==============
எண்ணாகமம் (1-5 அதிகாரங்கள்)
==============
1) எங்கள் இருவர் பெயரும் ஓன்றே. எங்கள் அப்பா பெயரென்ன?
2) யுத்த புருஷர்களின் கணக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் யார்?
3) எலி என்று தொடங்குகிற பெயரையுடைய கோத்திர தலைவர்கள் எத்தனை பேர்?
4) லேவியரின் சேனையுடன் போக வேண்டியது என்ன?
5) எந்த பாளைய சேனைகள் குறைவான எண்ணிக்கையில் இருந்தன? எத்தனை பேர்?
6) லேவியரின் பிரதான தலைவன் யார்?
7) இஸ்ரவேல் மக்களுள் தலைப் பேறாயிருந்தோரிடமிருந்து பெற்ற மீட்புப் பணம் கேராவில் எவ்வளவு?
8) பொன்னால் செய்யப்பட்ட பீடம் எதனால் மூடவேண்டும்?
9) எண்ணாகமம் 4-ம் அதிகாரத்தில் ஒரு வசனம் இருமுறை வருகிறது. அது எது?
10) பரிசுத்த ஸ்தலத்தையும், சகல பணிமுட்டுகளையும் எடுத்துச் செல்லும் கோகாத் புத்திரர் எதைத் தொட்டால் மரணம்?
11) பாளையத்துக்கு புறம்பாக்க சொல்லப்பட்டவர்கள் யார? யார்?
12) சாப வார்த்தைகளை கேட்ட ஸ்திரீ சொல்லும் மறுமொழி என்ன?
13) எத்தனை விதமான கலர் துப்பட்டிகள் சொல்லப்பட்டுள்ளது?
14) மண்பாண்ட ஜலத்தில் போட வேண்டியது என்ன?
15) லேவி புத்திரர் 20 வயதுள்ளவர்கள் முதல் எண்ணப்பட்டவர்கள் சரியா/தவறா?
எண்ணாகமம் (1-5 அதிகாரங்கள்) பதில்கள்
===============
1) எங்கள் இருவர் பெயரும் ஓன்றே. எங்கள் அப்பா பெயர் என்ன?
Answer: இருவரின் பெயர்: எலியாசாப்
அவர்களின் தகப்பன் பெயர்: தேகுவேல், லாயேல்
எண்ணாகமம் 1:14
எண்ணாகமம் 2:14
எண்ணாகமம் 3:24
2) யுத்த புருஷர்களின் கணக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் யார்?
Answer: லேவியர்
எண்ணாகமம் 1:45-47
3) எலி என்று தொடங்குகிற பெயரையுடைய கோத்திர தலைவர்கள் எத்தனை பேர்?
Answer: நான்கு (எலிசூர், எலியாப், எலிஷாமா, எலியாசாப்)
எண்ணாகமம் 1:5,9,10,14
4) லேவியரின் சேனையுடன் போக வேண்டியது என்ன?
Answer: ஆசாரிப்புக் கூடாரம்
எண்ணாகமம் 2:17
5) எந்த பாளைய சேனைகள் குறைவான எண்ணிக்கையில் இருந்தன? எத்தனை பேர்?
Answer: எப்பிராயீமின் பாளையத்தார். 1,08,100 பேர்கள்
எண்ணாகமம் 2:24
6) லேவியரின் பிரதான தலைவன் யார்?
Answer: எலெயாசார்
எண்ணாகமம் 3:32
7) இஸ்ரவேல் மக்களுள் தலைப்பேறாயிருந்தோரிடமிருந்து பெற்ற மீட்புப் பணம் கேராவில் எவ்வளவு?
Answer: மீட்கப்படவேண்டியவர்கள் - 273 பேர்
ஒவ்வொருவனுக்கும் ஐந்து சேக்கல் வீதம் மொத்தம் - 1365 சேக்கல்
1 சேக்கல் என்பது 20 கேரா - 1365 x 20 = 27,300 கேரா
எண்ணாகமம் 3:46-51
8) பொன்னால் செய்யப்பட்ட பீடம் எதனால் மூடவேண்டும்?
