எது உண்மையான சுதந்திரம்? | இந்தியா | What is true freedom? | Happy independence day | India | Jesus Sam
Jesus Sam8/15/2022 11:22:00 AM
0
எது உண்மையான சுதந்திரம்?
யோவேல் 2: 21
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
கல்வியற்ற நிலை மாற்றப்பட்டதே அது தான் சுதந்திரம்
காலுக்கு செருப்பு போடப்பட்டதே அது தான் சுதந்திரம்
கிணற்றில் சமத்துவம் வந்ததே அது தான் சுதந்திரம்
கீழ்த்தட்டு மக்களுக்கும் உரிமை கிடைத்ததே அது தான் சுதந்திரம்
குற்றப் பரம்பரை என்றொன்று இல்லை என்றதே அது தான் சுதந்திரம்
கூலி வேண்டி பெற்ற வெற்றி அது தான் சுதந்திரம்
கெஞ்சி அஞ்சி அண்டி வாழும் பயம் ஒழிந்து போனதே அது தான் சுதந்திரம்
கேள்வி கேட்டு பகுத்து அறிய கற்றுக் கொண்டோமே அது தான் சுதந்திரம்
கைகள் கட்டி கூனிக் குறுகி நிற்கும் அவலநிலை அடித்து நொறுக்கப்பட்டதே அது தான் சுதந்திரம்
கொள்ளை போன நமது உடைமை உரிமைகளையெல்லாம் மீட்கும் திருநாள் தான் சுதந்திரம்
கோழை வாழ்வில் உண்டாகும் தாகத்தை தைரிய நதியில் தீர்க்கும் நாள் தான் சுதந்திரம்
கெளரவம் என்பது மனித கூட்டுறவு வாழ்வில் தான் உறைந்துள்ளது என்பதை அறிவதே உண்மையான சுதந்திரம்.
பிறர் மீது செருப்புகள் வீசுவது சுதந்தரமன்று... அது மடமை.
வீசப்பட்ட செருப்பை வாங்கி செல் என அழைக்கும் தன்மையே சுதந்தரம் அடைந்தவரின் கெளரவம்.
அருட்திரு. ஆ. பீட்டர் ஜோசப்
இந்தியா
இந்தியாவில் கிறிஸ்த்தவ வளர்ச்சி வெரும் 15.5% தான்
இந்தியாவில் இதுவரை இயேசு கிறிஸ்த்து வைப்பற்றி அறிவிக்கப்படாதா மக்கள் கிராமங்கள் 1932
இனங்கள் 4635
இந்தியாவின் மொத்த மாவட்டங்கள் 676, கிராமங்கள் 640876,
மொழிகள் 460 (இரண்டு இலட்சத்திற்க்கும் அதிகமாக பேசுவோர்) 22 மொழிகளே அதிகாரப்பூர்வமான மொழிகள்
இந்தியாவில் கிறிஸ்தவர்களின் என்னிக்கை 2.3% சதவீதம் தான் அதிகாரப்பூர்வமாக
(அதிகாரப்பூர்வமில்லாமல் 6% சதவீதம்)
இன்றைய இந்தியாவின் அவசர ஜெப தேவைகள்
பிரதான மக்கள் இனங்களில் அவர்களின் கலாச்சாரம் சார்ந்த முறைகளை பயன்படுத்தி சபைகள் நாட்டப்பட ...
அப்படிபட்டதான சபைகள் நாட்டுவதற்க்கான
சுதந்திரம் தொடர ...
திருச்சபைகளும் மிஷனெரி இயக்கங்களும்
இணைந்து செயல்பட ....
சந்திக்கப்படாத மாவட்டங்கள் சந்திக்கப்பட...
400 மொழிகளில் நடைபெறும் பரிசுத்த வேதாகம மொழி பெயர்ப்புகளுக்காக...
சமூகப் பிரச்சனைகளுக்காக ..
நம்முடைய ஜெபங்கள் மூலம் சபை நாட்டுவதில் உள்ள தடைகளை தகர்த்தெறிந்து
மக்கள் இனங்கள் நற்செய்திக்கு கீழ்படிந்து
குடும்பங்களும் சமூகங்களும் மறுமலர்ச்சியடைய
இந்தியா ஆசீர்வதிக்கப்பட இந்த புதிய நாளிலும் உறுதி எடுப்போம்
அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.
லூக்கா 17:10
நீதிமொழிகள் 3:6
ஏசாயா 52 : 7
கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்
ஆமென்
இன்ப இயேசு கிறிஸ்த்துவின் இனிதான நாமத்தில் அனைவருக்கும்