================
முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை
ஜான்- டி -பிரிட்டோ (1647-1693)
============
ஜான்-டி- பிரிட்டோ 1647 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி போர்த்துகீசிய பிரபுக்களின் பரம்பரையில் பிரேசிலில் போர்த்துகீசிய காலனி பகுதிகளுக்கு வைசிராயாக இருந்த சால்வேட்டர் டி பிரிட்டோ என்பவருக்கு மகனாக லிஸ்பனில் பிறந்தார். இவருடைய குடும்பம் போர்ச்சுகல் மன்னர் முதலாம் Don Pedro க்கு மிகவும் நெருங்கிய உறவினர். பிரிட்டோ தனது இரண்டு இழைய சகோதரர்களுடன் போர்ச்சுகல் அரன்மனையில் இளவரசராக வாழ்ந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிமாக பிரிட்டோ ஐந்து வயதாக இருக்கும்போது, தன்னுடைய தகப்பனாரை இழந்தார்.
இந்நிலையில் ஜான் டி பிரிட்டோ, பதினொரு வயதாக இருக்கும்போது, நோயினால் உயிருக்கு ஆபத்தானநிலையில் மரண படுக்கையில் இருந்தார். எல்லோரும் நம்பிக்கை இழந்த சூழ்நிலையில் பிரிட்டோவின் தாயார் கடவுளிடம் மன்றாடி ஜெபித்து, உயிர்பிச்சை கொடுத்தால் ஊழியத்திற்கு அற்பணிப்பதாக உருக்கமாய் வேண்டிக்கொண்டார். கர்த்தர் இந்த தாயாரின் ஜெபத்தைக்கேட்டு பிரிட்டோவுக்கு பரிபூரண சுகத்தைக் கொடுத்தார்.
வாலிப வயதில் ஜான் டி பிரிட்டோ இருக்கும்போது புனித பிரான்சிஸ் சேவியரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, மிஷனெரியாக செல்ல விரும்பினார். இதற்காக போர்ச்சுக்கல் நாட்டின் அடுத்த மன்னராக ஆகக்கூடிய சூழ்நிலை இருந்தாலும், அதை இழைய சகோதரனுக்கு கொடுத்துவிட்டு, தன்னை மிஷனெரி ஊழியத்திற்கு அற்பணித்தார்.
இதற்கா ஜான் டி பிரிட்டோ, கிபி 1663 ல் தனது 16 வயதில் ரோமன் கத்தோலிக்க ஜெசுட் மிஷனெரி இயக்கத்தில் இணைத்துக்கொண்டு, போர்சுகல்லில் புகழ்பெற்ற கோயம்ப்ரா வேதாகம கல்லூரியில் சேர்ந்தார். இந்த கல்லூரில், முன்னதாக இந்தியாவில் மிஷனெரிபணி செய்த வேதபண்டிதர் Balthazar de Costa நற்செய்தி பணி பற்றி விளக்கினார். ஆகவே ஜான் டி பிரிட்டோ, புனித பிரான்சிஸ் சேவியரைப்போல இந்தியாவில் நற்செய்திபணி செய்ய மிகுந்த ஆவலாய் இருந்தார்.
இதைக்கேட்டு தாயார், அதிர்ச்சியடைந்து, போர்ச்சுக்கலிலேயே ஆயராகும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் கடவுள் தன்னை இந்தியாவுக்குதான் போகச்சொல்லுகிறார் என்ற உறுதியாக பிரிட்டோ கூறினார். 1673 ஆம் ஆண்டில் 23 வயதான பிரிட்டோ இறையியல் படிப்பை முடித்துக்கொண்டு, ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டு (Ordination) இந்தியாவில் மிஷனெரிபணி செய்ய அனுப்பப்பட்டார்.
இந்தியாவுக்கு ஆறுமாத கடல் பயணத்திற்குப்பிறகு ஜான் டி பிரிட்டோ, கோவாவில் இறங்கி, பிரான்சிஸ் சேவியர் நிறுவிய St. Paul வேதாகம கல்லூரியில், இறையியல் படிக்கும் மாணவர்களுக்கு தத்துவம் (Philosophy) கற்பிக்க ஆரம்பித்தார். ஒரு ஆண்டிற்குப் பின்னர் பிரிட்டோ, வேதாகம கல்லூரி பேராசிரியர் பணியிலிருந்து, மக்களுக்கு நேரடியாக சேவைசெய்ய மிஷனெரியாக அனுப்பும்டி கேட்டுக்கொண்டார். ஆகவே கிபி 1673 இல் தமிழ்நாட்டில், மதுரையில் இருந்த மிஷனெரி பணித்தளத்திற்கு பிரிட்டோ அனுப்பப்பட்டார்.
