ஜெபத்துடன் இருங்கள் பொறுமையாக இருங்கள் கர்த்தர் உங்களுக்கு நிச்சயமாகவே அதிசயங்களை அவர் செய்வார் | இயேசு கிறிஸ்துவை நீங்கள் எந்தளவுக்கு நேசிக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவருடைய பரிசுத்தத்தை நீங்கள் நேசியுங்கள் | இயேசுவுக்கு பின் செல்லுங்கள் | தேவனை நாம் எல்லா விதத்திலும் பிரியப்படுத்த வேண்டும்
========================
ஜெபத்துடன் இருங்கள் பொறுமையாக இருங்கள் கர்த்தர் உங்களுக்கு நிச்சயமாகவே அதிசயங்களை அவர் செய்வார்
=========================
வசனவாசிப்பு
யோபு 7: 5
யோபு 5: 10
யாக்கோபு 5: 11
யோவான் 11: 39
யோபு லாசரு
யோபு என்கிற பரிசுத்தவான் வியாதிப்படும்போது. அவனுடைய வியாதி, அவனுடைய சரீரத்தில், எந்தளவுக்கு வேதனையை, அவனுக்கு தந்தது என்று அவனே சொல்லுகிறான் பாருங்கள்
யோபு 7: 5
என் மாம்சம் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று
என்னுடைய சரீரத்தில் பூச்சு புழுதி இருக்கிறது. என் தோல் வெடித்துவிட்டது என்று யோபு சொல்லுகிறான்
யோபு கொடூரமான வியாதியால் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தான் அவனுக்கு ஆறுதல் சொல்ல ஒருவருமே இந்த பூமியில் இல்லை அவனுடைய மனைவி அவனை அவமானப்படுத்தி பேசினாள் யோபுடைய மூன்று நண்பர்களும் அவனை அவமானப்படுத்தி பரியாசம் செய்து பேசினார்கள் யோபு வீட்டில் வேலை செய்த அவனுடைய வேலைக்காரர்களும் அவனை கேவலமாக பார்த்து பரியாசம் செய்தார்கள்
பாடுகளுக்கு பிறகு யோபு வாழ்க்கையில் கர்த்தர் செய்தது என்ன ?
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்
யோபு 5: 10
தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்
யோபு:
ஒரு நீதிமான், அவன் ஒரு உத்தமன், அவனுக்கே அவமானம் நிந்தை, பாடுகள், கஷ்டங்கள், வரும்போது. நமக்கு வராமல் இருக்குமா? யோசித்துப்பாருங்கள்
என்ன பாடுகள், அவமானங்கள், நிந்தைகள், சோதனைகள், நம்முடைய வாழ்க்கையில் வந்தாலும் தேவன் நம்மை கைவிடவே மாட்டார்
விசுவாசமாகவும் பொறுமையாகவும் யோபு இருந்தான் அதனால் யோபு எண்ணி முடியாத அதிசயங்களை அவன் கண்டான் யோபைப்போல பொறுமையாக நாமும் இருந்தால்; தேவன் நம்முடைய வாழ்க்கையிலும் எண்ணி முடியாத அதிசயங்களை அவர் செய்வார்
விசுவாசத்தையும், பரிசுத்தத்தையும். பொறுமையையும் நமக்குள் நாம் காத்துக்கொண்டால்; ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் தேவன் நம்முடைய வாழ்க்கையில் செய்வார்
யோபுடைய சரீரத்தில் புழு பூச்சி இருந்தது அவனுடைய வியாதியை குணமாக்க இன்று வரை எந்த வைத்தியனாலும் இல்லை
யோபு பூரணமாக குணமாக்கப்பட்டான். தேவன் அவனுடைய சிறையிருப்பை அவர் மாற்றினார். யோபுக்கு கர்த்தர் அதிசயங்களை செய்தார்
அதிசயங்கள் நம்முடைய வாழ்க்கையில் நடக்க வேண்டுமானால். பொறுமை நமக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது, யோபுடைய பொறுமையை பற்றி.. யாக்கோபு என்கிற பரிசுத்தவான் எடுத்து எழுதியிருக்கிறார்
யாக்கோபு 5: 11
இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே
தேவன் செயல்களில் வல்லவர் ; அவரால் செய்ய முடியாத அதிசயங்கள் ஒன்றுமே இல்லை. வெடித்துப்போயிருந்த யோபுடைய சரீரம்; பழைய அதை நிலைக்கு அது வந்தது. நீங்கள் இப்பொழுது வறண்ட நிலமாக கூட இருக்கலாம்; தேவன் உங்களை செழிப்படைய செய்வார்.
