===============
2 நாளாகமம், 31-ம் அதிகாரம் (பகுதி-1)
=================
1. உபாகமம் 29:9-ன் நிறைவேறுதலை இந்த அதிகாரத்திலும் உறுதிப்படுத்தியிருக்கும் வசனம் எது?
2. நியாயப்பிரமாணத்தில் எழுதியுள்ளபடி (எண்ணாகமம் 28:1-29), எவைகளுக்காக தன் பங்கைக் கொடுத்தான்?
3. 2 இராஜாக்கள் 18:4 நினைவுக்கு வரும்படியாக, இஸ்ரவேலர் யூதா உட்பட எங்கெங்கு என்னென்ன செய்தார்கள்?
4. தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக, எசேக்கியா யூதாவெங்கிலும் எவ்விதத்தில் செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது?
2 இராஜாக்கள் 20:3
5. இவன் தான் மட்டுமன்றி, மேலும் யார் யாரும் நியாயப்பிரமாணத்தை உற்சாகமாக கைக்கொள்ளும்படி, என்னசெய்ய கட்டளைபிறப்பித்தான்?
எண்ணாகமம் 18:8
6. பிரதான ஆசாரியன் அசரியா இதுதொடர்பாக எசேக்கியாவிடம் தெரிவித்ததென்ன?
எசேக்கியேல் 44:30
7. கர்த்தருக்கு செலுத்தப்பட்டவைகளை பங்கிடும்படிக்கு பொறுப்பேற்றிருந்தவன் யார்?
தசமபாகமாக செலுத்தப்பட்டவைகளுக்காக பண்டகசாலை அமைக்க நேர்ந்ததை எவ்வசனம் மூலமாக அறிய இயலும்?
===================
2 நாளாகமம், 31-ம் அதிகாரம் (பகுதி-2)
====================
1. தசமபாகம் காணிக்கையை சேர்க்க எடுத்துக்கொண்ட காலம் எவ்வளவு?
2. ஏற்படுத்தப்பட்ட பண்டகசாலையிலே எவையெவை வைக்கப்பட்டன?
3. யார் யார், எவையெவற்றை, தசமபாகமாக கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது?
நெகேமியா 13:12
லேவியராகமம் 27:30
4. காணிக்கைகள் மகாபரிசுத்தமானவைகளை எவ்விதத்தில் பங்கிடும்படிக்கு யார் யார் நியமனம் பெற்றிருந்தனர்?
5. சங்கீதம் 144:13-15-ன் அடிப்படையில், எசேக்கியாவும் பிரபுக்களும், யாரை ஸ்தோத்தரித்து கூடவே யாரையும் புகழ்ந்தனர்? கர்த்தர் இஸ்ரவேலரை ஆசீர்வதித்திருந்ததை அறிக்கைசெய்தவன் யார்?
6. காணிக்கையும் மகாபரிசுத்தமானவைகளும், எத்தகைய யார் யாரிடையே பங்கீடு செய்யப்பட்டதாக விவரிக்கப்பட்டுள்ளது?
7. எசேக்கியா, ஆசாரியர் லேவியரை ஊழியங்களை நிறைவேற்றுவதில், எவ்விதத்தில் ஒழுங்குபடுத்தியிருந்தான்?
1 நாளாகமம் 23:28-32
==============
2 நாளாகமம், 32-ம் அதிகாரம் (பகுதி-2)
===============
1. அசீரியரை மேற்கொள்ளும்படிக்கு, எசேக்கியா மேற்கொண்ட மாம்ச முயற்சிகளென்ன?
2. எதைக்குறித்து முறையிட, யார் யார் கர்த்தரைநோக்கிக் கூக்குரலிட்டார்கள்?
சங்கீதம் 115:4-8
3. உபாகமம் 3:22-க்கு ஒப்ப எசேக்கியா ஜனங்களிடையே அறிக்கையிட்டிருந்ததென்ன?
சனகெரிப்பின் ஊழியக்காரரோ, அலங்கத்தின் மேலிருந்த எருசலேமியருக்கு அவிசுவாசம் ஏற்பட, எப்படி செயல்பட்டனர்?
4. ஜீவனுள்ள தேவனாக கர்த்தர் வெளிப்பட்டு, யார் யாரை, யார் யாரிடமிருந்து இரட்சித்தார்?
யாத்திராகமம் 3:13-15
5. எசேக்கியாவைக் குறித்து எந்தெந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது?
