===========
ஓர் குட்டிக் கதை
நல்ல பகைவன்
==========
விஜயபுரியில் சரண்யன் என்ற பெரிய தனவந்தர் நற்குணங்கள் நிரம்பியவராகவும், தான, தர்மங்கள் செய்பவராகவும் இருந்தார். பல ஆண்டுகளாக அவருக்குப் புத்திர பாக்கியமே இல்லாமல் இருந்து அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நம்பி என்று பெயர் சூட்டி, அவனை நன்கு வளர்த்தார்.
நம்பி மற்ற சிறுவர்களைப் போல் இல்லாமல் மந்த புத்தியுடையவனாக இருந்தான். சாதாரண விஷயங்களைக் கூட, அவனால் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. அவனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து விட்டால், நிலைமை சரியாகும் என்று சரண்யன் நம்பினார். ஆனால் பள்ளியில் சேர்ந்த பின்னும், அவன் மந்தமாகவே இருந்தான். சோதிடத்தில் நம்பிக்கை இல்லாத போதும், அவனை ஒரு பிரபல சோதிடரிடம் அழைத்துச் சென்றார் சரண்யன்.
அவரிடம், சோதிடர், “உங்கள் மகனுக்கு கிரகங்கள் சரியாக அமையவில்லை. இடமாற்றம் செய்தால் சகஜ நிலைக்கு அவன் திரும்பலாம். வித்யாவனம் எனும் ஊரில் ஞானேந்திரர் எனும் குருவிடம் அழைத்துச் செல். அவருடைய குருகுலத்தில் பயின்றால், அவன் சரியாகிவிடுவான்” என்றார்.
அவ்வாறே, சரண்யன் நம்பியை ஞானேந்திரரின் குருகுலத்திற்கு அழைத்துச் சென்றார். நம்பியை சில கேள்விகள் கேட்டு சோதித்த ஞானேந்திரர், “உங்கள் மகன் எந்த விஷயத்தையும் தனக்கே உரிய முறையில் பொருள் கொள்கிறான். மற்றவர்களைப் போல் அவனை சிந்திக்க வைக்க என்னால் இயன்ற அளவு முயற்சிக்கிறேன். நீங்கள் அடிக்கடி வந்து என்னிடம் அவனைப் பற்றி விசாரித்துவிட்டுச் செல்லுங்கள்” என்றார்.
ஞானேந்திரரின் குருகுலத்தில் சேர்ந்த பின்னும், நம்பியின் நிலைமையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஒருநாள் அந்த குருகுலத்தில் சுகுமாரன் என்ற ஒரு விவாசாயியின் மகன் மாணவனாகச் சேர்ந்தான். மிகவும் புத்திசாலியான சுகுமாரன் சேர்ந்த சில மாதங்களிலேயே தலைசிறந்த மாணவன் என்ற பெயரைப் பெற்றுவிட்டான்.
சுகுமாரனுக்கு நண்பனாக ஆசைப்பட்ட நம்பி அவனிடம் நட்புரிமை பாராட்ட முயன்றபோது, சுகுமாரன் அவனை ஏற்கவில்லை.
சுகுமாரன் குருகுலத்தில் சேர்ந்து ஓர் ஆண்டு சென்றபின், அவனுடைய தந்தை கடன் தொல்லையில் சிக்கித் தவிப்பதாக அவனுக்குத் தகவல் வந்தது. ஆகையால் அவன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட முயன்றான். தற்செயலாக நம்பியைக் காணவந்த சரண்யனிடம் நம்பி சுகுமாரனைப் பற்றிக் கூற, சரண்யன் சுகுமாரனை சந்தித்து, “தம்பி! உன்னைப் போன்ற புத்திசாலி மாணவனின் கல்வி தடைப்படக்கூடாது. உன்னுடைய கல்விக்கான செலவுகளை நான் ஏற்கிறேன். நீ தொடர்ந்து படி!” என்றார்.