யோபுக்குள் இருந்த அந்த பொறுமை தான்; அவனுக்குள் ஆசீர்வாதங்களை அது கொண்டு வந்தது. ஜெபத்துடன் இருங்கள் பொறுமையாக இருங்கள் கர்த்தர் உங்களுக்கு நிச்சயமாகவே அதிசயங்களை அவர் செய்வார்.
லாசரு
யோவான் 11: 39
இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்*
மேலே உள்ள வசனத்தை பாருங்கள் அதில் மார்த்தாள் மரித்துப்போன லாசரு சரீரம் நாறும் என்று சொல்லுகிறாள்
யோபு 7: 5
என் மாம்சம் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று
லாசரு மரித்துப்போன பிறகு அவனுடைய சரீரத்தில் நாற்றம் இருக்கும் என்று லாசருவின் சகோதரி மார்த்தாள் சொல்லுகிறாள்
ஆனால் யோபு உயிரோடு இருக்கும்போது. அவன் சொல்லுகிறான். என்னுடைய சரீரத்தில் பூச்சி இருக்கிறது ; என் தோல் வெடித்துவிட்டது என்று யோபு சொல்லுகிறான்
லாசருடைய சரீரமும் யோபுடைய சரீரமும் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் இருக்கிறது.
என்ன! ஒரு வித்தியாசம் என்றால்?
லாசரு மரித்துபோய்விட்டான்.
யோபு உயிரோடு இருக்கிறான
இவ்வளவு தான் வித்தியாசம். இதிலிருந்து நாம் ஒரு விசுவாச பாடத்தை நாம் கற்றுக்கொள்வோம்
யோபுக்கும் சரி, லாசருக்கும் சரி, இன்று நமக்கும் சரி, ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் தேவன் செய்வார் என்று விசுவாசம் துளிர்விடுகிறது
நம்முடைய விசுவாசம் துளிர்விட்டு; அது மரமாக வளர்ந்து... கனிதர... ஆவியானவர்தாமே நமக்கு அவர் உதவி செய்வாராக
*என்னுடைய முகவரி*
பாஸ்டா் .G. ஜீவன்
நம்பர் 66 . மேட்டு தெரு , புழல்
*சென்னை* - 600066
இந்தியா தமிழ்நாடு
*My address*
pr. Jeevan
no : 66 mettu steet
puzhal , chennai - 600066
INDIA Tamil nadu
prayers 9840593839
pr. Jeevan (chennai)
வசன வாசிப்பு
மத்தேயு 6: 19-21
19. பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
20. பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
21. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்
மத்தேயு 13: 44-46
44. அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக்கொள்ளுகிறான்
45. மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
46. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக்கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.
இயேசுகிறிஸ்து வாயை திறந்து பேசிய வசனத்தின்படி, ஒருவன் மனிதன் வாழ்ந்தால், அவனுக்கு பரலோக ராஜ்யம் நிச்சயமாக கிடைக்கும். இந்த பூமியில் இருக்கிற பணமோ பொருளோ மனிதனை அது திருப்திப்படுத்தாது. பரிசுத்த வேதாகமம் மட்டுமே மனிதனை அது திருப்திப்படுத்தும்;
அநேகர் ஊழியர்கள் வேதாகமத்தை திறந்து பிரசங்கம் பண்ணுகிறார்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் என்கிற வார்த்தையை மட்டுமே பிரசங்கத்தில் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்
ஆசீர்வாத மழை பெய்யும் என்று பிரசங்கம் பேசுகிறார்கள்
ஆசீர்வாத வேதாகமம் என்கிற பெயர் பைபிளுக்கு கொடுக்கப்படவில்லை
பரிசுத்த வேதாகமம் என்கிற பெயரை தான், கர்த்தர் பைபிளுக்கு பெயர் வைத்துள்ளார்
கர்த்தருடைய ஆசீர்வாதம் மனிதனுக்கு தேவை; ஆனால் அதற்காகவே சபையை அந்த ஊழியக்காரன் நடத்தக்கூடாது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் என்று சொல்லலாம். ஆசீர்வாதம் மட்டும் தான், உங்களுக்கு என்று, அவன் பிரசங்கம் பேசக்கூடாது.
