================
இந்த கேள்வி யார் யாரிடம் கேட்டது?
=================
1. ”இது எப்படி ஆகும்? புருஷனை அறியேனே” என்று யார் யாரிடம் சொன்னது?
2. ”ஒரு மணி நேரம் விழித்திருக்கக் கூடாதா?” என்று யார் யாரிடம் சொன்னது?
3.”ஓரு வேளை அவளாள் என் வீடு கட்டப் படும்” என்று யார் யாரிடம் சொன்னது?
4. ”என் தகப்பனே” என்று யார் யாரிடம் சொன்னது?
5. ”உற்பத்தி கால திட்டத்தில் ஒரு பிள்ளையை பெற்றாள்” என்று யார் யாரிடம் சொன்னது?
6. ”என் மீறுதலை நீர் மன்னியாமலும் என்ஆக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன?” என்று யார் யாரிடம் சொன்னது?
7. ”நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னை விட்டு விலக்கு” என்று யார் யாரிடம் சொன்னது?
8. ”நீ பயப்படாதே. நீ காண்கிறது என்ன?” என்று யார் யாரிடம் சொன்னது?
9. ”கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பான இந்த காரியத்தை செய்து அவருடைய வார்த்தையை அசட்டை பண்ணியது என்ன?” என்று யார் யாரிடம் சொன்னது?
10. ”நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி உனக்குச் சவுக்கியத்தை தேடாதிருப்பேனோ?” என்று யார் யாரிடம் சொன்னது?
விடை:
===========
1. ”இது எப்படி ஆகும்? புருஷனை அறியேனே” என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: இயேசுவின் தாயாகிய மரியாள் தேவ தூதனிடம் சொன்னது
லூக்கா 1:34
2. ”ஒரு மணி நேரம் விழித்திருக்கக் கூடாதா?” என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: இயேசு பேதுருவிடம் சொன்னது
மாற்கு 14:37
3.”ஓரு வேளை அவளாள் என் வீடு கட்டப்படும்” என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: சாராய் ஆபிரகாமிடம் சொன்னது
ஆதியாகமம் 16:2
4. ”என் தகப்பனே” என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: ஈசாக்கு ஆபிரகாமிடம் சொன்னது
ஆதியாகமம் 22:7
5. ”உற்பத்தி காலதிட்டத்தில் ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாய்” என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: எலிசா தீர்க்கதரிசி சூனேமியாளிடம் சொன்னது
2 இராஜாக்கள் 4:16-17
6. ”என் மீறுதலை நீர் மன்னியாமலும் என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன?” என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: யோபு கர்த்தரிடம் சொன்னது
யோபு 7:21
7. ”நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னை விட்டு விலக்கு” என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: ஏலி அன்னாளிடம் சொன்னது
1 சாமுவேல் 1:13,14
8. ”நீ பயப்படாதே. நீ காண்கிறது என்ன?” என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: சவுல் அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயிடம் சொன்னது
1 சாமுவேல் 28:13
9. ”கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பான இந்த காரியத்தை செய்து அவருடைய வார்த்தையை அசட்டை பண்ணியது என்ன?” என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: நாத்தான் தாவீதிடம் சொன்னது
2 சாமுவேல் 12:9
10. ”நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி, நான் உனக்குச் சவுக்கியத்தை தேடாதிருப்பேனோ?” என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: நகோமி ரூத்திடம் சொன்னது
ரூத் 3:1
==========
கேள்விகள்
===========
1.நீர் என் கால்களை கழுவலாமா? யார் யாரிடம் கூறியது?
2. உன் அறையைக் கட்டி உன் பாதரட்சைகளை தொடுத்துக் கொள் -யார் யாரிடம் கூறியது?
3. மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது- யார் யாரிடம் கூறியது?
4. நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை-யார் யாரிடம் கூறியது?
5. பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளை புரட்டுவதில் ஓய மாட்டாயோ-யார் யாரிடம் கூறியது?
6. மனுஷருக்கு கீழ்ப்படிவதை பார்க்கிலும் தேவனுக்கு கீழ்ப்படிகிறது அவசியமாயிருக்கிறது-யார் யாரிடம் கூறியது?
7.மிகவும் ஸ்தூலித்த மனுஷனாய் இருந்தவன் யார்?
8.இடது கை பழக்கம் உள்ளவனாய் இருந்தவன் யார்?