நம்பியின் நல்ல உள்ளத்தையும், அவன் தந்தையின் பெருந்தன்மையும் கண்டு சுகுமாரன் வெட்கித் தலைகுனிந்தான். உடனே அவன் நம்பியிடம் தானாகவே வலியச் சென்று நட்புக்கரம் நீட்டினான். “நம்பி! நீயும் புத்திசாலிதான்! தவிர, நீ மிகவும் நல்லவன்! அதனால் உன்னை நண்பனாக அடைய விரும்புகிறேன். இனி குரு நடத்தும் பாடங்களை நீ எப்படிப் புரிந்து கொள்கிறாய் என்று தெரிந்து கொள்ள முயல்வேன்” என்றான்.
முதன் முதலாக தன்னை புத்திசாலி என்று சுகுமாரன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற நம்பி, அன்று முதல் வகுப்பில் நடந்த பாடங்களைத் தான் புரிந்து கொண்டதைக் பற்றி சுகுமாரனிடம் விளக்கத் தொடங்கினாள். அவற்றை கவனமாகக் கேட்டபின், அவன் தனக்குத் தெரிந்ததை விளக்குவான். ஓராண்டு காலத்திலேயே நம்பி மற்ற மாணவர்களைப் போல் சிந்திக்கத் தொடங்கினான். நம்பியின் மாற்றத்திற்குக் காரணமான சுகுமாரைத் தன்னிடம் அழைத்த ஞானேந்திரர் “நம்பியை எப்படி மாற்ற முடிந்தது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
“குருவே! மந்த புத்திக்காரனைப் பார்த்துக் கேலி செய்வதற்கு சாமர்த்தியம் தேவை இல்லை. அவனை சராசரிக்கும் மேலான அறிவாளியாக மாற்றத்தான் அறிவும், சாமர்த்தியமும், திறமையும், முயற்சியும் தேவை! அவற்றைப் பிரயோகித்து அவனை என்னைப் போல் அறிவாளியாக மாற்றினேன்” என்றான்.
“ஆகா! உத்தமமான பிள்ளை நீ! சுயநலமே உருவான இவ்வுலகில், நம்பி மீது விசேஷ அக்கறை எடுத்துக் கொண்டு அவனை மாற்றிவிட்டாய்! அவனுடைய மாற்றத்திற்குக் காரணம் நீதான் என்று அவன் தந்தை அறிந்தால் அவர் இன்னும் உனக்கு அதிக உதவிகள் செய்வார்” என்றார். “வேண்டாம் குருவே!” என்ற சுகுமாரன் “அவர் எனக்கு ஏற்கெனவே செய்த உதவிகள் போதும், அதற்கு இது கைம்மாறாக இருக்கட்டும்” என்றான்.
சுகுமாரனின் கல்விக்கான செலவை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, நம்பியின் தந்தையான சரண்யன் சுகுமாரனின் தந்தை வசிக்கும் கிராமத்திற்கு அடிக்கடிச் சென்று அவர் பட்ட கடனை எல்லாம் தானே தீர்த்து வைத்து, பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து அவரை மீட்டார். அப்போது அவருக்கு சுகுமாரனின் தந்தை ஏன் கடனாளியானார் என்ற விவரம் தெரிய வந்தது. அவருடைய பங்காளிகள் பேராசையே உருவானவர்கள். புத்திசாலியான சுகுமாரன் தன் தந்தையை விட்டு அகன்று குருகுலம் சென்றவுடன், அவரை பசப்பு வார்த்தைகளால் மயக்கி, அவரை ஏமாற்றிப் பணம் பறித்துக் கடனாளியாக்கி விட்டனர்.
