============
பாடல் பிறந்த கதை
=============
பாமாலை:நான் பாவிதான் - ஆனாலும் நீர்
ஆசிரியர்:
சார்லட் எலியட் (1789 - 1871)
இசை:
வில்லியம் பிராட்பரி (1816 - 1868)
பாடல் வரிகள்:
"நான் பாவி தான்"
நான் பாவி தான் - ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
வா என்று என்னைக் கூப்பிட்டீர்,
என் மீட்பரே வந்தேன்.
நான் பாவி தான் - என் நெஞ்சிலே
கறை பிடித்திருக்குதே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே, வந்தேன்.
நான் பாவி தான் - பயத்தினால்
அலைந்து பாவ பாரத்தால்
அழிந்து மாண்டு போவதால்,
என் மீட்பரே வந்தேன்.
நான் பாவி தான் - மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்,
உம்மாலே பெற்று வாழவும்,
என் மீட்பரே, வந்தேன்.
நான் பாவி தான் - ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
வா என்று என்னைக் கூப்பிட்டீர்,
என் மீட்பரே வந்தேன்.
நான் பாவி தான் - என் நெஞ்சிலே
கறை பிடித்திருக்குதே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே, வந்தேன்.
நான் பாவி தான் - பயத்தினால்
அலைந்து பாவ பாரத்தால்
அழிந்து மாண்டு போவதால்,
என் மீட்பரே வந்தேன்.
நான் பாவி தான் - மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்,
உம்மாலே பெற்று வாழவும்,
என் மீட்பரே, வந்தேன்.
பாமாலை பாடல் பிறந்த கதை
==============
சார்லெட் எலியட் என்ற பெண்மணி 1789 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்தில் கிளாபம் என்னும் ஊரில் பிறந்தார். இவர் H.V. எலியட் என்ற ஆங்கிலிக்கன் திருச்சபை குருவானவரின் சகோதரி ஆவார்.
சார்லட் எலியட், தன்னுடைய வாலிப நாட்களில் ஓவியம் வரைவதிலும், நகைச்சுவை துணுக்குகள் எழுதுவதிலும் புகழ் பெற்று, ஒரு கவலையற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்தாள். ஆனால் முப்பது வயதானபோது உடல் நலம் மிகவும் குறைவு பட்டு, பலவீனமடைந்து படுத்த படுக்கையானார்.
சார்லட் எலியட், படுத்த படுக்கையில், சோர்வுற்று இருந்த நிலையில் 1822 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தை சேர்ந்த குருவானவர் சீசர் மாலன் இவருடைய வீட்டிற்கு வந்தார். இந்த சந்திப்பு சார்லட் எலியட்டின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் சோர்ந்து போயிருந்த சார்லட் எலியட்க்கு குருவானவர் சீசர் மாலன், உன் உள்ளத்தை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து, அவருக்கு ஒரு உபயோகமுள்ள ஊழியக்காரியாக மாறி விடு என்று அறிவுரையும் ஆலோசனையும் கூறினார்.
அதற்கு சார்லட் எலியட் நான் எவ்வாறு இயேசுவை ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லையே? என்றார். மேலும் சீரான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கு தான் செய்ய வேண்டியது என்னவென்று கேட்டார். ஒருவேளை தான் ஏதாவது முயற்சி செய்து கடவுளின் முன் நிற்பதற்கு தன்னை தகுதி உள்ளவளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று விசாரித்தார்.
அதற்கு அந்த குருவானவர் சீசர் மலன், மிகச் சுருக்கமாக நீ இருக்கிற படியே வா என்று கடவுள் உன்னை அழைக்கிறார் என்று கூறினார்.
அன்றே சார்லட் எலியட் இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அந்த நாளைத்தான் தன்னுடைய ஆவிக்குரிய வாழ்வின் பிறந்தநாள் என்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வந்தார்.
இந்நிலையில் குருவானவர் H.V.எலியட் தன்னுடைய திருச்சபை மக்களின் ஆன்மீக நலனுக்காக பாடுபட்டதுடன், குருத்துவ பணியாற்றும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவிசெய்வதற்காக ஒரு பள்ளிக்கூடம் ஒன்றை கட்டுவதற்கு திட்டமிட்டார்.
இதற்கு பணம் திரட்டுவதற்காக இங்கிலாந்து தேசத்தில் பிரைட்டன் நகரில் ஒரு விற்பனை விழா ஒன்றை ஒழுங்கு செய்தார். இது அவருடைய சகோதரி சார்லட் எலியட்டும் குடியிருந்த வெஸ்ட்பீல்டு லாட்ஜ் என்கிற இடத்தில் நடைபெற்றது.
