===========
ஓர் குட்டிக் கதை
தத்துவ கதைகள்
============
ஒரு குரு சீடர்களுடன் மிக உயர்ந்த நிலையில் இருந்து வந்தார். ஒரு முறை அவர் தனது மறுபிறப்பின் தன்மையை காண முடிவு செய்து ஒரு நதிக்கரையில் அமர்ந்து தவமேற்கொண்டார்.
தவத்தின் பயனாக மறுபிறப்பில் தான் ஒரு பன்றியாக பிறப்பெடுப்பதை அறிந்தார், மிக உயர்ந்த நிலையில் உள்ள நாம் முன்வினை காரணமாக இப்படி ஒரு பிறப்பை எடுத்து சில காலம் வாழும் நிலை வந்ததை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தார்.
தனது சீடர்களில் ப்ரியமானவனை அழைத்து தன் நிலையை சொல்லி அவன் கையில் ஒரு வாளைக் கொடுத்து இப்போதே புறப்படு, இன்னும் ஐந்து வருடங்களில் இந்த ஊரில் நான் பன்றியாக பிறந்திருப்பேன், என்னை கண்டவுடன் அந்த பன்றியுருவத்தின் நெற்றியில் என் உருவம் உனக்கு மட்டும் தெரியும் கண்டவுடன் “என்னை வெட்டிவிடு” என்று மிக உருக்கமாக அவனிடம் கேட்டுக்கொண்டார். அதனை கேட்ட சீடனும் சரி என்று சொல்லி புறப்பட்டு போனான்.
கால் நடையாகத்தானே போகவேண்டும், சுற்றி அலைந்து குருநாதர் சொன்ன ஊரை வந்து சேர்ந்தான் சீடன். அந்த ஊரில் உள்ள பன்றிகளை ஒவ்வொன்றாக நெற்றியை பார்த்தவாறே அலைந்தான். ஆனால் அந்த பன்றியை காணவில்லை.
அந்த ஊர்க்காரர்களிடம் இங்கே பன்றிகள் எங்கே அதிகம் இருக்கும் என கேட்டான், அவர்கள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு ஊரின் எல்லை தாண்டி ஒரு மலக்குவியல் உள்ள இடம் உண்டு, அங்கே நிறைய இருக்கும் ஆனால் அங்கே போகமுடியாது. துர்நாற்றம் வீசும் என்றார்கள். சரி என்று சொல்லிவிட்டு அந்த இடம் நோக்கி நடந்தான் சீடன். நெருங்கநெருங்கவே இந்த இடம் இருப்பது தெரிந்துவிட்டது சீடனுக்கு. அந்த அளவு துர்நாற்றம். மூக்கை பிடித்துக்கொண்டு குருநாதரை தேடினான். ஒரு இடத்தில் மெகாசைஸ் பன்றி ஒன்று தனது குட்டிகளுடன் ஒரு பெரிய மலக்குழியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தான் அதன் நெற்றியில் குருநாதர் உருவம் தோன்றி மறைந்தது.
உடனே வாளை உருவி குருவே என்று கூவியபடி பாய்ந்தான். சடாரென்று திரும்பிய அந்த பன்றி ஒரு நொடியில் அவன் கையை எட்டிப்பிடித்து “சீடா இந்த வாழ்வில் நான் ஆனந்தமாக உள்ளேன் கெடுத்து விடாதே” என்று கெஞ்சியது.விக்கித்து நின்றான் சீடன்
என் அன்பு வாசகர்களே,
எந்த நிலை பிறப்பானாலும் அந்த நிலைக்கு அதன் செயல்கள் சிறப்பே, உயர்வே. அதாவது மனிதனாக இருந்தபோது கேவலமாக இருந்த பன்றிப் பிறப்பு பன்றியாக உள்ளபோது சொர்க்கமாக தெரிகிறது.
இக்கதையில் அந்த குரு தன்னுடைய வருங்காலத்தை குறித்து அறிந்ததும் அதற்கேற்றாற்போல் தன் வாழ்க்கையை தீர்மானித்துக் கொண்டான். அதுபோலவே நமக்கும் நம் மரணத்திற்கு பிறகு நமக்கு கிடைக்கக்கூடிய வாழ்க்கை எவ்வாறானது என்பதை வேதம் நமக்கு தெளிவாய் எடுத்துரைக்கிறது.
