======================
2 நாளாகமம், 21-ம் அதிகாரம் ( பகுதி-1)
=======================
1. யோசபாத் தனது குமாரன் யோராமுக்கு ராஜ்யத்தைக் கொடுத்ததின் காரணமென்ன?
2. யோராம் எத்தனையாம் வயதில் ராஜாவாகி, எத்தனை ஆண்டுகள் எருசலேமில் ஆண்டதாக எங்கெங்கு உள்ளது?
3. இவனைத்தவிர, யோசபாத்துக்கு குமாரராயிருந்தது யார் யாரென கூறப்பட்டிருக்கிறது?
4. அபிமெலேக்குக்கு ஒப்பாக (நியாயாதிபதிகள் 9:5), இவனும் என்ன செய்தான்?
5. லீப்னா பட்டணத்தாரின் கலகத்திற்குக் காரணமென்ன; கூடவே யாரும் கலகம்பண்ணிப் பிரிந்தனர்?
6. யோராம் யார் வழிகளிலே நடந்து, கூடவே யார் செய்தது போலவே செய்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது?
1 இராஜாக்கள் 12:28-30
7. கர்த்தரும்கூட இதை உறுதிப்படுத்தியும், யார் யார் வழிகளிலே இவன் நடவாததையும் வெளிப்படுத்தினார்?
2 இராஜாக்கள் 1:16-17
===============
2 நாளாகமம், 21-ம் அதிகாரம் ( பகுதி-2)
=================
1. யோராம் எருசலேம் மக்கள் விபச்சாரம் செய்யக் காரணமானதையும், யூதாவையும் நெறிதவறச் செய்ததையும் எவ்வசனத்தில் அறிய இயலும்?
2. கர்த்தரின் பார்வைக்கு எப்படியானதைச் செய்ததாகவும் வசனம் சுட்டிக்காட்டியுள்ளது? அந்நிய தேவர்களுக்கான மேடைகளை எங்கு உண்டாக்கினான்?
3. கர்த்தரால் இவன் தந்தைக்கு ஒப்புவிக்கப்பட்டிருந்த சத்துருக்கள் (2 நாளாகமம் 17:10-11) வசமாக, இவன் ஒப்புவிக்கப்பட்டதை சான்றுபகரும் வசனங்கள் எவையெவை?
4. எனினும்கூட கர்த்தர் எதினால் யோராமை அழிக்கச் சித்தமில்லாமல் பொறுமைகாத்தார்?
2 சாமுவேல் 7:13,15
5. கர்த்தரின் துணை இருந்ததால், இவனால் எப்படிப்பட்ட சத்துருக்களையும் முறியடிக்க முடிந்தது?
6. இறுதியாக யோராமை கர்த்தர், எப்படி வாதித்தார்? அவன் எவ்விதங்களில் வாதிக்கப்படுவான் என்று கர்த்தரால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது?
7. 2 நாளாகமம் 24:25 / 2 நாளாகமம் 28:27, மற்றும் 2 நாளாகமம் 16:14-க்கு ஒப்பாக, இவனால் எத்தகைய இறுதி மரியாதைகளைப் பெற இயலாமல் போயிற்று?
================
2 நாளாகமம், 22-ம் அதிகாரம் ( பகுதி-1)
=================
1. அத்தாலியாள், யாரின் தாயாரென்று அறியமுடிகிறது? இவள் தேசத்தை ஆளுகைசெய்ததாக எங்கு உள்ளது?
2. அதற்குமுன்னர், யோராமின் ஸ்தானத்தில் ராஜாவாக்கப்பட்டவன் யார்?
3. கர்த்தர் எந்தக் குடும்பத்தாரை சங்கரிக்க, யெகூவை அபிஷேகித்திருந்தார்?
4. அந்தக் குடும்பத்தாரின் வழிகளிலே அகசியா நடந்து, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ததாக எவ்வசனங்களில் அறிய இயலும்?