பரிசுத்த வேதாகமத்தை கையில் எடுத்து, பிரசங்கம் பேசும்போது பரிசுத்தத்தை மட்டுமே அதிக ஆழத்தோடு பிரசங்கத்தில் கொண்டு வரவேண்டும்
பரிசுத்தத்தைக் குறித்து பிரசங்கம் பேசுகிற ஊழியக்காரன் உத்தமனாக இருப்பான். மற்றப்படி வார்த்தை வார்த்தைக்கு ஆசீர்வாதங்களை சொல்லுகிறவன், பொருளாசை பிடித்த ஊழியக்காரன் என்று தான் அவனை சொல்ல முடியும்
தேவன் பரிசுத்தர்
வேதம் பரிசுத்தம்
வேதத்திலுள்ள சாட்சிகள்
பரிசுத்தம்
வேத வசனங்கள் பரிசுத்தம்
தூதர்கள் பரிசுத்தம்
பரலோக ராஜ்யம் பரிசுத்த ஸ்தலம்
தேவனுடைய கிரியைகள் அனைத்தும் பரிசுத்தம்
வேதத்தத்தை திறந்து பரிசுத்தத்தை மட்டுமே பிரசங்கம் பேச வேண்டும். கதைகளையும், கச்சேரிகளையும், உலக காரியங்களை பிரசங்கம் பேசவே கூடாது
பேதுரு..
பேதுரு திருவசனம் என்று வசனத்தை அவர் அழைக்கிறார்
கர்த்தருடைய வார்த்தைகள் எனக்கு கிடைத்தவுடன் அதை நான் உட்கொண்டேன் என்று எரேமியா தீர்க்கதரிசி சொல்லுகிறார்
கர்த்தருடைய வார்த்தைகள் என் பாதைக்கு வெளிச்சம், அது எனக்கு தீபம் என்றும், கர்த்தருடைய வார்த்தைகள் எனக்கு கிடைக்காவிட்டால் நான் துக்கத்தில் செத்துப்போய் இருப்பேன் என்று தாவீது சொல்லுகிறான்
பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள் என்று இயேசு கிறிஸ்து பிரசங்கம் பேசினார்
கர்த்தருடைய கற்பனைகளை மனிதன் கைக்கொள்ளாமல். உலகத்தில் மனிதன் ஒன்றை தேடுகிறான், அவன் வியர்வை சிந்தி, பொய்யும் புரட்டுமாக அதை தேடி கடைசியில் அதை அவன் கண்டு பிடிக்கிறான். ஆனால் அதில் அவனுக்கு எந்த திருப்தியும் கிடைப்பதில்லை.
மனிதன் தேடுகிறது பணமோ, பொருளோ, நிலமோ, மனிதர்களோ, அது எதுவாக இருந்தாலும், அது அவனுக்கு திருப்தி கொடுப்பதில்லை. மனிதனுடைய இருதயம் திருக்குள்ளதும், அது மகா கேடானது என்று வேதம் சொல்லுகிறது. சூரியனுக்கு கீழே மனிதன் படுகிற எல்லா பிரயாசமும் விருதா என்று வேதம் சொல்லுகிறது
மனிதன் தன்னுடைய கண்களால் பார்க்கிற அனைத்தும் மாயை என்றும், அவைகள் அனைத்தும் பொய் என்று வேதம் சொல்லுகிறான். வேதனை துன்பத்தோடு, பாரத்தோடு, குடும்ப சுமையோடு, கடன் தொல்லையோடு, மனிதன் வாழ்கிறான்
தீராத வியாதி, தன்னைவிட்டு விலகாத பெலவீனத்தோடு, பூமியில் திருப்தி இல்லாமல் மனக்குழப்பத்தோடு மனிதன் வாழ்கிறான்.
தான் கட்டிய வீடு,
தன்னுடைய வருமானம்,
எதுவுமே மனிதனுக்கு திருப்தி தருவதில்லை
இதை வாசிக்கிற சகோதரனே! சகோதரியே!
