இறைமக்கள் கிறிஸ்துவின் மந்தை.
1. ஆதியாகமம். 35:1-15.
2. அப்போஸ்தலர். 16:11-15.
3. யோவான். 10:1-6.
4. சங்கீதம். 95.
மன்னா :- யோவான். 10:11
ஆதியாகமம். 35:1-15.
ஆண்டவரை அறியுங்கள்.
1. வசனம் 1:-
1) பெத்தேல் என்றால் தேவனுடைய வீடு என்று பொருள்.
2) அந்த இடத்திற்கு பெத்தேல் என்று பெயரிட்டது யார்? பெயரிட்டவர் செய்துகொண்ட பொருத்தனை என்ன?
ஆதியாகமம். 28:19-22.
அதை நிறைவேற்றும்படியாக வசனம் 1-ல் நினைவுப் படுத்துகிறார்.
3) ஏன்?
பிரசங்கி. 5:4,5.
ஆம். நமது தேவன் நினைவுப் படுத்துகிற தேவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
2. வசனம் 2,3.
யாக்கோபு பலிபீடத்தை உண்டாக்குவதற்கு முன் செய்தது என்ன?
1) தன் வீட்டாரிடம் இருந்த அந்நிய தெய்வங்களை விலக்கிப் போட்டான்.
2) தன்னையும் தன் குடும்பத்தையும் பரித்தப்படுத்திக் கொண்டான்.
3) அதன்பின்பே தேவனுக்கு பலிபீடத்தை உண்டாக்கினான்.
ஏன்?
a) பரிசுத்தமில்லாமல் கர்த்தரை தரிசிப்பது என்பது இயலாத காரியம்.
எபிரேயர் 12:14
b) இது கர்த்தரை அறியும் அறிவு.
கொலோசெயர். 1:10.
ஆம். நமது தேவன் பரித்தர். பரிசுத்தம் இல்லாமல் அவரை தொழுதுகொள்ளவோ, தரிசிக்கவோ முடியாது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
3. வசனம் 7.
1) அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
2) தேவனுக்கு கீழ்படிந்து, தன் பொருத்தனையை நிறைவேற்றி முடித்தான்.
3) இவனின் இந்த செயல்கள் கர்த்தருக்கு பியமாயிருந்தது.
கொலோசெயர் 1:10.
4) இப்படி யாக்கோபுதனது குடும்பத்தோடு தன்னை பரிசுத்தப் படுத்திக்கொண்டதால், தேவன் ஞாபகப்படுத்தினதற்கு கீழ்படிந்ததால், தன் பொருத்தனையை நிறைவேற்றினதால் மேலும் கர்த்தரிடம் மேலும் ஆசீர்வாதங்களைப் பெற்றான்.
வசனம் 9.
என்னென்ன ஆசீர்வாதங்களைப் பெற்றான்?
a) தேவன் இறங்கி வந்து தனக்கு தரிசனமாகவும், தன்னோடு பேசவும் பாக்கியம் பெற்றான்.
வசனம் 9.
b) சத்துருக்கள் தன் குடுபத்தாரை தொடாதபடிக்கு கர்த்தரிடத்தில் பாதுகாப்புப் பெற்றான் .
ஆதியாகமம். 35:5.
c) ஏற்கனவே தருவதாக சொன்ன ஆசீர்வாதங்களை தேவன் தருவதாக மீண்டும் உறுதியளிக்கிறதைப் பெற்றான்.
வசனம் 10, ஆதி. 32:28; 28:13-15;
d) தான் "சர்வவல்லமையுள்ள தேவன்" என்று தன்னை அறிமுகப் படுத்துகிறார்.
வசனம். 11.
சர்வவல்லமையுள்ள தேவன் என்பதைக் குறிப்பதற்காக இரண்டு எபிரெய வார்த்தைகள் பயன்படுத்த ப்பட்டிருக்கிறது.
ஒன்று "ஏல்" என்பதாகும், மற்றொன்று "ஷடாய்" என்பதாகும். ("எல்-ஷடாய்", தமிழில் "சர்வ வல்லமையுள்ள தேவன்".)
"சர்வவல்லமையுள்ள தேவன் " என்றால்?
ஆதி. 49:25; கொலோ. 1:16; ரோமர். 4:17.
e) யாக்கோபு தன் சந்ததி பலுகிப் பெருகவும், தன் சந்ததியில் ராஜாக்கள் பிறக்கவும் ஆசீர்வாதம் பெற்றான்.
வசனம் 11.
f) அவன் குடியிருக்கும் அந்த தேசம் தன் சந்ததிகளுக்கு கிடைப்பதற்கு ஆசீர்வாதம் பெற்றான்.
வசனம் 12.
யாக்கோபு தன் வீட்டாரிடமிருந்த அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டதால்,
குடும்பத்தோடு தன்னை பரிசுத்தப் படுத்திக்கொண்டதால்,
தேவன் ஞாபகப்படுத்தினதற்கு கீழ்படிந்ததால்,
தன் பொருத்தனையை நிறைவேற்றினதால்,
மேலும் மேலும் கர்த்தரிடம் ஆசீர்வாதங்களைப் பெற்றான்.
முடிவுரை:-
புதிய ஏற்பாட்டில் 2கொரிந்தியர். 6:18- ல், "சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார் " என்பதைக் கவனிக்க வேண்டும்.
யாக்கோபின் சர்வவல்லமையுள்ள தேவன் அப்படி என்ன நமக்கு சொல்லுகிறார்?
2கொரிந்தியர். 6:14-18
ஆதியாகமம். 35:1-15-ல் யாக்கோபு தேவனிடம் எப்படி நடந்து கொண்டானோ,
அப்படியே 2கொரிந்தியர். 6:14-18-ன் படி நாமும் நடந்துக்கொண்டு,
யாக்கோபின் பிள்ளுக்குரிய ஆசீர்வாதத்தை நாம் பெறவேண்டும் என்று தேவன் ஞாபகப்படுத்துகிறார்.