==============
சோர்வு எதின் மூலம்
===============
1) பாடுகள் நம்மை சோர்வு படுத்தும்.
நீதிமொழிகள் 24:10
2) செய்யாத குற்றத்தை செய்தாய் என்று சொல்லும் போது சோர்வு.
ஆதியாகமம் 42:28
3) நிழல் (நன்மை, ஆசிர்வாதம், கணவன், மனைவி, பிள்ளைகள்) எடுபடும் போது சோர்வு.
யோனா 4:8
4) வியாதியால் சோர்வு.
சங்கீதம் 39:10
5) பட்டினியால் சோர்வு.
மத்தேயு 15:32
6) பிசாசின் கிரியைகளினால் சோர்வு.
மாற்கு 9:18
7) பூமியில் நடக்கிற காரியங்களால் சோர்வு.
லூக்கா 21:26
====================
பரிசுத்த ஆவியின் முலம் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
====================
1) உள்ளான மனுஷனில் பெலன் அடைகி வரறோம்.
எபேசியர் 3:16
2) ஆறுதல் அடைகிறோம்.
அப்போஸ்தலர் 9:31
3) அன்னிய பாஷை பேச வைக்கிறது.
அப்போஸ்தலர் 19:6
4) தீர்க்கதரிசனம் சொல்ல வைக்கிறது.
அப்போஸ்தலர் 19:6
5) தேவ அன்பு நம் இருதயங்களில் ஊற்றப்படுகிறது.
ரோமர் 5:5
6) நாம் பேச வேண்டியதை அந்நேரத்தில் நமக்கு போதிப்பார்.
லூக்கா 12:12
7) நமக்காக வேண்டுதல் செய்கிறார்.
ரோமர் 8:26
8) பலவினங்களில் உதவுகிறார்.
ரோமர் 8:26
9) வசன வெளிப்பாடுகளை தருகிறார்.
1 கொரிந்தியர் 2:10
10) நமக்காக பிதாவிடம் ஜெபிக்கிறார்.
ரோமர் 8:26
11) சந்தோஷத்தை தருகிறார்.
1 தெசலோனிக்கேயர் 1:6
12) நம்மை விடுதலையாக்குகிறார்.
2 கொரிந்தியர 3:17
13) நம்மை கண்டித்து உணர்த்துகிறார்.
யோவான் 16:8
14) பிசாசுகளை துரத்த உதவுகிறார்.
மத்தேயு 12:28
15) நம்மை பரிசுத்தபடுத்துகிறார்.
2 தெசலோனிக்கேயர் 2:13
16) நம்மை ஒன்றுபடுத்துகிறார்.
எபேசியர் 4:3,4
17) நம்மை புதுப்பிக்கிறார்.
தீத்து 3:5
18) நம்மை நடத்துகிறார்.
ரோமர் 8:14
19) வரங்களை தருகிறார்.
1 கொரிந்தியர் 12:8-10
20) நமக்குள் வாழ்கிறார்.
1 கொரிந்தியர் 316
21) நமக்குள் கனியை (நல்ல சுபாவங்களை) உண்டாக்குகிறார்.
கலாத்தியர் 5:22,23
22) பாவம் மரணத்திலிருந்து விடுதலையாக்குகிறார்.
ரோமர் 8:2
23) நம் கீழ்படிதலுக்கு உதவி செய்கிறார்.
1 பேதுரு 1:22
24) நம்மை மறுருபமாக்குகிறார்.
2 கொரிந்தியர் 3:18
25) இரகசிய வருகையில் சரிரங்களை உயிர்த்தெழ வைக்கிறார்.
ரோமர் 8:11
=========================
எவைகளில் உறுதியாக இருக்க வேண்டும்?
========================
1) ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
ரோமர் 12:12
2) விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
1 பேதுரு 5:9
3) பெலத்தில் (ஆவிக்குரிய) உறுதியாக இருக்க வேண்டும்.
சங்கீதம் 73:4
4) தேவ பக்தியில் உறுதியாக இருக்க வேண்டும்.
யோபு 4:6
5) கர்த்தரை பற்றி கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஏசாயா 26:3
6) மனதில் உறுதியாக இருக்க வேண்டும்.
ரூத் 1:18
7) உத்தமத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
யோபு 2:3
8) கர்த்தருக்கு முன்பாக உறுதியாக இருக்க வேண்டும்.
