===================
2 நாளாகமம், 26-ம் அதிகாரம் (பகுதி-1)
====================
1. கர்த்தர் அமத்சியாவின் குமாரன் உசியாவின் காரியங்களை எந்நாட்களில் வாய்க்கச் செய்தார்?
சங்கீதம் 34:10
2. இவனது கீர்த்தியைக்குறித்து எந்தெந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது?
உபாகமம் 26:18,19
3. தேவசித்தத்தை நிறைவேற்ற (ஆமோஸ் 1:8), கர்த்தர் இவனுக்கு துணைநின்றதை, எந்தெந்த வசனங்கள் வாயிலாக அறிய இயலும்?
4. உசியாவால் திரும்பவும் கட்டப்பட்டு, யூதா வசம் ஆக்கப்பட்ட பட்டணம் எது?
5. இஸ்ரவேல் ராஜாவால் இடிக்கப்பட்டவற்றை (2 நாளாகமம் 25:23), இவன் சீர்ப்படுத்தி பலப்படுத்தியதாக எங்கு உள்ளது?
மேலும் எருசலேமை எவ்விதத்தில் சிறப்பித்தான்?
6. உசியா எத்தனை வருஷம் எருசலேமிலே அரசாண்டான்?
அமத்சியா ஸ்தானத்திலே ராஜாவாக்கப்பட்டபோது இவன் வயதென்ன?
7. உசியாவின் போர்ப்படை, எவ்வித சிறப்புகளைப் பெற்றிருந்து?
===================
2 நாளாகமம், 26-ம் அதிகாரம் ( பகுதி-2)
==================
1. உசியாவைக் குறித்து யாரால் எழுதப்பட்டுள்ளது?
ஏசாயா 1:1
2. உசியா 52 வருஷம் எருசலேமை ஆண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், இவனுடைய எந்நிலையில், இவன் மகன் அரண்மனைப் பொறுப்பேற்க வேண்டியதாயிற்று?
3. உசியா தந்தையைப் பின்பற்றி, கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்ததாக எங்கு சாட்சியிடப்பட்டிருக்கிறது?
4. அதே தந்தையிடமிருந்த எப்படிப்பட்ட குணம் (2 இராஜாக்கள் 14:10), இவனை கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்வித்தது?
யாக்கோபு 4:6
5. கர்த்தருடைய கட்டளையின் அடிப்படையில் (எண்ணாகமம் 18:1-7), உசியா எவ்விதத்தில் எச்சரிக்கப்பட்டான்?
6. முன்பு தேவன் இவனுக்குத் துணைநின்றதையும், காரியங்களை வாய்க்கச்செய்ததையும் எந்தெந்த வசனங்களில் அறிய இயலும்?
7. உபாகமம் 32:15 நினைவுக்கு வரும்படியாக, தேவ கட்டளையை மீறி செயல்பட்ட உசியா, அதே தேவனால், எத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேர்ந்தது?
================
2 நாளாகமம், 27-ம் அதிகாரம்
==================
1. உசியாவின் குமாரன் யோதாமைக்குறித்து எந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது?
2. இவன் எத்தனையாம் வயதில் ராஜாவானதாகவும், எருசலேமை எவ்வளவு காலம் ஆண்டதாகவும், எங்கெங்கு உள்ளது?
3. உசியாவுக்கு ஒப்பான இவனது செயல்பாடுகள் என்னென்னவென அறியமுடிகிறது?
2 நாளாகமம் 26:4,5
4. அம்மோனியரோடு யோதாமின் செயல்பாடுகள் எவ்விதத்திலிருந்தது?
உபாகமம் 23:3
5. யோதாம் தேவாலயத்திலும் பட்டணத்திலும், எத்தகைய கட்டுமானப்பணிகளைச் செய்தான்?
6. இவன் தேவாலயம் செல்லாதிருந்த நிலையில், தேச ஜனங்களின் நிலை எவ்வாறிருந்ததாக தெரியவருகிறது?
2 இராஜாக்கள் 15:35
7. யோதாம் எத்தகைய இறுதிமரியாதையைப் பெற்றான்; இவன் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்?