இந்த விஷயத்தை அவர் அவ்வப்போது சுகுமாரனிடமும் தெரிவித்து வந்தார். இதனால் தனது சொந்தக்காரர்கனை நினைத்து மனம் கொதித்தான். கல்வியையே நிறுத்திவிட எண்ணியபோது, நம்பியின் தந்தை குறுக்கிட்டு கல்வியைத் தொடரச் செய்தார். ஐந்து ஆண்டுகளில் சுகுமாரன், நம்பி அகியோரின் குருகுலக் கல்வி நிறைவு பெற்றதும் குருவிடம் விடைபெற்றுக் கொள்ள சுகுமாரன் வந்தபோது அவர் “சுகுமாரா! சுபாவத்திலேயே நீ மிகவும் நல்ல பிள்ளை. நீ இன்று போல் என்றும் மிக்க நல்லவனாகவே இருப்பாய்!” என்றார்.
அதற்கு சுகுமாரன் “குருவே! என் தந்தையின் பங்காளிகள் என் தந்தையைப் படுகுழியில் தள்ளிவிட்டதை எண்ணியெண்ணி என் மனம் கொதிக்கிறது. அதனால், அவர்களைப் பழிக்குப் பழிவாங்கிய பின் நல்லவனாக மாற முயற்சிப்பேன்” என்றான். அதற்கு ஞானேந்திரன் “மகனே! பழக்குப் பழி, வஞ்சத்திற்கு வஞ்சம் என்று பிடிவாதமாக இருந்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. நான் சொல்வதைக் கேள்! அவர்களை மன்னித்துவிடு! அப்போது தான் வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க முடியும்” என்றார்.
அப்போது அங்கு சரண்யன் வந்தார். நடந்த விஷயங்களைக் கேட்டபிறகு அவர் சுகுமாரனிடம், “தம்பி! உன்னை என் மகனாகவே இதுவரை நினைத்திருக்கிறேன். இனியும் அப்படியே! நீ செய்ய விரும்பும் செயல்கள் எதுவானாலும் அதற்குத் துணை புரிவேன்” என்றார். அப்போது, ஞானேந்திரர் குறுக்கிட்டு, “ஐயா! நீங்கள் சுகுமாரனுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பது அவனிடம் கேட்காதீர்கள். மகா மேதாவியாகி விட்ட உங்கள் மகன் நம்பியிடம் அதைப்பற்றி கேளுங்கள்!” என்றார். பிறகு அவர் நம்பியை அழைத்து நடந்ததை எல்லாம் விவரித்தபின் அவனிடம் இது குறித்து அபிப்பிராயம் கேட்டார்.
அதற்கு நம்பி, “என் தந்தை மேற்கொண்டு உதவி செய்ய விரும்பினால், அவர் சுகுமாரனுக்குப் பகைவராக மாறவேண்டும். இதுவே என் யோசனை!” என்றதும். மற்ற மூவரும் திடுக்கிட்டனர். “சுகுமாரா!” என்று தொடர்ந்த நம்பி, “நீ இதுவரை என் தந்தை செய்த உதவிகளை மறந்துவிட்டு, அவரை உன் பகைவராக நினை! அவரைப் பழி வாங்க முயற்சி செய்! அவரைப் பழி வாங்கியபின் உன் கவனத்தை உன் சொந்தக்காரர்களிடம் திருப்பு! அவர்களைப் பழிவாங்கு!” என்றான்.
நம்பி கூறியதைக் கேட்டு அவன் தந்தையும், சுகுமாரனும் அதிர்ச்சி அடைய, குரு மட்டும் அதைப் புரிந்து கொண்டவராய் புன்னகை புரிந்து அவன் யோசனையை அமோதித்தார். காரணம் “சரண்யன் என்னதான் பகைவராக மாறினாலும், சுகுமாரனுக்கு அவர் மீது விரோதம் உண்டாகாது. அவர் தனக்கு செய்த உதவிகளை மட்டும் நினைவில் நிறுத்தி அவரை அவன் மன்னித்து விடுவான். அதனால் அவனுடைய பழிவாங்கும் எண்ணம் குறைந்துவிடும். அதனால்தான், நம்பி தன் தந்தை சரண்யனை விரோதியாக பாவிக்கும்படி அவனுக்கு அறிவுரை கூறினான். அவன் கூறியது அபத்தமான யோசனை அல்ல; மாறாக, நன்கு சிந்தித்தப்பின் அவன் கூறிய மிகச்சிறந்த யோசனை ஆகும்!” என்றான்.
