================
நெகேமியாவின் புஸ்தகம், 6-ம் அதிகாரம் (பகுதி-1)
================
1. பகைஞரும் புறஜாதியினரும் அஞ்சி மனந்தளர்ந்து போகத்தக்கதாக, அலங்கவேலைகள் யாரால் கைகூடிற்று?
ரோமர் 8:31
2. தேவனிடம் நெகேமியா எதினால் தனது கையை திடப்படுத்தியருளும்படியாக மன்றாடியிருந்தான்?
3. பொல்லாப்புச் செய்ய நினைத்த யார், எதைக் கேள்விப்பட்டு, நெகேமியாவை எதற்காக எங்கு அழைத்தார்கள்?
நெகேமியா 2:19
4. தேவன் யார் யாரை நினைத்துக் கொள்ள வேண்டுமென்பது நெகேமியாவின் வேண்டுதலாக இருந்தது?
எசேக்கியேல் 13:17-23
5. தீர்க்கதரிசனம் என்னும் பெயரில் நெகேமியாவை, யார் என்ன சொல்லி அச்சுறுத்தினான்?
6. எனினும் எந்த நோக்கத்தில் கொடுக்கப்பட்ட கைக்கூலிக்காக (கையூட்டு) அவன் அவ்விதம் உரைத்திருந்தான்?
எரேமியா 20:10
7. சன்பல்லாத்தும் கேஷேமும் பேச்சுவார்த்தைக்காக நெகேமியாவை எத்தனை விசை அழைத்ததாக தெரியவருகிறது?
===============
நெகேமியாவின் புஸ்தகம், 6-ம் அதிகாரம் (பகுதி-2)
==============
1. எத்தகைய கடிதங்கள் அநேகமென தெரிவிக்கப்பட்டிருக்கிறது?
2. நெகேமியா, சன்பல்லாத்திடமும் கேஷேமிடமும், அவர்கள் அழைப்பை ஏற்க இயலாதிருந்ததற்கு எடுத்துக்காட்டிய காரணமென்ன?
3. நெகேமியாவுக்கு எதிராக, தொபியாவுக்கு ஆதரவாக, யூதாவில் அநேகர் செயல்பட்டது எதினால் என்று உள்ளது?
4. செமாயாவின் பொய்த் தீர்க்கதரிசனத்திற்கும் காரணமாக இருந்தவர்கள் யார்?
நெகேமியா 2:10
5. எதிராளிகள் நெகேமியாவின் மீது எத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தினர்?
நெகேமியா 2:19
6. தங்களை/தன்னை பயமுறுத்த முயற்சித்தவர்களைக்குறித்து நெகேமியா யாரிடம் முறையிட்டான்?
சங்கீதம் 27
7. இத்தகைய சூழ்நிலைகளுக்கிடையேயும் யோபு 42:2 நினைவுக்கு வரும்படியாக, அலங்க வேலைகள் எத்தனை நாட்களுக்குள் தேவனால் கைகூடி வந்தது?
======================
நெகேமியாவின் புஸ்தகம், 7-ம் அதிகாரம்
=======================
1. அலங்க வேலைக்காக, யார் யார், எவையெவற்றை கருவூலத்திற்கு கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது?
2. நெகேமியாவின் மனதிலே தேவன் எத்தகைய எண்ணத்தை உண்டாக்கினார்?
3. சபையாரின் மொத்த எண்ணிக்கை எவ்வளவாயிருந்தது?
4. இவ்வதிகாரத்தின் 8-ம் வசன முதல் 60-ம் வசனம் வரையிலுமாக விவரிக்கப்பட்டவர்கள் எத்தகையவர்கள்?
2 நாளாகமம் 36:20
5. இவர்களைத்தவிர, யார் யாரும் என்ன எண்ணிக்கையில் இதில் உள்ளடங்கியிருந்தனர்? அவர்களின் விலங்கினங்களின் விபரமென்ன?
6. மேலும் 62 மற்றும் 63 வசனங்களில் பெயருள்ளவர்கள் எப்படியானவர்களென அறியமுடிகிறது?
7. எருசலேமின் பாதுகாப்பு கருதி நெகேமியா செய்த ஏற்பாடுகளென்ன? இஸ்ரவேலரில் யார் யார், எப்போது, தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்
நெகேமியா 1:10
======================
நெகேமியாவின் புஸ்தகம், 8-ம் அதிகாரம் (பகுதி-1)
======================
1. மோசே கூறியதினடிப்படையில் (உபாகமம் 31:10,11), தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகம், தினம் தினம் வாசிக்கப்பட்டதாக எங்கு உள்ளது?