இவன் எத்தகைய இறுதிமரியாதையைப் பெற்றான்?
6. எனினும், எதினிமித்தம் இவன் உட்பட யார் யார் மீது கர்த்தரின் கடுங்கோபம் உண்டாயிற்று?
ஏசாயா 38-ம் அதிகாரம்
7. 'சோதிக்கும் கர்த்தர்' (ஆதியாகமம் 22:1), எசேக்கியாவை, எந்த நோக்கத்தில் கைவிட்டார் (ஏசாயா 39-ம் அதிகாரம்)
8. ஏசாயா 38 அற்புதம் தவிர, கர்த்தரால் எசேக்கியா எப்படியெப்படி ஆசீர்வதிக்கப்பட்டிருந்ததாகவும் அறியமுடிகிறது?
எருசலேமின் குடிகளும் எதினால் எத்தகைய இரக்கம் பெற்றதாக உள்ளது?
எரேமியா 26:18-19
=================
2 நாளாகமம், 33-ம் அதிகாரம் (பகுதி-1)
================
1. இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் என்னென்ன எழுதப்பட்டுள்ளதாக இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது?
2 இராஜாக்கள் 21:17
2. எசேக்கியாவின் குமாரன் மனாசே, எத்தனையாம் வயதில் ராஜாவானான்; இவன் எருசலேமை ஆண்ட காலம் எவ்வளவு?
3. இவனைக்குறித்த எந்தெந்த விபரங்கள் ஓசாயின் பிரபந்தத்தில் உள்ளதாக அறிய முடிகிறது?
4. கர்த்தரால் சபிக்கப்படும்படிக்கு (எரேமியா 15:4), மனாசே, யூதா எருசலேம் குடிகள் யாரிலும் பொல்லாதவர்களாக இருக்கும்படி, அவர்களை வழிதப்பச்செய்தான்?
5. இவனும், யாரின் அருவருப்புகளின்படியே கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்தான்?
உபாகமம் 18:9
6. 2 சாமுவேல் 7:10-ல் கர்த்தரால் தாவீதுக்கு அளிக்கப்பட்ட வாக்கு, இங்கும் எங்கு நினைவுகூரப்பட்டிருக்கிறது; தேவ ஆலயத்திலே இவன் எதை ஸ்தாபித்தான்?
7. மேலும் கர்த்தரால் என்ன சொல்லி பரிசுத்தப்படுத்தப்பட்ட ஆலயத்திலே (2 நாளாகமம் 7:16) எவையெவற்றுக்காக பலிபீடங்களை கட்டினான்
2 நாளாகமம் 4:9
===================
2 நாளாகமம், 33-ம் அதிகாரம் (பகுதி-2)
====================
1. கர்த்தரால் மனாசேவிற்கு அனுமதிக்கப்பட்ட சிறையிருப்பின் விபரமென்ன?
ஆமோ 4:2
2. இவன் தேவகட்டளைகளை (உபாகமம் 18:10,11), மீறும்படிக்கு செயல்பட்டது, எங்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது?
3. மனாசேயைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்ற அவன் குமாரன் ஆமோன், எவையெவற்றில் தகப்பன்வழி நடந்தான்?
2 இராஜாக்கள் 21:20-22
4. மனாசேயை சிறையிருப்பில் மீட்ட கர்த்தருக்கு முன்பான அவனது தாழ்மையைக்குறித்து, எந்தெந்த வசனங்களில் அறியலாம்?
2 நாளாகமம் 6:37
5. தகப்பனின் தாழ்மை தனயனிடம் இல்லாமல் போனதையும், இவனது அக்கிரமங்களின் விளைவையும் வெளிப்படுத்தும் வசனங்கள் எவையெவை?
யாக்கோபு 4:6
6. உபாகமம் 17:3-க்கு கீழ்ப்படியாது, மனாசே வானசேனைகளுக்கு எவ்விதங்களில் இடங்கொடுத்திருந்தான்? எனினும் அனுபவம், யார் மெய்யான தேவனென்று அறியப்பண்ணியது?
7. இவனின் உணர்வுபூர்வமான மனமாற்றம், கர்த்தருக்கென எவ்விதங்களில் செயல்பட வைத்தது?
2 இராஜாக்கள் 23:12
8. மனாசேயின் குமாரன் ஆமோன் ராஜாவானபோது அவன் வயதென்ன; இவன் எத்தனை ஆண்டுகள் அரசாண்டான்?
