திருச்சபையின் செல்ல மகள்கள்:
ஐடா சோபியா ஸ்கடர்
(1870-1960)
ஐடா அவர்கள் அமெரிக்க தேசத்திலிருந்து இந்தியாவில் குறிப்பாய் தமிழ்நாட்டில் வேலூர் பகுதியில் மருத்துவ மிஷனெரியாக ஊழியம் செய்துகொண்டிருந்த Dr. ஜாண் ஸ்கடர் மற்றும் சோபியா தம்பதியினருக்கு மகளாக 1870 ம் ஆண்டு பிறந்தார்.
ஐடா தன்னுடைய வாலிப வயதில் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு ஆண்டவருக்காக ஊழியம் செய்ய தீர்மானித்தார். ஆகிலும் ஐடா தன்னுடைய திருமணத்திற்கு பின்னர் அமெரிக்க தேசத்தில் குடியேறி அங்கே ஊழியம் செய்வதில் இலட்சியமாய் இருந்தார். ஏனெனில் தமிழ்நாட்டில் வேலூர் பகுதியில் கடும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இந்தியாவில் இருக்க விரும்பவில்லை.
இப்படியாக ஒருநாள் மாலை நேரத்தில் ஐடா ஸ்கடர் வேலூர் வீட்டில் தனியாக இருக்கும்போது ஒரு இந்து பிராமண மனிதர் ஐடாவிடம் தன்னுடைய மனைவிக்கு பிரசவ வலி வந்துவிட்டது என்றும் பிரசவ வேதனையை தாங்கமுடியாமல் மிகவும் கஷ்டபடுவதாகவும் ஐடா வந்து உதவ அழைத்தார். ஆனால் ஐடாவோ தான் ஒரு மருத்துவர் இல்லை, தனக்கு மருத்துவ அறிவு இல்லை என்றும் தன்னுடைய தந்தை ஒரு மருத்துவர் என்றும் அவர் வந்த உடன் அனுப்பி வைப்பதாகவும் கூறினாள். ஆனால் அந்த இந்துமத பிராமணர் எங்கள் கலாச்சாரத்தில் எந்த ஒரு ஆணும் பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பதை அனுமதிப்பதில்லை என்று சொல்லி கண்ணீரோடு சென்றுவிட்டார். ஐடா எதையோ இழந்ததைபோல் உணர்ந்தார்.
கொஞ்ச நேரம் கழித்திருந்த சமயத்தில் ரெட்டியார் குடும்பத்தை சேர்ந்த ஒரு மனிதர் ஐடா தங்கியிருந்த வீட்டிற்கு வந்து தன்னுடைய மனைவியின் பிரசவத்தின்போது அதிகமாக இரத்தம்வெளியேறி மயக்க நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறாள் என்று கூறி ஐடாவிடம் வந்து உதவி செய்ய மன்றாடினார். ஆனால் ஐடாவோ மருத்துவரான தன் தந்தை சற்று நேரத்தில் வந்துவிடுவார் என்றும் உடனே அனுப்பி வைப்பதாகவும் கூறினார். இதைக்கேட்ட அந்த மனிதர் ஒரு ஆண் என்னுடைய மனைவிக்கு பிரசவம் பார்ப்பது எங்கள் பரம்பரைக்கும் ஆகாது என்று கூறி திரும்பி சென்று விட்டார். ஐடாவின் மனம் சற்று வேதனை அடைந்தது.