என் அன்பு வாசகர்களே
ஒரு மனிதனை விரோதியாக்க ஒரு நிமிடம் போதும் ஆனால் அவர்களின் நற்பண்புகளை ஆராய ஒரு யுகமே தேவைப்படும்.
அநேகர், மனிதர்கள் தங்களுக்கு செய்த நன்மையை விடுத்து அவர்கள் செய்த துரோகத்தை மட்டும் நினைவில் கொண்டு அவர்களை வெறுக்கின்றனர். என்னதான் பரிசுத்தம் மேல் பரிசுத்தம் அடைந்தாலும் தன் சொந்த பந்தங்கள் செய்த ஒரு சிறிய காரியத்தை கூட மறக்காமல் வைராக்கியத்தோடு இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.
உதாரணமாக தங்கள் குடும்பத்தில் ஏதேனும் ஒரு விழாவிற்கு அழைப்பு விடுத்தும் சொந்தக்காரர்கள் வரவில்லையெனில் எத்தனை வருடங்கள் ஆனாலும் அதை மனதிலேயே வைத்து அவர்கள் ஏதேனும் விழாவிற்கு அழைக்கும்போது செல்லாமல் இருப்பார்கள். அவர்களிடம் பேசுவதிலோ நட்புபாராட்டுவதிலோ எந்த குறைவும் இல்லாமல் இருக்கும் ஆனாலும் உள்ளத்தில் வைராக்கியத்தை சேமித்து சேமித்து தங்களையும் கெடுத்துக்கொள்கிறார்கள்.
To get daily message and prayer requests in whats app contact +918148664356
இன்றைய கதையில் சுகுமாரனுக்கு அதை போன்ற கோபம் தான். தன் தந்தையை ஏமாற்றி பணம் பறித்த தன் சொந்தக்காரர்களை எப்படியாகிலும் பழிவாங்க வேண்டும் என்று துடித்தான். அவனை சொல்லி புரிய வைக்க முடியாது என்று எண்ணி, நம்பி அவன் தகப்பனை பகைக்க சொன்னான். நாம் மனதார நேசிக்கிற மனிதர்கள் எவ்வளவு பெரிய கெடுதல் செய்தாலும் நம் மனம் அதை ஏற்க மறுத்து அவர்களை நேசிக்கத் தான் செய்யும் அதனால் தான் அவ்வாறு சொன்னான்.
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் அப்படியே நம்மை அதிகமாய் நேசித்தபடியால் தான் தன் ஜீவனையே தியாகமாய் தந்தார். ஒருவேளை தேவனும் அவ்வாறு வைராக்கியமாய் இருந்தால் நம் நிலைமை என்ன என்று யோசித்தால் நம் கற்பனையிலும் எட்டாததாய் இருக்கும். தமது ஜீவன் தந்து நம்மை இரட்சித்த தேவனை நாம் மனதார நேசிக்கிறோமா என்று உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.
வேதம் சொல்கிறது,
நீதிமொழிகள் 25:21,22
21. உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரம்கொடு: அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு.
22. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்: கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.
எனவே தேவன் நம்மை நேசித்தது போல நாமும் மற்றவர்களையும் நம் சத்துருவையும் நேசிப்போம் தேவனிடத்திலிருந்து பலனை பெற்றுக்கொள்வோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
=============
ஓர் குட்டிக் கதை
செலவும் சிக்கனமும்
==============
நமது வருமானத்திற்கு ஏற்ற செலவு செய்தால் வீணான செலவுகளை தவிர்க்க முடியும்.
ஒரு பழமொழி உண்டு "வரவு எட்டணா செலவு பத்தணா" என்று.
வரவிற்கு ஏற்றார்போல் சிந்தித்து செலவு செய்தால் நிச்சயம் அதிலிருந்து நாம் சேமிக்க முடியும். ஆனால் சம்பளம் கிடைத்த மாத்திரத்தில் எல்லாவற்றிற்கும் செலவு செய்து விட்டு வீட்டிற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதில்லை இதனால் தான் அநேக குடும்பங்களில் பிரச்சனைகள் உருவாகக் காரணம்.