2. மேலும் எஸ்றாவால் சபையாரிடையே, காலை முதல் மத்தியானம் வரையில் நியாயப்பிரமாணம் வாசிக்கப்பட்டதாக, எவ்வசனம் குறிப்பிடுகிறது?
3. நியாயப்பிரமாண வார்த்தைகள் வெறுமனே வாசிக்கப்படாமல், எவ்விதத்தில் அவை வெளிப்படுத்தப்பட்டன?
4. சகல ஜனங்களும், தேவ வார்த்தைக்கும் அதை வெளிப்படுத்திய தேவனுக்கும், எவ்வாறு மரியாதை செலுத்தியதை அறியமுடிகிறது?
2 கொரிந்தியர் 1:20
5. பிரசங்கிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்ட ஜனங்கள், அதை எப்படியாக செயல்படுத்தியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது?
6. இதற்கு அடிப்படையாக, பரிசுத்தநாளை எவ்விதமாக அனுஷ்டிக்க, நெகேமியா எஸ்றா உள்ளிட்டோரால் இவர்களுக்கு உபதேசிக்கப்பட்டிருந்தது?
உபாகமம் 16:11,15
7. மேலும் கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடி (லேவியராகமம் 23:33-36 | லேவியராகமம் 39-43) எவையெவற்றை செய்ய பிரசித்தப்படுத்தியதோடு, எவ்விதத்தில் அதற்கு கீழ்ப்படிந்தும் செயல்படுத்தினார்கள்?
==================
நெகேமியாவின் புஸ்தகம், 8-ம் அதிகாரம் (பகுதி-2)
==================
1. வேதபாரகனாகிய எஸ்றாவிடம், நியாயப்பிரமாண வார்த்தைகளை அறியும்படிக்கு கூடி வந்தவர்கள் யார்?
ஏசாயா 44:3
2. ஒருமனதோடு ஜனங்களும் கூடி, எஸ்றாவிடம் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கொண்டுவரச் சொன்னதாக எங்கு உள்ளது?
சங்கீதம் 119:97
3. சங்கீதம் 119:136-ல் உள்ளபடி இங்கும் வார்த்தைகளைக் கேட்டவர்கள் மனந்திரும்புதலுக்கேதுவாக வெளிப்படுத்திய அடையாளமென்ன?
4. இறுதிநாட்களில் வாழும் நாமும் உணர்வடையும்படிக்கு, இவர்கள் 'வார்த்தைகளுக்கு கவனமாய்ச் செவிகொடுத்ததை' குறிப்பிட்டுள்ள வசனம் எது?
ஆமோஸ் 8:12,13
யோபு 34:3
5. கர்த்தர் யாரைக் கொண்டு கற்பித்த காரியம் இவர்கள் கண்களைத் திறந்தது?
2 பேதுரு 1:19
6. நெகேமியா எஸ்றா மட்டுமன்றி, யார் யாரும் நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்?
ஏசாயா 44:26
7. நாம் தேவகட்டளைகளை நிறைவேற்றுவதில் ஏற்படுத்தும் தடை - இடைவெளி, நமது 'மிகுந்த சந்தோஷத்தை' அற்றுப்போகச் செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இங்குள்ள வசனம் எது?
ஓசியா 12:9
=====================
நெகேமியாவின் புஸ்தகம், 9-ம் அதிகாரம் (பகுதி-2)
====================
1. நீதியுள்ள கர்த்தர், உண்மையுள்ளவனோடு உடன்படிக்கை பண்ணி, அவனில் தம் வார்த்தைகளை நிறைவேற்றுபவர் என்று எங்கு அறியமுடிகிறது?
ஆதியாகமம் 17:1,2
2. இவர் உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற வல்லமையும் பயங்கரமுமுள்ள மகாதேவன் என்று எவ்வசனத்தில் உள்ளது?
தானியேல் 9:4
3. வானங்களிலும் சமுத்திரங்களிலும் பூமியிலும் உள்ளவைகளை உண்டாக்கி அவைகளை காப்பாற்றுகிறவர் கர்த்தரே என்று எங்கு நினைவுகூரப்பட்டிருக்கிறது?