மதுரை வந்த பிரிட்டோ, அங்கிருந்த இந்து பிராமணர்கள் மத்தியில் நற்செய்திபணி செய்து பல முயற்சிகளை மேற்கொண்டும் எதிர்பார்த்த ஆத்தும அறுவடை கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவில் கிறித்தவம் நீடித்த செல்வாக்கைப் பெற வேண்டுமானால், உயர் சாதி மக்களும் கிறிஸ்தவர்களாக மாற வேண்டும் என்பதை பிரிட்டோ உணர்ந்து கொண்டார்.
மதுரையில் இராபட் டி நொபிலி மூலமாக நிறுவப்பட்ட மிஷனெரி பணித்தளத்தில் ஐரோப்பிய கலாச்சார முறைகளில் இருந்து மாறுபட்டு இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் நற்செய்திபணி செய்து சுமார் 1200 க்கும் அதிகமான பிராமணர்கள் கிறிஸ்தவர்களானார்கள். ஆகவே பிரிட்டோவும் நோபிலியை பின்பற்றி சமஸ்கிருதம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை நன்கு கற்றுக்கொண்டார்.
இந்து பிராமணர்களை ஆதாயப்படுத்தும்படி அவர்களின் கலாச்சார, பழக்கவழக்கங்களை பின்பற்றி, தன்னை ஒரு சந்நியாசியாக மாற்றிக்கொண்டார். பிரிட்டோ காவி உடையை துணியை அணிந்துகொண்டு, நெற்றியில் குங்குமமும் திருநீரும் பூசிக்கொண்டு, பூநூலும் அணிந்துகொண்டார். அப்படியே இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுகளை உட்கொள்ளாமல் பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவையே உட்கொண்டார். மேலும் தனது போர்த்துகீசிய பெயரை யோவான் ஸ்நானகன் பெயருக்கு சமமாக அருளானந்த சுவாமி என்று மாற்றிக் கொண்டார்.
கிபி 1674 முதல் 1679 வரை பிரிட்டோ, கோட்டைப்பட்டி, தத்துவஞ்சேரி, தஞ்சை மற்றும் சிவகங்கை போன்ற இடங்களில் கிறிஸ்தவத்தை பரப்பினார். இவர் மூலமாக ஏராளமான அற்புதங்களும், நோய்கள் குணமாகுதலும், பிசாசுகளை துறத்துவதும் நடைபெற்றது. அருளானந்தர் சுவாமியின் நற்செய்திபணியினால் திருவில்லிப்புத்தூர் நிலச்சுவான்தார்களின் தலைவர் உட்பட பலர் கிறிஸ்தவர்களானார்கள். பிரிட்டோவின் நற்செய்திபணி மூலம் மூன்று ஆண்டுகளில் சுமார் 2000 உயர்சாதி மக்கள் கிறிஸ்தவர்களானார்கள். ஆகவே ஆங்காங்கே பல துறவியர் மடங்கள் கட்டப்பட்டது.
ஜான் டி பிரிட்டோ, உயர்சாதி மக்களை மாத்திரமல்ல, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களையும் கிறிஸ்துவுக்குள் கொண்டுவர விரும்பினார். ஆகவே இம்மக்கள் மத்தியில் கிறிஸ்தவத்தை பரப்புவதற்காக தனது பெயரை கிபி 1680 ல் பண்டார சுவாமி என்று மாற்றிக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களோடு தங்கி இருந்து, அவர்களோடு உணவு உட்கொண்டு, அவர்கள் புரிந்துகொள்ளும்படி எளிமையாக கிறிஸ்துவை பற்றி போதித்தார். இவர்கள் மத்தியிலும் ஏராளமான அற்புதங்களும், புதுமைகளும் நடைபெற்றன. இதனால் மூன்று ஆண்டுகளில் சுமார் 10,000 க்கும் அதிகமானபேர் கிறிஸ்தவர்களானார்கள்.