2 நாளாகமம் 18:1
2 நாளாகமம் 21:6
5. அகசியாவின் முடிவு எப்படி அமைந்தது?
2 நாளாகமம் 17:4
6. அகசியா எதற்காக யெஸ்ரெயேல் போயிருந்தான்?
1 இராஜாக்கள் 19:15-18
7. ஏற்கனவே யெகூவால் நடப்பிக்கப்பட்ட ஆக்கினையில், யார் யார் கொல்லப்பட்டிருந்தார்கள்?
2 இராஜாக்கள் 10:13,14
========================
2 நாளாகமம், 22-ம் அதிகாரம் ( பகுதி-2)
=========================
1. ராஜகுமாரனாயிருந்தும், யோவாஸ் தேவாலயத்திலே தலைமறைவாக வைக்கப்பட்டிருந்ததைக் குறித்து, எவ்வசனங்களின் மூலமாக அறிய இயலும்?
2. எருசலேமிலே அகசியா அரசாண்ட காலம் எவ்வளவு?
3. அகசியா, தேவனாலேயே அனுமதிக்கப்பட்ட 'கேடான நிலையில்' சிக்கநேர்ந்ததாக, எங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது?
யோபு 34:11
4. இவனது துன்மார்க்கத்திற்கு ஆலோசனைக்காரி யார்; கேடான நடத்தைக்கு ஆலோசகர்கள் யார்?
எரேமியா 31:29,30
புலம்பல் 5:7
5.அத்தாலியாள், யாரை எதற்காக சங்காரம் பண்ணினாள்?
6. ஏற்கனவே அகசியாவின் மூத்தகுமாரர்களும், சகோதரரின் குமாரர்களும், யார் யாரால் கொல்லப்பட்டிருந்தார்கள்?
2 நாளாகமம் 21:16,17
2 இராஜாக்கள் 10:13,14
7. சங்கீதம் 89:35-38 நினைவுக்கு வரும்படியாக, அகசியாவின் குடும்பத்தில் எத்தகையவர்கள் இல்லாதுபோயிற்று?
===========================
2 நாளாகமம், 23-ம் அதிகாரம் ( பகுதி-1)
===========================
1. அகசியா ராஜாவானபோது நடந்ததற்கு ஒப்பாக (2 நாளாகமம் 22:1), அவன் குமாரன் யோவாஸ் ராஜாவாக்கப்பட்டதைத் தொடர்ந்தும் அத்தாலியாள், யார் உத்தரவின்பேரில் எங்கு கொல்லப்பட்டாள்?
2. எதைக் கேட்டும் கண்டும் ராஜாத்தி, 'துரோகம் துரோகம்' என்று கூவியிருந்தாள்?
1 இராஜாக்கள் 1:41
3. 2 நாளாகமம் 7:18-ஐ தொடர்புபடுத்தி, யோய்தா என்ன கூறியிருந்தான்?
4. யார் யார் துணையோடு, யோவாஸ் எங்கிருந்து அழைத்துவரப்பட்டு, சிங்காசனமேற்றப்பட்டான்?
2 நாளாகமம் 22:12
5. உபாகமம் 17:18-20 நினைவுகூரப்படும்படிக்கு, ராஜ அபிஷேகத்தின்போது, அவன் கையில் கொடுக்கப்பட்டிருந்ததென்ன?
6. மேலும் யோய்தா கர்த்தரோடு யார் யார் எத்தகைய உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்படியும் செய்தான்?
2 நாளாகமம் 29:10
7. இவன், எப்போது யார் யாரை, தனது உடன்படிக்கைக்கு உட்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது?
===================
2 நாளாகமம், 23-ம் அதிகாரம் (பகுதி-2)
====================
1. கர்த்தருடனும் யோய்தாவுடனும் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளைத் தவிர, யாரோடு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்தும் சொல்லப்பட்டுள்ளது?