இன்னும் சற்று நேரத்தில், ஒரு இஸ்லாமிய மனிதர் ஐடா வீட்டிற்கு வந்து தன்னுடைய மனைவிக்கு குறைபிரசவ வலி வந்து குழந்தையை பெற்றெடுக்கமுடியாமல் மிகவும் கஷ்டபடுவதாகவும் எப்படியாவதுவந்து தன் மனைவியை காப்பாற்றும்படி கைகூப்பி வேண்டிக்கொண்டார். ஆனால் ஐடாவோ தான் ஒரு மருத்துவர் இல்லை என்றும் தன்னுடைய தகப்பனார் ஒரு மருத்துவர் என்றும் இன்னும் சிறிது நேரத்தில் வந்து உங்களுக்கு உதவி செய்வார் என்று கூறினாள். இதை ஏற்றுக்கொள்ளாத அந்த முஸ்லிம் மனிதர் ஒரு ஆண் தன் மனைவிக்கு பிரசவம் பார்ப்பதை எங்கள் மதத்தில் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் பிரசவத்தில் என்னுடைய மனைவி மரித்தாலும் பரவாயில்லை என்று மிகுந்த மன வேதனையுடன் கூறி கடந்து சென்றார்.
அன்று இரவு மறைந்தது. பகல் மலர்ந்தது. மேள தாளச் சத்தம் காதில் விழ எட்டிப்பார்த்தார் ஐடா ஸ்கடர். மூன்று பிணங்கள் வரிசையாக கொண்டு செல்லப்பட்டன. தான் உதவி செய்ய முடியாத நிலையில் அப்பெண்களின் உயிர் மாய்ந்ததை எண்ணி உள்ளம் உடைந்து மிகவும் மன வேதனைப்பட்டார் ஐடா ஸ்கடர்.
அந்நாட்களில் வேலூர் பகுதியில் ஒரு பெண் மருத்துவரும் இல்லாத நிலையைக்கண்டு ஐடா மிகவும் துடிதுடித்துப்போனாள். அன்று இரவு முழுவதும் தூங்கமுடியாமல் ஜெபத்தில் ஆண்டவரோடு போராடினாள். ஜெபத்தில் ஆண்டவர் இந்தியாவில் வேலூர் பகுதியில் மருத்துவ மிஷனெரியாய் சேவைசெய்ய உணர்த்தினார்.
ஆகவே ஐடா ஆண்டவரிடம், நான் இந்தியாவில் ஊழியம் செய்ய வேண்டும் என்று நீர் விரும்பினால் என் வாழ்க்கையை முழுவதுமாகவே இந்திய பெண்களுக்கு அற்பணிக்கின்றேன் என்று தன்னை அற்பணித்தாள்.
ஐடாவின் தீர்மானத்தையும் கடவுளின் அழைப்பையும் ஏற்றுக்கொண்ட பெற்றோர், மருத்துவம் படிப்பதற்காக ஐடாவை அமெரிக்கா அனுப்பி வைத்தார்கள்.
ஆனால் அமெரிக்காவில் ஐடா வை திருமணம் செய்து அங்குவாழ விரும்பிய ஐடாவின் அமெரிக்க நண்பர், ஐடா ஸ்கடட்ர் இந்தியா சென்று சேவை செய்வதை விரும்பாமல் தன்னுடைய திருமண திட்டத்தை மாற்றிக்கொண்டார்.
ஆனாலும் ஐடா ஸ்கடர் மனம் தளராமல் தமிழ்நாட்டில் வேலூர் பகுதி மக்களுக்கு சேவை செய்யவே தேவன் தன்னை அழைப்பதை உறுதியாய் ஏற்றுக்கொண்டு தன் வாழ்க்கையின் அமெரிக்க கனவுகளை கலைத்துவிட்டு மருத்துவ படிப்பை முடித்துக்கொண்டு 1900 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம்நாள் வேலூர் வந்தடைந்தார்.
இந்நிலையில் ஐடாவின் தந்தை மரித்துபோகவே 1901 ல் வேலூரில் ஒரு சிறிய மருத்துவமனையை ஐடா ஸ்கடர் நிறுவி, அதை சுற்றியிருந்த கிராமங்களுக்கு நடந்து சென்றும், மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து மக்களுக்கு மருத்துவ சேவை செய்தார்கள்.
