முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரித்திரம்
ஜாண் பனியன் (1628-1688)
=====================
இங்கிலாந்திலுள்ள பெட்போர்டு என்ற இடத்தில் ஜாண் பனியன் 1628-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். இவரது பெற்றோர் கிறிஸ்தவர்கள் அல்லர். சிறுவயதில் தனது மூதாதையர்களின் தொழிலான பாத்திரங்களைப் பழுதுபார்த்து விற்பனை செய்யும் தொழிலையே இவரும் தனது தந்தையுடன் சேர்ந்து செய்து வந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் உயர்கல்வி பெற இவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. வீட்டின் பொருளாதாரத் தேவையைச் சந்திக்க பள்ளிப்படிப்பை இடையிலே விடவேண்டியிருந்தது.
தனது இளம்பிராயத்தில் ஒரு கெட்ட மனிதனாகவே வளர்ந்தார். பொய் சொல்லவும், மற்றவர்களை ஏமாற்றவும், பெரியவர்களை மதிக்காமலும் இருந்தார். வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் போகவே தனது 16 வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்தார். இரண்டு வருடம் இராணுவ வீரனாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது இவரது தாயாரும் சகோதரியும் இறந்து விட்டனர். எனவே இவருக்கு வாழ்க்கையில் ஆர்வம் இல்லாமல் போனது.
அதோடு ஒருமுறை அரசாங்க ஆணைப்படி, இவர் எல்லையில் நடைபெறும் போருக்குச் செல்லப் பணிக்கப்பட்டார். அதற்கு அவர் ஆயத்தமாகி வரும் நிலையில், கடைசி நேரத்தில் இவருக்குப் பதிலாக வேறொரு நபர் அனுப்பப்பட்டார். அந்நபர் போரின் முதல் நாளே சண்டையில் மரணமடைந்தார். இந்த நிகழ்ச்சி ஜாண் பனியனை அதிகமாகச் சிந்திக்க வைத்தது. மயிரிழையில் தான் உயிர் தப்பினது ஏனோ? என்று சிந்திக்கத் தொடங்கினார்.
இரண்டாண்டுகள் மட்டும் ராணுவத்தில் பணியாற்றி திரும்பிய இவர் தனது 19-வது வயதில் ஒரு விசுவாசியான கிறிஸ்தவப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவள் அடிக்கடி கிறிஸ்துவைப் பற்றி ஜாண் பனியனிடம் பேசுவாள். அவளைப் பிரியப்படுத்த ஜாண் கோயிலுக்குப் போகவும், சில கெட்ட காரியங்களை விடவும் ஆரம்பித்தார். ஆனால் முற்றிலும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க மனமில்லை.
இந்நிலையில் ஒருநாள் தெருவில் பாத்திரங்கள் பழுதுபார்க்கப்படும் என்று கூவிக்கொண்டே சென்றபோது வழியில் மூன்று பெண்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சொல்லிக்கொண்டிருப்பதை நின்று கவனிக்க ஆரம்பித்தார். அவர்கள் மூலம் சுவிசேஷத்தைக் கேட்ட ஜாண், வீட்டில் சென்று வேதத்தை அதிகமாக வாசிக்க ஆரம்பித்தார். வேதத்தை வாசிக்க வாசிக்க தான் ஒரு பாவி என்று அதிகம் உணர்த்தப்பட்டார். ஒருநாள் அதிக சுகவீனப் பட்டு, சோர்வுடன் இருந்தபோது மார்ட்டின் லுத்தரின் வாழ்க்கை சரித்திர புத்தகத்தைப் படித்தார். அப்போது, தன்னைக் கிறிஸ்துவுக்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்தார்.
ஆண்டவரை ஏற்றுக்கொண்ட கொஞ்ச நாட்களிலே ஜாண் பனியனின் அன்பு மனைவி இறந்துபோனார் . அதிக வேதனையுற்ற பனியன் தனது இரட்சகர் மட்டுமே இறுதிவரை தனக்கு உதவி செய்ய முடியும் என்று நன்கு உணர்ந்துகொண்டார். தனது வாழ்வை அவருக்கு முழுவதும் அர்ப்பணித்து, ஆண்டவருக்குத் தன்னால் இயன்றதைச் செய்ய முன் வந்தார்.
பாத்திரங்களைப் பழுதுபார்க்கும் வீடுகளில் தனது தொழிலைச் செய்து கொண்டே இயேசுவையும் அறிவிக்க ஆரம்பித்தார். இவரது ஊழியத்தின் மூலம் பலர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், இவரது வியாபாரமும் நன்கு வளர்ந்தது.
இந்தக்காலத்தில் இங்கிலாந்து தேசத்தில் போதகர்கள் தவிர மற்ற எவரும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கக்கூடாது என்றொரு சட்டம் இருந்தது. இதனை அறிந்த ஜாண் மாற்கு 16:15-ம் வசனத்தைப் படித்து (நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்) இதற்கு கீழ்ப்படிவதே உன்னதம் என்று உணர்ந்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வந்தார்.
