================
நெகேமியாவின் புஸ்தகம், 1-ம் அதிகாரம்
==================
1. நெகேமியா எந்த அரண்மனையில், ராஜாவிடம் எத்தகைய பணிபுரிந்ததாகவும் தெரியவருகிறது?
ஆதியாகமம் 40:13,21
2. இவன் ஏறெடுத்த ஜெபத்தில், தேவ வாக்குத்தத்தத்தை (உபாகமம் 30:4), சுட்டிக்காட்டி ஜெபித்ததை, எவ்வசனம் வெளிப்படுத்துகிறது?
யோபு 13:3
3. எப்படிப்பட்டவர்களுக்கு கர்த்தர் உடன்படிக்கையை யும், கிருபையையும் காக்கிறவரென்று நெகேமியா நினைவுகூர்ந்திருக்கிறான்?
உபாகமம் 7:9
4. இவனுடைய ஜெபம், தேவபயத்தோடுகூட ஏறெடுக்கப்பட்டதை எங்கு அறிய இயலும்?
சங்கீதம் 34:9
சங்கீதம் 115:13
5. வேண்டுதலை தெரிவிக்கமுன்னரே, பாவ அறிக்கை செய்திருப்பதை எவ்வசனங்களில் காணலாம்?
நீதிமொழிகள் 28:13
6. நெகேமியா அழுது, துக்கித்து, உபவாசித்து மன்றாடியது யாருக்காக, எவைகளினிமித்தமாக?
1 தீமோத்தேயு 2:1
7. திறப்பிலே நின்று ஜெபித்த மோசேக்கு ஒப்பாக (யாத்திராகமம் 32:11) இவனும் ஜனங்கள் யாருடையவர்களென பரிந்துபேசினான்?
==============
நெகேமியாவின் புஸ்தகம், 2-ம் அதிகாரம் (பகுதி-1)
=============
1. தயவுள்ள நன்மைக்கேதுவான தேவகரம், தன்னோடிருப்பதைக்குறித்து நெகேமியா எங்கெங்கு சாட்சியிட்டிருக்கிறான்?
2. கேட்ட காரியம் குறித்து இவன் ராஜாவிடம் வேண்டுவதற்கு முன்னரே யாரிடம் வேண்டினான்?
3. பரிகசித்து நிந்தித்தவர்களிடமும் (நெகே.6:6), தேவனால் காரியம் வாய்க்குமென நெகேமியா அறிக்கையிட்டதை எவ்வசனங்களில் அறிய இயலும்?
4. பானபாத்திரக்காரனான இவன், தனது வேலையின் மத்தியிலும், எதைக்குறித்த நினைப்போடு இருந்தது தெரிகிறது?
நெகேமியா 1:3
சங்கீதம் 137:6
5. நகரத்திற்கான மற்றும் தனக்கான வேலைகளிலும் தேவாலய வேலைக்கு முதலிடம் கொடுத்து, ராஜாவிடம் யாருக்கு கடிதம் கொடுக்க வேண்டினான்?
ஆகாய் 1:8
6. மேலும் எஸ்றா 8:36-க்கு ஒப்பாக நெகேமியாவும், செல்லும் வழியைச் செவ்வையாக்கும்படிக்கு, யாருக்கு கடிதங்களை வேண்டினான்?
சங்கீதம் 5:8
7. எருசலேமிலும் அலங்கத்தைக் கட்ட இவன், யார் யாருக்கு அழைப்புவிடுத்தான்?
ஏசாயா 58:12
=============
நெகேமியாவின் புஸ்தகம், 2-ம் அதிகாரம் (பகுதி-2)
===============
1. நெகேமியா எருசலேமிலே தேவ சித்தத்தைச் செய்ய, தேவனாலேயே இருதய ஏவுதல் பெற்றதை, எங்கு வெளிப்படுத்தியிருக்கிறான்?
2. வாக்குத்தத்தம் நிறைவேற (ஏசாயா 61:4), கட்டுமானம், ஊழியக்காரராகிய தங்களைக்கொண்டு, அவராலேயே கைகூடி வரப் பண்ணப்படுமென்று எங்கு அறிக்கை செய்திருக்கிறான்?
3. நெகேமியா செவ்வையாக்க வேண்டியவைகளைப் பார்வையிட எவையெவற்றை கடந்து வரவேண்டியிருந்தது?