====================
2 நாளாகமம், 34-ம் அதிகாரம் (பகுதி-2)
==================
1. ஆலயத்தை பழுதுபார்க்கும் பணிகளுக்காக, வாசற்படியைக் காக்கிற லேவியர், யார் யாரிடம் பணம் சேகரித்ததாக தெரியவருகிறது?
2. தேவாலயத்தை பழுதுபார்க்கும்படிக்கு யோசியாவால் அனுப்பப்பட்டவர்கள் யார்?
3. வேலையை மேற்பார்வைசெய்ய, விசாரிப்புக்காரர்களாக பொறுப்பேற்றிருந்தோர் யார்? இவர்கள் எத்தகைய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்?
4. லேவியர் சேகரித்த பணம், எவையெவைகளுக்காக செலவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது? இதுதொடர்பாக சாப்பான் யோசியாவிடம் கூறியதென்ன?
5. முன்னதாகவே, யோசியா, தனது ஆளுகையின் எத்தனையாம் வருஷத்திலே, எங்கு சுத்திகரிப்பை ஆரம்பித்திருந்தான்?
6. எங்கு உண்டான அருவருப்புகளெல்லாம் அகற்றப்பட்டதாக, எந்த வசனம் சாட்சியிடுகிறது?
7. யூதா எருசலேம் உட்பட எந்தெந்த பட்டணங்கள் சுத்திகரிக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது?
==================
2 நாளாகமம், 34-ம் அதிகாரம் (பகுதி-3)
==================
1. பிதாக்களின் அக்கிரமத்தை பிள்ளைகள் சுமக்கவேண்டியதாகும் என்று கர்த்தர் கூறியதை தொடர்புபடுத்தி (யாத்திராகமம் 20:5), யோசியா தெரிவித்ததென்ன?
உபாகமம் 28:15
2. எனினும், சாபம் முறித்து தேவ அன்பை வெளிப்படுத்தும் வசனங்களின் அடிப்படையில் (சகரியா 8:13, கலாத்தியர் 3:13), தேவசந்நிதியில், எத்தகைய உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது?
3. தேவ சித்தத்தின்படி (யாத்திராகமம் 34:13), ஏற்கனவே யூதா எருசலேம் மற்றும் சில நகரங்களின் சுத்திகரிப்பிற்காக யோசியா எவ்விதங்களில் செயல்பட்டிருந்தான்?
லேவியராகமம் 26:30
4. தீர்க்கதரிசியின் வெளிப்பாட்டின் மூலம் யோசியா தீங்கைக் காணாதபடிக்கு கர்த்தரிடம் எத்தகைய பரிவிரக்கம் பெற்றிருந்ததை அறியமுடிகிறது?
2 நாளாகமம் 35:20-25
5. ஜனங்களின் ஆத்துமமீட்பை கருத்தில்கொண்ட இவன், தன்னோடுகூட யார் யாரையும் கர்த்தருடனான உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்?
தானியேல் 12:3
6. உடன்படிக்கைப் புத்தக வார்த்தைகளை, யார் யாரை கேட்கப் பண்ணினான்?
ஏசாயா 40:9
7. கர்த்தரால் பெண்களும் தீர்க்கதரிசன ஊழியத்தில் பயன்படுத்தப்பட்டு வந்ததை இங்கும் உறுதிப்படுத்தியிருக்கும் வசனம் எது?
யாத்திராகமம் 15:20
=================
2 நாளாகமம், 35-ம் அதிகாரம் (பகுதி-1)
=================
1. யோசியா ஆட்சிப் பொறுப்பேற்ற எத்தனையாம் வருஷம், எங்கு எப்போது, பஸ்கா ஆசரிக்கப்பட்டது?
எண்ணாகமம் 28:16
2. யோசியா, யார் யார் எழுதியபடி, எத்தகைய வரிசையிலும் பிரிவுகளிலும் நின்று, பஸ்கா பலியைச் செலுத்த அறிவுறுத்தினான்?
எஸ்றா 6:18
3. இவனுடைய இந்தக் கட்டளையின்படியே பலியிடப்பட்டதாக, எங்கெங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது?
4. யார் யார் கற்பித்தபடி, லேவியரால் ஆயத்தப்படுத்தப்பட்ட பாடகர் மற்றும் வாசல்காவலர், பணியிலிருந்தார்கள்?