கர்த்தர் உன் கையில் கொடுத்துள்ள வேதம் மட்டுமே உன்னை அது திருப்திப்படுத்தும்
பரலோக ராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார். பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்
பரலோக ராஜ்யத்தை நீ பெற்றுக்கொள்ள வேண்டுமானால். பரிசுத்தமே உனக்கு முக்கியம் என்பதை நீ விளங்கிக்கொள்வாயாக
பரிசுத்த வேதத்தை கர்த்தர் உனக்கு இலவசமாக கொடுத்துள்ளார்
வேத வசனங்களும், கர்த்தருடைய வார்த்தைகளும் நிச்சயமாக உன்னை அது திருப்திப்படுத்தும்
இயேசு கிறிஸ்துவை எந்தளவுக்கு நீ நேசிக்கிறாயோ அந்த அளவுக்கு அவருடைய பரிசுத்தத்தையும் நீ நேசிப்பாயாக
இயேசு கிறிஸ்துவை எந்தளவுக்கு நீ நேசிக்கிறாயோ அந்தளவுக்கு அவருடைய வார்த்தைகளை நீ நேசிப்பாயாக
பரிசுத்த வேதாகமம் மட்டுமே மனிதனை திருப்திப்படுத்தும். இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தை நீ வாசிப்பாயாக
கர்த்தருடைய கற்பனைகள் பரிசுத்தம் கர்த்தருடைய கட்டளைகள் பரிசுத்தம்
கர்த்தருடைய பிரமாணங்கள் பரிசுத்தம்
கர்த்தருடைய நியமங்கள் பரிசுத்தம்
கர்த்தருடைய நீதி நியாயங்கள் பரிசுத்தம்
பரிசுத்தத்தை தேடு, பரிசுத்தமாக இருக்க முயற்சி செய், பரிசுத்தமே உன் முச்சுக்காற்றாய் மாற நீ பிரயாசப்படு இயேசுவின் முகத்தை பார்க்க உனக்கு ஆசைகள் இருக்குமானால் பரிசுத்தமாக இரு
பரிசுத்தமாக வாழ்கிறவர்களை சேர்த்துக்கொள்ள, இயேசு கிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார்.
உன் தேவனை சந்திக்க, நீ ஆயத்தப்படு.
*என்னுடைய முகவரி*
பாஸ்டா் .G. ஜீவன்
நம்பர் 66 . மேட்டு தெரு , புழல்
*சென்னை* - 600066
இந்தியா தமிழ்நாடு
cell no : 9840593839
*My address*
pastor. Jeevan
no : 66 mettu steet
puzhal , chennai - 600066
INDIA Tamil nadu
cell no : 9840593839
வசனவாசிப்பு:
மாற்கு 10: 46,47,52
இயேசுவுக்கு பின் செல்லுங்கள்
எாிகோ என்கிற ஒரு ஊரில் , ஒரு குருடன் வாழ்ந்தான், அவனுடைய பெயா் பா்திமேயு. அந்த குருடனுடைய தொழில் பிச்சை எடுப்பது.
ஒரு நாள் இயேசு எாிகோ பட்டணத்திற்கு ஊழியம் செய்யப்போனாா், அந்த ஊரில் அவா் ஊழியத்தை முடித்துவிட்டு, அந்த ஊரைவிட்டு அவா் வெளியை வரும்போது பா்திமேயு குருடன் இயேசு அவ்வழியாக வருகிறாா் என்று அவன் கேள்விப்பட்டான்
அப்போது, இயேசுவே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும்! என்று அவன் கூப்பிட்டான், அவன் கூப்பிடுவதை இயேசப்பா கவனிக்கவில்லை.
சில போ், நீ கூப்பிடாதே என்று ! சொல்லி அந்த குருடனை அதட்டினாா்கள்.
ஆனால் அவனோ ஏற்கனவே கூப்பிட்ட, சத்தத்தைவிட, இன்னும் அதிகமாக கூப்பிட ஆரம்பித்தான். அப்பொழுது, அவன் கூப்பிட்ட சத்தம், இயேசப்பா காதில் விழுந்துவிட்டது, அந்த குருடன் இயேசுவின் அருகில் வந்தான்.
இயேசப்பா அவனை பாா்த்து , நான் உனக்கு, என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாா்
அதற்கு அந்த குருடன்: ஆண்டவரே நான் பாா்வை அடைய வேண்டும் என்று, அவன் சொன்னான் இயேசு அவனுக்கு பாா்வையை கொடுத்தாா்.
அந்த குருடனுக்கு பாா்வை வந்தவுடன், அவன் இயேசுவின் பின்னாலே போனான் என்று வேதம் சொல்கிறது.
(மாற்கு 10: 52)
எரிகோ பட்டணத்தில் வாழ்ந்த குருடனிடம் நாம் சில பாடங்களை கற்றுக்கொள்ளலாம்
ஏழு தலைப்பாக பிரித்து இதை பிரசங்கம் பண்ணலாம்
1. அவன் இயேசுவை கூப்பிட்டான்.
2. மற்றவா்களை குறைகூறும் இருதயம் அவனிடத்தில் இல்லை.
3. சோா்ந்துப்போகாமல் கூப்பிட்டான்.