விற்பனை விழா நடைபெறுவதற்கு முந்தின தினம், குருவானவர் H.V.எலியட், அவருடைய உறவினர்களும் நண்பர்களும் விற்பனை விழாவிற்காக பல ஆயத்த வேளைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
இவ்வாறான நிகழ்ச்சிகளில் தன்னால் பங்கெடுத்து உதவி செய்ய இயலாத நிலைமையை எண்ணி சார்லட் எலியட் மிகவும் வருந்தினார்.
அவ்விழாவில் கலந்து கொள்ள விடாமல் நோயினால் கடவுள் தம்மை தடுத்து வைத்திருக்கிறாரோ என்ற சந்தேம் அடி உள்ளத்தில் சார்ட்டிக்கு ஏற்பட்டது. இவ்வாறு அன்றிரவு முழுவதும் மனதை உறுத்திக் கொண்டிருந்தது.
மறுநாள் சார்லட் எலியட் வீட்டில் உள்ளவர்கள் அதிகாலையில் எழுந்து, விற்பனை விழாவுக்கு தங்களுக்கு குறிப்பிட்டிருந்த வேலைகளை செய்யும் படி, கடந்து சென்றார்கள்.
ஆனால் படுத்த படுக்கையாய், தனிமையாக, வீட்டில் விடப்பட்ட சார்லட் எலியட் தன் நிலைமையை குறித்து மீண்டும் சிந்திக்கலானார். தான் கிறிஸ்தவ பணி செய்ய தகுதியற்றவளாக ஒருவேளை கடவுளால் காணப்படுகிறேனோ என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் வந்து மோதியது. தன்னுடைய பாவ கரங்களினால் கடவுள் தன்னை பணி செய்யக் கூடாது என்று தடுத்து இருக்கிறாரோ என்றும் அவள் உள்ளத்தில் மோதிக்கொண்டிருந்தன.
இவ்வாறு சோர்வுற்று இருந்த வேலையில், சார்லட் எலியட்டின் உள்ளத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற சோர்ந்து வேதனைப் பட்டுக்கொண்டு இருந் நேரத்தில் குருவானவர் சீசர் மலன் கூறிய ஆறுதல் வார்த்தைகள் நினைவில் வந்தது. அவர் கூறிய வார்த்தையான இருக்கும் நிலையிலேயே இயேசுவண்டை வா என்ற அழைப்பின் குரல் மீண்டும் மீண்டும் அவள் உள்ளத்தில் ஒங்கி ஒலித்தது.
சார்லட் எலியட்டின் ஏக்கங்கள் எல்லாம் நான் பாவிதான்-ஆனா லும் நீர் என்று வார்த்தையாக மாற ஆரம்பித்து என் மீட்பரே வந்தேன் என்ற முனுமுனுத்தார். உடனே படுக்கையில் இருந்து எழுந்து, உட்கார்ந்து, ஒரு காகிதத்தில் இந்த பாடலை எழுதி, கடவுள் பெயரில் பற்றுறுதியும் விசுவாசமுள்ளவளாய் இந்த பாடலை எழுதி முடித்தார்.
சற்று நேரம் கழித்து குருவானவர் H.V. எலியட்டின் மனைவி, விற்பனை விழா எவ்வாறு நடைபெற்றது என்பதை சார்லட் எலியட் க்கு தெரிவிக்கும்படி அவளுடைய அறைக்கு வந்தார்கள்.
அப்பொழுது சார்லட் எலியட் எழுதி வைத்திருந்த இந்த பாடலை வாசித்துப் பார்த்து விட்டு மிகவும் பரவசம் அடைந்தார்கள். உடனே அந்த பிரதியை எடுக்க தமக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று அவரிடத்தில் கேட்டுக் கொண்டு, அப்பாடலை ஒரு காகிதத்தில் எழுதி எடுத்துக் கொண்டு சென்றார்கள்.
இப்பாடல் எழுதப்பட்ட உடனே அச்சிடப்பட்டது. இந்த பாடலுக்கு வில்லியம் பிராட்பரி என்பவர் இராகத்தை இயற்றினார்.
இந்த பாடலை படித்த பலரும் விரும்பப்படும் பாடலாக மாறியதால், மீண்டும் மீண்டும் பிரதிகள் எடுக்கப்பட்டு உலகமெங்கும் பிரபலமடைந்தது.
இதில் ஆச்சரியமான காரியம் என்னவென்றால் அந்த விற்பனை விழாவின் மூலம் சேகரிக்கப்பட்ட மொத்த தொகையை காட்டிலும், தன்னை உபயோகம் அற்றவள் என்று கருதிய சார்லட் எலியட் நான் பாவி தான்- ஆனாலும் நீர் என்று எழுதிய இப்பாடல் அதிக நிதியை அவளுடைய சகோதரனாகிய குருவானவர் H.V.எலியட் க்கு திரட்டிக் கொடுத்தது.