நெகேமியா 12:45,46
5. யாரின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி, தகனபலி மிருகங்கள் எவ்விதத்தில் பிரிக்கப்பட்டிருந்தன?
6. இவர்கள் ஆசரித்த பஸ்கா, எத்தகைய சிறப்புகளைப் பெற்றதாயிருந்தது?
7. கர்த்தரின் கட்டளைக்கு (எண்ணாகமம் 28:16) கீழ்ப்படிந்து ஆரம்பமான பஸ்கா, கட்டளையின்படியே (யாத்திராகமம் 13:6) எத்தனை நாட்கள் ஆசரிக்கப்பட்டது?
====================
2 நாளாகமம், 36-ம் அதிகாரம் (பகுதி-1)
========================
1. கர்த்தர் எத்தகைய இரக்கமுள்ளவரென, இவ்திகாரத்தின் எந்த வசனம் சாட்சியிடுகிறது?
எரேமியா 7:25
2. எருசலேமிலே எந்தெந்த ராஜாக்கள் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ததாக உள்ளது?
எரேமியா 26:1-6
எரேமியா 52:3
எரேமியா 37-ம் அதிகாரம்
3. கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டதற்கு காரணமென்ன?
எரேமியா 25:4
4. எனினும் கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன என்னென்ன வார்த்தைகள் நிறைவேறியதாக அறியமுடிகிறது?
எரேமியா 29:10
ஏசாயா 44:28
5. கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியா தீர்க்கதரசிக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தத் தவறிய ராஜா யார்?
எரேமியா 37:1-2
6. இந்த அதிகாரத்தில், யூதா எருசலேம்மேல் ராஜாவான நால்வரின் பெயர்களென்ன என்று, எந்தெந்த வசனம் மூலமாக அறிய இயலும்?
7. கர்த்தரால் எருசலேமில் பரிசுத்தம் பண்ணப்பட்ட தேவாலயம், யாரால் எவ்விதங்களில் தீட்டுப்படுத்தப்பட்டது?
1 நாளாகமம் 5:25
========================
2 நாளாகமம், 36-ம் அதிகாரம் (பகுதி-2)
======================
1. கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானதைச் செய்த ராஜாவும், யோவாகாசின் சகோதரனுமாகிய யோயாக்கீம், யாரால், எவ்விதத்தில் சிறைப்படுத்தப்பட்டான்?
எசேக்கியேல் 19:9
2. இதேவிதமாக கர்த்தருக்கு எதிரிடையாக செயல்பட்டவனும், நேபுகாத்நேச்சாரால் ராஜாவாக்கப்பட்டவனுமான இவனது சிற்றப்பன் சிதேக்கியா, மற்றும் எதிரான ஆசாரியர் உட்பட ஜனங்களை தேவன் யார் கையில் ஒப்புவித்தார்?
எரேமியா 32:28
3. சில ஆலயப் பணிமுட்டுகள், பாபிலோன் போய்ச் சேர நேபுகாத்நேச்சார் காரணமானதை சாட்சியிட்டுள்ள வசனங்கள் எவையெவை?
தானியேல் 1:2
தானியேல் 5:2
4. கல்தேயரின் ராஜாவாலும் பாபிலோனுக்கு என்னென்ன கொண்டு செல்லப்பட்டன?
எரேமியா 27:20,21
5. கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்த யோவாகாசும் (2 இராஜாக்கள் 23:31,32) எதிர்கொள்ள நேரிட்ட சூழ்நிலை மற்றும் முடிவு எத்தகையது?
எரேமியா 22:10-12
6. எரேமியா 29:10-ல், எரேமியா மூலம் கர்த்தர் வெளிப்படுத்திய வார்த்தையின்படி, சிறைப்பட்ட (2 நாளாகமம் 36:20), எருசலேம் யூதா தேச ஜனங்களின் சிறையிருப்பின் காலம் எவ்வளவென்று இங்கும் எங்கு அறியமுடிகிறது?
தானியேல் 9:2
7. கல்தேயரால் எவையெவை தீயிடப்பட்டும், இடிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் நாசமாகின?
1 இராஜாக்கள் 9:8,9
8. கோணலானவைகளை செவ்வையாக்கும் கர்த்தரின் வெளிப்பாட்டின் (ஏசாயா 44:28) அடிப்படையில், கோரேஸ் அறிக்கையிட்டதென்ன?
ஏசாயா 45:1,13