==============
பைபிள் கேள்வி - பதில்கள்
1 இராஜாக்கள்
==============
1) நீதியும் நற்குணமும் உள்ள இரண்டு படைத்தலைவர்கள். ஒரே படைத்தலைவன் கையால் மாண்டார்கள. அவர்கள் யார்?
2) யாருடைய சிங்காசனம் உறுதியாயிருந்து?
யாருடைய ராஜ்யபாரம் ஸ்திரப்பட்டது?
3) கேருபீன்கள் எந்த மரத்தால் செய்யப்பட்டது?
4) சாலொமோன் தீருவின் ராஜாவிற்கு இருபது பட்டணங்களை கொடுத்தான். அந்த பட்டணத்தின ் பெயர் என்ன?
5) ராஜாவின் சிங்காசனம் எதினால் செய்யப்பட்டது?
6) கர்த்தர் சாலமோனுக்கு எத்தனை விரோதிகளை எழுப்பினார்? அவர்கள் யார்?
7) ஏழு நாட்கள் ராஜாவாயிருந்தது யார்?
8) இரண்டு முறை சாப்பிட்டு, நாற்பது நாட்கள் நடந்தது யார்?
9) பன்னிரண்டு ஏர் பூட்டி உழுதது யார்?
10) முப்பத்து இரண்டு ராஜாக்களோடு சமாரியாவை முற்றுகை போட்டது யார்?
11) முதியோர் ஆலோசனையை தள்ளி விட்டு, வாலிபரின் ஆலோசனையை கேட்ட ராஜா யார்?
12) மனைவி தூண்டியதால் பொல்லாப்பை செய்ய தன்னை விற்று போட்ட ராஜா யார்?
13) "நான் தான் நீர்" யார்? யாரிடம் சொன்னது?
14) எத்தனை தீர்க்கதரிசிகளின் வாயில் பொய்யின் ஆவி இருந்தது?
15) கப்பல்கள் செய்த இடமும், கப்பல்கள் உடைந்து போன இடமும் ஒன்று. அது எந்த இடம்?
1 இராஜாக்கள் (பதில்கள்)
1 King Answer
===========
1) நீதியும் நற்குணமும் உள்ள இரண்டு படைத்தலைவர்கள். ஒரே படைத்தலைவன் கையால் மாண்டார்கள. அவர்கள் யார்?
Answer: அப்னேர், அமாசா
1 இராஜாக்கள் 2:32
2) யாருடைய சிங்காசனம் உறுதியாயிருந்து? யாருடைய ராஜ்யபாரம் ஸ்திரப்பட்டது?
Answer: தாவீது சிங்காசனம் உறுதியாய் இருந்தது
சாலமோன் சிங்காசனம் ஸ்திரப்பட்டது
1 இராஜாக்கள் 2:45,46
3) கேருபீன்கள் எந்த மரத்தால் செய்யப்பட்டது?
Answer: ஒலிவ மரத்தால் செய்யப்பட்டது
1 இராஜாக்கள் 6:23
4) சாலொமோன் தீருவின் ராஜாவிற்கு இருபது பட்டணங்களை கொடுத்தான். அந்த பட்டணத்தின ் பெயர் என்ன?
Answer: காபூல் நாடு
1 இராஜாக்கள் 19:11-13
5) ராஜாவின் சிங்காசனம் எதினால் செய்யப்பட்டது?
Answer: தந்தத்தினால் செய்யப்பட்டது
1 இராஜாக்கள் 10:18
6) கர்த்தர் சாலமோனுக்கு எத்தனை விரோதிகளை எழுப்பினார்? அவர்கள் யார்?
Answer: மூன்று விரோதிகளை எழும்பப் பண்ணினார்
அவர்கள் - ஆதாத், ரேசோன், ரெகோபெயாம்
1 இராஜாக்கள் 11:14,23,26
7) ஏழு நாட்கள் ராஜாவாயிருந்தது யார்?
Answer: சிம்ரி
1 இராஜாக்கள் 16:15,18
8) இரண்டு முறை சாப்பிட்டு, நாற்பது நாட்கள் நடந்தது யார்?
Answer: எலியா
1 இராஜாக்கள் 19:6-8
9) பன்னிரண்டு ஏர் பூட்டி உழுதது யார்?
Answer: எலிசா
1 இராஜாக்கள் 19:19
10) மு்பபத்து இரண்டு ராஜாக்களோடு சமாரியாவை முற்றுகை போட்டது யார்?
Answer: பெனாதாத்
1 இராஜாக்கள் 20:1
11) முதியோர் ஆலோசனையை தள்ளி விட்டு, வாலிபரின் ஆலோசனையை கேட்ட ராஜா யார்?
Answer: ரெகோபேயாம்
1 இராஜாக்கள் 12:8
12) மனைவி தூண்டியதால் பொல்லாப்பை செய்ய தன்னை விற்று போட்ட ராஜா யார்?
Answer: ஆகாப்
1 இராஜாக்கள் 21:28
13) "நான் தான் நீர்" யார் யாரிடம்?
Answer: யோசபாத் - இஸ்ரவேலின் ராஜாவிடம்
1 இராஜாக்கள் 22:4
14) எத்தனை தீர்க்கதரிசிகளின் வாயில் பொய்யின் ஆவி இருந்தது?
Answer: நானூறு (400)
1 இராஜாக்கள் 22:6,22
15) கப்பல்கள் செய்த இடமும், கப்பல்கள் உடைந்து போன இடமும் ஒன்று. அது எந்த இடம்?
Answer: எசியோன்கேபேர்
1 இராஜாக்கள் 22:48
1 இராஜாக்கள் 19:26