4 .மேல் வஸ்திரத்தை எறிந்துவிட்டான்.
5. ஆண்டவரே என்று பாசத்தோடு அழைத்தான்.
6. பாா்வை வேண்டும் என்று கேட்டான்.
7. இயேசுவுக்கு பின் சென்றான்
(மாற்கு 10: 52)
என்கிற ஏழாவது தலைப்பை மட்டும் நாம் எடுத்துக்கொள்ளலாம்
அந்த குருடனுக்கு பார்வை வந்த பிறகு, அவன் இயேசுவுக்கு பின் சென்றான், என்று மாற்கு எழுதின சுவிசேஷம் 10− ம் அதிகாரம் , 52− வது வசனம் பேசுகிறது.
குருடனாய் இருந்தவனுக்கு பார்வை வந்தது, உடனே அவன்: வீட்டுக்குப்போய், அவனுடைய, தாய் தகப்பனை அவன் பாா்க்கவில்லை.
இந்த பூமியில் இருக்கிற இயற்கை காட்சிகளை, அவன் பார்த்து, ரசிக்க போகவில்லை. அவனுடைய சொந்தக்காரர்களை போய் அவன் பார்க்க செல்லவில்லை. அவனுக்கு பார்வை வந்தவுடனே அவன் இயேசுவுக்குப்பின் சென்றான்.
இயேசுவு கிறிஸ்து அவனுக்கு அற்புதத்தை செய்தார்
இயேசு சில சமயம், நமக்கு ஏன் அவா் அற்புதம் செய்யவில்லை.
அதற்கு காரணம், நாம் சுகத்தை பெற்றுக்கொண்ட பிறகு இயேசு கிறிஸ்துவை மறந்துவிடுவோம்.
அதனால் தான்: சில சமயம் கர்த்தர் நமக்கு அற்புதங்களை அவா் நமக்கு செய்வதில்லை. எத்தனையோ நன்மைகளை கர்த்தர் நமக்கு செய்திருக்கிறாா். ஆனால், நமக்குள் நன்றி இல்லை. எத்தனையோ வியாதிகள் நமக்கு வந்தது; கர்த்தர் நமக்கு சுகத்தை தந்தார்; நாம் அதை மறந்துவிட்டோம். எத்தனையோ முறை பணநெருக்கடிகள் நமக்கு வந்தது; கர்த்தர் நல்லவராக இருந்தாா். குடும்பத்தில் பிரச்சனைகள் வந்தது; கர்த்தர் நல்லவராக இருந்தாா். கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளை எண்ணிப்பாருங்கள். கண்ணீரோடு கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்
பா்திமேயு குருடனை கவனியுங்கள் அவனுக்கு பாா்வை கிடைத்தப்பிறகு , உடனே , அவன் இயேசுவுக்கு பின் செல்ல ஆரம்பித்துவிட்டான். நம்மால் பைபிளை பின்பற்ற முடியவில்லை. சத்தியத்தின்படி வாழ நம்மால் முடியல; இதற்கெல்லாம் காரணம் பரிசுத்தம் நம்மிடத்தில் இல்லை. கர்த்தர் நம்மோடு பேசும்போது; நாம் அவருக்கு சரியாக செவி கொடுப்பதில்லை.
இனி நாம் மனந்திரும்பி கர்த்தர் பக்கம் வருவோம் ;
கர்த்தர் நமக்கு கிருபை தருவாராக
யோவான் 10: 27
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
இயேசு கிறிஸ்து பேசிய தீர்க்கதரிசன வாா்த்தைகள் இந்த பா்திமேயு குருடனுக்குள் நிறைவேறியது.
கர்த்தருடைய தீா்க்கதரிசன வாா்த்தைகள் நமக்குள் நிறைவேற வேண்டுமானால் நாம் அவருக்கு பின் செல்ல வேண்டும்
இயேசு நம்முடைய எஜமான். எஜமானுக்கு பின்னாடி தான், நாம் செல்ல வேண்டும். நன்மையும், கிருபையும், நம்மை பின்தொடர வேண்டுமானால் நாம் எஜமானுக்கு பின் செல்ல வேண்டும்.
எஜமானை மீறி எதையும் நாம் செய்யக்கூடாது. அவருக்கு பின் செல்லுகிற ஆடுகளை கர்த்தர் தேடிக்கொண்டிருக்கிறாா்...