யோனா 1:9
சங்கீதம் 146:6
4. இஸ்ரவேலரை எத்தகைய ஸ்தம்பங்களினால் (தூண்களால்) வழிநடத்தியவரென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது?
யாத்திராகமம் 13:21
5. இவர்கள் பசிக்கு வானமும், தாகத்துக்கு பூமியின் கன்மலையும் கர்த்தரால் எவ்விதம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது?
யாத்திராகமம் 16:14,15
யாத்திராகமம் 17:6
6. நாற்பது வருடங்களாக, அதிலும் வனாந்தரத்திலே, கர்த்தரின் அற்புத பராமரிப்பு எவ்விதமிருந்ததாக அறிக்கையிடப்பட்டது?
உபாகமம் 2:7
உபாகமம் 8:4
7. அதேசமயம், பிதாக்களின் அகங்காரம், கடின சிந்தை, தேவ வார்த்தைகளுக்கு செவிகொடாமை மேலும் தேவ அற்புதங்களை நினையாமல் எதிரிடையாக செயல்பட்டதை எங்கு அறிக்கை செய்துள்ளார்கள்?
உபாகமம் 1:26-33
8. பிதாக்களின் அக்கிரமத்தோடுகூடிய தங்கள் பாவங்களின் விளைவும் எத்தகைய இக்கட்டுகளை, பின்னடைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக கர்த்தரிடம் தெரிவித்தார்கள்?
உபாகமம் 28:33
புலம்பல் 5:5
=======================
நெகேமியாவின் புஸ்தகம், 9-ம் அதிகாரம் (பகுதி-3)
=====================
1. இஸ்ரவேலர் எவையெவைகளை சுதந்தரித்து, தம் தயையினால் செல்வமாய் வாழும்படி கர்த்தர் ஆசீர்வதித்திருந்தார்?
உபாகமம் 6:10-12
உபாகமம் 8:8-11
2. கர்த்தர் இவர்களுக்கு, யார் யாருடைய எந்தெந்த ராஜ்யங்களை கொடுத்ததாக அறிய இயலும்?
ஆதியாகமம் 15:18-21
உபாகமம் 2:26
நியாயாதிபதிகள் 4:23
3. அவர்களை அகந்தையாய் நடத்தியவர்கள் மத்தியில், தமக்கு கீர்த்தி உண்டாகும்படியாக, இஸ்ரவேலருக்கு என்னென்ன செய்தார்?
எரேமியா 32:20
தானியேல் 9:15
4. எனினும் இஸ்ரவேலரே அக்கிரமமாக கர்த்தருக்கு கோபமூட்டத்தக்கதாக, எதைச்செய்து அதையே விடுவித்த தெய்வமென்றார்கள்?
யாத்திராகமம் 32:4
5. இவர்களைப் பின்தொடர்ந்த சத்துருக்களை கர்த்தர் என்ன செய்திருந்தார்?
யாத்திராகமம் 14:28
எனினும் பின்னாளில், அக்கிரமஞ்செய்த இவர்களே யாரிடம் ஒப்புவிக்கப்பட்டனர்?
நியாயாதிபதிகள் 2:14
6. சத்துருக்களால் ஆளப்படும்படிக்கு ஒப்புவிக்கப்பட்டாலும், எந்நிலையில் இஸ்ரவேலர் கர்த்தரின் இரக்கம் பெற்றனர்?
சங்கீதம் 22:4
சங்கீதம் 106:43
7. இவர்கள் கர்த்தராலேயே அந்நியதேச ஜனங்களிடம் ஒப்புவிக்கப்பட காரணமென்ன?
2 நாளாகமம் 36:16
எனினும் எதினால் கைவிடப்பட்டு நிர்மூலமாகாதிருந்தார்கள்?
ஏசாயா 48:9
உபாகமம் 4:31
8. இத்தகைய நிலைகளில் கூடிவந்திருந்த இஸ்ரவேலரால் கர்த்தரோடு எத்தகைய உடன்படிக்கை செய்யப்பட்டது?
==================
நெகேமியாவின் புஸ்தகம், 10-ம் அதிகாரம்
===================
1. தேவனுக்கு ஊழியம் செய்யாதிருந்த பாவம் நீங்கும்படியாக (நெகேமியா 9:35)> யாத்திராகமம் 13:2/ யாத்திராகமம் 22:29-க்கு கீழ்ப்படிந்து செய்யப்பட்ட உடன்படிக்கையென்ன?