Answer: தகசுக்கோலால்
எண்ணாகமம் 4:11
9) எண்ணாகமம் 4-ம் அதிகாரத்தில் ஒரு வசனம் இருமுறை வருகிறது. அது எது?
Answer: கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி
எண்ணாகமம் 4:1
எண்ணாகமம் 4:17
10) பரிசுத்த ஸ்தலத்தையும், சகல பணிமுட்டுகளையும் எடுத்துச் செல்லும் கோகாத் புத்திரர் எதைத் தொட்டால் மரணம்?
Answer: பரிசுத்தமானதை தொட்டால்
எண்ணாகமம் 4:15
11) பாளையத்துக்கு புறம்பாக்கப்பட வேண்டியவர்கள் யார? யார்?
Answer: குஷ்டரோகிகள், பிரமியமுள்ளவர்கள், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள்
எண்ணாகமம் 5:2
12) சாப வார்த்தைகளை கேட்ட ஸ்திரீ சொல்லும் மறுமொழி என்ன?
Answer: ஆமென், ஆமென்
எண்ணாகமம் 5:22
13) எத்தனை விதமான கலர் துப்பட்டிகள் சொல்லப்பட்டுள்ளது?
Answer: நான்கு (நீலம், சிவப்பு, இளநீலம், இரத்தாம்பரம்)
எண்ணாகமம் 4:6,8,11,13
14) மண்பாண்ட ஜலத்தில் போட வேண்டியது என்ன?
Answer: வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்துப் போட வேண்டும்
எண்ணாகமம் 5:17
15) லேவி புத்திரர் 20 வயதுள்ளவர்கள் முதல் எண்ணப்பட்டார்கள். சரியா/தவறா?
Answer: தவறு
எண்ணாகமம் 3:15
===============
எண்ணாகமம் 6-10 கேள்விகள்
===============
1.தன் விரத நாட்களை கர்த்தருக்கென்று காத்து காணிக்கையாக எதை செலுத்தக்கடவன்?
2. இஸ்ரவேல் பிரபுக்களால் காணிக்கை செலுத்தப்பட்ட தூப கரண்டிகளின் மொத்த நிறை என்ன?
3. பொன்னினால் அடுப்பு வேலையாய் செய்யப்பட்டது எது?
4. மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும் போது இஸ்ரவேல் புத்திரர் என்ன செய்தார்கள்?
5. மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பினது எப்பொழுது?
6. பூரிகைகளை ஊதக்கடவது யார்?
7. எது தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளையமிறங்குவார்கள்?
8. யாருக்கெல்லாம் ஒரே கட்டளை இருக்க வேண்டும்?
9. கோகாத் புத்திரருக்குரிய பரிசுத்த ஸ்தலத்தில் வேலையாயிருந்தது எது?
10. என் தேசத்துக்கும் என் இனத்தால் இடத்திற்கும் போக வேண்டும் என்றவன் யார்?
11. எந்த நாளிலே மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று?
12. மோசே வண்டில்களையும் மாடுகளையும் வாங்கி யாருக்கு கொடுத்தான்?
13. மேகம் எந்த வனாந்தரத்தில் தங்கிற்று?
14. இஸ்ரவேல் புத்திரர் எப்பொழுது எங்கே பஸ்காவை புசித்தார்கள்?
15. மோசே கெர்சோன் புத்திரருக்கு அவர்கள் வேலைக்குத்தக்க பங்காக எதைக் கொடுத்தான்?
விடைகள் எண்ணாகமம் 6-10
================
1.தன் விரத நாட்களை கர்த்தருக்கென்று காத்து காணிக்கையாக எதை செலுத்தக்கடவன்?
Answer: ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டி
எண்ணாகமம் 6:12
2. இஸ்ரவேல் பிரபுக்களால் காணிக்கை செலுத்தப்பட்ட தூப கரண்டிகளின் மொத்த நிறை என்ன?
Answer: 120 சேக்கல்
எண்ணாகமம் 7:86
3. பொன்னினால் அடிப்பு வேலையாய் செய்யப்பட்டது எது?