பிரிட்டோ பல ஆலயங்களையும் கெபிகளையும் நிறுவி, தன்னுடைய சீஷர்களை ஆயர்களாக நியமித்தார். இது உயர்சாதி பூசாரிகளை இன்னும் அதிக கோபப்படுத்தியது. மேலும் அவர்கள் பிரிட்டோவை இந்து மதத்தின் எதிரியாகவும் சாதி அமைப்புகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கண்டதால் பிரிட்டோவை கொல்ல முடிவு செய்தார்கள்.
இதுவரை எந்த ஒரு மிஷனெரியும் மதுரைக்கு கிழக்கே மறவர்கள் ஆட்சிபுரிந்த இராமநாதபுரம் பகுதிகளில் நற்செய்திபணி செய்யவில்லை என்பதை பிரிட்டோ, கிபி 1684 ம் ஆண்டு மறவர் இனக்கூட்டத்தார் அதிகம் வசித்துவந்த பகுதியில் கிறிஸ்தவத்தை பரப்ப ஆரம்பித்தார். வறண்டதும், தரிசு நிலமும் கொண்ட பெரிய பகுதியாய் இருந்த பகுதியில் நற்செய்திபணி மூலம் ஒருவருடத்திற்குள் வருடங்களுக்குள், சுமார் 2000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து கிறிஸ்துவின் மந்தையில் சேர்த்தார்.
வெளிநாட்டு சன்யாசி தோற்றத்தின் மூலம் அநேகரை கிறிஸ்தவர்களாக்கிய ஜான் டி பிரிட்டோமீது உயர்சாதி பூசாரிகளை கடும் கோபங்கொண்டார்கள். இவர்களின் தூண்டுதலின் பேரில் மறவர்களின் இளவரசன், கிபி 1686 ல் பிரிட்டோவையும் அவரது சீடர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து, சித்திரவதை செய்தார்கள். ஆனால் போர்த்துகீசிய அரசாங்கத்தின்மூலம் மறவர்கள் சமஸ்தானதத்தை ஆண்டுவந்த சேதுபதி மன்னருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால், பிரிட்டோவை கடுமையான எச்சரிக்கை செய்து நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டார்.
ஜான் டி பிரிட்டோ செப்டம்பர் 8, 1687 இல், மதுரையிலிருந்து போர்ச்சுகலுக்குத் திரும்பினார். அங்கு போர்ச்சுகலில் மன்னர் இரண்டாம் Pedro, பிரிட்டோவை போர்ச்சுகலில் ஆயராக பணியாற்றக் கேட்டுக்கொண்டார்; இதை பிரிட்டோ மறுத்துவிட்டார். மூன்று ஆண்டுகள் சென்ற நிலையில் 1690 நவம்பர் 2 ஆம் தேதி, மேலும் 24 புதிய ரோமன் கத்தோலிக்க மிஷனரிகளுடன் மறவர்கள் மத்தியில் மிஷனெரிப்பணி செய்வதற்காக இராமநாதபுரம் பகுதிக்கு வந்து சேர்ந்தார். இங்கு மூன்று ஆண்டுகள் நற்செய்திபணி செய்ததினால் சுமார் 8,000 பேர் கிறிஸ்தவர்களானார்கள். ஆங்காங்கே பல ஆலயங்களையும் கெபிகளையும் கட்டினார்.
இந்நிலையில் கிபி 1693 ல் மறவர்களின் இளவரசர்களில் ஒருவரான தடிய தேவர், கொடிய நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு மரண படுக்கையில் இருந்தார். அப்போது பிரிட்டோவின் மூலம் அநேகர் குணமக்கப்பட்டதை அறிந்து, தயவுசெய்து நீங்கள் வர முடியாவிட்டாலும் உங்கள் சீடர்களில் ஒருவரையாவது எனக்கு அனுப்புங்கள் என்று செய்தி அனுப்பினார். தடிய தேவரை குணப்படுத்த, பிரிட்டோ தன்னுடைய ஒரு சீடரை அனுப்பினார். இதன் மூலம் இளவரசன் அற்புதமாக குணப்படுத்தப்பட்டார்.
