================
யார் யாரிடம் கூறியது?
================
1. நீர் உம்முடைய மன விருப்பத்தின்படி இறங்கி வாரும்.
2. நாங்கள் வருகிறதில்லை.
3. நான் பாவஞ்செய்தேன்.
4. நீ கலிலேயன்.
5. உன் இடத்துக்கு ஓடிப்போ.
6. நீ மரிக்குங்காலம் சமீபித்திருக்கிறது.
7. நீ சாவதில்லை.
8. நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன்.
9. உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக.
10. மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று.
பதில் - யார் யாரிடம் கூறியது
==============
1. நீர் உம்முடைய மன விருப்பத்தின்படி இறங்கி வாரும்
Answer: சீப் ஊரார் - சவுல்
1 சாமுவேல் 23:20
2. நாங்கள் வருகிறதில்லை.
Answer: மோசே - தாத்தானையும் அபிராமையும்
எண்ணாகமம் 16:12
3. நான் பாவஞ்செய்தேன்.
Answer: பிலேயாம் - கர்த்தருடைய தூதனை
எண்ணாகமம் 22:34
4. நீ கலிலேயன்.
Answer: அருகே நிற்கிறவர்கள் - பேதுரு
மாற்கு 14:70
5. உன் இடத்துக்கு ஓடிப்போ.
Answer: பாலாக் - பிலேயாம்
எண்ணாகமம் 24:11
6. நீ மரிக்குங்காலம் சமீபித்திருக்கிறது.
Answer: கர்த்தர்- மோசே
உபாகமம் 31:14
7. நீ சாவதில்லை.
Answer: கர்த்தர் - கிதியோன்
நியாயாதிபதிகள் 6:23
8. நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன்.
Answer: அபிமெலேக்கு - தன் தாயின் சகோதரன், தன் தாயின் தகப்பனுடைய வம்சம்
நியாயாதிபதிகள் 9:2
9. உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக.
Answer: போவாஸ், ரூத்
ரூத் 2:12
10. மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று.
Answer: அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள் - பினெகாசின் மனைவி
1 சாமுவேல் 4:21
=======
சிலுவை
=======
1. எது கெட்டுப் போகிறவர்களுக்கு பைத்தியமாய் இருக்கிறது?
2. கிறிஸ்துவினுடையவர்கள் எவைகளை சிலுவையில் அறைந்து இருக்கிறார்கள்?
3 இயேசு எதினாலே சமாதானத்தை உண்டாக்கினார்?
4. தேவனுடைய குமாரனை தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துவது யார்?
5. இயேசு அவமானத்தை எண்ணாமல் எதை சகித்து தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்?
6. இயேசு பகையை எதினால் கொன்றார்?
7. இயேசு எது பரியந்தம் கீழ்ப்படிந்தவராகி தம்மைத் தாமே தாழ்த்தினார்?
8. இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவராக கலாத்தியருடைய கண்களுக்கு முன் பிரத்தியட்சயமாய் வெளிப்படுத்த பட்டிருந்தார்?
9. சிலுவைக்கு பகைஞர் யார்?
10. இயேசு தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சுமந்தார்?
சிலுவை
=======
1. எது கெட்டுப் போகிறவர்களுக்கு பைத்தியமாய் இருக்கிறது?
Answer: சிலுவையை பற்றிய உபதேசம்
1 கொரிந்தியர் 1:18
2. கிறிஸ்துவினுடையவர்கள் எவைகளை சிலுவையில் அறைந்து இருக்கிறார்கள்?
Answer: தங்கள் மாம்சத்தையும் அதில் ஆசை இச்சைகளையும்
கலாத்தியர் 5:24
3. இயேசு எதினாலே சமாதானத்தை உண்டாக்கினார்?
Answer: அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே
கொலொசெயர் 1:20
4. தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துவது யார்?
Answer: மறுதலித்து போனவர்கள்
எபிரேயர் 6:6
5. இயேசு அவமானத்தை எண்ணாமல் எதை சகித்து தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்?
Answer: சிலுவையை
எபிரெயர் 12:2
6. இயேசு பகையை எதினால் கொன்றார்?
Answer: சிலுவையினால்
எபேசியர் 2:16
7. இயேசு எது பரியந்தம் கீழ்ப்படிந்தவராகி தம்மைத் தாமே தாழ்த்தினார்?
Answer: சிலுவையின் மரண பரியந்தம்
பிலிப்பியர் 2:8
8. இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவராக கலாத்தியருடைய கண்களுக்கு முன் பிரத்தியட்சமாய் வெளிப்படுத்த பட்டிருந்தார்?
Answer: சிலுவையில் அறையப்பட்டவராக
கலாத்தியர் 3:1
9. சிலுவைக்கு பகைஞர் யார்?