1 இராஜாக்கள் 2:4
1 இராஜாக்கள் 2:4
2. கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படி உடன்படிக்கை செய்தவர்கள், பாகாலின் கோவிலில் நடப்பித்தவைகளென்ன?
2 இராஜாக்கள் 11:17,18
3. ஆசாரியனாகிய யோய்தா, நூறுபேருக்கு அதிபதியிடம், எவைகளைக் கொடுத்திருந்தான்?
2 சாமுவேல் 8:7,12
4. மேலும் தாவீதின் ஏற்பாட்டின் பிரகாரமாக (1நாளாகமம் 23:28-32), யோய்தா ஆசாரியர்களுக்கு எத்தகைய பொறுப்புகளை ஒப்புவித்தான்?
5. யோய்தா ஜனங்களை எதற்கென நியமித்தான்?
இவர்கள் எப்படி எங்கு யோய்தாவால் நிறுத்தப்பட்டனர்?
சகரியா 3:7
6. இவன் கட்டளைப்படியே யார் யார் செயல்பட்டு, எப்படிப்பட்டவர்களையும் கூட்டிக்கொண்டு போனதாக அறியமுடிகிறது?
7. ஆசாரியர் லேவியர், எவ்விதம் பணியாற்ற/பாதுகாக்க, யோய்தா கற்பித்திருந்தான்?
======================
2 நாளாகமம், 24-ம் அதிகாரம் (பகுதி-1)
=====================
1. ஆசாரியனாகிய யோய்தா மரித்தபோது, அவன் வயதென்ன?
2. எந்நாள் வரையிலுமாக, ராஜாவாகிய யோவாஸ் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்?
2 இராஜாக்கள் 12:2
3. யோய்தாவின் சரீரம், எதினால் எங்கு அடக்கம் செய்யப்பட்டது?
4. யோய்தா செய்தவைகளை யோவாஸ் நினையாமற் போனதைக்குறித்து எங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது?
5. எதினிமித்தம் இவனது ஊழியக்காரராலேயே இவன் கொல்லப்பட கர்த்தர் அனுமதித்தார்?
ஆதியாகமம் 9:5
6. எதினால் எவ்விதத்தில் இவன் யோய்தா குமாரன் சகரியாவின் இரத்தப்பழிக்கு ஆளாகியிருந்தான்?
சகரியா 1:4
லூக்கா 11:50,51
7. கர்த்தரை விட்டுவிட்ட யோவாஸ், 2 நாளா 20:2,12 நினைவுக்கு வரும்படியாக, அதேசமயம் அதற்கு எதிராக, சீரியர்களால் எத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிட்டது?
=======================
2 நாளாகமம், 24-ம் அதிகாரம் (பகுதி-2)
=======================
1. தமது ஊழியக்காரரின் இரத்தத்திற்கு பழிவாங்கும் கர்த்தருக்கு (உபாகமம் 32:43), யோவாஸ் பதிலளிக்க நேரிடுமென்று சகரியா எங்கு சொல்லியுள்ளான்?
2. கர்த்தருக்கு விரோதமான அத்தாலியாளின் மக்களின் எத்தகைய செயல் யோவாஸால் சுட்டிக்காட்டப்பட்டது?
3. எனினும் பின்நாட்களில் இவனே யூதா எருசலேம் மீது கர்த்தரின் கடுங்கோபம் மூள, எவ்விதத்தில் வழிவகுத்தான்?
2 நாளாகமம் 19:2
4. யோய்தா நாட்களில் யோவாஸ், கர்த்தரின் கட்டளைப்படி (யாத்திராகமம் 30:11-16), எதைச் செய்யாமற் போனதைக்குறித்து சுட்டிக்காட்டினான்?
5. இதினிமித்தம் செய்யப்பட்ட ஏற்பாடுகளென்ன?
6. ஆரம்பத்தில் யோவாஸ் விரும்பியிருந்ததென்ன?
அவ்விதமே அது நிறைவேற்றப்பட்டதாக, எவ்வசனத்தைக் கொண்டு அறிய இயலும்?