ஜான் டி பிரிட்டோவின் நற்செய்திபணி மூலமாக தடியத்தேவர் கிறிஸ்தவராக மாறவிரும்பி, தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் தடியத்தேவருக்கு 4 மனைவிகள் இருந்ததால் பிரிட்டோ ஞானஸ்நானம் கொடுக்க மறுத்துவிட்டார். ஆகவே தடியத்தேவர், ஒரு மனைவியைத் தவிர மற்ற அனைவரையும் விவாகரத்து செய்தார். இதில் பாதிக்கப்பட்ட தடியதேவரின் ஒரு மனைவி கடலாயி, ராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் உறவினர் ஆவார். ஆகவே, தடியத்தேவர் தன்னை விலக்கி வைத்ததற்கு ஜான் டி பிரிட்டோவும் அவருடைய சீஷர்களும்தான் பொறுப்பு என்று சேதுபதி மன்னரிடம் கடலாயி புகார் தெரிவித்தார்.
இதன் காரணமாக சேதுபதி மன்னர், உயர்சாதி பூசாரிகளின் தூண்டுதலின் படி கிறிஸ்தவ ஆலயங்களையும் கிறிஸ்தவர்களின் வீடுகளை சூரையாடவும் தீ வைத்து எரிக்க உத்தரவிட்டார். இதில் பல கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்களின் உடைமைகள் சூரையாடப்பட்டது.
இந்நிலையில் தேவாலயங்கள் எரிக்கப்படுவதையும், கிறிஸ்தவர்களின் வீடுகள் சூறையாடப்படுவதையும் தடுக்க, ஜான் டி பிரிட்டோ 1693 இல் மறவர் ஆட்சியாளர்களிடம் தனது சீடர்களுடன் சரணடைந்தார்கள். தமிழ்நாட்டில் பதினான்கு ஆண்டுகளாக ஜான் டி பிரிட்டோ கிறிஸ்தவத்தை பரப்புவதற்காக கடுமையாக உழைத்ததால், சுமார் 22,000 மக்கள் கிறிஸ்தவர்களானார்கள். இதற்காக பல போராட்டங்கள் கஷ்டங்கள் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றை சந்தித்தார்.
இந்நிலையில் பிரிட்டோ மற்றும் அவரது சீடர்கள் தலைநகரான ராமநாதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இதற்கிடையே கிறிஸ்தவரான இளவரசர் தடியதேவர், பிரிட்டோவுக்கு ஆதரவாக வெளிப்படையான விசாரணை வேண்டும் என்று சேதுபதியிடம் கோரினார். மறவர்களில் அநேகர், கிறிஸ்தவர்களாக இருந்ததால் போராட்டம் வெடித்துவிடுமோ என்று சேதுபதி மன்னர் அஞ்சினார்.
ஆனால் உயர்சாதி பூசாரிகள், தாங்கள் யாகம் நடத்தி, பூஜைகள் செய்வதன் மூலம் பிரிட்டோவை இரத்தம்கக்கி சாகடிக்கமுடியும் என்றும் அதற்கு ஒப்புதல் தருமாறும் கேட்டுக்கொண்டார்கள். இதற்கு மன்னர் சம்மதிக்கவே, பூசாரிகள் யாகத்தை செய்து, ஒன்றன்பின் ஒன்றாக பல பூஜைகளைச் செய்தார்கள், ஆனால் பயனில்லை. இறுதியில், எந்தவொரு விசாரணையும் இல்லாமல், ராமநாதபுர மன்னர் சேதுபதி, பிரிட்டோவை ஒரியூருக்கு (Oriyur) அனுப்பி அங்கு சிரச்சேதம் செய்ய கட்டளையிட்டார்.
ஒரியூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஜான் டி பிரிட்டோ, தனது சீடர்களிடம், பாடுகளின் மத்தியிலும், துன்பத்தின் பாதைகளிலும் மரணம் நேரிடும் தருணத்திலும் சோர்ந்துபோகாமல் கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை உறுதியாய் பற்றிக்கொள்ளவேண்டும் என்று போதித்தார்.
இந்நிலையில் 1693 பிப்ரவரி 04 ஆம் நாள் அருளானந்தர் சுவாமி மற்றும் பண்டார சுவாமி என்று அழைக்கப்பட்ட ஜான் டி பிரிட்டோ சிறையிலிருந்து கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டவராய் ஒரு மணல் மேடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார். தூரத்தில் அங்கிருந்த ஒரு மரத்தினடியில் ஜெபித்து வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிறைக்காவலர்கள் அனுமதித்ததின்பேரில் பிரிட்டோ மண்டியிட்டு சுமார் ஒருமணி நேரம் கடவுளிடம் ஜெபித்தார்.
