முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை:
"இராபட் கால்டுவெல்"
(1814-1891)
இராபட் கால்டுவெல் அவர்கள் அயர்லாந்து தேசத்தில் 1814 ம் ஆண்டடில் பிறந்தார். இவர் தன்னுடைய 16ம் வயதில் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு தன்னுடைய 23 வயதில் ஆண்டவரின் அழைப்பை ஏற்று மிஷனெரி பணிக்கு தன்னை அற்பணித்தார்.
கால்டுவெல் அவர்களின் தாயார் தன் மகனை இந்தியாவிற்கு மிஷனெரியாக அனுப்பும்போது நெற்றியில் முத்தமிட்டு, மகனே...என் சிந்தையில் கூட முறுமுறுப்பில்லாமல் உன்னை கர்த்தருக்கு மனப்பூர்வமாக ஒப்புக்கொடுக்கின்றேன் என்று கூறி அனுப்பி வைத்தார்.
ஆகவே அங்குள்ள London Mission Society என்ற மிஷனெரி ஸ்தானம் மூலம் வேதாகம கல்லூரியில் எபிரேயம், கிரேக்கு, இலத்தின், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றதோடு மட்டுமல்லாமல் மொழியியல் கல்வியிலும் சிறந்து விளங்கினார்.
1837 ம் ஆண்டு ஒரு குருவானவராக அருட்பொழிவு பெற்று சிலகாலம் அங்கிருந்த தேவாலயத்தில் குருவானவராக ஊழியம் செய்து 8/01/1838 ம் ஆண்டு சென்னை க்கு நான்குமாத கப்பல் பயனத்தின் பின் வந்தடைந்தார். பின்னர் அங்கிருத்து 800 மைல் தொலைவில் இருந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இடையன்குடி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க அனுப்பப்பட்டார்.
இடையன்குடி வந்த கால்டுவெல் அவர்கள் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளை நன்கு கற்றுக்கொண்டார்.
இடையன்குடி மற்றும் அதைச்சுற்றியிருந்த கிராமங்களில் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் கல்வி அறிவில்லாதவர்களும் பொருளாதாரத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழாக அடிமைகளாக வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். இங்கு இருந்த மக்கள் பனை ஏறும் தொழில் மூலமாகவும் விவசாய கூலி தொழிலாளர்களாக பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார்கள். இவர்கள் சாதியின் அடிப்படையில் மேல் சாதி மக்களால் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டரர்களாக வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருந்தார்கள்.
இடையன்குடி, கால்டுவெல் அவர்களின் கரிசனையில் வளர்ந்த ஊர். அங்கும், இங்கும் கோணல்மாணலாக இருந்த வீடுகளை வரிசைப்படுத்தினார். அதனை அழகான முன்மாதிரியான கிராமமாக மாற்றினார். சாலைகளை உண்டாக்கினார், வழியெங்கும் நிழல் தரும் மரங்களை நட்டார்.
கால்டுவெல் அவர்கள், தேரிகள் நிறைந்த உவரி, குண்டல் போன்ற 13 கிராம மக்களை சந்தித்து அவர்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார். இடையன்குடி பகுதியில் வசித்த மக்களுக்கு கல்வி அறிவு கொடுக்கும்படி ஒரு கல்விகூடத்தை நிறுவினார். ஆனால் மாணவர்கள் யாரும் பெரிய அளவில் கல்விக்கூடங்களுக்கு வரவில்லை. ஆகவே கல்விக்கூடம் வரும் பிள்ளைகளை உற்சாக படுத்த ஒருநாளைக்கு "ஒரு பைசா" கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தினார்.
இந்நிலையில் கால்டுவெல் அவர்கள் 1844 ம் ஆண்டு எலிசா மால்ட் என்ற ஒரு குருவானவரின் மகளை திருமணம் செய்து குடும்பமாக ஊழியம் செய்தார். எலிசா அம்மையார் பெண் பிள்ளைகளும் கல்வி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்களுக்கான கல்விக்கூடத்தை நிறுவினார். மேலும் பெண்களின் பொருளாதாரம் உயரும்படி கைத்தொழில் கூடங்களையும் உறுவாக்கினார். பனை ஏற்றுக் குடும்பத்தினர் படிப்பிலும் பண்பிலும் சிறந்து விளங்கினார்கள்.
கால்டுவெல் அவர்களின் ஊழியத்தினால் அநேகர் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே இடையன்குடி பகுதியில் ஒரு ஆலயத்தை கட்டினார். மேலும் இந்த ஆலயத்தை ஐந்து முறை விரிவாக்கம் செய்து பெரியதாக கட்டினார். இப்படியாக இடையன்குடிக்கு சுற்றுவட்டாரத்தில் இருந்த அநேக கிராமங்களில் தேவாலயங்களும் கல்விக்கூடங்களையும் உண்டாக்கினார். கால்டுவெல் அவர்கள் சபைமக்களை உற்சாகப்படுத்தி கிராமங்களில் சுவிசேஷ ஊழியங்களை ஒழுங்கு செய்து கிராமம் கிராமமாக சென்று இயேசுவின் நற்செய்தியை அறிவித்தார்கள்.