எஜமானுடைய ஆசையை நீங்கள் நிறைவேற்றும் ஆடுகளாக இருந்தால் ஆமேன் என்று சொல்லுங்கள்
இயேசுவுக்கு பின் செல்லுங்கள் அப்பொழுது நன்மையும் கிருபையும் உங்களை தொடரும்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
*என்னுடைய முகவரி*
பாஸ்டா் .G. ஜீவன்
நம்பர் 66 . மேட்டு தெரு , புழல்
*சென்னை* - 600066
இந்தியா தமிழ்நாடு
cell no : 9840593839
*My address*
pastor. Jeevan
no : 66 mettu steet
puzhal , chennai - 600066
INDIA Tamil nadu
cell no : 9840593839
வசனவாசிப்பு:
சங்கீதம் 34: 1
சங்கீதம் 34: 6
சங்கீதம் 34: 4
சங்கீதம் 34: 10
சங்கீதம் 34: 8
சங்கீதம் 34−வது அதிகாரத்தை நாம் தியானிப்போம்..
சங்கீதம் 34−வது அதிகாரத்தில் காணப்படும் வசனங்களில், ஒரு ஐந்து தலைப்புகளை அடியேன் குறிப்பிடுகிறேன்
1. எக்காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்திரிங்கள்
2. கர்த்தருக்கு முன்பாக உங்களை தாழ்த்துங்கள்
3. கர்த்தரை தேடுங்கள்
4. கர்த்தர் போஷிப்பார்
5. கர்த்தர் நல்லவர்
இப்படி ஐந்து தலைப்புகளில் சத்திய உபதேசங்களை ஆவியானவர் உதவியோடு நாம் சிந்திக்கலாம்
முதல் தலைப்பு:
சங்கீதம் 34: 1
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
தாவீது தன்னுடைய ஜீவிய காலமெல்லாம், கர்த்தரை நான் ஸ்தோத்திரித்தேன் என்று ! அவனே மேலே உள்ள வசனத்தின் மூலமாக அவன் நம்மிடம் சாட்சிக் கொடுக்கிறான்
தேவன் நமக்கு அற்புதம் அதிசயம் செய்ய வேண்டும் என்று நாம் வாஞ்சிக்கிறோம். ஆனால் தேவனை நாம் எல்லா விதத்திலும் பிரியப்படுத்த வேண்டும் என்கிற வாஞ்சைகள் நமக்குள் இன்று இல்லை. நம்மை நாம் சுத்திகரித்துக் கொள்வோமாக.
விசுவாசத்தோடும், பரிசுத்தத்தோடும், நாம் ஜீவிக்கும்போது, தேவன் நிச்சயமாக நம்முடைய ஜெபத்தை அவர் கேப்பார்.
நாம் தேவனை சந்தேகப்பட கூடாது
என் தேவன்; என் ஜெபத்தை அவர் கேட்பார் என்று நாம் அறிக்கையிட வேண்டும். அப்பொழுது தேவன் நம்முடைய ஜெபத்திற்கு அவர் பதிலளிப்பார்.
தாவீது போல: கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிங்கள்; அவர் துதி எப்போதும் உங்கள் வாயில் இருக்கட்டும்
இரண்டாவது தலைப்பு
கர்த்தருக்கு முன்பாக உங்களை தாழ்த்துங்கள்
சங்கீதம் 34: 6
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார் என்று தாவீது சொல்லுகிறான்
நீங்கள் நினைப்பீர்கள் என்னுடைய பிரச்சனைகள் மாறவே மாறாது என்று நீங்கள் நினைப்பீர்கள். சங்கீதக்காரனாகிய தாவீதை நீங்கள் பாருங்கள். அவன் சொல்லுகிறான். இந்த ஏழை கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்; கர்த்தர் என் ஜெபத்தை கேட்டு, என்னுடைய இடுக்கண்களுக்கெல்லாம் என்னை நீங்கலாக்கி, கர்த்தர் என்னை இரட்சித்து கொண்டார் என்று தாவீது சங்கீதம் 34−வது அதிகாரம் 6−வது வசனத்தில் அவன் சொல்லுகிறான்
நீங்கள் தாவீது போல ; கர்த்தருக்கு முன்பாக உங்களை நீங்கள் தாழ்த்துங்கள் அப்பொழுது கர்த்தர் உங்களை உயர்த்துவார்.