பின்னர் தனக்கு மரணதண்டனை நிறைவேற்றுபவர் முன்பதாக அடக்கமாக வந்து தனது கழுத்தை நீட்டினார். அதற்கு அந்த காவலர் தன்னால் கொல்லமுடியாது என்று மேலதிகாரியிடம் கூறினார். அந்த காவலரிடம் பிரிட்டோ, தன்னை அனுப்பிய கர்த்தரின் எல்லா கடமைகளையும் செய்துமுடித்துவிட்டேன்; இப்போது உன்னுடைய கடமையை நீ செய் என்று கூறி தன் கழுத்தை நீட்டினார். அப்போது 45 வயது நிறம்பிய ஜான் டி பிரிட்டோ தலை துண்டிக்கப்பட்டது.
தலை துண்டிக்கப்பட்ட பிரிட்டோவின் உடல், யாவரும் ஆச்சரியப்படும்படி, குதித்து பின்னோக்கி விழுந்தது. பாரம்பரிய செய்திகளின் படி பிரிட்டோவின் இரத்தம் சிந்தப்பட்ட இடம் முழுவதும் அதிசயமாக சிவப்பு நிறமாக மாறியது.
ஜான் டி பிரிட்டோவின் இரத்தம் சிந்தப்பட்ட இடத்தில் ஒரு ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் இருக்கும் சிவப்பு மணல் மேடு, இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா பகுதியாக இருக்கிறது. இதை பார்வையிடுவதற்கு உலகெங்கிலும் இருந்து கிறிஸ்தவர்கள் மாத்திரம் அல்ல இந்துக்களும், இஸ்லாமியர்களும் வருகின்றார்கள். மக்கள் ஜான் டி பிரிட்டோவை, சிவப்பு மணல் புனிதர் (Red Sand Saint) என்று அழைக்கிறார்கள்.
ஜான்- டி- பிரிட்டோவின் தியாகத்தின் காரணமாக, இன்றைக்கு மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் மறவர்கள், கள்ளர்கள், அகமுடையார்கள், முக்குலத்தோர்கள் மற்றும் தேவர்கள் இன மக்களில் அநேகர் கிறிஸ்தவர்களாகி இருக்கிறார்கள். இன்று ஜான் டி பிரிட்டோ நினைவாக தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள கருமாத்தூரில் ரோமன் கத்தோலிக்க ஜெசுவிட் மிஷனெரி ஸ்தாபனத்தின் மூலமாக அருளானந்தர் ககலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. அப்படியே அவர் படுகொலை செய்யப்பட்ட ஒரியூரில் புனித அருளானந்தர் பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது.
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, போர்ச்சுகல் நாட்டில் மன்னராக இருக்கவேண்டியவர், கிறிஸ்துவுக்காக தூசியும் குப்பையும் என்று உதறிவிட்டு, தமிழ்நாட்டில் இராமநாதபுரத்தில் தன் உயிரை கொடுத்த ஜான் டி பிரிட்டோவைப் போல நீங்கள் இழந்தது என்ன?, நீங்கள் கிறிஸ்துவுக்காக நிற்பதன் மூலம் உண்டாகும் விளைவுகளை சந்திக்க தயாரா? கோதுமையான நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் அது தனித்திருக்கும். அது செத்ததேயாகில் மிகுந்த பலனை கொடுக்கும் என்று கிறிஸ்து சொல்லவில்லையா? ஜான் டி பிரிட்டோ விஷயத்தில் அதுதான் நடந்தது.
அப்போஸ்தலர் தோமாவுக்கு அடுத்தபடியாக, ஜான்- டி -பிரிட்டோ இந்திய திருச்சபையின் இரத்தசாட்சியாக ஜான் டி பிரிட்டோ மரித்தார். தமிழ்நாட்டிற்கு ரோமன் கத்தோலிக்க முன்னோடி மிஷனரிகளான இராபட்- டி- நோபிலி, கான்ஸ்டான்டினோ பெஸ்கி (வீரமாமுனிவர்) மற்றும் கியாகோமோ- டாம்மாசோ-டி- ரோஸி (Giacomo Tommaso de Rossi) போல ஜான்-டி- பிரிட்டோவும் தமிழ் கத்தோலிக்க திருச்சபையில் ஒரு அடையாள சின்னமாக மாறிவிட்டார். போப்பாண்டவர் பியஸ் XII மூலமாக ஜுன் 22, 1947 இல் ஜான் டி பிரிட்டோ புனிதராக அங்கிகரிக்கப்பட்டார்.