2. யார் யார் தேவ நியாயப்பிரமாணத்தின்படி நடக்கவும், கர்த்தரின் நீதி நியாயங்கள், கற்பனைகள் கட்டளைகளின்படி செய்யவும் ஆணையிட்டுப் பிரமாணம் பண்ணினார்கள்?
சங்கீதம் 119:106
3. அதேசமயம், எழுதி செய்யப்பட்ட உடன்படிக்கைக்கு முத்திரைபோட்டவர்கள் (நெகேமியா 9:38), யார் யாரென்று பட்டியலிடப்பட்டுள்ளது?
4. எவையெவற்றின் முதற்பாகம், முதற்பலன், மற்றும் நிலப்பயிர்களின், வேளாண்மையின் தசமபாகம் யார் யாரிடம் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டது?
எண்ணாகமம் 18:12,21
5. மேலும் இவர்களால், பலிகள் தொடர்பான எத்தகைய பொறுப்புகளும் கடனாக ஏற்றுக்கொள்ளப்பட்டது?
யாத்திராகமம் 30:11-16
6. கர்த்தரின் கட்டளைக்கு (யாத்திராகமம் 34:15-16) கீழ்ப்படியும்படிக்கு, எவ்வித உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது?
7. நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து, எதற்காக எவ்விதத்தில் சீட்டுப்போட்டதாகவும் உள்ளது?
லேவியராகமம் 16:8
நெகேமியா 13:31
8. ஓய்வுநாள் பரிசுத்தநாளை எப்படி அனுஷ்டிக்கவும், ஏழாம் வருஷத்தில் என்ன செய்யப்போவதாகவும் ஆணையிட்டனர்?
எரேமியா 17:27
உபாகமம் 15:1-2
====================
நெகேமியாவின் புஸ்தகம், 11-ம் அதிகாரம்
===================
1. பரிசுத்த பட்டணமான எருசலேமிலே குடியிருந்த லேவியரின் தொகை எவ்வளவாயிருந்தது?
ஏசாயா 48:2
2. இந்த லேவியரிலே சில வகுப்பார் யூதாவிலும் சிலர் பென்யமீலும் இருந்ததை எவ்வசனமூலம் அறிய இயலும்?
3. யூதாவின் பட்டணங்களில், தங்கள் காணிபூமியிலே எத்தகையவர்கள் குடியிருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது?
நெகேமியா 7:73
எஸ்றா 2:70
4. யூதாவின் புத்திரரில் சிலர், தங்கள் நாட்டுப்புற கிராமங்களான, எங்கெங்கு குடியிருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது?
5. இவ்வதிகாரத்தின் 4-ம் வசனம் முதல் 24-ம் வரை, பெயர் மேலும் விபரம் குறிப்பிடப்பட்டவர்களும், 'எருசலேமில் குடியிருந்த நாடுகளின் தலைவர்கள்' என்று எங்கு உள்ளது?
6. ஜனத்தின் அதிகாரிகள் குடியிருந்த பரிசுத்த நகரத்திலே குடியிருக்க, ஏனையவர்கள் எவ்விதத்திலே தேர்ந்துகொள்ளப்பட்டனர்?
ஏசாயா 52:1
வெளிப்படுத்தல் 21:2
7. எத்தகைய மனுஷர்கள் ஜனங்களின் வாழ்த்துகளைப் பெற்றனர்?
========================
நெகேமியாவின் புஸ்தகம், 12-ம் அதிகாரம் (பகுதி-2)
=======================
1. இந்த அதிகாரத்தின், 2-ம் வசனம் முதல் 9-ம் வசனம் வரையிலுமாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளோரும், செராயா எரேமியா எஸ்றா உள்ளிட்டோரும் யார் யாரென கூறப்பட்டுள்ளது?
2. செருபாபேலின் நாட்களிலும் நெகேமியாவின் நாட்களிலும் இஸ்ரவேலரால், யார்யாருக்கு, எவை, எவ்விதத்தில் கொடுக்கப்பட்டது?
உபாகமம் 18:8
3. எலியாசிபின் நாட்களில் எந்தெந்த லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டனர்? எந்நாள் வரை நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டார்கள்?
4. மிகுதியான பலிகள் செலுத்தப்பட்டதையும், தொடர்ந்து ஏற்பட்ட எத்தகைய சந்தோஷம், மகிழ்ச்சி, களிப்பும் சாட்சியிடப்பட்டுள்ளது?
