==================
வேதாகமத்திலிருந்து கேள்விகள்
=================
1) வானத்தில் காணப்பட்ட இரண்டு அடையாளங்கள் எது?
2) பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களையும் மூன்று பகுதிகளாக கர்த்தர் பிரித்துக் கூறுகிறார். அவை யாவை?
3) சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்து வைக்கப்பட்டவர்கள் யார்
4) வேறே ஆவியை உடையவனாயிருந்து யார்?
5) யோசுவாவின் வயலில் வந்து நின்றது எது?
6) வேதாகமத்தில் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்ற வார்த்தை எத்தனை முறை வருகிறது?
7) நாம் சொஸ்த்தமடையும் படிக்கு எப்படி ஜெபிக்க வேண்டும்?
8) பிதாவையும், குமாரனையும் உடையவர்கள் யார்?
9) பதினாயிரம் பதினாயிரமாகவும் ஆயிரமாகவும் இருந்தது எது?
10) என் கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்று சொன்னது யார் ?
11) இதோ வாசற்படியிலே நின்று கதவைத் தட்டுகிறேன். சரியா/தவறா
12) நாம் நிர்மூலமாகாதிருப்பது கர்த்தருடைய சுத்த கிருபையே. சரியா/தவறா
13) பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு காண்பித்தாவது இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையை காண்கிறேன். சரியா/தவறா
பதில்
======
1) வானத்தில் காணப்பட்ட இரண்டு அடையாளங்கள் எது?
Answer: சூரியனை அனிந்திருந்த ஒரு ஸ்திரீ. சிவப்பான பெரிய வலுசர்ப்பம்
வெளிப்படுத்தல் 12:1,3
2) பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களையும் மூன்று பகுதிகளாக பிரித்துக் கூறுகிறார். அவை யாவை?
Answer: மோசேயின் நியாயப்பிரமாணம்.
தீர்க்கதரிசிகளின் ஆகமங்கள்
சங்கீதங்கள்
லூக்கா 24:44
3) சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்து வைக்கப்பட்டவர்கள் யார்?
Answer: இரண்டு மனுஷர்கள்
யோசுவா 2:6
4) வேறே ஆவியை உடையவனாயிருந்து யார்?
Answer: காலேப்
எண்ணாகமம் 14:24
5) யோசுவாவின் வயலில் வந்து நின்றது எது?
Answer: வண்டில்
1 சாமுவேல் 16:12
6) வேதாகமத்தில் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்ற வார்த்தை எத்தனை முறை வருகிறது?
Answer: இரண்டு முறை
ஏசாயா 6:3
வெளிப்படுத்தல் 4:8
7) நாம் சொஸ்த்தமடையும் படிக்கு எப்படி ஜெபிக்க வேண்டும்?
Answer: குற்றங்களை அறிக்கையிட்டு
யாக்கோபு 5:16
8) பிதாவையும், குமாரனையும் உடையவர்கள் யார்?
Answer: கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருப்பவன்
2 யோவான் 1:9
9) பதினாயிரம் பதினாயிரமாகவும் ஆயிரமாகவும் இருந்தது எது?
Answer: இலக்கம்
வெளிப்படுத்தல் 5:11
10) என் கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்று சொன்னது யார் ?
Answer: சவுல்
1 சாமுவேல் 16:22
21) இதோ வாசற்படியிலே நின்று கதவைத் தட்டுகிறேன். சரியா/தவறா
Answer: தவறு
வெளிப்படுத்தல் 3:20
12) நாம் நிர்மூலமாகாதிருப்பது கர்த்தருடைய சுத்த கிருபையே. சரியா/தவறா
Answer: தவறு
புலம்பல் 3:22
13) பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு காண்பித்ததாவது. இதோ, பழுத்த பழங்களுள்ள கூடைஒன்றை காண்கிறேன்.
சரியா/தவறா
Answer: சரி
ஆமோஸ் 2:8
============
இயேசு கீழ்கண்ட வார்த்தைகளை யாரிடம் கூறினார்?
=============
1. தாகத்துக்கு தா
2. இப்பொழுது இடம் கொடு
3. அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு
4. ஆவியினால் பிறப்பது ஆவியா இருக்கும்
5. தேவையானது ஒன்றே
6. அற்ப விசுவாசியே ஏன் சந்தேகப்பட்டாய்
7. நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறதில்லை
8. இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்
9. சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய்?
10. உன் பட்டயத்தை உறையிலே போடு
11. அப்பாலே போ சாத்தானே
12. எனக்குப் பின்னாக போ சாத்தானே
13. நீங்கள் என்னை ஏன் தேடினீர்கள்?