இடயங்குடியில் இருக்கும் பெரிய ஆலயத்தை 1848 ம் ஆண்டு கட்ட ஆரம்பித்து 32 வருடங்களில் கட்டி முடித்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. மக்கள் தங்கள் வியர்வையையும் பதனீரையும் கலந்து கட்டியதாகும். தூய திரித்துவ ஆலயம் என்ற பெயரில் 06/07/1880 கடவுளின் நாம மகிமைக்காக கட்டப்பட்டது.
இந்த சூழ்நிலையில் கால்டுவெல் அவர்கள் தமிழ் மொழியின்மீது பற்று கொண்டு தமிழ் இலக்கியங்களையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் ஐரோப்பிய மக்கள் வாசிக்கும்படி அவைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.
கால்டுவெல் அவர்கள் 1856 ம் ஆண்டு திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற அபூர்வ ஆய்வுநூலை வெளியிட்டார். அவருடைய மொழியியல் கல்வியின் புலமையினால் தமிழ் நன்கு ஆராய்ச்சி செய்து தமிழ் மொழிதான் தென் இந்திய மொழிகளில் பழமையானது என்றும் தமிழ் மொழியில் இருந்துதான் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளும் தோன்றியது என்பதை இந்த உலகிற்கு நிருபித்தார். இவர்தான் முதல்முறையாக தமிழ் மொழி, சமஸ்கிருத மொழியிலிருந்து தோன்றியது என்ற ஆரியர்களின் கூற்றை பொய் என்று நிருபித்து கான்பித்தார்.
இலக்கண நூல்களையும் சரித்திர நூல்களையும் எழுதியதோடு வேதாகமத்தை திருத்தும் பணியிலும் ஈடுபட்டார்.
இந்நிலையில் கால்டுவெல் அவர்கள் 1877-ம் ஆண்டு திருநெல்வேலி திருமண்டலத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். ஆகவே பல சவால்களை சந்தித்து வேதாகம கல்வி கொடுத்து அநேக குருவானவர்களையும் சபை உபதேசியார்களையும் தேவாலயங்களுக்கு நியமித்தார். அவர்களில் முதன்மையானவர்கள் Rev. மாசில்லாமணி, Rev. ஞானமுத்து, Rev. சாமுவேல் ஆவார்கள். பின்னர் கால்டுவெல் அவர்கள் பேராயராக இருந்து 1885 ம் ஆண்டு ஓய்வு பெற்றார்கள்.
ஆகவே கால்டுவெல் அவர்களின் உடன்பிறப்புகளும், நண்பர்களும் அவருடைய இறுதிகாலத்தை அயர்லாந்து பகுதியில் வசிக்க கேட்டுக்கொண்டார்கள். ஆனால் கால்டுவெல் அவர்களோ இத்தனை காலமும் இந்தியர்களுக்காகவே வாழ்ந்தேன். உயிர் உள்ள அளவும் அவர்களுக்காகவே உழைப்பேன். தான் மிகவும் நேசிக்கும் இடையன்குடி பகுதி மக்கள் மத்தியில் மரித்து அடக்கம் பண்ணப்படுவதையே விரும்புவதாக அவர்களுக்கு மறுப்பு தெரிவித்தார்.
இப்படியாக தன்னுடைய 53 ஆண்டுகாலத்தை தமிழுக்கும், சமயத்திற்கும், இடையன்குடி பகுதி மக்களுக்காகவே தியாகம் செய்த கால்டுவெல் அவர்கள் 28/08/1891 ம் ஆண்டு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். இடையன்குடி மக்களின் மிகுந்த விருப்பத்தின்படி இவருடைய சரீரத்தை தூய திரித்துவ ஆலயத்தில் அடக்கம் பண்ணினார்கள். எலிசா அம்மையாரும் 18/06/1899 ல் மரிக்கவே, இவருடைய சரீரத்தை கால்டுவெல் அவர்களின் பக்கத்திலே அடக்கம் செய்யப்பட்டது. கால்டுவெல் அவர்கள் கீழ்நெல்லை அப்போஸ்தலன் என்று இன்று அழைக்கப்டுகின்றார்.
கால்டுவெல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஆற்றிய தொண்டினை மதித்த தமிழ்நாடு அரசு சென்னையில் மெரீனா பீச் பகுதியில் அவருடைய முழு உறுவ சிலையையும், அவருடைய 200 ம் பிறந்த நாளை சிறப்பிக்கும்படி கால்டுவெல்அலர்களின் தபால் தலை யும் வெளியிட்டு கவுரவப்படுத்தியது.