சில வருடத்திற்குப் பின் இதே சட்டம் கடுமையாகப் பின்பற்றப்பட்டு போதகர் அல்லாத வேறு யாராவது சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால் சிறைச்சாலையில் போடப்பட்டதோடு, கடுமையாகத் தண்டிக்கவும்பட்டனர். ஜாண் பனியன் தாய்நாட்டின் சட்டத்தை மீற விரும்பாவிட்டாலும் தேவனுக்குக் கீழ்ப்படிதலை தனது வாழ்வில் முதன்மையாகக் கருதினார். எனவே தனது ஊழியத்தை அவர் நிறுத்தவில்லை.
ஒருநாள் ஒரு கிராமத்தில் சுவிசேஷத்தை பிரசங்கிக்க மக்கள் இவரை அழைத்தபோது. அதனை அறிந்த காவல் துறையினரும் வந்து காத்திருக்க, ஜாண் பனியன் தனது பிரசங்கத்தை ஆரம்பித்தவுடனே காவலரால் சிறைப்பிடிக்கப்பட்டு நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டார்.
நீதிபதி இவரிடம் இனி சுவிசேஷத்தை பிரசங்கிக்க மாட்டேன் என்று உறுதி கூறினால் உன்னை விடுவிக்கிறேன் என்று கூறினார். ஆனால் அப்படி உறுதியளிக்க ஜாண் பனியன் முன் வரவில்லை. முதலில் 3 மாத சிறைத் தண்டனை அவருக்கு அளிக்கப்பட்டது. அதற்கு பதிலுரைத்த ஜாண் பனியன் இன்று நான் விடுவிக்கப்பட்டால், தேவ உதவியால் நாளை பிரசங்கிப்பேன் என்றார். எனவே அவரது சிறையிருப்பு 3 மாதத்தில் முடியாமல் 12 வருடமாக நீடித்தது.
இந்த 12 வருடத்தில் எந்த நேரத்திலும் அவருக்கு விடுதலை கிடைக்கும், ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, அதாவது நான் இனி பிரசங்கிக்கமாட்டேன் என்ற ஒரே ஒரு உறுதிமொழி அவர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.
சிறிய இருண்ட அறையில் 50 பேருடன் இவர் தங்கவேண்டியிருந்தது. இதனால் நோய்கள் வேகமாகப் பரவி, பலர் அதே அறையில் மரித்தனர். தனது குடும்பத்தையும் நான்கு பிள்ளைகளையும் பிரிந்து வெளிஉலகத்தையே பார்க்காமல் 12 வருடம் சிறையில் கழித்தது கஷ்டமாக இருந்தாலும் ஆண்டவரை அதிகம் நேசித்ததால், அதனை சகித்துக்கொண்டார்.
சிறையில் இவருடன் கொலைகாரர்கள், துஷ்டர்கள் என கிறிஸ்துவை அறியாதவர்கள் இருந்தனர். இவர்களுக்கு சுவிசேஷத்தைச் சொல்லி, அநேகரை நீதிக்குட்படுத்தினார். சிறையிலே இவர்கள் கூடி ஜெபிக்க ஆரம்பித்தனர். சிறையில் ஒரு நிமிடமும் வீணாக்காமல் வேத வசனத்தை வாசிப்பது, ஜெபிப்பது, எழுதுவது என்று செலவழித்தார். அங்குதான் அவர் 'மோட்ச பிரயாணம்' என்ற தனது தலைசிறந்த புத்தகத்தை எழுதி முடித்தார்.
தனது 43-வது வயதில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். பெட்ஃபோர்டு என்ற இடத்தில் பாப்திஸ்து திருச்சபையின் போதகராக ஊழியம் செய்ய அழைப்பு பெறவே, அதனை ஏற்று 16 வருடம் அங்கு ஊழியம் செய்தார். சபை போதகராக மட்டுமன்றி பல இடங்களுக்கு பயணம் செய்து, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும், தெருக் கூட்டங்களிலும் சுவிசேஷத்தை பிரசங்கித்தார். பல நேரங்களில் மிரட்டப்பட்டதோடு, மறுபடியும் சிறைவாசம் செல்ல வேண்டி இருந்தது. எனினும் சோர்ந்து போகாமல் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்.
தனது சபை அங்கத்தினர்களின் குடும்பங்களிலுள்ள பிரச்சனைகளை தீர்த்து, அவர்களை கிறிஸ்துவுக்குள் ஊன்றக்கட்டும் பணியிலும் அதிகம் ஈடுபட்டார். ஓடிப்போன ஒரு மகனை, அவனது குடும்பத்துடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு உழைத்த போது கொட்டும் மழையிலும் கடினமான 40 மைல் பிரயாணம் மேற்கொண்டார். மழையில் அதிகம் நனைந்ததால், சுகவீனப்பட்டு 1688-ம். ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி, தனது 59-வது வயதில் மரித்து, பூமியில் தான் ஆசையாய் சேவித்த ஆண்டவரை பரலோகத்தில் முகமுகமாய் தரிசிக்கவும் சேவிக்கவும் சென்று விட்டார்.