மூன்றாவது தலைப்பு:
கர்த்தரை தேடுங்கள்
சங்கீதம் 34: 4
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்*
கர்த்தரை நீங்கள் தேடினால் உங்களுடைய பயம் உங்களைவிட்டு விலகும். தாவீது கர்த்தரை எல்லா சூழ்நிலையிலும், அவன் உண்மையாக தேடினான். ஆகவே அவனுடைய பயம் அவனை விட்டு விலகியது என்று, அவனே மேலே உள்ள வசனத்தின் மூலமாக சாட்சிக்கொடுக்கிறான்.
நமக்குள் ஏதோ ஒரு பயம் இருந்துக்கொண்டே இருக்கிறது. நம்முடைய இருதயத்தில் சந்தேகங்களும் குழப்பங்களும் பயமும் இருந்துக்கொண்டே இருக்கிறது. இவைகள் அனைத்தும் நம்மைவிட்டு விலக வேண்டுமானால்; கர்த்தரிடம் நாம் நெருங்க வேண்டும். தேவசமுகத்தை நாம் கனப்படுத்த வேண்டும். வாயை திறந்து சத்தமாக நாம் ஜெபிக்க வேண்டும். அப்பொழுது நம்முடைய இருதயத்தில் இருக்கிற எல்லா பயமும் துக்கமும் நம்மைவிட்டு விலகி சென்றுவிடும் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
நான்காவது தலைப்பு:
கர்த்தர் நம்மை போஷிப்பார்:
சங்கீதம் 34: 10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
தேவன் தன்னுடைய பிள்ளைகளை எப்படி போஷிக்கிறார் என்று பாருங்கள். தேவன் நம்முடைய அப்பத்தையும் தண்ணீரையும் அவர் ஆசீர்வதிக்கிறார். மரணபயத்தை நம்மைவிட்டு அவர் விலக்குகிறார். முற்றிலும் தேவன் நம்மை அவர் பொறுப்பெடுத்துக் கொள்கிறார். தேவன் நம்மை ஏந்தி, சுமந்து,போஷித்து, காப்பாற்றி,தேவன் நம்மை வழி நடத்துகிறார்
கண்ணீரோடு கவலையோடு நாம் இருக்கும்போது. தேவன் நமக்கு நன்மைகளை செய்கிறார். இயேசு அப்பா என்று நாம் கூப்பிடும்போது. நம்மை தேவன் அளவில்லாமல் போஷிக்கிறார்.
நம்முடைய பஞ்சம் பசியை தேவன் மாற்றி; நமக்கு அவர் அதிசயங்களை செய்கிறார். அவருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.
ஐந்தாவது தலைப்பு:
கர்த்தர் நல்லவர்
சங்கீதம் 34: 8
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்* என்று சொல்லப்பட்டுள்ளது.
ஒரு காரியத்தில் நாம் ஜெயமெடுக்க வேண்டுமானால் கர்த்தர் மேல் நாம் நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
கர்த்தர் நல்லவர் எனக்கு அவர் நன்மை செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும் என்று நீதிமொழிகள் 21−வது அதிகாரம் 31−வது வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது
உங்களுடைய ஜெபம் பரலோக ராஜ்யத்தில் கேட்கப்பட வேண்டுமானால்..
கர்த்தரை ஸ்தோத்திரம் பண்ணுங்கள். கர்த்தரை தேடுங்கள். கர்த்தருக்கு முன்பாக உங்களை நீங்கள் தாழ்த்துங்கள். அப்பொழுது தேவன் உங்களை போஷித்து ;
தேவன் உங்களுக்கு நன்மை செய்வார். அதிசயங்களையும், அற்புதங்களையும், தேவன் உங்களுடைய வாழ்க்கையில் அளவில்லாமல் செய்வார்
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
*என்னுடைய முகவரி*
பாஸ்டா் .G. ஜீவன்
நம்பர் 66 . மேட்டு தெரு , புழல்
*சென்னை* - 600066
இந்தியா தமிழ்நாடு
*My address*
pr. Jeevan
no : 66 mettu steet
puzhal , chennai - 600066
INDIA Tamil nadu
prayers 9840593839
pr. Jeevan (chennai)
வசனவாசிப்பு:
பிலிப்பியர் 2: 25, 26, 27, 28, 29
பிலிப்பியர் 2: 19, 20, 21 ,22
2 தீமோத்தேயு 4: 10
2 தீமோத்தேயு 4: 9
1 தீமோத்தேயு 1: 19, 20
பவுல் என்கிற ஊழியக்காரனால் அங்கிரிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் யார் யார் என்று நாம் அறிந்துக்கொள்ள வேண்டும்
1. தீத்து
2. தீமோத்தேயு
3. மாற்கு
தீத்து, தீமோத்தேயு, மாற்கு ஆகிய மூன்று ஊழியர்களும், பவுல் என்கிற ஊழியக்காரனால் அவர்கள் சாட்சி பெற்று உள்ளார்கள். அதைப்பற்றி வசன ஆதாரத்தோடு நாம் பார்க்கலாம்.
