாய் உண்டாயின, அவர் வார்த்தையாய் (லோகாஸ்) கடவுளுடன் இருந்தவர். அவரே கடவுளின் திட்டத்தைத நிறைவேற்ற பூமிக்கு மானுடனாக வந்தவர். “ஒருவரும் கெட்டுப்போகாமல் நிலைவாழ்வு பெற“ (யோவான் 3:16) வார்த்தை மாம்சமானவர் (யோவான் 1:14) எதற்காக அவர் ஊனுடல் எடுத்தாரோ அந்த நோக்கம் நிறைவேறிற்று.
தொடக்கத்தில் மானுடம் கடவுளின் சாயலை அனுபவித்தது. ஆனால் அதனை உணரவில்லை. சாத்தான் தவறான வழிகாட்டுதலின் பெயரில் கடவுளைப்போல இருந்த அவர்கள் அதனை மறந்து கடவுளைப் போலாக மானுடம் நினைத்தது. கடவுள் ஏதோ அதிகாரமுடைய சக்தி, அந்த அதிகாரத்தை சக்தியை தாங்களும் பெறவேண்டும் என்று சாத்தானின் மாய வலையில் விழுந்து அதிகார தாகத்தால், மோகத்தால், வெறியால் கீழ்படியாதிருத்தல் என்ற பாவத்தை செய்தனர். இப் பாவத்தால், வெறியால் கீழ்படியாதிருத்தல் என்ற பாவத்தை செய்தனர். இப் பாவத்தால் பெற்றிருந்த சாயலை இழந்து சாத்தானின் சாயலை பெற்றனர். இப் பாவத்தால் பெற்றிருந்த சாயலை இழந்து சாத்தானின் சாயலை பெற்றனர். தனக்குச் சொந்தமான மானுடம் வேறு ஒருவனுடைய சாயலுடன் வாழுகிறதே என்று தனது சாயலை மானுடம் பெற தனது மகனை உலகிற்கு அனுப்பினார். அவரும் கடவுளின் சாயலை உலகிற்கு வாழ்வாக்கினார். பிறர்க்காய் தன்னை அளித்தல், தன்னுடையதை அளித்தல், அதிகாரத்தை விட்டுக் கொடுத்தல், தன்னை நம்பியவர்களை வஞ்சகம் செய்யாதிருத்தல் போன்ற இன்னும் பல கவுளின் சாயலை. சுருக்கமாக கூறின், “அன்பு செய்வதே“ கடவுளின் சாயல் என்பதை வாழ்க்கையாக்கிய கடவுளின், மகனின் செயல் நிறைவுற்றது.
அவ்வாறே மக்களை மீட்கும் நோக்கத்துடன் கடவுள் எழுப்பிய மக்கள் ஒவ்வொருவர் பற்றியும் கூறப்பட்ட தீர்க்கதரிசனங்கள் இயேசுவின் வாழ்விலும் நிறைவேறின. அதிலும் குறிப்பாக முதலாம் ஒப்பந்த நூலில் (பழைய ஏற்பாடு) குறிப்பிட்டுள்ள பல்வேறு இறைவாக்குகள் அச்சுபிறழாமல் இயேசுவின் பாடுகளில் நிறைவேறின. இதனைத்தான் மெக்தீ என்பவர் இயேசுவின் சிலுவைத் தொடர்பான நிகழ்வுகளில் மாட்டும் சுமார் 28 இறைவாக்குகள் நிறைவேறிற்று என்கிறார். அதே சமயம் கசப்பைக் கலந்துகொடுத்தார்கள், குதிகாலைத் தூக்கினான் என்பதெல்லாம் தீர்க்கத் தரிசனங்களாக புரிந்து கொள்ளப்பட்டனவே தவிர அவ்வகைச் சங்கீதங்கள் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட வாழ்வின் அனுபவ வெளிப்பாடே தவிர இயேசுவுக்கு அளிக்கப்பட்ட காடியைப் பற்றியோ, உடன் நண்பராய் இருந்தே இயேசுவுக்கு துரோகம் இழைத்த யூதாஸ் பற்றியோ கூறப்பட்டவை அல்ல. எனவே அப்படிப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின என்று எண்ணுதல் கூடாது. ஏனெனில் அவை அனுபவ பகிர்வே தவிர எதிர்கால எதிர்பார்ப்புகள் அல்ல.