Answer: வேறு விதமாய் நடக்கிற அநேகர்
பிலிப்பியர் 3:18
10. இயேசு தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை எதின்மேல் சுமந்தார்?
Answer: சிலுவையின் மேல்
1 பேதுரு 2:24
==============
தலைப்பு [கிறிஸ்துவின் சிலுவையின் நோக்கம்]
=============
1) கிறிஸ்து இயேசு எதற்காக உலகத்தில் வந்தார்⁉️
2) தேவன், பாவம் அறியாத கிறிஸ்துவை ஏன் நமக்காகப் பாவமாக்கினார்⁉️
3) பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, கிறிஸ்துவோடு கூடச் சிலுவையில் அறையப்பட்டது எது⁉️
4) கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் எதற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம்⁉️
5) மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே எதற்காக கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்⁉️
6) பாவத்தை சுமந்து.. தீர்க்கிற [தீர்த்த] இயேசு
A) நேரில் சொன்னவர் யார்⁉️
B) நிருபத்தில் சொன்னவர் யார்⁉️
7) பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் நடுவே இருந்த திரைச்சீலையை
[யாத்திராகமம் 26:33]
எபிரேயர் புத்தகத்தில் எதற்கு ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது ⁉️[வசன ஆதாரம்]
8)
A) 'கையெழுத்து' குலைக்கப்பட்டு எதன்மேல் ஆணியடிக்கப்பட்டது ⁉️
B) அந்த 'கையெழுத்து' என்பது என்ன⁉️
9) கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.
அப்போஸ்தலர் 4:26
இந்த வசனத்தின்படி...._
A) பூமியின் ராஜக்கள் யார் யார்⁉️
B) அதிகாரிகள் யார்⁉️
10) கிறிஸ்துவானவர் நமது பாவங்களுக்காக மரித்தது, அடக்கம்பண்ணப்பட்டது,
உயிர்த்தெழுந்தது, இவையெல்லாம் எதன்படி நடந்தது⁉️
கேள்வியின் பதில்கள்
================
1) கிறிஸ்து இயேசு எதற்காக உலகத்தில் வந்தார்⁉️
Answer: பாவிகளை இரட்சிக்க
1 தீமோத்தேயு 1:15
2) தேவன், பாவம் அறியாத கிறிஸ்துவை ஏன் நமக்காகப் பாவமாக்கினார்⁉️
Answer: நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு
2 கொரிந்தியர் 5:21
3) பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, கிறிஸ்துவோடு கூடச் சிலுவையில் அறையப்பட்டது எது⁉️
Answer: பழைய மனுஷன்
ரோமர் 6:6
4) கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் எதற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம்⁉️
Answer: கிறிஸ்துவின்
மரணத்துக்குள்ளாக
ரோமர் 6:3
5) மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே எதற்காக கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்⁉️
Answer: புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு
ரோமர் 6:4
6) பாவத்தை சுமந்து.. தீர்க்கிற [தீர்த்த] இயேசு
A) நேரில் சொன்னவர் யார்⁉️
Answer: யோவான் ஸ்நானகன்
யோவான் 1:20
Answer: அப்போஸ்தலனாகிய யோவான்
1 யோவான் 3:5
7) பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் நடுவே இருந்த திரைச்சீலையை
[யாத்திராகமம் 26:33]
எபிரேயர் புத்தகத்தில் எதற்கு ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது ⁉️[வசன ஆதாரம்]
Answer: இயேசுவானவரின் மாம்சமாகிய திரை
எபிரேயர் 10:19
19. ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
20. அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
8)
A) 'கையெழுத்து' குலைக்கப்பட்டு எதன்மேல் ஆணியடிக்கப்பட்டது ⁉️
Answer: சிலுவை
B) அந்த 'கையெழுத்து' என்பது என்ன⁉️
Answer: சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணம்
கொலோசெயர் 2:14,15
9) கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.
அப்போஸ்தலர் 4:26
இந்த வசனத்தின்படி...._
A) பூமியின் ராஜக்கள் யார் யார்⁉️
Answer: ஏரோது / பொந்தியுபிலாத்து
B) அதிகாரிகள் யார்⁉️
Answer: புறஜாதிகள் / இஸ்ரயேல் ஜனங்கள்
அப்போஸ்தலர் 4:28
10) கிறிஸ்துவானவர் நமது பாவங்களுக்காக மரித்தது, அடக்கம்பண்ணப்பட்டது,
உயிர்த்தெழுந்தது, இவையெல்லாம் எதன்படி நடந்தது⁉️
Answer: வேத வாக்கியங்களின்படி
1 கொரிந்தியர் 15:3,4