====================
2 நாளாகமம், 28-ம் அதிகாரம் (பகுதி-1)
===================
1. எருசலேமில் அரசாண்ட யோதாமின் குமாரன் ஆகாஸ் குறித்து, எந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது?
2. இந்த யூதாவின் ராஜாவினிமித்தம், கர்த்தர் யூதாவையே தாழ்த்தியதாக, எங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது?
1 நாளாகமம் 5:25
3. இவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளிலும், ஜாதிகளின் அருவருப்புகளின்படியேயும் என்னென்ன செய்ததாக சொல்லப்பட்டிருக்கிறது?
யாத்திராகமம் 34:17
லேவியராகமம் 18:21
உபாகமம் 18:9
4. மேலும் ஆகாஸ் தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு கோபமூட்டும்படி எவ்விதங்களில் செயல்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது?
2 நாளாகமம் 29:19
2 இராஜாக்கள் 16:18
5. ஆகாஸ் எப்படிப்பட்ட காலத்திலும்கூட, கர்த்தருக்கு விரோதமான துரோகத்தை கைவிடவில்லை?
எரேமியா 5:3
6. யோராமுக்கு ஒப்பாக (2 நாளாகமம் 21:20) இவனும், எத்தகைய இறுதி மரியாதையையும் இழந்தான்?
7. இவனோடுகூட இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாக இவன் என்ன செய்தான்?
எரேமியா 18:15
எரேமியா 44:17-18
=================
2 நாளாகமம், 29-ம் அதிகாரம் (பகுதி-1)
===================
1. எசேக்கியா தான் அழைத்துவந்த ஆசாரியர் லேவியரிடம் கர்த்தர் எதற்காக அவர்களை தெரிந்துகொண்டதாக கூறினான்?
எண்ணாகமம் 3:6
2. பரிசுத்தத்தை வலியுறுத்தி அவர்களிடம் இவன் எவ்விதம் நடக்க அறிவுறுத்தினான்?
லேவி 19
3. அதற்குக் கீழ்ப்படிந்து தங்களையும் தேவாலயத்தையும் சுத்திகரிக்க முன்வந்தவர்கள் யார் யார்?
ஏசாயா 1:25
4. ஆகாஸின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானபோது அவன் வயதென்ன; எருசலேமை இவன் அரசாண்ட காலம் எவ்வளவு?
5. எதினால், கர்த்தரோடு உடன்படிக்கை பண்ண தீர்மானம் பண்ணியதாக இவன் சொன்னான்?
2 நாளாகமம் 30:8
6. கர்த்தருடைய கடுங்கோபம், யூதா எருசலேமை எவைகளுக்குள் வழிநடத்தியதாக, எசேக்கியா சுட்டிக்காட்டினான்?
எரேமியா 25:18
6. எசேக்கியாவின் கட்டளைகள் தேவ வசனங்களுக்கு ஒத்திருந்ததை எவ்வசனம்மூலம் அறியமுடியும்?
==============
2 நாளாகமம், 29-ம் அதிகாரம் (பகுதி-2)
=================
1. யூதா எருசலேம் மேல் கர்த்தரின் கடுங்கோபம் இறங்க காரணங்களென்ன என்று எசேக்கியா கூறினான்?
1 நாளாகமம் 5:25
2. கர்த்தரின் ஆலயத்தில் காணப்பட்ட சகல அசுத்தமும் அப்புறப்படுத்தப்பட்டதை குறிப்பிட்டுள்ள வசனம் எது?
3. சர்வாங்க தகனபலியாக சபையார் கொண்டுவந்தவை எவையெவை?
லேவியராகமம் 1:1-17
4. எசேக்கியா எதற்காக சர்வாங்க தகனபலி பாவநிவாரணப்பலி செலுத்தச் சொல்லியிருந்தான்?
எஸ்றா 8:35
மேலும் எவைகளினிமித்தமும் பாவநிவாரணப்பலியாக என்னென்ன கொண்டுவரப்பட்டிருந்தன?
லேவியராகமம் 4:13,14
5. பிரதிஷ்டையாக்கப்பட்டவைகளின் விபரமென்ன?
எஸ்றா 6:17
6. எவையெவை மிகுதியாய் (ஏராளமாக) இருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது?