இந்த பாடல், நம்முடைய ஆலய ஆராதனைகளில் பாவ அறிக்கை ஜெபத்திற்கு பின் பாடுவதற்கு மிக பொருத்தமாக அமைந்திருக்கிறது. இந்தப்பாடலில் நம் மீட்பர் நமக்காக சிந்திய ரத்தத்தை நினைவூட்டுவதும், அவர் நம் பாவங்களை மன்னித்து நம்மை தம்முடைய சொந்தப் பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறார் என்ற வேதத்தின் கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.
இப்பாடல் கணக்கற்ற மக்களுக்கு இன்றும் ஆறுதலையும், சமாதானத்தையும் ஆசீர்வாதத்தையும் கொடுத்துக்கொண்டு வருகிறது.
கடினமான உள்ளங்களையும் உருகச் செய்யும் இப்பாடலை இயற்றிய சார்லட் எலியட் தனது 32 ம் வயதில் படுத்த படுக்கையில் இருந்து மேலும் சுமார் 150 பாடல்களை எழுதினார்.1871 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் நாள் தனது 82 வயதில் மரித்தார்.
சார்லட் எலியட் மரித்த பொழுது இப்பாடலின் மூலம் தாங்கள் பெற்ற ஆறுதலையும் சமாதானத்தையும் ஆசீர்வாதங்களும் பற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கடிதம் எழுதினார்கள்.
இந்த பாடாலானது உலக பிரசித்திபெற்ற அமெரிக்க தேசத்து சுவிசேஷகர் பில்லிகிரகாம், கர்த்தரின் செய்திகொடுத்த பின்னர் மக்கள் மனம்திரும்புவதற்காக இறுதி அழைப்பாக பாடப்படும்போது, இலட்சக்கணக்கான மக்கள் முன்பாக வந்து தங்கள் பாவத்தை கிறிஸஸ்துவிடம் அறிக்கையிட்டு, இயேசுகிறிஸ்துவின் மூலம் மன்னிப்பை பெற்றுச்சென்று புதுசிருஷ்டிகளாக கடந்து சென்றார்கள்.
இந்த பாடலை கருத்தூன்றி பாடும் எவரும் இதனால் பலனடையாமல் போகமாட்டார்கள் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை. நீங்களும் ஒருமுறை பாடித்தான் பாருங்களேன்.
=============
The Story Behind the Hymn
=============
Hymn:Just as I am
Author:
Charlotte Elliott (1789 - 1871)
Music:
William B. Bradbury(1816-1868)
Hymn Lyrics:
"Just as I am"
Just as I am – without one plea,
But that Thy blood was shed for me,
And that Thou bidst me come to Thee,
– O Lamb of God, I come!
Just as I am – and waiting not
To rid my soul of one dark blot,
To Thee, whose blood can cleanse each spot,
– O Lamb of God, I come!
Just as I am – though toss’d about
With many a conflict, many a doubt,
Fightings and fears within, without,
– O Lamb of God, I come!
Just as I am – poor, wretched, blind;
Sight, riches, healing of the mind,
Yea, all I need, in Thee to find,
– O Lamb of God, I come!
Just as I am – Thou wilt receive,
Wilt welcome, pardon, cleanse, relieve;
Because Thy promise I believe,
– O Lamb of God, I come!
Just as I am – Thy love unknown
Has broken every barrier down;
Now to be Thine, yea, Thine alone,
– O Lamb of God, I come!
Just as I am – of that free love
The breadth, length, depth, and height to prove,
Here for a season, then above,
– O Lamb of God, I come!
Just as I am – without one plea,
But that Thy blood was shed for me,
And that Thou bidst me come to Thee,
– O Lamb of God, I come!
Just as I am – and waiting not
To rid my soul of one dark blot,
To Thee, whose blood can cleanse each spot,
– O Lamb of God, I come!
Just as I am – though toss’d about
With many a conflict, many a doubt,
Fightings and fears within, without,
– O Lamb of God, I come!
Just as I am – poor, wretched, blind;
Sight, riches, healing of the mind,
Yea, all I need, in Thee to find,
– O Lamb of God, I come!
Just as I am – Thou wilt receive,
Wilt welcome, pardon, cleanse, relieve;
Because Thy promise I believe,
– O Lamb of God, I come!
Just as I am – Thy love unknown
Has broken every barrier down;
Now to be Thine, yea, Thine alone,
– O Lamb of God, I come!
Just as I am – of that free love
The breadth, length, depth, and height to prove,
Here for a season, then above,
– O Lamb of God, I come!
