================
சங்கீதம் 119-ஐ குறித்து விவரிக்கவும்
===============
தேவனுடைய சட்டத்தைப் பற்றிய ஒரு சங்கீதம் இது.
444-ம் கி.மு.வில் எஸ்றா இந்த சங்கீதத்தை எழுதியிருக்கலாம் என்று ஒரு கூற்று உள்ளது.
மொத்தமாக
– இந்த சங்கீதத்தின் தலைப்பு – தேவனுடைய சட்டங்களின் சிறப்பும், அவற்றைக்
கடைப்பிடிப்பவர்களின் மகிழ்ச்சியும் முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேதாகமத்தில் இருக்கும் மொத்த 1,189 அதிகாரங்களில் இந்த சங்கீதம் 119 மிக நீளமான சங்கீதம்.
இந்த அதிகாரம், ஒற்றை சங்கீதத்தை கொண்டது அல்ல. 22 சங்கீதங்களின் தொடர் அல்லது பாகங்கள் எனலாம்.
இந்த 119ம் சங்கீதத்தில் வரும் ஒவ்வொரு பாகமும் எட்டு (8) வசனங்களைக் கொண்டது.
எழுத்தாளர் எழுதிய அழகை / ஆர்வத்தை / நேர்த்தியை – நம்முடைய தமிழ் மொழிபெயர்ப்பிலும் இழந்திருப்பது ஒரு வருத்தமே.
எபிரேய எழுத்துக்கள் மொத்தம் 22:
அவை:
அலெஃப்,
பெட், கிமல், டேலட், ஹி, வாவ், ஜாயின், சேட், டெட், யோட், காஃப், லேமட்,
மெம், நூன், சமேக், ஆயின், பெ, சடே, கோஃப், ரேஷ், ஷின் & டவ்
தமிழ் உச்சரிப்பில் பிழை வர வாய்ப்புகள் உள்ளதால் அவற்றை ஆங்கிலத்தில் கீழே எழுதுகிறேன்.
Alef,
Bet, Gimel, Dalet, He, Waw, Zayin, Chet, Tet, Yod, Kaf, Lamed, Mem,
Nun, Samech, Ayin, Pe, Tsade, Qof, Resh, Shin & Tav
இந்த
22 எழுத்துக்களின் அடிப்படையில் 119-ம் சங்கீதமானது 22 பாகங்களாக
பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த பாகத்தின் கீழ் பிரிக்கப்பட்ட
ஒவ்வொரு வசனமும் அதற்குறிய பாகத்தின் தலைப்பைக் கொண்டே துவங்குவது
எபிரெயத்தில் உள்ள ஆச்சிரியம். தமிழில் அல்லது மற்ற மொழிகளில் மொழி
பெயர்த்த போது அதை இழந்திருக்கிறோம்.
உதாரணத்திற்கு:
முதல் எபிரேய எழுத்து அலேஃப்
முதல் பாகத்தில் உள்ள 8 வசனங்களின் முதல் எழுத்தும் “அலேஃப்” என்ற எழுத்தைக் கொண்டே துவங்குகிறது !!!
எபிரேய பாஷையில் வசனங்களின் முதல் 2 வார்த்தைகளை மாத்திரம் கீழே தமிழ் ஒலியில் எழுதுகிறேன் கவனிக்கவும்.
119:1 – அஷ்ரி திம்மி....
119:2 – அஷ்ரி ன்ட்சிரி...
119:3 – அஃப் லஃபோலு...
119:4 – அத்தே ஸ்யூதே...
119:5 – அச்சிலி இக்னு...
119:6 – அஸ் லா-அபுஷ்..
119:7 – அவுத்-கே பிஷர்..
119:8 – அத் ச்சீஇக்...
நன்கு
கவனிக்கவும்.. ஒவ்வொரு வசனத்தின் முதல் எழுத்தும் “அ” வில் துவங்குகிறது.
அது போலவே 22 பாகங்களின் கீழ் வரும் 8 வசனங்களும் அதினதின் எழுத்துக்களைக்
கொண்டே துவங்குகிறது ஆச்சரியமும் அழகும் !!
ஆக, 8 வசனங்களைக் கொண்ட 22 பாகங்களின்படி மொத்தம் 8x22=176 வசனங்கள் இந்த 119ம் அதிகாரத்தில் உள்ளது.
இந்த சங்கீதத்தின் ஆச்சரியம் முடிந்துவிடவில்லை, இன்னும் இரண்டு முக்கியமான ஆச்சரியம் உள்ளது.