7. சேகரிக்கப்பட்ட பணம், எப்படியெப்படி செலவிடப்பட்டது?
8. யோவாஸ் எருசலேமை ஆண்ட காலம் எவ்வளவு?
இவனுக்குப்பின் இவன் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்?
==================
2 நாளாகமம், 25-ம் அதிகாரம் (பகுதி-1)
==================
1. யோவாஸின் குமாரன் அமத்சியா, நியாயப்பிரமாணத்துக்கு (உபாகமம் 24:16), கீழ்ப்படிந்ததை, எவ்வசனங்களின் வாயிலாக அறிய இயலும்?
2. அதேசமயம், தேவ வார்த்தையை வெளிப்படுத்திய ஒரு தீர்க்கதரிசியை, இவன் என்ன சொல்லி மிரட்டினான்?
3. இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இவனே, எத்தகைய நிலையில் தேவ மனுஷனொருவன் கூறிய எப்படிப்பட்ட வார்த்தைகளுக்கும் செவிகொடுத்ததை அறியமுடிகிறது?
2 நாளாகமம் 19:1-3
4. அமத்சியா கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தாலும், முழுமனதோடு அப்படிச் செய்யாதது எங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது?
1 இராஜாக்கள் 8:61
5. இவன் எதினிமித்தம் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவது, தேவசித்தமாயிருந்தது?
6. கர்த்தர் இவனைக்கொண்டு ஏதோமியரை முறியடித்தாலும், இவன் எவைகளால் கட்டுண்டுபோனான்?
யாத்திராகமம் 20:3
7. தேவவார்த்தைக்கு கீழ்ப்படிந்ததால், அமத்சியாவாலும் யூதா புத்திரராலும் மேற்கொள்ளப்பட்ட சேயீர் புத்திரரின் தொகையென்ன? எனினும், கட்டுண்டுபோன அமத்சியாவிடம் கர்த்தர் எழுப்பிய கேள்வியென்ன?
=====================
2 நாளாகமம், 25-ம் அதிகாரம் (பகுதி-2)
=====================
1. அமத்சியாவின் இருதய கர்வத்திற்கு காரணம் என்னவென்று இஸ்ரவேலின் ராஜா சுட்டிக்காட்டினான்?
2 இராஜாக்கள் 14:10
2. அமத்சியாவின் தந்தை பெயர் மட்டுமன்றி, இஸ்ரவேலின் ராஜாவின் பெயரும் யோவாஸ் என்பதை எந்தெந்த வசனங்கள் மூலம் அறியலாம்?
3. யாருக்கு எதினால் யூதாவின் மேல் கோபமும் எரிச்சலும் ஏற்பட்டிருந்தது?
இவர்களால் யூதா பட்டணங்களுக்கு எத்தகைய இழப்பு நேரிட்டது?
4. அமத்சியா மட்டுமன்றி, பிணைக்கைதிகள் (கிரியிருந்தவர்கள்) முதலாய் இஸ்ரவேலின் ராஜாவால் பிடிக்கப்பட்டதையும், அவன் எருசலேம் மதிலை இடித்து தேவாலயத்தை கொள்ளையிட்டதும் எங்கு உள்ளது?
2 இராஜாக்கள் 14:13,14
5. இவனிடம் அமத்சியா என்ன சொல்லி அனுப்பியிருந்தான்?
இருவரும் எங்கு 'சாமர்த்தியம் பார்த்ததாக' கூறப்பட்டுள்ளது?
6. எதுமுதற்கொண்டு எருசலேமில் அமத்சியாவிற்கு எதிரான சதி உண்டாயிற்று; இவனுக்கு முடிவு எப்படி ஏற்பட்டது?
7. அமத்சியா குறித்து எந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது?
இஸ்ரவேல் ராஜா யோவாஸ் மரித்த பின்னரும், இவன் எவ்வளவுகாலம் உயிரோடிருந்தான்?