1902 ம் ஆண்டில் மட்டும் 21 பெரிய அறுவை சிகிச்சையையும், 428 சிறிய அறுவை சிகிச்சையையும் 12,359 நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்தார்.
பின்னர் மருத்துவ செவிலியர்களை உறுவாக்க ஒரு மருத்துவ பள்ளியையும் 1920 ல் ஐடா நிறுவினார்கள்.
அமெரிக்க தேசத்தில் மருத்துவத்தோடு வேதாகம கல்வியையும் கற்று சிறந்ததால் அநேக சுதேச ஊழியர்களை உறுவாகும்படி 1921 ம் ஆண்டு ஒரு வேதாகம கல்லூரியையும் நிறுவினார்.
1922 ம் ஆண்டு வேலூர் பகுதியில் அநாதையாக விடப்பட்ட பிள்ளைகளுக்கு விடுதியோடுகூடிய பள்ளியையும் நிறுவி கல்வி கற்க உதவி செய்தார். 1923 ம் ஆண்டு உலக அளவில் பிரசித்திபெற்ற Christian Medical College நிறுவினார்.
1928 ம் ஆண்டு நம்முடைய தேசபிதா மகாத்மா காந்தியும் இந்த மருத்துவ கல்லூரியை பார்வையிட்டு ஐடா ஸ்கடர் அவர்களின் சேவையை மிகவும் பாராட்டினார்.
இப்படியாக மருத்துவ சேவையும் சமுதாய சேவையையும் செய்து 1960 ம் ஆண்டு தன்னுடைய 89 ம் வயதில் ஐடா அம்மையார் கர்த்தருக்குள் மறுமையில் பிரவேசித்தார்.
இந்திய மக்களின் மேம்பாட்டிற்காக தன்னுடைய இறுதி காலம் வரைக்கும் திருமணம் செய்துகொள்ளாமலே, தன் வாழ்க்கையையே அற்பணித்த ஐடா அம்மையாரை இன்றும் இந்தியா நன்றி உணர்வோடு பார்க்கிறது.
இந்திய அரசாங்கமும் ஐடா அம்மையாரை கனம் பண்ணும் விதமாக சிறப்பு தபால் தலையையும் வெளியிட்டு கௌரவபடுத்தியது.
இன்றைக்கு ஐடா ஸ்கடர் நிறுவிய Christian Medical College உலக அளவில், தரமான மருத்துவ சிகிச்சையை அளித்துக்கொண்டு இருக்கிறது.
இன்றைக்கு 2000 த்திற்கு அதிகமான படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாய் இருந்து ஐடா ஸ்கடர் அம்மையாரின் புகழை உலகமெங்கும் பரப்பிக்கொண்டு இருக்கின்றது.
இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
இதை வாசிக்கிற அன்பு சகோதரிகளே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டு இருந்தபோது, எல்லா ஆண்களும் அவரைவிட்டுவிட்டு ஓடிப்போனார்கள். ஆகவே உயித்தெழுந்த இயேசு கிறிஸ்து முதன் முதலில் ஆண்களுக்கு தன்னை வெளிப்படுத்தாமல், ஒரு பெண்ணுக்கு தம்மை வெளிப்படுத்தி, அவள் மூலமாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் செய்தி ஆண்களுக்கும் மற்ற எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. இயேசுவானவர் தன்னை முதன் முதலில் மேசியா என்று ஒரு பெண்ணுக்குத்தான் வெளிப்படுத்தினார். ஆதி திருச்சபையில் முதல் 500 ஆண்டுகளுக்குள் பல பெண்கள் இறையியலாளர்களாக (Theologians), சுவிசேஷகர்களாக (Evangelists), அப்போஸ்தலர்களாக (Apostles), தீர்க்கதரிசிகளாக (Prophetess), உதவி ஆயர்களாக (Deaconess), ஆயர்களாக (Presbyters) மற்றும் பேராயர்களாக (Bishops) கிறிஸ்துவுக்கு சிறந்த சேனாதிபதிகளாக தங்களை அற்பணித்து எங்கோ ஒரு மூலையில் எருசலேமுக்குள் இருந்த கிறிஸ்தவத்தை உலக மதமாக மாற்றினார்கள். இதில் பெண்களின் பங்கு மகத்தானது, அளவிடப்பபட முடியாது.