The Story Behind the Hymn
==============
Charlotte Elliott was born in Chapham, England on March 18, 1789. Her family belonged to the Anglican Church of England. As a young lady, she led a carefree life, gaining popularity as a portrait artist and a writer of humorous verses. By the time she was thirty, her health began to deteriorate, and soon she became bed-ridden for the rest of her life, making her unable to attend church anymore.
In 1822, when she was 33 years old, Dr. Caesar Malan, a preacher from Switzerland, visited the Elliott's home in Brighton, England. His visit was a turning point in Charlotte's life. He asked her if she had peace with God. She was facing many inner struggles and felt useless. This made her resent the question.
She refused to talk about it that day. But a few days later, she called Dr. Malan and apologized. She said she wanted to purify her soul before becoming a Christian. Dr. Malan told her "You must come just as you are — a sinner, to the Lamb of God that takes away the sin of the world." From this visit, for the rest of her life, she always celebrated the day of her visit with Dr. Malan as her spiritual birthday.
She wrote, "God alone knows what it is, day after day, hour after hour, to fight against bodily feelings of almost overpowering weakness and exhaustion, to resolve not to yield to slothfulness, depression and instability." She also wrote "God sees, God guides, and God guards me. His voice bids me to be happy and holy in His service just where I am."
She evidently never forgot the words of her Swiss friend, as they are the based on one of the most popular songs that she wrote, even though she did not write the poem ‘Just As I Am’ until 1836, 14 years after Dr. Malan's visit.
In 1834, Elliott moved to Brighton and lived with her brother, Rev. Henry Venn Elliott. One day, everyone in her family had gone to a church bazaar to raise funds for a charity school. Charlotte was passionate about the cause and was eager to help. But, after weeks of preparation, she was too sick to attend it. She was left alone, confined by her sickness.
The night before the bazaar she was kept awake by distressing thoughts of her apparent uselessness; and these thoughts passed — by a transition not easy to imagine — into a spiritual conflict, till she questioned the reality of her whole spiritual life, and wondered whether it were anything better than an illusion of the emotions, an illusion ready to be sorrowfully dissolved.
The next day, on the busy day of the bazaar, she lay upon her sofa in the most pleasant bedroom set apart for her, in Westfield Lodge, ever a dear resort to her friends." The troubles of the night came back upon her with such force that she felt they must be met and conquered in the grace of God. She gathered up in her soul the great certainties, not of her emotions, but of her salvation: her Lord, His power, His promise. And taking pen and paper from the table she deliberately set down in writing, for her own comfort, "the formulae of her faith."
Though depressed with feelings of uselessness and loneliness, she recalled the message “Come to Christ just as you are,” which she had received from César Malan during the darkest period of her soul.
The repetition of the short line, “O Lamb of God, I come,” is a commitment to Jesus-centered life. There is a beautiful structure in this hymn, “from the nakedness of ‘Just as I am’ to the climax of ‘O Lamb of God, I come!’
“Just As I Am” took on a life of its own, often paired with the words of Jesus, “Whoever comes to me, I will never turn away.” (John 6:37).. It is through God’s initiative, pardon, promises and free love mentioned throughout the hymn, that everyone can come to Jesus. Just like Elliott, people will face “conflict,” “doubt” and “fighting and fears within [and] without,” but one can find rest in Jesus. Her life was a testimony to patient endurance in suffering, not only physical, but also emotional and spiritual. She then overcame her distress to write this hymn.
The original, "Woodworth", was written by William B. Bradbury (1816-1868), and was first published in the Third Book of Psalmody in 1849.
13. She wrote ‘Just As I Am’ hoping that the proceeds from it would aid financially in building a school for the children of poor preachers, which her own preacher brother was trying to build there in Brighton. This one song, brought in more money than all the bazaars and other fundraising events that her brother had held for the school.
Charlotte died at age 82 in 1871. Her creative energy revived, and she eventually wrote close to 150 hymns. Elliott’s hymns, are simple, devotional and full of consolation for those in sickness and sorrow.
Because of its simple but powerful message, this hymn has been widely used in church meetings like those led by American evangelists D.L. Moody, Billy Graham and John Stott. The hymn is suitable for altar calls and also during the Holy Communion.
Many people associate “Just As I Am” with the life and ministry of Billy Graham, as for many years it was sung during altar calls at his crusades. Billy Graham claimed that he was converted while “Just As I Am” was being sung. He said it presented "the strongest possible Biblical basis for the call of Christ”. He led crusades on every continent using this hymn for an “altar call.” Tens of thousands of people have committed their lives to Christ during the playing of this hymn. ‘Just As I Am’ had touched more hearts and influenced more people for Christ than any other song ever written. Today, the hymn is translated into many languages, and people of every color, every age, and every station in life have knelt before God and made it their prayer of penitence.