எவைகளெல்லாம் நிறைவேறிற்று:
மானுடத்திற்கு மீட்பைப் பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு கடவுளால் இயேசுவுக்கு வழங்கப்பட்டது. “இவர் என் நேசக்குமாரன்“ என்று அழைப்புத் தரப்பட்டது. இந்த அழைப்பின் பணியை நிறைவு செய்தார்.
கடவுளுக்கும் மானுடத்திற்கும் இடையே ஏற்பட்டிருந்த பிளவை சமன்படுத்த தொடங்கப்பட்ட பணி நிறைவேறிற்று.
கடவுளின் சாயலை மானுடத்திற்கு பெற்றுத்தரும் பணி நிறைவுற்றது. மோசே மூலம் கடவுள் அனைத்துலக அடிமைகளின் விடுதலையை உறுதிசெய்ய நிறைவேற்றினார் (யாத்திராகமம் 12:38). எகிப்தில் அனைத்துலகைச் சார்ந்த அடிமைகளும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். உலகில் அடிமை வியாபாரம் மேலோங்கியிருந்த நாடு எகிப்து என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுபோல இயேசுவின் மூலம் அனைத்துலக மக்களின் மீட்பு உறுதி செய்யப்பட்டது.
ஆபேலைக் கொன்ற காயினின் வம்சம் அதற்காய் மனம் வருத்தப்படவில்லை. கடவுளின் மன்னிப்பைத் தவறாக பயன்படுத்தினர். தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகையாகவும் கருதினர் (ஆதியாகமம் 4:24). தங்களைக் கொல்பவர்களுக்கு பழியுண்டாகும் என்று அதிகாரமமதையுடன் நடந்துகொண்டனர். தங்களுக்கு காயம், தழும்பு யாராவது ஏற்படுத்தினாலும் தங்கள் பக்கம் கடவுள் இருப்பதாக கூறி அவர்களைக் கொல்லும் அளவு துணிந்து கொடூரம் செய்தனர். ஆனால் இயேசுவின் வாழ்வின் மூலம் ஆபேலின் இரத்தம் சிந்துதல் இனி இல்லை என்ற புரிதலில் கொன்றவன் (நூற்றுக்கதிபதி) சிலுவையின் அடியில் இயேசுவை பணிகிறார். “இவரே கடவுளின் மகன்“ என்கிறார். மனம் திரும்பாத சகாப்தம் நிறைவுறுகின்றது. மன்னிப்பு கோருவதும் மன்னிப்பு வழங்குவதுமாக புதுயுகம் தொடங்குகிறது (மாற்கு 15:25)
யோவான் 4:34-ல் “என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என் போஜனம்“ என்று பணியைத் தொடங்கினார். அப்பணியானது யோவான் 17:4-ல் “நான் செய்யும்படி நீர் எனக்குத் தந்த வேலையைச் செய்துமுடித்தேன்“ என்கிறார். இயேசுவின் உலகின் பணி நிறைவுற்றது.
இங்கு ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். ரோம நாட்டின் சிறைச்சாலைகளில் ஒவ்வொரு குற்றவாளியின் அறையின் முன்பும் அக்குற்றவாளி செய்த குற்றத்தையும் அதற்குரிய தண்டனையையும் வரிசைப்படுத்தி அதனை எழுதி அறையின் முன்பு பதித்து வைத்திருப்பார்களாம். தண்டனை நாட்கள் நிறைவுற்றதும் அந்த குற்றவாளியின் கையில் சுவரில் பதித்து வைத்ததை எடுத்து கொடுத்து, “நிறைவேற்றினார்“ என்று எழுதி கொடுத்துவிடுவார்களாம். இது அவரவர் செய்த குற்றத்திற்கான தண்டனையை அவரவர நிறைவேற்றுதல், ஆனால் இயேசுவோ உலகின் குற்றத்திற்கு தண்டனையை தான் அனுபவித்து நிறைவேற்றுகின்றார்.