To get daily message in whats app contact +917904957814
அந்த பரலோக வாழ்க்கை அனுபவிக்க இந்த பூலோகத்தில் நாம் செய்ய வேண்டிய கடைமைகள் அநேகம் உண்டு. அந்த குரு தவமேற்கொண்டு தான் தன் வருங்காலத்தை அறிந்தார். தவமேற்கொள்தல் எளிதான காரியம் அல்ல. நாம் சாதாரணமாக ஜெபம் செய்ய அல்லது வேதம் வாசிக்க அமரும் போது தான் அநேக காரியங்கள் நம் சிந்தையில் தோன்றும் சரிவர ஜெபம் செய்ய இயலாது. நம் எண்ணங்களையும் சிந்தனைகளையும் ஒருமுகப்படுத்தும் போது தான் நாம் முழுமனதோடு செய்ய முடியும்.
எத்தனை இடையூறுகள் வந்தாலும் தான் எதற்காக தவமேற்கொண்டாரோ அதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இருந்ததினால் தான் அதற்குரிய பலனை பெற்றுக்கொண்டார். பரலோகத்திற்குரிய வாழ்க்கையை நாம் அனுபவிக்க பல இடையூறுகளை சந்திக்க நேரிடும் அதை பொருட்படுத்தாது நமக்கு நியமித்திருக்கிற பாதையில் நாம் ஓடும்போது நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள முடியும்.
எபிரேயர் 12:1
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.
எனவே நம்மை நெருங்கி சுற்றி நிற்கிற யாவற்றையும் தள்ளிவிட்டு பொறுமையோடு ஓடுவோம் தேவ இராஜ்ஜியத்தை சுதந்தரிப்போம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!
============
ஓர் குட்டிக் கதை
படமா? பாடமா?
=============
மணி ஓடு, முதலாளி வண்டி மாதிரி இருக்கு,போய் கேட்டைத் திற, ஓடுடா என சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார் வீனஸ் திரையரங்க மேலாளர் காவலாளி மணியிடம், ஓடிப்போய் திறந்தான் மணி முதலாளிதான் வந்து இருந்தார், தனது திரையரங்கத்திற்கு மாதம் இருமுறை வந்து பார்வையிடுவது அவரது வழக்கம். புதுப்புது சினிமாவா எடுத்துப்போட்டும் கையிலே நாலு காசுப் பார்க்க முடியலை, என்ன படமா எடுக்கிறானுங்க, நம்ம உசிரைத்தான் எடுக்க்றாஙக என்றும் திட்டுவார், ஏதோ இதை நம்பி ஐந்து குடும்பங்கள் இருக்கே என்றும், ஊரில் வாடகைக்கு விட்ட பல கடைகள், தொழில்கள், விவசாயம், என ஊர் கெளரவத்திற்காக வலுக்கட்டாயமாக நடத்திக்கொண்டு இருக்கும் பலரில் ஒருவர் மாணிக்கம், பெயருக்கேற்றபடி சுத்தமானவர், நேர்மையானவர்.
பள்ளிக் கூடத்துப் பசங்க மூன்று பேர் வந்து படம் பார்த்துவிட்டு இருக்கானுவோ, ஐயாவிற்கு தெரிந்தால் அவ்வளவுதான் என்று பயந்தபடி வந்து மேலாளரிடம் புலம்பிக்கொண்டு இருந்தார் டிக்கெட் கொடுப்பவர்.
பள்ளிக்கூடத்துப் பசங்க சீருடையில் வந்தால் டிக்கெட் கொடுக்கக் கூடாது என்பது முதலாளியின் உத்திரவு, அதை நினைத்து அவர்கள் புலம்பிக்கொண்டு இருக்கும்போதே,
என்னய்யா? எவ்வளவு டிக்கெட் படம் பார்க்குது? எனக் கேட்டார்.
கீழே மூன்று பேர், மேலே இருபது பேர் என்றார் மேலாளர்.
ஏசி போட்டிரா? என்றார்.
கூட்டம் இல்லை அதான், என்று தலை சொறிந்தார் மேலாளர்.
ஏன்யா, வாங்குற காசிற்கு அதை போடுய்யா, கூட்டம் வரலைன்னா, அவங்க என்ன பண்ணுவாங்க? இவங்க காசு கொடுக்கலை? படம் நல்லா இருந்தா தானா கூட்டம் வரும்யா கூட்டம், வந்த மக்களையும் கஷ்டப்படுத்திட்டு படத்தை யாருக்கு ஓட்டுவே என அதட்டினார்.
படம் போடுகிற நேரம் மதியம் சரியாக இரண்டு மணி மூன்று பள்ளி மாணவர்கள் மட்டுமே அரங்கினுள் அமர்ந்து இருந்தனர், டிஜிட்டல் சினிமா ஆரம்பமாகி முதலில் தேசிய கீதம் இசைத்தது,
அரங்கத்தின் உள்ளே சென்றவர் அப்படியே நின்றபடி பாடல் முடிந்ததும் வெளியே வந்தார்.