தீத்துக்கு பவுல் கொடுக்கும் சாட்சி:
பிலிப்பியர் 2: 25-29
25. மேலும், என் சகோதரனும், உடன்வேலையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்
26. அவன் உங்கள் எல்லார் மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே, மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்
27. அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார்
28. ஆகையால் நீங்கள் அவனை மறுபடியும் கண்டு சந்தோஷப்படவும், என் துக்கங் குறையவும், அவனை அதிசீக்கிரமாய் அனுப்பினேன்
29. ஆனபடியினாலே நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்
தீமோத்தேயு
தீமோத்தேயு என்கிற ஊழியக்காரனுக்கு பவுல் கொடுக்கும் சாட்சி:
பிலிப்பியர் 2: 19-22
19. அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன்*
20. அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறோருவனும் என்னிடத்திலில்லை.
21. மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்
22. தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்*
மாற்கு
மாற்கு என்கிற ஊழியக்காரனுக்கு பவுல் கொடுக்கும் சாட்சி:
2 தீமோத்தேயு 4: 10
லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்
தீத்துவை கனமாய் எண்ணுங்கள் என்று பவுல் தீத்து என்கிற ஊழியக்காரனுக்கு பவுல் சாட்சி கொடுக்கிறார்
தீமோத்தேயு... என்னை போலவே அவனுக்கும் மனம் இருக்கிறது என்றும், அவனும் என்னை போல கர்த்தருடைய கிரியைகளை நடப்பிக்கிறவன் என்றும், தீமோத்தேயு என்கிற ஊழியக்காரனுக்கு பவுல் சாட்சி கொடுக்கிறார்
மாற்கு ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன் என்று... மாற்கு என்கிற ஊழியக்காரனுக்கு பவுல் சாட்சி கொடுக்கிறார்
ஆனப்படியினால் தீத்து, தீமோத்தேயு, மாற்கு, ஆகிய மூன்று ஊழியர்களும் வேதத்தில் சாட்சியோடு அவர்கள் மூவரும் காணப்படுகிறார்கள்
கர்த்தருக்கு நாம் ஊழியம் செய்தால்.... தீத்து, தீமோத்தேயு, மாற்கு போல பரிசுத்தமாகவும் நீதியாகவும் கர்த்தருக்கு நாம் ஊழியம் செய்ய வேண்டும்
பவுலால் அங்கீகரிக்கப்படாத மூன்று ஊழியர்களைப் பற்றி நாம் பார்க்கலாம்
1.தேமா
2.இமெனெயு
3. அலெக்சந்தர்
தேமா
தேமாவை பற்றி பவுல் சொல்லுகிற சாட்சியை பாருங்கள்
2 தீமோத்தேயு 4: 9
ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப்பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்
இமெனெயு
அலெக்சந்தர் ஆகியோரைப் பற்றி பவுல் சொல்லுகிற சாட்சியை பாருங்கள்
1 தீமோத்தேயு 1: 19, 20
19. இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
20. இமெனெயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.
தேமா இமெனெயு அலெக்சந்தர் போல ஊழியத்தைவிட்டு நாம் ஒடிப்போகக்கூடாது.
தேமாவுக்கு உலகத்தின் மேல் அவனுக்கு ஆசை வந்தவுடன் ஊழியத்தை அவன் விட்டுவிட்டான்.
இமெனெயும், அலெக்சந்தரும், விசுவாச துரோகம் செய்ததால், அவர்கள் இருவரும் ஊழியத்தில் விசுவாசமாக நிற்க முடியாமல் போய்விட்டது.
தீத்து தீமோத்தேயு மாற்கு போன்ற பரிசுத்தவான்களை போல கர்த்தருக்கு நாம் ஊழியம் செய்து ஆவியானவரால் நாம் சாட்சி பெறுவோம்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
*என்னுடைய முகவரி*
பாஸ்டா் .G. ஜீவன்
நம்பர் 66 . மேட்டு தெரு , புழல்
*சென்னை* - 600066
இந்தியா தமிழ்நாடு
cell no : 9840593839
*My address*
pastor. Jeevan
no : 66 mettu steet
puzhal , chennai - 600066
INDIA Tamil nadu
cell no : 9840593839