9.லிபிதோத்தின் மனைவி யார்?
10 .நீ எழுந்து போ உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்று இயேசு யாரிடம் கூறினார்?
கேள்விக்கு பதில்
================
1. ”நீர் என் கால்களை கழுவலாமா?” என்று யார் யாரிடம் கூறியது?
Answer: சீமோன் பேதுரு இயேசுவிடம் கூறியது
யோவான் 13:6
2. ”உன் அறையைக் கட்டி உன் பாதரட்சைகளை தொடுத்துக் கொள்” என்று யார் யாரிடம் கூறியது?
Answer: கர்த்தருடைய தூதன் பேதுருவிடம் கூறியது
அப்போஸ்தலர் 12:7,8
3. ”மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது” என்று யார் யாரிடம் கூறியது?
Answer: இயேசு அந்திரேயாவையும், பிலிப்புவையும் நோக்கி கூறியது
யோவான் 12:22,23
4. ”நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை” என்று யார் யாரிடம் கூறியது?
Answer: கர்த்தர் யோசுவாவிடம் கூறியது
யோசுவா 1:5
5. ”பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளை புரட்டுவதில் ஓய மாட்டாயோ” என்று யார் யாரிடம் கூறியது?
Answer: சவுல் (பவுல்) பரிசுத்த ஆவியினால் நிறைந்து மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய எலிமாவிடம் கூறியது
அப்போஸ்தலர் 13:8-10
6. ”மனுஷருக்கு கீழ்ப்படிவதை பார்க்கிலும் தேவனுக்கு கீழ்ப்படிகிறது அவசியமாயிருக்கிறது” என்று யார் யாரிடம் கூறியது?
Answer: பிரதான ஆசாரியனுக்கு பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் கூறியது
அப்போஸ்தலர் 5:27,29
7. மிகவும் ஸ்தூலித்த மனுஷனாய் இருந்தவன் யார்?
Answer: எக்லோன்
நியாயாதிபதிகள் 3:17
8. இடது கை பழக்கம் உள்ளவனாய் இருந்தவன் யார்?
Answer: ஏகூத்
நியாயாதிபதிகள் 3:15
9. லிபிதோத்தின் மனைவி யார்?
Answer: லபிதோத்தின் மனைவி தெபொராள்
நியாயாதிபதிகள் 4:4
10 .நீ எழுந்து போ உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்று இயேசு யாரிடம் கூறினார்?
Answer: சுகமான பத்து குஷ்டரோகமுள்ள மனுஷரில் திரும்பிவந்து தேவனை மகிமை படுத்திய ஒரு சுகமான குஷ்டரோகியை நோக்கி இயேசு கூறியது.
லூக்கா 17:19
========================
வேதாகமத்தில் காற்று சம்மந்தப்பட்ட கேள்விகள்
========================
1) வீட்டைக் கலைக்கிறவன் சுதந்தரிப்பது எது?
2) காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது - இதை யார் யாரிடம் சொன்னது?
3) பலத்த காற்று ஆடிக்கிற முழக்கம் எதை நிறப்பிற்து? எந்த நாளில் நிறப்பிற்று?
4) காற்றை தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? இந்தவசனம் வரும் இடம் கூறவும்.
5) அவர்கள் காற்றை விதைத்து எதை அறுப்பார்கள்?
6) தந்திரமுள்ள போதகமாகிய, சூதும், வஞ்சகமும் எதற்கு ஒப்பிடப்படுகிறது?
7) காற்றினால் அசையும் நாணலையோ? இந்த கேள்வி கேட்டது யார்?
8) காற்றினால் அடிப்பட்டு அலைகிறவன் யார்?
9) உடனே அமைதல் எப்பொழுது உண்டாயிற்று?
10) காற்று இருக்கும் இடம் எது?
11) எதை கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்?
12) கர்த்தர் யோபுவுக்கு எதிலிருந்து உத்தரவு கொடுத்தார்?
காற்று சம்மந்தப்பட்ட கேள்விகளின் பதில்கள்
==============
1) வீட்டைக் கலைக்கிறவன் சுதந்தரிப்பது எது?
Answer: காற்றை
நீதிமொழிகள் 11:29
2) காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது - இதை யார் யாரிடம் சொன்னது?