✝️.இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
🛐. இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
☸. கிறிஸ்துவவில் அன்பானவர்களே!...இந்த மிஷனெரிகள் சரித்திர குழுவின் இனைப்பை உங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவருக்கும் அனுப்பு வைக்கும்போது, அவர்களும் உங்களைப்போல மிஷனெரி தரிசனத்தை பெற்றுக்கொள்வார்கள். நன்றி
🔯. May God Bless You and Use You for the Extensions of His Kingdom. With Love and Prayer...Rev. D. David Paramanantham B.Sc, M.A, B.D, Gamaliel Bible College, Mumbai, India 💐😊🙏
=============
The Gospel Pioneers:
John De Britto (1647-1693)
==============
John de Britto was born on 1 March 1647 to the Portuguese nobility, Son of the governor of Brazil and a favourite of Don Pedro, king of Portugal. He, along with his two brothers were the companions to the prince in the court. Even though he had an opportunity to become the king of Portugal, he gave it up to become a missionary.
Dedication of His Life: When he was eleven, he was at deathbed due to a fatal illness. When all hope of recovery was lost, his saintly mother prayed fervently to God and a miraculous recovery resulted. Britto had a burning desire to become a missionary.
From the beginning of his Religious life, he had a clear vision about his future as an Indian missionary following the footsteps of St Francis Xavier.
Mission to India: At sixteen, he entered the novitiate of the Society of Jesus(Catholic Mission Movement) in 1662, studying at the famous University of Coimbra where Fr. Balthazar de Costa who had earlier worked in India, explained about the mission in India. Amid strong opposition from his family, in 1673 after his priestly ordination, he was finally destined to serve the missions of India.
To Madurai: Britto began his ministry in Goa, where he was assigned to teach Philosophy to Jesuit seminarians. But he soon asked for, and was assigned to serve, in direct pastoral ministry to the people. So, he travelled to the missions of Madurai, in Southern India, present-day Tamil Nadu, in 1673.
Madurai Mission: John de Brtto at first realized that for Christianity to have a lasting influence in India, higher caste members must also convert. The Madurai Mission was a bold attempt to establish an Indian Church that was relatively free of European cultural domination. This method, proposed and practiced by Roberto de Nobili, met with remarkable success. As such, Britto learned the native languages and adopted the customs of the Brahmin caste which gave him access to the noble classes.
His dress was saffron cloth and lived like an Indian Sanyasi; he abstained from every kind of meat, fish, eggs and alcohol, and living only on legumes, fruits and herbs in an effort to be one with the people he wished to serve. He replaced his Portuguese name with a Tamil one ‘ Arul Anandar Swami’ the Tamil equivalent of John the Baptist.
He worked from 1674 to 1679 in Colei, Tattuvancheri and other places in the kingdoms of Tanjore and Sivagangai known today as Kottaipatti. He had great success, converting many to Christianity, including the feudal chief of Siruvilliputhur. He has converted more than 6000 souls to Christianity in the Thanjavur region.
Mission to the Downtrodden: John de Britto loved the poor and preferred to labour among the low castes and outcastes. He established himself as an Indian ascetic, a Pandara Swami, who could approach to the lower castes. Thus, he enjoyed the privilege of dealing with all social conditions, even living with the members of the low castes.
As his reputation grew, he converted more than 10,000 members of the lowest caste to Christianity. His success in converting brought on the ire of the Brahmins, the highest Indian caste, and they decided to kill him because they saw Britto as a threat to the Hindu religion and the caste system.
Mission to Maravas: Having learnt that no missionary had reached the kingdom of Maravàs, east of Madurai. John De Britto’s mind was set on going to the barren, perennially sun-scorched frontiers of Maravar in 1684 and preached the Christian faith in the region. Within two years, he baptized over two thousand people, spending entire nights confessing and baptizing.
His missionary work as a foreign sanyasi infuriated the royal authorities of the Marava Kingdom where he toiled.
The chief prince of Marava arrested Britto and his disciples in 1686. They were tortured, but after speaking directly with the king, they were set free later with severe warning by the Raja of Marava, King Sethupathi and he ordered to leave the country.
Return to Portugal: On 8 September 1687, John De Britto returned to Portugal. King Pedro II wanted him to stay in Portugal, but on 2nd November 1690 he returned with 24 new missionaries to the borders of Madurai among the Maravas community.