பிற்காலத்தில் கிபி 5 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம், ரோமானிய மதமாக அங்கிகரிக்கப்பட்டதால், ஆணாதிக்கம் நிறைந்த ரோம கலாச்சாரம் கிறிஸ் தவத்தில் ஊடுருவி, 1 கொரி 14:34-36, 1 தீமோ 2:11-15, 1 கொரி 11:3, எபே 5: 22-24 ஆகிய வசனங்களுக்கு தவறான வியாக்கியானங்களை கொடுத்து திருச்சபையில் 50% இருக்கும் பெண்களையும், பெண்களின் திறமைகளையும் வெளியே கொண்டுவரவிடாமல், பெண்களின் வாயை கடந்த 1500 ஆண்டுகளாக அடைத்துவிட்டது.
21 ம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் எவ்வளவோ மாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த இன்றைய கிறிஸ்தவ திருச்சபை தலைமைத்துவம் பெண்களை உதவி ஆயர்களாக, ஆயர்களாக மற்றும் பேராயர்களாக அங்கிகரிக்க மறுக்கிறது. கடவுளின் சாயலில் சமமாக படைக்கப்பட்ட பெண்களை ஏற்றுக்கொள்வை மறுக்கிறது. இது கடவுளுக்கு எதிர்த்து நிற்பதற்கு சமம் என்பதை உணராமல் இருக்கிறது.
ஆகவே பெண்களே, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்டிடமாகிய திருச்சபை உங்களை அங்கிகரிக்க மறுக்கலாம். ஆனால் திருச்சபை என்பது கட்டிடம் அல்ல, இது விசுவாசிகளின் கூடுகை என்பதை மறந்து போகாதேயுங்கள். இதற்கு என்று தனி கட்டிடம் தேவையில்லை. ஆகவே உங்கள் வீடுகளே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் படிக்கிற பள்ளிகள் மற்றும் கல்லூரி நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் வேலைசெய்யும் இடங்களில் இருக்கும் நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும்.
இந்தியாவில் சுமார் 6,75,982 கிராமங்கள் உண்டு. இதில் சுமார் 1,12,345 கிராமங்களில் மாத்திரம் ஆலயங்கள் இருக்கிறது. தெபோராளாகிய நீ எழும்புமளவும், இந்திய கிராமங்கள் பாழாய் போய்க்கொண்டுதான் இருக்கபோகிறது (நியா 5:7) . ஆகவே பெண்களின் வாழ்கையை ஒளியேற்றுவதற்காக தன்னையே கொடுத்த இயேசு கிறிஸ்துவுக்கு ஏதாவது வகையில் நற்செய்திபணி செய். உன் மூலமாக இயேசு கிறிஸ்துவின் இராஜியம் நீ இருக்கும் இடத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
The Daughters of the Church:
Ida Sophia Scudder
(1870-1960)
Ida Sophia Scudder was born of Dr. John Scudder and his wife Sophia, part of a long line of American medical missionaries in India. She initially expected to get married and settle down in the United States after graduating from Northfield Seminary in USA.
Ida had expressed a resolve not to become a medical missionary, but during that stay in India, she had the enlightening experience of not being able to help three women in childbirth who died needlessly in one night. That experience convinced her that God wanted her to become a physician and return to help the women of India.
One evening, Idalooked up to see a young Hindu Brahmin man trying to get her attention. "My wife is having our first baby and something is wrong," he blurted out. "I was told you could help.""I'm no doctor, but my father is. He'll help your wife."The young man's face fell in sadness. "Our Hindu religion does not permit a man to even look at my wife's face."Ida implored him, "But without my father's help, she may die!"In disbelief, Ida watched the man's sad eyes drop to the floor as he turned to leave whispering, "All is lost."