1 இராஜாக்கள் 2:45
9) உபதேசத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
அப்போஸ்தலர் 2:42
10) ஜக்கியத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
அப்போஸ்தலர் 2:42
11) ஆவியில் உறுதியாக இருக்க வேண்டும்.
பிலிப்பியர் 1: 27
12) புத்திமதியை பற்றி கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டும்.
நீதிமொழிகள் 4:13
13) வழிகளில் (ஆவிக்குரிய) உறுதியாக இருக்க வேண்டும்.
யோபு 17:9
14) நம்பிக்கையை அறிக்கையிடுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.
எபிரெயர் 10:23
15) அப்பம் பிட்குதலில் உறுதியாக இருக்க வேண்டும்.
அப்போஸ்தலர் 2:42
=====================
பூமியை சுதந்தரிப்பார்கள் யார்?
=====================
1) கர்த்தருக்கு காத்திருப்பவர்கள்.
சங்கீதம் 37:34
2) கர்த்தருடைய வழியைக் கைக்கொள்ளுகிறவர்கள்.
சங்கீதம் 37:34
3) நீதிமான்கள்.
சங்கீதம் 37:29
4) கர்த்தரால் ஆசிர்வதிக்கபட்டவர்கள்.
சங்கீதம் 37:22
5) சாந்தகுணமுள்ளவர்கள்.
சங்கீதம் 37:11
6) கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள்.
சங்கீதம் 25:12,13
===================
பாடுபட வேண்டும் எப்படி
==================
1) நன்மை செய்து பாடுபட வேண்டும்.
1 பேதுரு 2:20
2) கிறிஸ்தவனாயிருப்பதால் பாடுபட வேண்டும்.
1 பேதுரு 4:16
3) இயேசுவின் நாமத்தின் நிமித்தம் பாடுபட வேண்டும்.
அப்போஸ்தலர் 9:16
4) அநியாயமாய் பாடுபட வேண்டும்.
1 பேதுரு 2:19
5) கொஞ்சகாலம் பாடுபட வேண்டும்.
1 பேதுரு 5:10
==========
இஸ்ரவேலே
=========
1) கர்த்தரை நம்பு
சங்கீதம் 115:9
2) கலங்காதே
எரேமியா 30:10
3) நீ என்னால் மறக்கபடுவதில்லை
ஏசாயா 44:21
4) பயப்படாதே, உன்னை மீட்டுக் கொண்டேன்
ஏசாயா 43:1
5) உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு
ஒசியா 14:1
6) நான் உன்னில் மகிமைப்படுவேன்
ஏசாயா 49:3
7) உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படு
ஆமோஸ் 4:12
========================
வேதத்தில் உள்ள மாடுகள் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்
======================
1) அடிக்கபடும்படி செல்லும் மாடு
நீதிமொழிகள் 7:22
தேவ ஜனங்கள் அடிக்கபடுகிற மாடு போல காணப்பட வேண்டும். இது பாடுகளின் பாதையை காட்டுகிறது. கசாப்பு கடைக்கு செல்லும் மாடுகள் கூட்டம் கூட்டமாக அழைத்து செல்லபடும். இயேசு சென்ற பாதை இது (அப்போஸ்தலர் 8:32) தம்முடைய அடிச்சுவடியை தொடர்ந்து வரும் படி மாதிரியை வைத்து போனார் (1 பேதுரு 2:21) தேவ ஐனமே எனக்கு ஏன் பாடுகள் என்று நினனக்காதே. அநேக உபத்திரவங்களின் வழியாக தேவ ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் (அப்போஸ்தலர் 14:22)
2) புல்லை தின்னும் மாடு
ஏசாயா 1:3
மாடுகள் வழியில் புல்லை வேகமாக உண்டு செல்லும். மாலையில் புல்லை வாய்க்கு கொண்டு வந்து அசை போடும். அது போல தேவ பிள்ளைகள் சபையில் கேட்ட சத்தியங்களை வீட்டிற்கு சென்று தியானிக்க வேண்டும். இரவும் பகலும் தியானமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்கீதம் 1:2) அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் (சங்கீதம் 1:3)
3) எருது பலமுள்ளது
சங்கீதம் 144:14
வசனத்தை தியானிக்க தியானிக்க பெலன் அடைகிறோம். சீயோனில் தேவ சந்ததியில் காணப்பட பெலன் தேவை (சங்கீதம் 84:7)
4) நிலத்தை உழுகிற எருது
ஏசாயா 30:24
இது தேவ சித்தத்தை காட்டுகிறது.