Mission to the Maravas: About this time Thadiya Thevan, one of the Marava princes, was down with a deadly disease. He had come to know of Britto's healing power. He beseeched: “Please send me at least one of your disciples even if you are not able to come.” Britto sent a knowledgeable disciple to cure him. The prince was miraculously cured.
John de Britto's preaching led to the conversion of Thadiyathevan, a Marava prince who had several wives. He persisted in asking to be baptized. The Christian faith does not allow a man to have more than one wife (monogamy). Thadiya Thevan readily dismissed all but one wife. Among the four dismissed, one was Kadalayi, the cousin of king Sethupathi of Ramnad (Ramanathapuram). She complained to the king who took up her quarrel and began a general persecution of Christians.
Christian persecution: To prevent the churches from being burnt down and the Christians’ houses being plundered, John de Britto handed himself over to the warders along with his disciples in the kingdom of Maravà in 1693. For fourteen years he toiled, preaching, converting, and baptizing multitudes, at the cost of privations, hardships, and persecution. Britto and his disciples were taken and carried to the capital, Ramnad. Thadiya Thevan, the new convert, demanded an open trial.
The Raja feared an uprising on the part of the now strong Christian community, more so, now that Thadiya Thevar had joined them! But the Hindu priests having obtained the green signal from the king Sethupathi, performed few Hindu pujas, one after another rituals, which they thought would cause Britto's death, but to no avail.
At the end, without any trial Sethupathi, the king of Ramnad , gave orders to send John de Britto to Oriyur to be executed.
In the prison-cell, he exhorted his disciples citing the lives of the saints which he used to read in the breviary to foster courage in suffering and perseverance until death. In the forenoon of that fateful day of 04 Feb. 1693, Arualandar Swami was led away from the prison to a sand dune. At a distance he saw a stake already planted in the dry sand. He knelt down at its foot and prayed earnestly for his martyrdom.
Then he got up and walked towards, the executioner and modestly offered his neck to him and he was beheaded on 4 February 1693.
Red Saint: As the head was cut off, to the wonder of all, John de Britto’s body leapt and fell backwards. Tradition has it that the soil of his martyrdom site turned red miraculously. The red sand dune here in this shrine where the blood of the massacred saint was spilled has great significance. This seashore sightseeing location is one of the most venerable pilgrim centres of Christians in the world over, as it is said to be the site of St John de Britto's martyrdom.
Hence, people still call him the Red Sand Saint. Because of his martyrdom, the community he endeavored to establish at the beginning amidst great opposition began to flourish since then. Surely, the hand of God was with the Christian community of Arulanandar Swami all his life and after his life. Thus the life of John de Britto ended far away from his native Portugal.
Memorial Institution: One of the Jesuit colleges established in Tamil Nadu is named after Britto as Arul Anandar College (Arts & Science) which is in Karumathur, Madurai, as well as St. Arul Anandar School, Oriyur, in the town where Britto died. There is a shrine to Britto in Oriyur, where he is a significant figure revered by the Kallar, Maravar and Agamudayar castes who together are often referred to as the Thevars.
Thus, together with Christians, Hindus and Muslims also come to worship at the shrine in thousands, to mark respect to a unique holy man who shed his life and blood at that spot.
Mission Challenges: Are you like John de Britto and ready to face the consequences of standing up for the truth? Did not Christ say, “ A grain of wheat remains a grain unless it falls to the ground and dies, but if it dies it bears a rich harvest?” That is what happened in the case of John de Britto. Next to St. Thomas the Apostle, John De Britto is the only martyr-Saint of the Indian Church to date. Like his great Italian Jesuit missionary predecessors - Roberto de Nobili, Constantino Beschi and Giacomo Tommaso de Rossi – John has become an icon in the Tamil Catholic Church.
Britto was beatified by Pope Pius IX on 21 August 1853. He was canonised by Pope Pius XII on 22 June 1947.
🛐.Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.
☸. My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation?
✝. The Gospel came to India 2000 years back but still we are 2.8% of Indian population. The harvest is plenty but the labourers are few. So come...let's together build the Kingdom of God in our Nation and let's evangelize our Nation in Christ in our Generation.
❇. Dear friends kindly introduce this group link to your friends, relatives and your Church members. May God bless you and use you for the extensions. With love and prayer...Rev. D. David Paramanantham, B.Sc., M.A. B.D. Gamaliel Bible College, Mumbai, India💐🙏😊