நெகேமியா 3:13
நெகேமியா 12:31
4. வலுசர்ப்பத் துரவை மட்டுமன்றி, எவ்வித விசனத்திற்கு உட்பட்ட வலுசர்ப்ப கிரியைகளுக்கு உடன்பட்டிருந்த யார் யாரையும் எதிர்கொள்ள நேரிட்டது?
நெகேமியா 4:1,7
5. இத்தகையவர்கள், தேவசித்தத்திற்கு எதிராக, அதை செயல்படுத்த வந்த அவருடைய ஊழியன் நெகேமியாவிடம் எப்படி நடந்து, என்ன வினவினார்கள்?
சங்கீதம் 44:13-19
6. அர்தசஷ்டாவிடம் நெகேமியா, எதினால் யூதா தேசம் செல்ல அனுமதி வேண்டியிருந்தான்?
7. இதனிமித்தம் ராஜாவால் இவனோடுகூட குதிரை வீரரும் இராணுவச் சேர்வைக்காரரும் அனுப்பப்பட்டாலும், நெகேமியாவோ காரியசித்தி யாரால் வருமென்று அறிக்கையிடக்கூடியவனாக இருந்தான்?
நீதிமொழிகள் 21:31
நீதிமொழிகள் 16:33
==============
நெகேமியாவின் புஸ்தகம், 3-ம் அதிகாரம் (பகுதி-1)
==============
1. யோவான் 5:2-ல் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆட்டு வாசல்' கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை, எந்த வசனத்தில் அறியலாம்?
2. தட்டாரும் மளிகைக்காரரும் எதைப் பழுதுபார்த்துக் கட்டியதாக உள்ளது?
3. 2 நாளாகமம் 33:14-ல் உள்ள 'மீன் வாசல்' கட்டப்பட்ட விவரத்தை, எவ்வசனம் தெரிவிக்கிறது?
4. 'பழைய வாசல்' யாரால் கட்டப்பட்டதாக அறியமுடிகிறது?
5. 2 நாளாகமம் 26:9 வசனத்திலுள்ள 'பள்ளத்தாக்கு வாசல்' யாரால் பழுதுபார்த்துக் கட்டப்பட்டது?
6. ஆசாரியர்களால் பழுதுபார்த்துக் கட்டப்பட்ட பகுதி எது?
2 இராஜாக்கள் 11:16
7. ரெக்காவின் குமாரனாகிய மல்கியாவால் எது செப்பனிடப்பட்டு கட்டப்பட்டது?
8. யோவான் 9:7-ல் குறிப்பிடப்பட்டுள்ள 'ஸீலோவாம்' குளத்து மதில்கள் யாரால் கட்டப்பட்டவை; மேலும் இவன் எவைகளைக் கட்டி செப்பனிட்டான்?
================
நெகேமியாவின் புஸ்தகம், 4-ம் அதிகாரம் (பகுதி-2)
=================
1. நெகேமியா ஜனங்களிடம், இரவில் காவலுக்காகவும் பகலில் வேலைக்காகவும் உதவ, எங்கு தங்க கூறினான்? வேலை செய்ய ஜனங்கள் ஆர்வம் காட்டியதாக எங்கு உள்ளது?
2. இவன் ஜனங்களை குடும்பம் குடும்பமாக, என்னென்ன ஆயுதங்களோடு, எங்கு நிறுத்தியிருந்தான்?
3. அதிகாரிகள் மேற்பார்வையிட, வேலை செய்யும் பாதிப்பேரைத் தவிர்த்து, மீதிப்பேர் எவைகளைப் பிடித்தவர்களாய் நின்றிருந்தார்கள்?
4. வேலைநேரத்திலும் பாதிப்பேர் எதுமுதல் எதுவரை ஈட்டி பிடித்திருந்தனர்?
5. யார் யார், ஒரு கையை எதற்கும், மறு கையை எதற்குமாக பயன்படுத்தினர்?
சங்கீதம் 149:6
6. அலங்கம் எழுப்பப்படுவதினிமித்தம், யார் யாருக்கு கோபம் எரிச்சல் மேலிட்டதாகவும், என்னென்ன பேசியதாகவும் தெரியவருகிறது?
யோபு 15:3
7. அலங்கத்தைக் கட்டுகிறவர்கள், இடுப்பிலே எவைகளைக் கட்டியவர்களாய் வேலைசெய்ய நேர்ந்தது?