கடவுளின மீட்புப்பணி நிறைவேறிவிட்டதா? என கேள்வியெழுப்பினால், இல்லை எனறே விடைவரும். ஏனெனில் முடிவுற்றிருந்தால் ரோமர் 8:13-ல் கடவுளின பிள்ளைகள் என்று வெளிப்படுவார்கள் என்று படைப்பு பேராவலுடன் காத்திருக்கிறதாமே அதற்கு யார் பொறுப்பேற்பது, பிரசவ வேதனைப்படும் படைப்பை விடுதலைச் செய்வது யார்? எனவேத தான் இயேசு இது தொடர் பணி தன்னோடு முடிவதில்லை என்று “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்“ என்றாரோ (மாற்கு 16:16)
பவுலும் தனது கருத்தைக் கூறும்போது கொலோசெயர் 1:24-ல் “கிறிஸ்துவின் உபத்திரவங்களில் குறைவானவற்றை அவருடைய சரீரமாகிய திருச்சபைக்காக மாம்சத்தில் நிறைவாக்கி வருகிறேன்“ என்கிறார். இன்னும் குறையுள்ளது அதனை நிறைவு செய்ய நானும் இன்னும் பாடுகளை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார். எனவேதான் இயேசு என் நாமத்தினால் நீங்கள் எதனையாவது இழந்தால் நூறத்தணையாக பெறுவீர்கள் என்றார். அதற்காகத்தான் இப்பணியைத் தொடரத்தான் உலகமெங்கும் போய் சீடர்களை ஏற்படுத்துங்கள் என்றார். பணி நிறைவுற்றிருந்தால் சீடர்கள் எதற்காக? அடிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தும் இரத்தம் சொட்ட ஆட்டுக்குட்டியானவர் நிற்க வேண்டிய அவசியம் என்ன? இயேசு அறபுதமான முன்மாதிரியை வைக்கினறார். அந்த பணியை “சிலுவை சுமக்கும் பணியை“ தொடர வேண்டும் (மத்தேயு 10:38) என்றும் அழைப்புத் தருகிறார். நம் மூலம் தன் பணியை நிறைவு செய்ய அழைப்புத் தருகின்றார்.
நிறைவாக நம்முடைய வாழ்வில் என்றாவது “நிறைவு“ என்று எப்போதாவது சொல்லியிருப்போமா? கடவுள் ஒவ்வொருவரையும் ஏதாகிலும் ஓர் உயர்வான நோக்கத்திற்காக இவ்வுலகில் வாழ அனுமதிக்கிறார். அந்த நோக்கத்தை நாம் நிறைவு செய்கிறோமா, வாழ்வு முழுவதும் நிறைவற்றவர்களாய் ஏதேனும் ஒரு தாகத்துடன் தான் வாழ்கிறோம். அதுவும் சுயநலம் சார்ந்ததாகவே அமைந்துள்ளது.
உலகில் மானுடம் பிறக்கிறது. அது பெயரோடு பிறக்கவில்லை அம்மானுடம் இவ்வுலகில் பெயரை மட்டுமே சுமந்து திரிகிறது. நாமும் ஒரு மானுடம் என்ற உணர்வோடு மானுடத்தின் தன்மையுடன் ஒரு நாளாகிலும் வாழ்ந்திருப்போமா? உடை, உணவு, உறையுள் இவற்றின் மூலம் மாத்திரம் மானுடம் தன்னை மானுடம் என்று நிலைநிறுத்துவதல்ல. மாறாக மானுடத்திற்கு உரிய தன்மையும் வாழ்ந்துள்ளோமா? சாக்ரட்டீஸ் உலகில் மனிதனை பகல்வேளையின் கையில் விளக்குடன் தேடினாராம். காரணம் மனிதர் ஒருவரும் அவர் கண்ணில் காணப்படவில்லையாம். ஆனால் அவருக்குப் பின் வாழ்ந்த இயேசு மனிதனாக வாழ்ந்து காட்டினார். அதனை நிறைவு செய்தார். நாம் இயேசுவைப் பின்பற்ற ஆயத்தமா? நம் வாழ்வின் நோக்கத்தை நம்மில் குடும்பத்தில் சமூகத்தில் நிறைவேற்றுவோம் என்று உறுதியேற்போம்.