நாம் எவ்வாறு செலவு செய்ய வேண்டும், எப்படி மிச்சம் எடுப்பது என்பதை இக்கதை மூலம் காண்போம்.
ஒரு ஊரில் மருதலிங்கம் என்ற வியாபாரி ஒருவர் இருந்தார். மாதம் ஒருமுறை அயல்நாட்டிற்குச் சென்று பொருள்களை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்.
வியாபாரம் நன்றாக நடந்தாலும் அவருக்கு ஒரு பிரச்னை இருந்து வந்தது.
பல மாதங்களுக்கு முன்பு அயல்நாட்டுக்குச் சென்ற போது நிறைய பொருள்கள் வாங்கினார். கடைசியில் முக்கியமான ஒரு பொருளை வாங்குவதற்கு அவரிடம் போதுமான பணம் இல்லாமல் போய்விட்டது. அடுத்த மாதமும் அப்படியே நடந்தது. இதைச் சமாளிப்பதற்காக ஒவ்வொரு முறை பயணம் செல்லும்போதும் முன்பு கொண்டு சென்றதைவிட அதிகப் பணம் கொண்டு செல்வார். ஆனாலும் கடைசியில் பணம் போதாத நிலை ஏற்பட்டுவிடும்.
பலரிடமும் தனது பிரச்னையைக் கூறி விளக்கம் கேட்டுப் பார்த்தார். எதுவும் சரிப்படவில்லை. அந்தப் பிரச்னையும் தீரவில்லை, சரியான விளக்கமும் கிடைக்கவில்லை!
இந்நிலையில் அந்த ஊருக்கு ஒரு ஞானி வந்தார். ஊர் மக்கள் அனைவரும் அவரிடம் தங்கள் குறைகளைச் சொல்லி ஆசிபெற்று வந்தனர். இந்த விஷயம் மருதலிங்கத்தின் காதுகளை எட்டியது. அவரும் ஞானியைச் சந்தித்தார். தனது பிரச்னையைக் கூறினார்.
அவரை, ஞானி மறுநாள் வரும்படியும், அப்படி வரும்போது இரண்டு வளைந்த ஓடுகளைக் கொண்டு வரும்படிக் கூறினார்.
மருதலிங்கத்துக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் ஞானி கூறியபடி இரண்டு ஓடுகளுடன் மறுநாள் ஞானியைச் சந்தித்தார்.
இரண்டு ஓடுகளையும் சுவரில் சாய்வாக நிறுத்திய ஞானி, ஒரு பெரிய வாளியில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார். பிறகு அந்த வாளியில் இருக்கும் தண்ணீரால் ஒரு ஓடு மேல் ஊற்றி அதை முழுவதுமாக நனைக்கச் சொன்னார்.
மருதலிங்கம், வாளித்தண்ணீர் முழுவதையும் அந்த ஓட்டின் மீது ஊற்றினார். தண்ணீர் ஓட்டின் மீது ஓடி தான் சென்ற பகுதிகளை மட்டுமே நனைத்தது. இதனால் ஓடு முழுவதுமாக நனையவில்லை.
மருதலிங்கத்துக்கு இந்தச் சின்ன விஷயத்தைக் கூடத் தன்னால் வெற்றிகரமாகச் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்பட்டது.
ஞானி மீண்டும் தண்ணீர் கொண்டு வரச் செய்தார். ஆனால் இப்போது வாளியில் இல்லாமல் ஒரு கோப்பையில் தண்ணீர் கொடுத்தார்.
மீதமிருந்து ஓட்டைக் காண்பித்து, ‘இக் கோôப்பை நீரால் இந்த ஓட்டை முழுமையாக நனையுங்கள் பார்ப்போம்’ என்றார்.