That night, another high caste Hindu man came to Ida with the same request. He refused her father's help for the same reason. A Muslim also came, seeking help for his pregnant wife. When Ida gave him the same explanation, he replied, "If you cannot help me, then it is better that my wife die, rather than be seen by a strange man." With that, he bowed and left.
The next morning, Ida learned that all three women died during the night.These senseless deaths occurred all because there was no female doctor.Ida spent a sleepless night praying for guidance.She prayed aloud, "God, if You want me to stay in India, I will spend the rest of my life trying to help these women."
She felt she met God that night, and He was calling her to abandon her plans and follow Him. Once she chose to follow God's call, Ida never looked back.She never married and dedicated her life for the welfare of Indian women.
4Ida Scudder realized that she would be foolish to go on alone in her fight to bring better health to South India's women.
In 1900, Dr. Ida Scudder wasbeginning her work on the hospital at Velour.Ida set her mind to train Indian women as nurses and doctors so they could help themselves.Ida's dreams of teaching the Indian women to help themselves were becoming a reality. In addition to her medical courses, she taught a four-year Bible courses, and founded orphanage for homeless children.
In 1909 she started her famous roadside dispensaries,with an ox and wagon full of medical supplies, Ida traveled to remote villages to treat the people where they lived.In 1923, she built a larger hospital in the center of Vellore Christian Medical College and Hospital, which is today known around the world for excellent research, healthcare, and disease prevention.In 1928,
Mahatma Gandhi visited the medical college. In 1945, the college was opened to men as well as women. Her name is a famous one in India. A letter once reached her addressed simply, "Dr. Ida, India." And she died at the age of 89 in 1960.
A stamp issued on August 12, 2000, as part of centenary celebrations of Christian Medical College. In 2003 the Vellore Christian Medical Center was the largest Christian hospital in the world with 2000 beds and its medical college is now one of the premier medical colleges in India.
Dr. Ida Scudder left a legacy that continues to touch millions of lives each year.
🛐.Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.
🛐. Dear beloved readers, as you know that when Jesus was hanging on the Cross, all the male disciples left Him alone and only the women were under the Cross. Because of this the resurrected Jesus Christ, revealed Himself first to the woman and through her the mesaage of resurrected Christ passed on to men and others. Jesus first revealed Himself as Messiah to the woman. In the early church for a first 500 years of the history of Christianity, many women served as theologians, evangelists, apostles, prophetess, deaconess, presbyters and Bishops. The women made the local Christianity into an international level. So the role of women is highly regarded in the early church.
🔯. When Christianity become the official religion of the Roman empire in the 5th century, the male dominated Roman culture influenced Christianity. Through the misinterpretations of 1 Cor 14:34-36, 1 Tim 2:11-15, 1 Cor 11:3, Eph 5:22-24, the male dominated Church leaders silenced the voices of women in the Church for the past 1500 years.
🕎. We are living in the 21st Century and the things are rapidly changing, but the church leaders stereotyped women and hesitated to ordain them as Deacons, Presbyters and Bishops. God created men and women in His own Image and the Church leaders fail to accept this reality and it is totally against God's plan in salvation History.
✝️. As we are living in India, we have 1,12,345 churches out of 6,75,982 villeges. Until and unless you rise as Deborah, as a mother of India, the villagers will be ceased. Jesus gave His life for the empowerment of women. So take this as a challege and do some thing for the extension of His Kingdom wherever you are. The Church may not recognize you but remember that the building is not the church but it is the fellowship of believers. So let your home be a place for your church, you can share about Jesus among your friends in schools, colleges and universities. You can share about Jesus in your work places among your friends. It is my prayer that you can be a channel of blessings to many others for His Glory. Amen.