Answer: இயேசு - நிக்கொதேமுவிடம்
யோவான் 3:8
3) பலத்த காற்று ஆடிக்கிற முழக்கம் எதை நிறப்பிற்து?
எந்த நாளில் நிறப்பிற்று?
Answer: வீடு முழுவதும் . பெந்தெகொஸ்தே நாளில்
அப்போஸ்தலர் 2:1,2
4) காற்றை தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? இந்தவசனம் வரும் இடம் கூறவும்.
Answer: நீதிமொழிகள் 30:4
5) அவர்கள் காற்றை விதைத்து எதை அறுப்பார்கள்?
Answer: சூறைக்காற்றை
ஓசியா 8:7
6) தந்திரமுள்ள போதகமாகிய, சூதும், வஞ்சகமும் எதற்கு ஒப்பிடப்படுகிறது?
Answer: பலவிதகாற்றிற்கு
எபேசியர் 4:14
7) காற்றினால் அசையும் நாணலையோ? இந்த கேள்வி கேட்டது யார்?
Answer: இயேசு கிறிஸ்து
லூக்கா 7:24
8) காற்றினால் அடிப்பட்டு அலைகிறவன் யார்?
Answer: சந்தேகப்படுகிறவன்
யாக்கோபு 1:6
9) உடனே அமைதல் எப்பொழுது உண்டாயிற்று?
Answer: காற்றை அதட்டினபோது
மத்தேயு 8:26
10) காற்று இருக்கும் இடம் எது?
Answer: பண்டகசாலை
எரேமியா 51:16
11) எதை கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்?
Answer: காற்றை
பிரசங்கி 11:4
12) கர்த்தர் யோபுவுக்கு எதிலிருந்து உத்தரவு கொடுத்தார்?
Answer: பெருங்காற்றிலிருந்து
யோபு 38:11
==================
நாளின் நேரங்கள் (கேள்விகள்)
====================
1. வாரத்தின் __________ நாள் விடிந்து வருகையில் மரியாள் கல்லறைக்குச் சென்றாள்.
2. தீவட்டிகளைப் பிடித்து காத்திருந்த கன்னிகைகளுக்கு மணவாளன் வருகிறார் என்று எப்போது அறிவிக்கப்பட்டது?
3.சவுல் தமஸ்குவிலே சந்திக்கப்பட்ட நேரம் என்ன?
4. ________ முளைத்துப் பூத்து _________ அறுப்புண்டு உலர்ந்துபோம்.
5. பூமியெங்கும் அந்தகாரமுண்டான நேரம் எது?
6. இயேசுவைச் சந்திக்க நிக்கோதேமு எந்தநேரத்தில் வந்தான்?
7. எம்மாவுக்குப் போகும் சீடர்களுடன் இயேசு எந்த நேரத்தில் உடன் சென்றார்?
8. பொந்தேகோஸ்தே நாளில் பேதுரு எழுந்து பேசும் பொழுது எந்த மணி வேளை?
9. மேய்ப்பர்கள் தங்கள் மந்தையை எப்போது காத்துக் கொண்டிருந்தார்கள்?
10. சமரியா நாட்டின் யாக்கோபுடைய கிணற்றில் இயேசு வந்தது எந்த மணி வேளை?
11.பயங்கரம் எப்போது உண்டாகும்? அம்பு எப்போது பறக்கும் ?
12. பேதுருவும் யோவானும் ஜெப ஆலயத்திற்கு போகும்போது நேரம் என்ன?
13. ________ _______ ________ தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்
நாளின் நேரங்கள் கேள்விக்கான பதில்கள்
===================
1. வாரத்தின் __________ நாள் விடிந்து வருகையில் மரியாள் கல்லறைக்குச் சென்றாள்.
Answer: முதல்
மத்தேயு 28:1
2. தீவட்டிகளைப் பிடித்து காத்திருந்த கன்னிகைகளுக்கு மணவாளன் வருகிறார் என்று எப்போது அறிவிக்கப்பட்டது?
Answer: நடுராத்திரியில்
மத்தேயு 25:6
3. சவுல் தமஸ்குவிலே சந்திக்கப்பட்ட நேரம் என்ன?
Answer: மத்தியான வேளையில்
அப்போஸ்தலர் 26:13
4. காலையிலே முளைத்துப் பூத்து _________ அறுப்புண்டு உலர்ந்துபோம்.