நெகேமியா எதைச் சுட்டிக்காட்டி, எக்காளம் ஊதுகிறவனையும்கூட ஏற்பாடு செய்திருந்தான்?
8. சத்துருக்களுக்கு நடுவே குடியிருந்த யூதர்கள் 10-விசை, இவர்களை எதைக் கூறி எச்சரிக்கை செய்திருந்ததைத் தொடர்ந்து இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன?
====================
நெகேமியாவின் புஸ்தகம், 5-ம் அதிகாரம் (பகுதி-1)
=================
1. நெகேமியா தான் தேவனுக்குப் பயந்தவன் என்று அறிக்கையிட்டதோடு, எவ்வித தனது செய்கையாலும் அதை உறுதிப்படுத்தினான்?
எரேமியா 32:39
2. யாரால் நிந்தனைக்கு ஆளாகாதபடிக்கு, தேவனுக்கு பயந்து நடக்கவும் இவன் யூதரை வலியுறுத்தினான்?
ஏசாயா 52:5
3. யூதர்களுக்கு எதிராக, யார் யார் முறையீடு செய்தனர்?
இதனால், யார் யாருக்கு விரோதமாக நெகேமியாவால் பெரிய சபை கூட்டப்பட்டது?
4. ஆதியாகமம் 29:14-க்கு ஒப்பாக இங்கும், முறையிட்டவர்களாலேயே, முறையீட்டுக்கு உட்பட்டவர்களின் உறவின்முறை எத்தகையதென்று பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது?
5. மேலும், இவர்களும் அவர்களும் சகோதரரென்பது, எந்தெந்த வசனங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது?
6. இவ்வித உறவின் நிலையிலும் வட்டி சுமத்தப்பட்டதை கடிந்தும், வட்டியை விட்டுவிடுவோமாக என்றும் நெகேமியா கூறியதை, எங்கெங்கு காணலாம்?
லேவியராகமம் 25:35-37
யாத்திராகமம் 22:25
7. பாதிப்புக்கு ஆளாகியிருந்த சகோதரர், எந்தெந்த வகையில் அடிமைத்தனத்திற்கு உட்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது?
லேவியராகமம் 25:39-43
=======================
நெகேமியாவின் புஸ்தகம், 5-ம் அதிகாரம் (பகுதி-2)
======================
1. நெகேமியா தன்னிடம் முறையிட்டவர்களுக்கு எவையெவை திரும்பக் கொடுக்கப்பட வேண்டுமென கூறினான்?
2. ராஜாவுக்கு தீர்வைசெலுத்த, எவைகளின்மேல் கடன் வாங்கியதாக அவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது?
ஆதியாகமம் 47:23
3. புறஜாதியாருக்கு விற்கப்பட்டு பின் மீட்கப்பட்ட சகோதரர், தங்களுக்குள்ளேயே விற்கப்படலாமா என்று நெகேமியா எங்கு கேள்வி எழுப்பியிருக்கிறான்?
எரேமியா 34:8
4. பஞ்சத்திலே தானியம் வாங்க எவைகளை அடமானம் வைத்ததாகவும் சிலரால் சொல்லப்பட்டது?
5. இவ்விதமாக தானியத்திற்காக நெகேமியா உள்ளிட்ட யார் யார் கடன்கொடுத்து வட்டிபெறவில்லை என்று எங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது?
யாத்திராகமம் 22:25
6. நெகேமியா யூதாதேசத்திலே அதிபதியாக (ஆளுநராக) நியமனம் பெற்றிருந்த 12 வருஷமாக, முன்னைய அதிபதிகளுக்கு ஒப்பாக எவ்விதம் செயல்படாது, அதேசமயம் எவ்வாறு செயல்பட்டிருந்தான்? இவன் ஏன் படி வாங்கவில்லை
ஆதியாகமம் 42:6
7. மத்தேயு 10:14 நினைவுக்கு வரும்படியாக, நெகேமியா எப்படிப்பட்டவர்கள் தேவனால் எவ்விதங்களில் உதறிப்போடப்படுவார்களாக என்றான்?
8. பானபாத்திரக்காரனாயிருந்த இவன் ஆளுநரான பின்பும் எவ்வேலையில் முனைப்பாயிருந்தான்? சகோதரருக்கு மட்டுமன்றி இவனால் புறஜாதியினருக்கும் பந்திபரிமாறப்பட்டதை எங்கு அறியலாம்?