5) சர்வாங்க தகனபலியான மாடு
எண்ணாகமம் 7:35
நாமும் நமது அவயங்களை தேவனுக்கு ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும்
ரோமர் 12:1
6) மேய்ப்பனை குறித்து அறிந்த மாடு
ஏசாயா 1:3
மாட்டுக்கு தன் மேய்ப்பனை குறித்து நல்ல அறிவு உண்டு. கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார். நான் தாழ்ச்சி அடையேன் (சங்கீதம் 23: 1) என்ற அறிவு ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்கு வேண்டும்.
7) மாடுகள் நல்ல மேய்ச்சல் உள்ள இடத்தில் மேயும்
ஏசாயா 30:23
அது போல நாமும் சத்தியத்தை போதிக்கிற சபையை தேடி செல்ல வேண்டும். கடமைக்கு (Sunday) சபைக்கு செல்ல கூடாது. சத்தியத்தை கேட்டு ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர வேண்டும்
8) ஒய்வு நாளில் வேலை செய்யாத மாடுகள்
யாத்திராகமம் 23:12
தேவபிள்ளைகள் ஒய்வு நாளில் சொந்த பேச்சை கூட பேசக்கூடாது (ஏசாயா 58:13). ஏனென்றால் ஒய்வு நாள் கர்த்தருக்குரியது. ஒய்வு நாளை கனப்படுத்த வேண்டும். ஒய்வு நாளை கனப்படுத்தினால் நாம் ஆசிர்வதிக்க படுவோம் (ஏசாயா 53:14)
9) நுகத்தை சுமக்கும் மாடு
மத்தேயு 11:29
இது தாழ்மையான ஜிவியத்தை காட்டுகிறது. இயேசுவும் மாட்டை போல ஜிவித்து இருக்கிறார் (என் நுகத்தை ஏற்றுக் கொண்டு - (மத்தேயு 11:29)
10) மாடுகள் கூட்டம் கூட்டமாக செல்லும்
இது பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை காட்டுகிறது. சகல பரிசுத்தவான்களோடு கூட கிறிஸ்துவின் அன்பை அறிய வேண்டும் (எபேசியர் 3:18). வேத வாசிப்பு, ஜெபம், பரிசுத்தவான்களின் ஐக்கியம் ஆகிய இந்த மூன்றும் நமக்கு சந்தோஷத்தை தருகிறது.
11) களஞ்சியங்களை நிரப்பும் எருது
நீதிமொழிகள் 14:4
சபை ஆத்துமாக்களால் நிரப்பபட வேண்டும்.
ஜனங்கள் இரட்சிக்கபட நாம் அவர்களுக்கு சுவிஷேம் சொல்ல வேண்டும், அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்
============================
யோசேப்பு - கர்த்தரை நினைத்து கொண்ட சந்தர்ப்பங்கள்
(ஆதியாகமம்)
=============================
1) போத்திபாரின் வீட்டில்
ஆதியாகமம் 39:9
2) நண்பர்களோடு இருக்கும் போது
ஆதியாகமம் 40:8
3) பார்வோனுக்கு முன்பு
ஆதியாகமம் 41:16,25
4) குடும்ப வாழ்க்கையில்
ஆதியாகமம் 41:51,52
5) சகோதரர் மத்தியில்
ஆதியாகமம் 45:7,8
6) கடந்த காலத்தை யோசிக்கும் போது
ஆதியாகமம் 50:20
7) மரிக்கும் போது
ஆதியாகமம் 50:24,25
==============
விசுவாசத்திற்காக என்ன செய்ய வேண்டும்
==============
1) தைரியமாக போராட வேண்டும்
யூதா 3
2) கூடி போராட வேண்டும்
பிலிப்பியர் 1:27
3) வர்த்திக்க பண்ண ஜெபிக்க வேண்டும்
லூக்கா 17:5
4) ஆரோக்கியம் உள்ளதாக காக்கப்பட வேண்டும்
தீத்து 1:14
5) சந்தோஷத்தினால் காக்க வேண்டும்
1 பேதுரு 1:8
6) நல்மனசாட்சியுடன் காத்து கொள்ள வேண்டும்
1 தீமோத்தேயு 1:19
7) கிரியை செய்து விசுவாசத்தை பூரண படுத்த வேண்டும்
யாக்கோபு 2:22