Answer: மாலையில்
சங்கீதம் 90:6
5. பூமியெங்கும் அந்தகாரமுண்டான நேரம் எது?
Answer: ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரை
லூக்கா 23:44
6. இயேசுவைச் சந்திக்க நிக்கோதேமு எந்த நேரத்தில் வந்தான்?
Answer: இராக்காலம்
யோவான் 3:1,2
7. எம்மாவுக்குப் போகும் சீடர்களுடன் இயேசு எந்த நேரத்தில் உடன் சென்றார்?
Answer: சாயங்காலம்
லூக்கா 24:29
8. பெந்தேகோஸ்தே நாளில் பேதுரு எழுந்து பேசும் பொழுது எந்த மணி வேளை?
Answer: மூன்றாம் மணி
அப்போஸ்தலர் 2:15
9. மேய்ப்பர்கள் தங்கள் மந்தையை எப்போது காத்துக் கொண்டிருந்தார்கள்?
Answer: இராத்திரியில்
லூக்கா 2:8
10. சமாரியா நாட்டின் யாக்கோபுடைய கிணற்றில் இயேசு வந்தது எந்த மணி வேளை?
Answer: ஆறாம் மணி
யோவான் 4:6
11. பயங்கரம் எப்போது உண்டாகும்? அம்பு எப்போது பறக்கும் ?
Answer: இரவில், பகலில்
சங்கீதம் 91:5
12. பேதுருவும் யோவானும் ஜெப ஆலயத்திற்கு போகும்போது நேரம் என்ன?
Answer: ஒன்பதாம் மணி
அப்போஸ்தலர் 3:1
13 ______ _________ _________ தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை கேட்டார்கள்
Answer: பகலில் குளிர்ச்சியான வேளையிலே
ஆதியாகமம் 3:8
================
தலைப்பு: இரத்தம் (கேள்விகள்)
=================
1) ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்த இரத்தம்?
2) இந்த பழிக்கு நான் குற்றமற்றவன் அது என்ன இரத்தம்?
3) கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம்?
4) நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே _________
5) என் பானமாயிருக்கிற இரத்தம் என்ன?
6) கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தின இரத்தம்?
7) நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தம் என்ன?
8) சிலுவையில் சிந்தின இரத்தம் எதை உண்டாக்கினது?
9) இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் _________ இரத்தம் தெரிந்துக் கொள்ளப்பட்டது
10) அவருடைய இரத்தத்தினாலே நமக்கு என்ன உண்டாக்குகிறது?
11) ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் _________ பெற்ற இரத்தம்
12) யாருடைய இரத்தம் பூமியிலிருந்து கேட்கப்பட்டது?
தலைப்பு: இரத்தம் (பதில்கள்)
============
1) ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்த இரத்தம்?
Answer: சொந்த இரத்தம்
எபிரேயர் 9:12
2) இந்த பழிக்கு நான் குற்றமற்றவன் அது என்ன இரத்தம்?
Answer: நீதிமானின் இரத்தம்
மத்தேயு 27:24
3) கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம்?
Answer: குற்றமில்லாத மாசற்ற இரத்தம்
1 பேதுரு 1:19
4) நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே _______
Answer: விடுதலை பண்ணும் இரத்தம்
சகரியா 9:11
5) என் பானமாயிருக்கிற இரத்தம் என்ன?
Answer: மெய்யான இரத்தம்
யோவான் 6:55
6) கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தின இரத்தம்?
Answer: விசுவாசிக்கிற இரத்தம்
ரோமர் 3:26
7) நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தம் என்ன?
Answer: ஐக்கியத்தின் இரத்தம்
1 கொரிந்தியர் 10:16
8) சிலுவையில் சிந்தின இரத்தம் எதை உண்டாக்கினது?
Answer: சமாதானத்தை
கொலோசெயர் 1:20
9) இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் ________ இரத்தம் தெரிந்துக் கொள்ளப்பட்டது
Answer: தெளிக்கப்படுகிற இரத்தம்
1 பேதுரு 1:2
10) அவருடைய இரத்தத்தினாலே நமக்கு என்ன உண்டாக்குகிறது?
Answer: தைரியம் கொடுக்கும் இரத்தம்
எபிரேயர் 10:20
11) ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் _______ பெற்ற இரத்தம்
Answer: விலையேற
1 பேதுரு 1:19
12) யாருடைய இரத்தம் பூமியிலிருந்து கேட்கப்பட்டது?