ஒவ்வொரு
எழுத்திற்கு சம்பந்தப்பட்ட ஓர் அர்த்தத்துடன் அதன் கீழ் வரும் 8
வசனங்களும் அந்த எழுத்தினுடைய அர்த்தத்தின் அடிப்படையிலேயே
அமைந்திருக்கிறது !
சில
நேரங்களில், பாடலின் பெயரும் ஒரு எபிரேய வார்த்தையை பிரதிபலித்து ஒவ்வொரு
பகுதியிலும் விவாதிக்கப்படும் தலைப்புடன் தொடர்புடையதாக இருக்கிறது.
A. அலெப்
வல்லமை மிக்க ஆசீர்வாதம் (சங்கீதம் 119:1-8)
எபிரேய மொழியில் அலெஃப் என்பது ஒரு எருது.
B. பெத்
பாதுகாப்பு இல்லம் (சங்கீதம் 119:9-16)
இந்த வார்த்தையை பல பெயர்களில் காண்கிறோம். பெத்தேல், பெத்லகேம் போன்றவை.
C.
கிமல்
வாழ்க்கை வழியாக பயணம் (சங்கீதம் 119:17-24)
எபிரேய மொழியில்
ஒரு கிமல் ஒரு ஒட்டகம், நீங்கள் பயணம் செய்யும் போது உங்களைச் சுமந்து
செல்லும் ஒன்று
D. டேலேத்
துக்கங்களிலிருந்து வெளியே செல்லும் பாதையை காண்பிக்கும் வாயிற்கதவு
சங்கீதம் 119:25-32
E. ஹி
நீதியை பின்பற்றுதல்
சங்கீதம் 119:33-40
F. வாவ்
நம்பிக்கையைப் பற்றியிருப்பது
சங்கீதம் 119:41-48
G. ஜாயின்
நம்முடைய ஆயுதம் - சங்கீதம் 119:49-56
H. சேத்
துன்மார்க்கரைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை
சங்கீதம் 119:57-64
I. டெத்
சாத்தானால் மூழ்கடிக்கப்பட்டது
சங்கீதம் 119:65-72
J. யோத்
தேவனின் கரம்
சங்கீதம் 119:73-80
K. கப்
ஆறுதலுக்காக ஏங்குதல்
சங்கீதம் 119:81-88
L. லாமேத்
விடாமுயற்சியைக் கற்றல்
சங்கீதம் 119:89-96
M. மெம்
இனிமையான தியானம்
சங்கீதம் 119:97-104
N. நூன்
நம்மை மழுங்கடிக்காமல் வைக்கும் ஒரு ஒளி
சங்கீதம் 119:105-112
O. சமேக்
ஆதரவு மற்றும் நிலைத்திருத்தல்
சங்கீதம் 119:113-120
P. ஆயின்
இரட்சிப்பைத் தேடுதல்
சங்கீதம் 119:121-128
Q. பெ
வார்த்தையைத் தூண்டுவது
சங்கீதம் 119:129-136
R. த்ஸாதே
நீதியுள்ளவர்
சங்கீதம் 119:137-144
S. கோஃப்
என் அழுகையைக் கேளுங்கள்
சங்கீதம் 119:145-152
T. ரேஷ்
துன்பத்திலிருந்து மீட்கப்பட்டது
சங்கீதம் 119:153-160
U. ஷின்
தேவ வார்த்தையால் கூர்மைப்படுத்தப்பட்டது
சங்கீதம் 119:161-168
V. தவ்
சேவைக்காக என்னைக் குறிக்கவும்
சங்கீதம் 119:169-176
நான் அறிந்த இன்னுமொரு ஆச்சரியம்:
122-ம்
வசனத்தை தவிர்த்து, தேவன் மனிதர்களுக்கு அளித்த வெளிப்பாட்டை
வெளிப்படுத்தும் வார்த்தைகளை அத்தனை வசனங்களும் கீழ்கண்ட ஏதாவதொரு
வார்த்தையைக் கொண்டிருக்கும்:
1. சாட்சியங்கள்
2. கட்டளைகள்
3. கற்பணைகள்
4. வார்த்தை
5. சட்டம்
6. வழிகள்
7. உண்மை
8. தீர்ப்புகள்
9. நீதியும்
10. சட்டங்கள்
சிறப்பு என்னவெனில் – மேலே கூறிய 10 வார்த்தைகளுமே தேவனுடைய பிரமாணத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்!!
========================
சங்கீதம் 119ல் இருந்து கேள்விகள்
=======================
1) தான் இங்கு யார் என்று சங்கீதக்காரன் கூறியுள்ளார்?2) கர்த்தர் வாக்கு எங்கு, ஏன் வைக்கப்பட்டது?