5. ஆசாரியரும் லேவியரும் தங்களை மட்டுமன்றி, எவையெவற்றையும் சுத்தம் பண்ணியிருந்தார்கள்?
யாத்திராகமம் 19:10,11
6. பொக்கிஷ அறைகளைக் காவல்காக்கிறவர்களாக நியமனம் பெற்றிருந்தவர்கள் யார்?
7. அலங்கப் பிரதிஷ்டை நாளன்று, எங்கு எவைகளை சேர்க்கும்படிக்கு, விசாரிப்புக்காரர் நியமிக்கப்பட்டிருந்தனர்?
லேவியராகமம் 27:30
நெகேமியா 13:13
=======================
நெகேமியாவின் புஸ்தகம், 13-ம் அதிகாரம் (பகுதி-1)
=======================
1. தேவனிடம் நெகேமியா, எவைகளினிமித்தம் தனக்கு நன்மையுண்டாக நினைத்தருளும்படி மன்றாடினான்?
நெகேமியா 9:2
நெகேமியா 10:34
2. ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடு சம்பந்தங்கலந்ததோடு, எத்தகைய இடத்தில் அவனுக்கு ஒரு அறையையும் ஆயத்தம்பண்ணியிருந்தான்?
எண்ணாகமம் 18:21
3. நெகேமியா அந்த அறையைச் சுத்திகரிக்கச்செய்து, முந்திய நிலைக்குக் கொண்டுவந்ததாக, எவ்வசனத்திலுள்ளது?
2 நாளாகமம் 29:5
4. மேலும் இவன் யார் யாரை, எதினடிப்படையில், பொக்கிஷ அறைகளின் விசாரிப்புக்காரராக நியமித்தான்?
நெகேமியா 12:44
5. பணிவிடை செய்கிற லேவியரும் பாடகரும், தத்தமது நிலங்களுக்கு, ஓடிப்போயிருந்ததின் காரணமென்ன?
உபாகமம் 12:19
6. தேவனிடம் நெகேமியா, ஆலயம் தொடர்பாக தான் எவ்விதத்தில் நினைவுகூரப்பட வேண்டுமென விண்ணப்பித்தான்?
7. 'தேவனுடைய ஆலயம் கைவிடப்படலாமா?' என்ற கேள்வியை எழுப்பி, இவன் ஓடிப்போன யாரோடு வழக்காடி, மீளவும் அவர்களை நிலைநிறுத்தியிருந்தான்?
நெகேமியா 10:37-39
==================
நெகேமியாவின் புஸ்தகம், 13-ம் அதிகாரம் (பகுதி-2)
===================
1. பல்வேறு ஜாதியான ஜனங்கள் இஸ்ரவேலைவிட்டுப் பிரிக்கப்பட்டதின் காரணமென்ன?
உபாகமம் 23:3-5
2. யாத்திராகமம் 34:16 மற்றும் 1இராஜாக்கள் 11:2-3-ஐ தொடர்புபடுத்தி, நெகேமியா சாலொமோனைக் குறித்து இஸ்ரவேலரிடம் கூறியதென்ன?
3. இவன் கடிந்துகொண்டு எச்சரித்து, தேவன்மேல் ஆணையிடப் பண்ணும்படிக்கு, யூதரில் சிலர் எப்படிப்பட்டவர்களாக இருந்தனர்?
எஸ்றா 9:1,2
4. மேலும் நெகேமியா, தேவன் இஸ்ரவேலின்மேல் உக்கிரம்கொள்ளவும், தீங்கு வரப்பண்ணியதற்கும், காரணம் என்னவென்று சுட்டிக்காட்டினான்?
நெகேமியா 10:31
5. இதுதொடர்பாக இவன் யார் யாரை கடிந்துகொண்டதாக அறிய இயலும்?
யாத்திராகமம் 20:8-11
உபாகமம் 5:12-15
6. ஓய்வுநாளை பரிசுத்தமாக அனுஷ்டிக்கும்படிக்கு இவன் செய்த ஏற்பாடுகளென்ன?
லேவியராகமம் 23:32
7. தேவன், எவ்விதத்தில் எவைகளை தீட்டுப்படுத்திய யாரை, நினைத்துக்கொள்ளவும் வேண்டுமென நெகேமியா பிரார்த்தித்தான்?
நெகேமியா 2:10