Answer: குத்துவிளக்கு
எண்ணாகமம் 8:4
4. மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் என்ன செய்தார்கள்?
Answer: பிரயாணம் பண்ணினார்கள்
எண்ணாகமம் 9:17
5. மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பினது எப்பொழுது?
Answer: இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் 20ஆம் தேதி
எண்ணாகமம் 10:11
6. பூரிகைகளை ஊதக்கடவது யார்?
Answer: ஆரோனின் குமாரனாகிய ஆசாரியர்
எண்ணாகமம் 10:8
7. எது தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளையமிறங்குவார்கள்?
Answer: மேகம்
எண்ணாகமம் 9:17
8. யாருக்கெல்லாம் ஒரே கட்டளை இருக்க வேண்டும்?
Answer: பரதேசிக்கும் சுதேசிக்கும்
எண்ணாகமம் 9:14
9. கோகாத் புத்திரருக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலை என்ன?
Answer: தோள் மேல் சுமப்பது
எண்ணாகமம் 7:9
10. என் தேசத்துக்கும் என் இனத்தால் இடத்திற்கும் போக வேண்டும் என்றவன் யார்?
Answer: ஒபா
எண்ணாகமம் 10:29,30
11. எந்த நாளிலே மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று?
Answer: வாசஸ்தலம் ஸ்தாபனம் செய்யப்பட்ட நாள்
எண்ணாகமம் 9:15
12. மோசே வண்டில்களையும் மாடுகளையும் வாங்கி யாருக்கு கொடுத்தான்?
Answer: லேவியருக்கு
எண்ணாகமம் 7:6
13. மேகம் எந்த வனாந்தரத்தில் தங்கிற்று?
Answer: பாரான்
எண்ணாகமம் 10:13
14. இஸ்ரவேல் புத்திரர் எப்பொழுது எங்கே பஸ்காவை புசித்தார்கள்?
Answer: முதலாம் மாதம் 14-ம் தேதி அந்தி நேரமான வேளையிலே, சீனாய் வனாந்தரத்தில்
எண்ணாகமம் 9:5
15. மோசே கெர்சோன் புத்திரருக்கு அவர்கள் வேலைக்குத்தக்க பங்காக எதைக் கொடுத்தான்?
Answer: இரண்டு வண்டில்கள் நான்கு மாடுகள்
எண்ணாகமம் 7:7
எண்ணாகமம் 11-15 கேள்விகள்
================
1. இச்சைக்குள்ளானவர்கள் யார்?
2. மன்னாவின் ருசி எப்படியிருந்தது?
3. ஐந்து நாள்கள் வரும் வசனம் எது?
4 யாரைக் குணமாக்க மோசே தேவனிடம் கெஞ்சினான்?
5. தேசத்தைச் சுற்றிப் பார்த்து எத்தனை நாள் கழித்துத் திரும்பினார்கள்?
6. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை எத்தனை முறை பரீட்சை பார்த்தார்கள்?
7. பிதாக்கள் சோரம் போன பாதகத்தைப் பிள்ளைகள் எத்தனை வருஷம் சுமப்பார்கள்?
8. தேசத்தைச் சுற்றிப் பார்த்துத் திரும்பியவர்களில் எத்தனை பேர் வாதையினால் செத்தார்கள்?
9. ஓய்வு . நாளில் விறகு பொறுக்கப் போனவனை என்ன செய்தார்கள் ?
10. காத்தருடைய கட்டளையை மீறி மலையில் ஏறத் துணிந்தவர்களுக்கு நடந்தது என்ன?
பொருத்துக:
1. இராட்சதப்பிறவி - நாற்பது வருஷம்
2. நாற்பது நாள் - இச்சித்த ஜனங்களை அடக்கம் பண்ணின இடம்
3. கிப்ரோத் அத்தாவா - ஏனாக்கின் குமாரர்
4. எஸ்கோல் பள்ளத் தாக்கு - கர்த்தருடைய அக்கினி பற்றியெரிந்த
இடம்
5. தபேரா - திராட்சக்குலை
எண்ணாகமம் 11-15 கேள்வி & பதில்
================
1 இச்சைக்குள்ளானவர்கள் யார்?