14. என்னை உன்னிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு
15. நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து
இயேசு கீழ்கண்ட வார்த்தைகளை யாரிடம் கூறினார்?
====================
1. தாகத்துக்கு தா
Answer: சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ
யோவான் 4:8
2. இப்பொழுது இடம் கொடு
Answer: யோவான் ஸ்நானன்
மத்தேயு 3:14,15
3. அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு
Answer: தோமா
யோவான் 20:27
4. ஆவியினால் பிறப்பது ஆவியா இருக்கும்
Answer: நிக்கோ தேமு
யோவான் 3:4-6
5. தேவையானது ஒன்றே
Answer: மார்த்தாள்
லூக்கா 10:41,42
6. அற்ப விசுவாசியே ஏன் சந்தேகப்பட்டாய்
Answer: பேதுரு
மத்தேயு 14:28-31
7. நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறதில்லை
Answer: விபச்சாரத்தில் கையும் மெய்யுமாய் பிடிபட்ட ஸ்திரீ
யோவான் 8:4,11
8. இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்
Answer: யோனாவின் குமாரனாகிய சீமோன்
மத்தேயு 16:16,17
9. சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய்?
Answer: யூதாஸ்
மத்தேயு 26:47,50
10. உன் பட்டயத்தை உறையிலே போடு
Answer: பேதுரு
யோவான் 18:11
11. அப்பாலே போ சாத்தானே
Answer: பிசாசு
மத்தேயு 4:10
12. எனக்குப் பின்னாக போ சாத்தானே
Answer: பேதுரு
மத்தேயு 16:23
13. நீங்கள் என்னை ஏன் தேடினீர்கள்?
Answer: இயேசுவின் தாயார்
லூக்கா 2:48,49
14. என்னை உன்னிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு
Answer: பிலாத்து
யோவான் 19:10,11
15. நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து
Answer: சீமோன்
லூக்கா 22:31,32
============
கேள்விகள்: ஆசை
============
1. இயேசுகிறிஸ்துவின் ஆசை என்ன?
2. ஏரோதுவின் ஆசை என்ன?
3. இளைய குமாரனின் ஆசை என்ன?
4. விவேகமுள்ள மனுஷனின் ஆசை என்ன?
5. ஆபிரகாமின் ஆசை என்ன?
6. அப் பவுலின் ஆசை என்ன?
7. தேவ தூதரின் ஆசை என்ன?
8. தாவீதின் ஆசை என்ன?
9. நீதிமானின் ஆசை என்ன?
10. தீங்கு செய்யாத மனுஷன் கொண்டிருக்கும் ஆசை என்ன?
பதில்கள்
==========
1. இயேசுகிறிஸ்துவின் ஆசை என்ன?
Answer: பஸ்காவைப் புசிக்க ஆசையாய் இருந்தார்
லூக்கா 22:15
2. ஏரோதுவின் ஆசை என்ன?
Answer: இயேசுவைக் காண ஆசையாய் இருந்தான்
லூக்கா 23:8
3. இளைய குமாரனின் ஆசை என்ன?
Answer: பன்றியின் தவிட்டினால் வயிற்றை நிரப்ப ஆசையாய் இருந்தான்
லூக்கா 15:16
4. விவேகமுள்ள மனுஷனின் ஆசை என்ன?
Answer: தேவவசனத்தைக் கேட்க ஆசையாய் இருந்தான்
அப்போஸ்தலர் 13:7
5. ஆபிரகாமின் ஆசை என்ன?
Answer: இயேசுவின் நாளைக் காண ஆசையாய் இருந்தான்
யோவான் 8:56
6. அப்போஸ்தலனாகிய பவுலின் ஆசை என்ன?
Answer: கிறிஸ்துவுடனே இருக்க ஆசையாய் இருந்தான்
பிலிப்பியர் 1:23
7. தேவ தூதரின் ஆசை என்ன?
Answer: பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களை உற்றுப்பார்க்க தேவதூதர்கள் ஆசையாய் இருந்தார்கள்
1 பேதுரு 1:12
8. தாவீதின் ஆசை என்ன?
Answer: பரிசுத்த ஸ்தலத்தில் தேவனைப் பார்க்க ஆசையாய் இருந்தான்
சங்கீதம் 63:3
9. நீதிமான்களுடைய ஆசை என்ன?
Answer: நன்மையே
நீதிமொழிகள் 11:23
10. தீங்கு செய்யாத மனுஷன் கொண்டிருக்கும் ஆசை என்ன?
Answer: தயை
நீதிமொழிகள் 19:22