Answer: ஆபேலின் இரத்தம்
ஆதியாகமம் 4:10
====================
நற்சாட்சிப் பெற்ற்வர்கள் (கேள்விகள்)
===================
1.தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தவன் யார்?
2. வேறே ஆவியை உடையவனும் உத்தமமாய்க் கர்த்தரைப் பின்பற்றி வந்தவனும் யார்?
3. தன் காணிக்கைளாலே தேவனிடம் சாட்சிப் பெற்றவன் யார்?
4. விசுவாசத்தினால் உண்டாகும் நீதிக்கு சுதந்திரவாளியாகி கர்த்தருடைய கண்களில் கிருபைப் பெற்றவன் யார்?
5. விசுவாசிகளின் தகப்பன் என்று பேர் பெற்றவன் யார்?
6. கிருபை பெற்றவளே வாழ்க! ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று சாட்சிப் பெற்ளவள் யார்?
7. ,இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன் - இது யார்?
8.நான் தெரிந்துக் கொண்டப் பாத்திரம் - இது யார்?
9. விசுவாசத்திலும் வல்லமையிலும் நிறைந்தவன் யார்?
10. தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவன் என்று அழைக்கப்பட்டது யார்?
11. பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவனாயிருந்தவன் யார்?
12.தேவனுடைய இருதயத்துக்குப் பிரியமானவனாய் இருந்ததால் சாட்சிப் யார்?பெற்றவன் யார்?
13. தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாய் இருந்தவர்கள் யார்?
14. கொஞ்சம் பெலனிருந்தும் என் நாமத்தை மறுதலியாமல்.... என்று சாட்சிப் பெற்ற சபை எது?
15. உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுபவனும் ...... என்று சாட்சிப் பெற்றது யார்?
நற்சாட்சிப் பெற்ற்வர்கள் - கேள்விக்கான பதில்
=====================
1.தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தவன் யார்?
Answer: மோசே
எபிரெயர் 3:2
2. வேறே ஆவியை உடையவனும் உத்தமமாய்க் கர்த்தரைப் பின்பற்றி வந்தவனும் யார்?
Answer: காலேப்
எண்ணாகமம் 14:24
3. தன் காணிக்கைளாலே தேவனிடம் சாட்சிப் பெற்றவன் யார்?
Answer: ஆபேல்
எபிரெயர் 11:4
4. விசுவாசத்தினால் உண்டாகும் நீதிக்கு சுதந்திரவாளியாகி கர்த்தருடைய கண்களில் கிருபைப் பெற்றவன் யார்?
Answer: நோவா
ஆதியாகமம் 6:8
எபிரெயர் 11:7
5. விசுவாசிகளின் தகப்பன் என்று பேர் பெற்றவன் யார்?
Answer: ஆபிரகாம்
கலாத்தியர் 3:7
6. கிருபை பெற்றவளே வாழ்க! ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று சாட்சிப் பெற்ளவள் யார்?
Answer: மரியாள்
லூக்கா 1:28
7. ,இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன் - இது யார்?
Answer: நாத்தான்வேல்
யோவான் 1:47
8.நான் தெரிந்துக் கொண்டப் பாத்திரம் - இது யார்?
Answer: பவுல்
அப்போஸ்தலர் 9:15
9. விசுவாசத்திலும் வல்லமையிலும் நிறைந்தவன் யார்?
Answer: ஸ்தேவான்
அப்போஸ்தலர் 6:8
10. தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவன் என்று அழைக்கப்பட்டது யார்?
Answer: யோ.ஸ்நானகன்
லூக்கா 7:26
11. பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவனாயிருந்தவன் யார்?
Answer: மோசே
எண்ணாகமம் 12:3
12.தேவனுடைய இருதயத்துக்குப் பிரியமானவனாய் இருந்ததால் சாட்சிப் யார்? பெற்றவன் யார்?
Answer: தாவீது
அப்போஸ்தலர் 13:22
13. தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாய் இருந்தவர்கள் யார்?
Answer: பெரோயா பட்டணம்
அப்போஸ்தலர் 17:11
14. கொஞ்சம் பெலனிருந்தும் என் நாமத்தை மறுதலியாமல்.... என்று சாட்சிப் பெற்ற சபை எது?
