அப்போஸ்தலர். 16:11-15.
அருட்பணியில் அறியுங்கள்.
1. வசனம் 12.
பவுல் அருட்பணி செய்ய பிலிப்பு என்னும் பட்டணத்திற்கு வந்தான்.
இது ஐரோப்பியாவில் மக்கெதோனியா தேசத்திலுள்ள நாடுகளில் ஒரு நாட்டின் தலைநகரமாகும்.
இது ரோமர்கள் குடியிருக்கும் பட்டணம்.
2. வசனம் 13.
1) இப்பகுதி மக்கள் பட்டணத்திற்கு வெளியே ஆற்றினருகே போய் தேவனை தொழுதுகொண்டது ஏன்?
ஜெபாலயம் இல்லாததால்.
அ) யூத முறைமையின்படி ஒரு பட்டணத்தில் குறைந்தது பத்து யூதர்களாவது இருந்தால்தான் அங்கு ஜெபாலயம் கட்டப்படும்.
ஆ) இது ரோமர்கள் (புறஜாதியார்)
இருக்கும் பட்டணம்.
பவுல் இந்த பட்டணத்திற்கு வந்த முதலாம் ஓய்வு நாளிலே பவுலும் ஆற்றினருகே போய் தேவனை தொழுதுகொள்ள அதில் கலந்து கொண்டான். அங்கு கூடியிருந்த வர்களுக்கு உபதேசித்தான்.
வசனம். 13.
3. வசனம் 14:-
பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி லீதியாளின் இருதயத்தை திறந்தது, தேவனின் செயலா, லீதியாளின் செயலா?
a) தேவனின் செயலே.
வசனம் 14 b.
b) தேவனை அறிந்துகொள்ளும் அறிவு மனித முயற்சியால் உண்டாவதல்ல. அந்த ஆவியை தேவன்தான் தருகிறார்.
எபேசியர். 1:17; லூக்கா. 24:45.
c) ஒருவன் தேவ வசனங்களை புரிந்துகொள்ள அனுமதிப்பதும் அல்லது தடைபண்ணுவதும் தேவன் செய்யும் செயலே.
அப்போஸ்தலர் 16:6, 14.
d) எதற்காக தேவன் இப்படி நிர்ணயிக்கிறார்?
மத்தேயு. 7:6; 2 பேதுரு 2:22.
e) தேவன் நமது இருதயத்தை திறந்தருளினாலும், அவர் நமது அனுமதி இல்லாமல் நம் இருதயத்திற்குள் வருவதில்லை.
வெளி.3:20.
4. பவுல் சொல்லியவைகளை கவனித்துக்கொண்டிருந்த லீதியாளின் இருதயத்தில் எப்படிப்பட்ட நினைவுகள் ஓடியிருந்திருக்கும்?
அ) தன்னை குத்தி பேசுவதுபோல் இருந்திருந்திருக்கும்.
அப்போஸ்தலர். 2:37.
ஆ) உண்மையை உணர ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர உபதேசத்தை எதிர்க்கவோ பின்வாங்கவோ கூடாது என்ற நினைவுகள் ஓடியிருந்திருக்கும்?
ஏசாயா. 50:5.
இ) நாம் பரிசுத்த அலங்காரமுள்ளவர்களாக வாழ தேவன் விரும்புகிறார் என்ற நினைவுகள் ஓடியிருந்திருக்கும்?
சங்கீதம். 110:3.
5. இதன் விளைவாக லீதியாள் என்ன செய்தாள்?
அ) தான் தன் குடும்பத்தோடு ஞானஸ்நானம் பெற்றாள்.
வசனம். 15a.
ஆ) ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன் தனது பாவங்களை அறிக்கையிட்டாள்.
மத்தேயு. 3:6;
இ) தேவ பிள்ளைகளோடு அன்பிலும், ஐக்கியத்திலும், விசுவாசத்திலும், உதவுகிறதினாலேயும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.
வசனம் 15b ; யாக்கோபு. 2:14-19.
6. இதனால் லீதியாள் பெற்ற ஆசீர்வாதங்கள் என்ன?
அ) பாவமன்னிப்பு கிடைத்தது.
அப்போஸ்தலர். 2:-38.
ஆ) பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறும் வழியைப் பெற்றுக் கொண்டாள்.
அப்போஸ்தலர். 2:38
இ) தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஆக்கினையில் இருந்து விடுதலையைப் பெற்றுக் கொண்டாள்.
மாற்கு. 16:16.
இப்படிப்பட்டவர்கள்தான், இறைமக்கள்.
இப்படிப்பட்டவர்கள்தான், கிறிஸ்துவின் மந்தை.
நாம் எப்படி?