7. செலுத்தப்பட்ட பலிகளோடுகூட ஸ்தோத்திரபலிகளுக்கும், துதிகளுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை எந்தெந்த வசனங்களில் அறிய இயலும்?
சங்கீதம் 50:23
============
2 நாளாகமம், 30-ம் அதிகாரம் (பகுதி-1)
===============
1. எசேக்கியாவாலும் பிரபுக்களாலும் சபைக்கு என்னென்ன கொடுக்கப்பட்டன?
1 இராஜாக்கள் 8:5
2. ராஜாவும் பிரபுக்களும் இஸ்ரவேலரிடம், எப்படிப்பட்ட யார்யாரைப்போல இராதேயுங்கள் என்று, செய்தி அனுப்பினார்கள்?
சங்கீதம் 78:8
3. எசேக்கியா எதினால், யார் யாரை, எங்கு வரும்படியும் தகவல் அனுப்பினான்?
4. கர்த்தரின் உக்கிரகோபம் அவர்களைவிட்டுத் திரும்ப அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனையென்ன?
5. லேவியர் யார் சார்பில் பஸ்காவை ஒப்புக்கொடுத்தனர்?
எஸ்றா 6:20
6. எசேக்கியாவின் திட்டத்தின்படி நடத்தப்பட்ட இந்தப் பஸ்காவினிமித்தம், யார் யார் மகிழ்ச்சியடைந்ததாக உள்ளது?
2 நாளாகமம் 7:8-ஐப் பார்க்கிலும், இது எவ்விதத்தில் சிறப்புப் பெற்றிருந்தது?
7. யாக்கோபு 5:16 நினைவுகூரப்படும்படிக்கு, எசேக்கியா யார் யாருக்காக ஏறெடுத்த எத்தகைய ஜெபம், கர்த்தரின் பரிவிரக்கம் பெற்றதை அறிய இயலும்?
=================
2 நாளாகமம், 30-ம் அதிகாரம் (பகுதி-2)
===================
1. யாருடைய எத்தகைய சத்தம் கேட்கப்பட்டு, அது பரலோகத்தையும் எட்டினது?
எண்ணாகமம் 6:22-27
2. அதேவிதமாக, நாம் பிறருக்காக பரிந்துபேசி ஏறெடுக்கும் ஜெபமும் பரலோக தேவனை எட்டி பதில் பெற்றுத்தரும், என்பதற்கு ஆதாரமான இங்குள்ள எடுத்துக்காட்டு, எங்குள்ளது?
1 தீமோத்தேயு 2:1
3. கர்த்தர் சிட்சிக்கிறவர் (எபிரெயர் 12:8), கோபம்கொள்கிறவர் (உபாகமம் 7:4), அதேசமயம் கிருபையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறவர் (சங்கீதம் 103:8), என்பதை சாட்சியிடும் இவ்வதிகாரத்தின் வசனங்கள் எவையெவை?
4. அந்நாள்வரை பஸ்காவை ஆசரிக்கமுடியாமற் போனதற்கு காட்டப்பட்டுள்ள காரணங்களென்ன?
எண்ணாகமம் 9:6-13
தேவ கட்டளையின்படியே (எண்ணாகமம் 9:11) எம்மாதம் பஸ்கா ஆசரிக்க தேவனே அவர்களை கூடச்செய்தார்?
5. கர்த்தரின் கட்டளைப்படியே (யாத்திராகமம் 13:6) பண்டிகை எத்தனை நாட்கள் ஆசரிக்கப்பட்டது? மீண்டுமாய் இது நீடிப்புசெய்யப்பட்டதாக எங்கு உள்ளது?
2 நாளாகமம் 7:8,9
6. பண்டிகையில் பங்குகொள்ளமுன் ஆசாரியர் லேவியர் தங்களை பரிசுத்தம் பண்ணிக்கொண்டது எங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது?
எருசலேமும் எவ்விதத்தில் சுத்திகரிக்கப்பட்டது?
7. உபாகமம் 30:2-5 மற்றும் உபாகமம் 4:31 உறுதிப்படுத்தப்படும்படிக்கு, கர்த்தரிடம் திரும்புவோருக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தமென்ன?