Answer: அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய ஜனங்கள்
எண்ணாகமம் 11:4
2. மன்னாவின் ருசி எப்படி இருந்தது?
Answer: புது ஒலிவ எண்ணெயின் ருசி
எண்ணாகமம் 11:8
3. ஒரு மாதம் வரைக்கும் எதைப் புசிப்பீர்கள்?
Answer: இறைச்சி
எண்ணாகமம் 11:18-20
4. யாரைக் குணமாக்க மோசே தேவனிடம் கெஞ்சினான்?
Answer: மிரியாம்
எண்ணாகமம் 12:10,13
5. தேசத்தைச சுற்றிப் பார்த்து எத்தனை நாள் கழித்துத் திரும்பினார்கள்?
Answer: நாற்பது நாள்
எண்ணாகமம் 13:25
6. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை எத்தனை முறை பரீட்சை பார்த்தார்கள்?
Answer: பத்துமுறை
எண்ணாகமம் 14:22
7. பிதாக்கள் சோரம்போன பாதகத்தை பிள்ளைகள் எத்தனை வருஷம் சுமப்பார்கள்?
Answer: நாற்பது வருஷம்
எண்ணாகமம் 14:34
8. தேசத்தைச் சுற்றிப் பார்த்துத் திரும்பியவர்களில் எத்தனை பேர் வாதையினால் செத்தார்கள்?
Answer: 12 - 2 = 10 பேர்
எண்ணாகமம் 14:37,38
9. ஓய்வு நாளில் விறகு பொறுக்கப் போனவனை என்ன செய்தார்கள்?
Answer: பாளயத்துக்குப் புறம்பே கொண்டு போய் கல்லெறிந்தார்கள்
எண்ணாகமம் 15:33,36
10. கர்த்தருடைய கட்டளையை மீறி மலையில் ஏறத் துணிந்தவர்களுக்கு நடந்தது என்ன?
Answer: முறிய அடிக்கப்பட்டு துரத்தப்பட்டார்கள்
எண்ணாகமம் 14:40,45
11. இராட்சதப்பிறவிகள் யார்?
Answer: ஏனாக்கின் குமாரர்
எண்ணாகமம் 13:33
12. நூனின் குமாரன் யார்? எப்புனேயின் குமாரன் யார்?
Answer: நூன் - யோசுவா
எப்புனே - காலேப்
எண்ணாகமம் 14:6
13. இச்சித்த ஜனங்களை அடக்கம்பண்ணின இடத்தின் பெயர் என்ன?
Answer: கிப்ரோத் அத்தாவா
எண்ணாகமம் 11:34
14. இஸ்ரவேல் புத்திரர் அறுத்த திராட்சக்குலையினிமித்தம் அந்த பள்ளத்தாக்கின் பெயர் என்ன?
Answer: எஸ்கோல்
எண்ணாகமம் 13:24
15. கர்த்தருடைய அக்கினி பற்றியெரிந்ததினால் அவ்விடத்திற்கு என்ன பெயர்?
Answer: தபேரா
எண்ணாகமம் 11:3
பொருத்துக:
1. இராட்சதப் பிறவி -- ஏனாக்கின் புத்திரர்
எண்ணாகமம் 13:33
2. நாற்பது நாள் - நாற்பது வருஷம்
எண்ணாகமம் 14:34
3. கிப்ரோத் அத்தாவா - இச்சித்த ஜனங்களை அடக்கம் பண்ணின இடம்
எண்ணாகமம் 11:34
4. எஸ்கோல் பள்ளத்தாக்கு - திராட்சக் குலை
எண்ணாகமம் 13:24
5. தபேரா - கர்த்தருடைய அக்கினி பற்றியெரிந்த இடம்
எண்ணாகமம் 11:3
=============
கேள்விகள் - எண்ணாகமம் 16-20
================
1. மோசேக்கு விரோதமாய் எழும்பியவனின் தாத்தா யார்?
2. கர்த்தரின் அக்கினி எத்தனை பேரை பட்சித்தது?
3. ஜனங்களுக்காக பாவநிவிர்த்தி செய்தவன் யார்?