போதகரும் நற்செய்திபணியாளருமான ஜாண் பனியன் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவர் உருவாக்கின மோட்சப்பிரயாணம் என்ற புத்தகம் இன்றும் அநேகரை ஆண்டவரண்டை வழிநடத்தி வருகிறது. வேதப் புத்தகத்திற்கு அடுத்தபடியாக 130-க்கும் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இப்புத்தகம் எல்லோராலும் விரும்பி வாசிக்கப்படுகிறது. இப்புத்தகத்தை இதுவரை நீங்கள் வாசிக்காவிட்டால் சீக்கிரம் வாங்கி வாசியுங்கள்.
தேவன் தம்முடைய பணியில் பயன்படுத்த பல்வேறு திறமைகள் மற்றும் தாலந்துகள் நிறைந்தவர்களை தேடவில்லை, ஆனால் முழுமையான அற்பணிப்பு செய்யும் நபர்களை தேடுகிறார். சாமனியர்களைக் கொண்டு சரித்திரம் படைக்கும் ஆண்டவர் உங்களைக் கொண்டும் புதிய சரித்திரம் படைப்பார். இறையாசி உங்களோடு இருப்பதாக.
துணை நின்ற நூல்: நண்பர் சுவிசேஷ வெளியீட்டின் *மறக்க முடியாத மாமனிதர்கள்*
✝. இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
🛐. இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
☸. கிறிஸ்துவவில் அன்பானவர்களே!.இந்த மிஷனெரிகள் சரித்திரம் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களால் வாசிக்கப்படுகின்றது. ஆகவே இந்த சரித்திர குழுவின் இனைப்பை உங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவருக்கும் அனுப்பு வைக்கும்போது, அவர்களும் உங்களைப்போல மிஷனெரி தரிசனத்தை பெற்றுக்கொள்வார்கள். நன்றி
🔯. May God Bless You and Use You for the Extensions of His Kingdom. With Love and Prayer...Rev. D. David Paramanantham B.Sc, M.A, B.D, Gamaliel Bible College, Mumbai, India 💐😊🙏
The Gospel Pioneers
John Bunyan (1628-1688)
==============
John Bunyan was born in November 1628 in Bedford, England. His parents were not Christians. As a child, he worked with his father in the family business of repairing and selling utensils. Born into poverty, he did not have the opportunity for higher education, and his schooling was interrupted to support the household economically.
Growing up, Bunyan indulged in negative behavior during his youth, including lying, cheating, and disrespecting elders. His life took a turn when, at the age of 16, he joined the army. Unfortunately, his mother and sister passed away while he served as a soldier for two years, leading him to lose interest in life.
By government order, he was designated for war on the border, but another person replaced him at the last minute and was killed in action on the first day. This incident prompted Bunyan to contemplate the fragility of life.
After only two years in the army, he married a Christian woman at 19, and through her influence, Bunyan began attending church. However, he struggled with surrendering completely to the Lord.
One day, while advertising his pottery repair services on the street, Bunyan overheard three women discussing Jesus Christ. Their words had a profound impact, leading him to read more scriptures. As he delved deeper, he realized his sinful nature. During a period of sickness, he read Martin Luther's biography, and at that moment, he surrendered himself completely to Christ.
Shortly after accepting the Lord, Bunyan's wife passed away. Distraught, he turned to his Savior for solace and dedicated his life to serving Him. Bunyan began preaching about Jesus while continuing his trade in pottery repair, leading not only to spiritual conversions but also to the prosperity of his business.
During this time, a law in England restricted preaching the gospel to pastors only. Undeterred, Bunyan, inspired by Mark 16:15, continued to preach, prioritizing obedience to God over man-made laws.
Years later, when the law was strictly enforced, Bunyan faced imprisonment for preaching the gospel. Despite offers of release on the condition of ceasing his preaching, he refused and endured 12 years in prison, surrounded by disease and death.
In prison, Bunyan shared the gospel with fellow inmates, bringing many to Christ. He utilized his time reading, praying, and writing, completing his masterpiece, "The Pilgrim's Progress."
Released at 43, he served as a pastor for 16 years, preaching extensively and facing threats and imprisonment. Bunyan actively worked to solve familial issues and bring people to Christ, exemplifying dedication to his calling.
In 1688, he fell ill and passed away at the age of 59. John Bunyan's legacy lives on through "The Pilgrim's Progress," translated into over 130 languages. His life serves as an inspiration for dedication to God's work.
Source: "Marakka mudiyatha Mamanitharkal" by Friends Missionary Prayer Band Publications.
🛐.Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.
☸. My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation?
✝. The Gospel came to India 2000 years back but still we are 2.8% of Indian population. The harvest is plenty but the labourers are few. So come...let's together build the Kingdom of God in our Nation and let's evangelize our Nation in Christ in our Generation.
❇. Dear friends kindly introduce this group link to your friends, relatives and your Church members. May God bless you and use you for the extensions. With love and prayer...Rev. D. David Paramanantham, B.Sc., M.A. B.D. Gamaliel Bible College, Mumbai, India💐🙏😊
