============
கேள்வி - பதில்கள்
வேதபகுதி: நெகேமியா
============
1) மனதின் வியாதியால் துக்கமாயிருந்தது யார்?
2) வனத்திற்கு காவலாளி யார்?
3) ஒன்றாய் இணைந்து உயர்ந்தது எது?
4) யாருடைய மெலன் குறைந்து போனது?
5) பத்து முறை சொல்லப்பட்ட செய்தி என்ன?
6) முத்திரை போடாத கடிதம், யார் யாருக்கு எழுதினார்கள்?
7) நெகேமியா பயப்படும்படியாக கடிதங்களை அனுப்பியது யார்?
8) உண்மை, தேவபயம் இருந்த தலைவன் யார்? அவன் வேலை என்ன?
9) நெகேமியாவின் மறுபெயர் என்ன?
10) பெலன் என்பது எது?
11) உண்மையான பிரமாணங்கள் எது?
12) சேக்கலில் 3 ல் ஒரு பங்கு எதற்காக கொடுக்கப்பட்டது?
13) ஜனங்கள் யாரை வாழ்த்தினார்கள்?
14) தூரத்தில் கேட்கப்பட்டது என்ன?
15) மறு ஜாதி ஸ்திரிகளால் பாவம் செய்த ராஜா யார்?
(நேகேமியா) விடை
===========
1) மனதின் வியாதியால் துக்கமாயிருந்தது யார்?
Answer: நெகேமியா
நெகேமியா 2: 1, 2
2) வனத்திற்கு காவலாளி யார்?
Answer: ஆசாப்
நெகேமியா 2: 8
3) ஒன்றாய் இணைந்து உயர்ந்தது எது?
Answer: அலங்கம்
நெகேமியா 4: 6
4) யாருடைய மெலன் குறைந்து போனது?
Answer: சுமைகாரரின் பெலன்
நெகேமியா 4: 10
5) பத்து முறை சொல்லப்பட்ட செய்தி என்ன?
Answer: கொன்றுபோடுமட்டும், அவர்கள் அதை அறியாமலும் பாராமலும் இருக்கவேண்டும். இவ்விதமாய் அந்த வேலையை ஓயப்பண்ணுவோம் என்று.
நெகேமியா 4: 11
6) முத்திரை போடாத கடிதம், யார் யாருக்கு எழுதினார்கள்?
Answer: சன்பல்லாத்து நெகேமியாவுக்கு
நெகேமியா 6: 5
7) நெகேமியா பயப்படும்படியாக கடிதங்களை அனுப்பியது யார்?
Answer: தொபியா
நெகேமியா 6: 19
8) உண்மை, தேவபயம் இருந்த தலைவன் யார்? அவன் வேலை என்ன?
Answer: அரமனைத்தலைவனாகிய அனனியா/ எருசலேமின் காவல் விசாரணை
நெகேமியா 7: 2
9) நெகேமியாவின் மறுபெயர் என்ன?
Answer: திர்ஷாதா
நெகேமியா 10: 1
10) பெலன் என்பது எது?
Answer: கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே
நெகேமியா 8: 10
11) உண்மையான பிரமாணங்கள் எது?
Answer: செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகியவை
நெகேமியா 9: 13
12) சேக்கலில் 3 ல் ஒரு பங்கு எதற்காக கொடுக்கப்பட்டது?
Answer: தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும்
நெகேமியா 10: 33
13) ஜனங்கள் யாரை வாழ்த்தினார்கள்?
Answer: எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த மனுஷர்களையெல்லாம்
நெகேமியா 11: 2
14) தூரத்தில் கேட்கப்பட்டது என்ன?
Answer: எருசலேமின் களிப்பு
நெகேமியா 12: 43
15) மறு ஜாதி ஸ்திரிகளால் பாவம் செய்த ராஜா யார்?
Answer: இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன்
நெகேமியா 13: 26