கோப்பையில் நீர் கொஞ்சமாக இருப்பதைக் கவனித்த மருதலிங்கம், முன்புபோல முழுவதுமாக ஊற்றாமல், கைகளால் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து ஓடு முழுவதும் நனையும்படி செய்தார். இதனால் ஓடும் முழுமையாக நனைந்தது; கோப்பையில் நீரும் மிச்சமிருந்தது!
ஞானியின் முகத்தில் புன்னகை படர்ந்தது. அவர், ‘இப்போது ஏன் தண்ணீரைக் கைகளால் தெளித்தீர்கள்?’ என்று கேட்டார்.
‘ஓடு முழுமையாக நனையத்தான்’ என்றார் மருதலிங்கம்.
ஞானி, ‘இப்போது தெளித்தது போலவே முன்பும் தெளித்திருக்கலாமே? ஏன் அப்போது ஊற்றினீர்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு மருதலிங்கம், ‘அப்போது வாளியில் நிறைய நீர் இருந்தது. ஒரு ஓட்டை நனைக்க அந்த நீர் போதுமானது என்றெண்ணி ஊற்றினேன். ஆனால், இப்போதோ கோப்பையில் கொஞ்சம் நீர்தான் இருந்தது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்தால்தானே ஓடு முழுவதுமாக நனையும்? வேறு வழியில்லையே!’ என்று பதிலளிளித்தார்.
மீண்டும் ஞானியின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது…
‘உங்கள் பதிலிலேயே உங்களுடைய பிரச்னைக்கான விடையும் அடங்கியிருக்கிறது. நீங்கள் வாளி நீரைப் போல பணத்தைக் கொண்டு சென்றீர்கள். நிறையப் பணம் கைவசம் இருக்கிறது என்ற நினைப்பில் கூடுதலான பொருள்களை வாங்கினீர்கள். அதனால் முக்கியமான பொருளை வாங்குவதற்குள் பணம் தீர்ந்து போனது. அதையே நீங்கள், கோப்பையில் இருந்த நீரைப் போல தேவைக்கு அளவான பணத்தை மட்டும் கொண்டு சென்று, ஒவ்வொரு பொருள் வாங்கிய பிறகும், வைத்திருக்கும் பணம் எவ்வளவு, இன்னும் என்ன பொருள் வாங்கவேண்டும், அதற்கு மீதமிருக்கும் பணம் போதுமா? என்றெல்லாம் கணக்கிட்டுப் பொருள்களை வாங்கினால் உங்களால் முக்கியமான பொருள்களையும் வாங்கி வரமுடிந்திருக்கும்!’ என்றார்.
மருதலிங்கத்தின் மனதில் தெளிவு ஏற்பட்டது. மகிழ்ச்சியுடன் ஞானிக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
என் அன்பு வாசகரே,
இன்றைய காலக்கட்டத்தில் செலவு என்பது இன்றியமையாத ஒன்றாய் மாறிவிட்டது. என்ன செய்தாலும் அதை தடுக்க முடியாது. ஆனால் வீணாண செலவுகளை நிறுத்தினால் நிச்சயம் நம்மாலும் சேமிக்க முடியும்.
To get daily message in whats app contact +918148663456
பார்ப்பதை எல்லாம் வாங்க இச்சை கொள்வது தான் வீண் செலவுகளில் பிரதானமாக இருப்பது.
"ஆசை" என்பது நாம் அதிகம் விரும்பிய பொருளை வாங்குவது.
"இச்சை" என்பது கண்களால் காண்கின்ற அனைத்து பொருட்களையும் வாங்க நினைப்பது.
இச்சை அதிகமாகும் போது செலவும் கூடவே பாவமும் பெருகுகிறது. பாவம் பெருகுகிற போது அநேக பிரச்சினைகளும் சேர்ந்து பெருகுகிறது.
எசேக்கியேல் 11:21
ஆனாலும் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எனவே ஆசைகளை வளர்த்து இச்சைகளை தவிர்த்து குடும்பமாய் இந்த ஆண்டில் குதுகலத்தோடு வாழ்வோம் தேவ ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
==============
ஓர் குட்டிக் கதை
இன்றைய வசனமும் கதையும்
=============
நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிற வர்களுக்குக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து,
மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர் களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக,மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.