4. வாதையினால் செத்தவர்கள் எத்தனை பேர்?
5. மோசேக்கு கடுங்கோபம் மூள காரணமாயிருந்தவர்கள் எந்த வம்சத்தார்?
6. ஆரோனின் கோலில் காய்த்த பழம் என்ன?
7. எப்படிப்பட்டவைகளை படைத்தால், பாவம் சுமராது?
8. மோசேயின் அழைப்பை மறுத்தவர்கள் யார்?
9. ஆரோனுக்கு கொடுக்கப்பட்டவைகளை எங்கே புசிக்க வேண்டும்?
10. பிரேதத்தை தொட்டால், எதினால் சுத்திகரிக்க வேண்டும்?
11. என் முன், கிடாரியை கொல்லவும், எரிக்கவும் வேண்டும் - நான் யார்?
12. ஏறினது மூவர், இறங்கியது இருவர் - மற்றொருவர் யார்? என்ன ஆனார்?
13. மிரியாம் மரித்த இடம் எது?
14. ஏதோமின் சகோதரனாக சொல்லப்பட்டது யார்?
15. கிடாரியின் சாம்பலை வாரி, கொட்ட வேண்டியது யார்?
பதில்கள் - எண்ணாகமம் 16-20
=============
1. மோசேக்கு விரோதமாய் எழும்பியவனின் தாத்தா யார்?
Answer: கோகாத்
மோசேக்கு விரோதமாய் எழும்பினவன்: கோராகு
எண்ணாகமம் 16:1-3
2. கர்த்தரின் அக்கினி எத்தனை பேரை பட்சித்தது?
Answer: இருநூற்று ஐம்பது பேர்
எண்ணாகமம் 16:35
3. ஜனங்களுக்காக பாவநிவிர்த்தி செய்தவன் யார்?
Answer: ஆரோன்
எண்ணாகமம் 16:47
4. வாதையினால் செத்தவர்கள் எத்தனை பேர்?
Answer: பதினாலாயிரத்து எழுநூறு பேர்
எண்ணாகமம் 16:49
5. மோசேக்கு கடுங்கோபம் மூள காரணமாயிருந்தவர்கள் எந்த வம்சத்தார்?
Answer: ரூபன்
எண்ணாகமம் 16:1,12-15
6. ஆரோனின் கோலில் காய்த்த பழம் என்ன?
Answer: வாதுமை
எண்ணாகமம் 17:8
7. எப்படிப்பட்டவைகளை படைத்தால், பாவம் சுமராது?
Answer: உச்சிதமானதை
எண்ணாகமம் 18:32
8. மோசேயின் அழைப்பை மறுத்தவர்கள் யார்?
Answer: தாத்தான், அபிராம்
எண்ணாகமம் 16:12
9. ஆரோனுக்கு கொடுக்கப்பட்டவைகளை எங்கே புசிக்க வேண்டும்?
Answer: பரிசுத்த ஸ்தலத்தில்
எண்ணாகமம் 18:8-10
10. பிரேதத்தை தொட்டால், எதினால் சுத்திகரிக்க வேண்டும்?
Answer: தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால்
எண்ணாகமம் 19:11,12
11. என் முன், கிடாரியை கொல்லவும், எரிக்கவும் வேண்டும் - நான் யார்?
Answer: எலெயாசார்
எண்ணாகமம் 19:3-5
12. ஏறினது மூவர், இறங்கியது இருவர் - மற்றொருவர் யார்? என்ன ஆனார்?
Answer: ஆரோன், மரித்து போனான்
எண்ணாகமம் 20:25-28
13. மிரியாம் மரித்த இடம் எது?
Answer: காதேஸ்
எண்ணாகமம் 20:1
14. ஏதோமின் சகோதரனாக சொல்லப்பட்டது யார்?
Answer: இஸ்ரவேல்
எண்ணாகமம் 20:17,18
15. கிடாரியின் சாம்பலை வாரி, கொட்ட வேண்டியது யார்?
Answer: சுத்தமாயிருக்கிற ஒருவன்
எண்ணாகமம் 19:9