இன்றும் கால்டுவெல் அவர்கள் இடையன்குடி பகுதி மக்களின் மனதில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார். இதை வாசிக்கின்ற வாலிப சகோதர சகோதரிகளே நம்முடைய தேசம் நம்முடைய தலைமுறையில் இயேசுவுக்கு சொந்தமாக இருக்க, கால்டுவெல்லலைப்போல நானும் செயல்படுவேன். என்னையும் பயன்படுத்தும் என்று உங்களை அற்பணிப்பீர்களா? வாருங்கள்...தேவனுக்காய் எழும்பி பிரகாசிப்போம். அவர் நம்மை மகிமை படுத்துவார். நன்றி.
இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியில் உயர்ந்து இருப்பதற்கு உனக்காக, உன் வாழ்க்கைதரம் உயருவதற்காக நம்முடைய ஆண்டவர் பல மிஷனெரிகளை உன்னுடைய கிராமத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றார். அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்? வா....நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
இதை வாசிக்கின்ற பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை அன்னாள் (1 சாமுவேல் 1: 11) போன்று கடவுளுக்கு சேவை செய்யும் கனமான ஊழித்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிஷேச மிஷனெரியாக செல்ல அற்பணிப்பீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவைநிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
The Gospel Pioneers
Robert Caldwell
(1814-1891)
Robert Caldwell was born in Ireland on 7th May 1814 and he was a missionary, missionary bishop and scholar in ethnographer, historian and philologist. He accepted Christ when he was sixteen and at the age of 23, he joined in LMS(London Mission Society) later went to theological studies in Glasgow university of Scotland and studied Greek, Latin.
After graduation with distinction, he got ordination and commissioning into missionary service in Tamil Nadu in 8th January 1838, then walked the 800 miles south to the village of Idaiyangudi, ministering to 'the poorest of the poor' in Tinnevelly, the southernmost and one of the hottest districts of India. He found the local people to be hard working, unlettered and poor. Most of them were either Palmyra climbers or agricultural laborers. He established his mission station and established 21 local churches and 9 schools. Caldwell achieved Christian conversion among the lower castes.
He married to Eliza Mault in March 1844 and Eliza started boarding schools for girls, introducing home-making and lacemaking so as to enable literature Tamil Christian women to achieve personal, social and financial independence in 1849.
Caldwell knew very well the importing knowledge; he found the schools in a pitiable state. They were dwindling and the attendance was very poor. So, he had to coax the children to come to school. As the students were from poorer background, he gave one paisa per day child for attending the classes.
Very soon the parents of the pupils, especially the Christians came to realize the values of education and so willingly sent their wards to the schools.
Caldwell was consecrated as the Bishop of Tirunelveli in 1877. He felt the need for Indian clergy as new mission workers. One of the early Indian catechists was Rev. A. Masillamani, who was ordained as a deacon in 1856. He was the second Indian to be ordained in the Tirunelveli SPG area. The third one was G. Gnanamuthu who was ordained as a deacon in 1857 and D. Samuel was ordained in 1862.
Caldwell encouraged the local believers to take up on them the responsibility to share the gospel with their neighbors and to those in the unreached areas in their reigns. He helped to revise the Tamil Book of Common Prayer; he played a part helping the revised version of the Tamil Bible.
He was devoted to learning Tamil and was so attracted by the beauty of the language that he also explored its rich literature and poetry and became familiar with some of the other languages of the region.
Caldwell’s scholarly contributions to Tamil culture were wide-ranging and profound. Scholars in the 19th century prior to Caldwell considered Tamil and other South Indian languages to be rooted in Sanskrit and affiliated to the Indo-European language family. He published a book titled 'A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages' which in later days became an important book for Tamil researchers.
He was the first to argue that South India’s four main languages- Tamil, Telugu, Kannada and Malayalam- has a common origin and was separate family of languages altogether distinct from the Aryan family of languages. By arguing that these Dravidian languages of the south were different from those derived from Sanskrit and that their cultures and politics had existed prior to the arrival of Brahmans in the south, going so far as to suggest intrinsic differences in physical anthropology, religion and social structures.
At the end of Robert Caldwell's last visit to England when friends tried to persuade the old missionary to remain at home, his reply illustrates his affection for the people of Tamil Nadu: "I wish to die amongst the people for whom I have lived", and in 1891 after half a century of labour, his wish was fulfilled.
He and Eliza (1899) are buried under the alter of Holy Trinity, Idaiyangudi. In 1968 a statue of Caldwell stands on the esplanade in Madras(Marina Beach) as a tribute to his contributions to the culture and to the people of Tamil Nadu. In 2010 the government of Tamil Nadu paid this 19th century 'foreign' missionary the considerable compliment of issuing a postage stamp in his memory.
On 7th May, 2014 the Tamil Nadu Government observed the bicentenary (200 Yrs.) for his contribution to the Tamil literature. He was described in The Hindu Newspaper as a 'pioneering champion of the downtrodden' and an 'avant-garde social reformer'. Yes, Caldwell is still legend among the Tamil people.
Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.
My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation?
Bible verse tamil |