எபேசியர் 6:5-8
அடிமையானாலும், சுயாதீனமுள்ளவனானா லும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, மனுஷருக்கென்று ஊழியம் செய்யா மல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ் செய்யுங்கள்.
என் அன்புக்குாியவா்களே,
இன்று பல தேவனுடைய பிள்ளைகள் அதிகாாி களின் பாா்வைக்கு வேலை செய்கிறவா்களாய் இருக்கிறாா்கள். கா்த்தா் கெடுத்த வேலை என்று மனபூா்வமாயும் உற்சாகமாயும் வேலை செய்ய மனமில்லாதவா்களாயிருக்கிறாா்கள். அதனால் அவா்கள் தேவனிடத்திலிருந்து முழுமையான ஆசீாவாதங்களைப் பெறாமல் இருக்கிறாா்கள்.
மேலுள்ள வசனம் கூறியபடி பயத்தோடும் நடுக்கத்தோடும், கபடமற்ற மனதோடும் வேலை செய்யாமல்முதலாளியின்பாா்வைக்காக வேலை செய்கிறவா்களாய் இருப்பதினால் தனக்குத் தானே நஷ்டங்களை பெற்றுக்கொள்கிறாா்கள்.
பவுல் சொல்கிறாா்.
மோசம்போகாதிருங்கள்
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். - கலா. 6:7 இதை விளக்கும் ஒரு கதையை வாசியுங்கள் இது உங்கள் வாழ்க்கை யை மாற்றும்
மனபூா்வமாய் செய்தல்
=============
வயதான ஒரு மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத் தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!
முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்!
சில விநாடிகள் யோசித்தவர்,
‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.
அந்த வீடு பொியதாக கட்டுங்கள். அதை உங்கள் போறுப்பில் விட்டு விடுகிறேன். அதை நீங்கள் எப்படிக் கட்ட முடியுமோ அப்படிக் கட்டுங்கள்.எவ்வளவு பொிய இடத்தை அதற்கு எடுத்துக் கொள்ள வேண்டுமோ அந்த இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அழகான பூந்தோட்டததுடன் காா்கள் நிற்கவும் அமைக்க வேண்டுமானாலும் அதை கட்டுங்கள். எவ்வளவுபணம் செலவானாலும் பரவாயில்லை. இதை நோ்த்தியாய் கட்டிக் கொடுங்கள்.
மேஸ்திாிஅதற்கு சம்மதித்தாலும் அவருக்கு எாிச்சலாகஇருந்தது.ஓய்வு பெற போகிற கடைசி நாட்களிலும் வேலை வாங்குகிறாரே என எாிச்சலும் புகைச்சலுமாய் அவா் பணியைத் துவங்கினாா்.
அவரால் முழு ஈடுபாட்டுடன் அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. முதலாளி மேல் கோபத்தால் கடுகடுப்புடன் வேலை செய்தாா்.
ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீட்டைக் கட்டினார்.
வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!
வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பாா்வையிட வந்தார் முதலாளி. வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச்சாவியை எடுத்து நீட்டினார். ‘
‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.
மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை.
‘என்ன கொடுமை இது!
இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே..
இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..’என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.
என் அன்புக்குாியவா்களே,
பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது. நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிா்மாணிக்கிறோம் என்பதை அறியாமல்,
பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது,
அதிர்ச்சி அடைகிறோம்! ‘
இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே..’ என்று மனம் புழுங்குகிறோம்.
To get daily message in whats app contact +918148663456
நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம்.
நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும் தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன.
ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனை தரும் என்பது யாருக்குத் தெரியும்.
கொலோசெயர் 3:17
வார்த்தைகளினாலாவது கிரியைகளினாலா வது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல் லாம் கா்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
கொலோசெயர் 3:24
எதைச்செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !!!