3) எதில் வெறுப்பு, எதில் பிரியம்?
4) எதற்காக, ஏது கிடைக்கும் படி சங்கீதக்காரனின் வேண்டுதல்?
5) எந்த வழியில் வெறுப்பு?
6) பிழைக்க என்ன தேவை , அப்போது என்ன செய்வேன் என்று சங்கீதக்காரன் கூறியுள்ளார்?
7) ஏது மிகுந்ததால், எதன்படி உயிரடைய சங்கீதக்காரன் வேண்டுதல்?
8) கர்த்தர் எங்கு இருப்பதாக சங்கீதக்காரனின் கூற்று?
9) ஏன், எதிலிருந்து விலகுவதில்லை?
10) இன்று வரை நிற்பது ஏது?
11) என்ன நேரிட்டாலும்,எதை மறப்பதில்லை என்பது சங்கீதக்காரன் கூற்று?
12) எதை,ஏன் திறக்கும்படி சங்கீதக்காரனின் வேண்டுதல்?
சங்கீதம் 119 கேள்விகளுக்கு பதில்
=========================
1) தான் இங்கு யார் என்று சங்கீதக்காரன் கூறியுள்ளார்?
Answer: பரதேசி சங்கீதம் 119:19
2) கர்த்தர் வாக்கு எங்கு, ஏன் வைக்கப்பட்டது?
2) கர்த்தர் வாக்கு எங்கு, ஏன் வைக்கப்பட்டது?
Answer: இருதயத்தில், பாவஞ்செய்யாதபடிக்கு
சங்கீதம் 119:11
3) எதில் வெறுப்பு, எதில் பிரியம்?
Answer: வீண் சிந்தனைகளில், வேதத்தில்
சங்கீதம் 119:113
4) எதற்காக, ஏது கிடைக்கும் படி சங்கீதக்காரனின் வேண்டுதல்?
4) எதற்காக, ஏது கிடைக்கும் படி சங்கீதக்காரனின் வேண்டுதல்?
Answer: பிழைத்திருக்கும்படிக்கு, இரக்கங்கள்
சங்கீதம் 119:77
5) எந்த வழியில் வெறுப்பு?
Answer: பொய்வழிகள்
சங்கீதம் 119:104
6) பிழைக்க என்ன தேவை , அப்போது என்ன செய்வேன் என்று சங்கீதக்காரன் கூறியுள்ளார்?
6) பிழைக்க என்ன தேவை , அப்போது என்ன செய்வேன் என்று சங்கீதக்காரன் கூறியுள்ளார்?
Answer: அனுகூலம், வசனத்தைக் கைக்கொள்ள ஏன்
சங்கீதம் 119:17
7) ஏது மிகுந்ததால், எதன்படி உயிரடைய சங்கீதக்காரன் வேண்டுதல்?
7) ஏது மிகுந்ததால், எதன்படி உயிரடைய சங்கீதக்காரன் வேண்டுதல்?
Answer: இரக்கங்கள், நியாயங்களின்படி
சங்கீதம் 119:156
8) கர்த்தர் எங்கு இருப்பதாக சங்கீதக்காரனின் கூற்று?
8) கர்த்தர் எங்கு இருப்பதாக சங்கீதக்காரனின் கூற்று?
Answer: சமீபமாயிருக்கீறிர்
சங்கீதம் 119:151
9) ஏன், எதிலிருந்து விலகுவதில்லை?
Answer: போதித்திருக்கிறபடியால், நியாயங்களை
சங்கீதம் 119:102
10) இன்று வரை நிற்பது ஏது?
10) இன்று வரை நிற்பது ஏது?
Answer: உம்முடைய (கர்த்தருடைய) உண்மைகள்)
சங்கீதம் 119:90,91
11) என்ன நேரிட்டாலும்,எதை மறப்பதில்லை என்பது சங்கீதக்காரன் கூற்று?
11) என்ன நேரிட்டாலும்,எதை மறப்பதில்லை என்பது சங்கீதக்காரன் கூற்று?
Answer: துன்மார்க்கரின் கூட்டங்கள் கொள்ளையிட்டும், வேதத்தை
சங்கீதம் 119:61
12) எதை,ஏன் திறக்கும்படி சங்கீதக்காரனின் வேண்டுதல்?
Answer: கண்களை, வேதத்திலுள்ள அதிசயங்களை பார்க்கும்படிக்கு
12) எதை,ஏன் திறக்கும்படி சங்கீதக்காரனின் வேண்டுதல்?
Answer: கண்களை, வேதத்திலுள்ள அதிசயங்களை பார்க்கும்படிக்கு
சங்கீதம் 119:18