Answer: பில்தெல்பியா சபை
வெளிப்படுத்தல் 3:8
15. உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுபவனும் ...... என்று சாட்சிப் பெற்றது யார்?
Answer: யோபு
யோபு 2:3
============
பைபிள் கேள்விகள்
==============
1) என்னையும் ஆசீர்வதியும் என்றவன் யார்?
2) என்னையும் ஆசீர்வதியுங்கள் என்று சொன்னவன் யார்?
3) பாட்டியின் மடியில் வளர்க்கப்பட்ட பேரன் யார்?
4) தாத்தாவின் மடியில் வளர்க்கப்பட்ட மூன்றாம் தலைமுறை யார்?
5) நிறைவாய் போய் வெறுமையாய் திரும்பியது யார்?
6) வெறுமையாய் போய் நிறைவாய் திரும்பியது யார்?
7) ஒரு கூலிக்காரன் உடைய நாட்கள் எவ்வளவு?
8) ஒரு ராஜாவின் நாட்கள் எவ்வளவு?
9) நீதிமானும் உத்தமணுமாய் இருந்தவன் யார்?
10) உத்தமனும் நீதிமானமாய் இருந்தவன் யார்?
11) தாற்றுக்கோல்ப் போல இருப்பவை எவை?
12) அறுநூறூப்பேரை ஒரு தாற்றுக்கோளால் முறியடித்தவன் யார்?
13) கூடை வைத்து மதில் வழியாய் இறக்கி விடப்பட்டவன் யார்?
14) கூடையில் வைத்து அனுப்பப்பட்ட எழுபது தலைகள் எந்த ராஜாவின் குமாரருடையது?
15) ஊத்ஸ் தேசத்தில் இருந்த மனுஷன் யார் ?
பதில்கள்
==============
1) என்னையும் ஆசீர்வாதியும் என்றவன் யார்?
Answer: ஏசா
ஆதியாகமம் 27:34
2) என்னையும் ஆசீர்வதிங்கள் என்று சொன்னவன் யார்?
Answer: பார்வோன்
யாத்திராகமம் 12:30,32
3) பாட்டின் வழியில் வளர்க்கப்பட்ட பேரன் யார்?
Answer: ஓபேத் -நகோமியின் மடியில்
ரூத் 4:16,17
4) தாத்தாவின் மடியில் வளர்க்கப்பட்ட மூன்றாம் தலைமுறை யார்?
Answer: மனசேயின் குமாரனாகிய மாகிரீயின் பிள்ளைகள் - யோசேப்பின் மடியில்
ஆதியாகமம் 50:23
5) நிறைவாய் போய் வெறுமையாய் திரும்பியது யார்?
Answer: நகோமி
ரூத் 1:21
6) வெறுமையாய் போய் நிறைவாய் திரும்பியது யார்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 32:10
7) ஒரு கூலிக்காரன் உடைய நாட்கள் எவ்வளவு?
Answer: மூன்று வருஷம்
ஏசாயா 16:14
8) ஒரு ராஜாவின் நாட்கள் எவ்வளவு?
Answer: எழுபது வருஷம்
ஏசாயா 23:15
9) நீதிமானும் உத்தமணுமாய் இருந்தவன் யார்?
Answer: நோவா
ஆதியாகமம் 6:9
10) உத்தமனும் நீதிமானமாய் இருந்தவன் யார்?
Answer: யோசேப்பு என்னும் பேர் கொண்ட ஒரு ஆலோசனைக்காரன்
லூக்கா 23:50
11) தாற்றுக்கோல்ப் போல இருப்பவை எவை?
Answer: ஞானிகளின் வாக்கியங்கள்
பிரசங்கி 12:11
12) அறுநூறு பேரை ஒரு தாற்றுக்கோளால் முறியடித்தவன் யார்?
Answer: சம்கார்
நியாயாதிபதிகள் 3:31
13) கூடை வைத்து மதில் வழியாய் இறக்கி விட்டவன் யார்?
Answer: சவுலாகிய பவுல்
அப்போஸ்தலர் 9:23,25
14) கூடையில் வைத்து அனுப்பப்பட்ட எழுபது தலைகள் எந்த ராஜாவின் குமாரருடையது?
Answer: ஆகாப்
2 இராஜாக்கள் 10:1,7
15) ஊத்ஸ் தேசத்தில் இருந்த மனுஷன் யார்?
Answer: யோபு
யோபு 1:1