முகம் ஏனோ இறுகி போய் இருந்தது, மேலாளரை அழைத்தவர், அந்த பள்ளிக் கூடத்துப்பசங்க எந்த பள்ளி என்று கேட்டுகிட்டு வாங்க, என்றார்.
வந்தார், மேலாளர் சொன்னார்.
அப்படியே அந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்,அவங்க பெற்றோரிடமும் பேசனும் பள்ளியிலே பெற்றோர்களது எண் கேட்டு வாங்கி என்னிடம் கொடுங்கள் நான் பேசுகிறேன் என்று தொலைப்பேசியில் அவர்களை அழைத்துப் பேசினார்,
படம் விடும் நேரமான ஐந்து மணிக்குள் திரை அரங்கத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்து விட்டு , மாணவர்களை வெளியே விடாதே, நான் நாலரை மணிக்கு வருவேன் என்றுக் கூறி வெளியே சென்றார்.
டிக்கெட் கொடுத்தவர், மேலாளர் அனைவருக்கும் உதறல் எடுக்க, நாம வசூல் ஆகட்டுமே என்று நினைக்கின்றோம், இப்பவெல்லாம் மதிய நேரத்திலே பசங்கத்தான் தியேட்டருக்கே வருவாங்க,
அவங்களையும் வரக்கூடாதுன்னா அவங்க என்ன செய்வாங்க?
இவர் ஒழுக்கமா, நேர்மையா இருக்கிறார் என்றால் அனைவரிடமும் அதை எதிர்பார்க்கிறார், பாவம் பசங்க, என பரிதாபம் காட்டி,
இதெல்லாம் நாம ஒன்றும் செய்யமுடியாது, டிக்கெட் கொடுக்கலை என்றால் அவங்க நம்மளை திட்ட மாட்டாங்களா?என்று பேசியபடி இருக்க,
பள்ளி ஆசிரியர், தலைமையாசிரியர், மூவரின் பெற்றோர் என ஒவ்வொருத்தராக வர ஆரம்பித்து வந்து சேர்ந்து இருந்தனர். எல்லோரையும் வரவேற்று அலுவலகத்தில் அமர வைத்து இருந்தார் மேலாளர்.
முதலாளி மாணிக்கம் ஐயாவும் சரியாக படம் விடுவதற்கு ஐந்து நிமிடம் முன்னே வந்து அனைவருடனும் நலம் விசாரித்து பேசியபடி அமர்ந்து இருந்தார்.
படம் விட்டதற்கான நீண்ட ஓசை அடித்து மாணவர்கள் மூவரும் தியேட்டரை விட்டு வெளியே வரவும், பெற்றோர்கள், ஆசிரியர்கள், முதலாளி, ஊழியர்கள் என அனைவரும் வாயிலில் கூடி நின்று அவர்களைப் பாராட்டும் விதமாக கைத்தட்டினர்.
இவர்கள் வெட்கத்தில் கூனிக்குறுகி திருடத் தெரியாதவன் திருடி தலையாரி வீட்டில் தஞ்சம் புகுந்தவன் போல் அசட்டு சிரிப்பு சிரித்தபடி ஒன்றும் புரியாமல் வெளியே வந்தனர்.
மாணிக்கம் ஐயாவே முன் வந்து தனது கரங்களால் மூன்று பேருக்கும் பரிசு பொருள்களை அளித்தார்.
இது எதற்காக என்று யூகிக்க முடிகிறதா? என்று அவர்களிடம் கேட்க, அவர்கள் மேலும் விழித்தனர்.
தேசிய கீதம் ஒலிக்கும் போது நீங்கள் எழுந்து நின்றீர்கள் அல்லவா! அதற்குத்தான் இந்தப் பரிசு என்றார்.
இதில் என்ன இருக்கிறது? அது எங்கள் கடமை என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூறியதையே கூறினர்.
மாணிக்கமே தொடர்ந்தார், நன்றாகச் சொன்னாய் அது கடமைதான்.
நம்மை யாரும் கவனிக்கவில்லை என்ற மன நிலையில்தான் இன்று குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
தான் ஒழுக்கமாக இருப்பதுபோல் நடிப்பதை விட, எந்த சந்தர்ப்பத்திலும் தனி மனித ஒழுக்கம் கெடாமல் இருப்பது மிகவும் நல்லது. அதுதான் இன்றைய மற்றும் எதிர்கால சமூகத்திற்கு தேவையானது.
மூவர் மட்டும் அரங்கில் இருந்தபோதும் தனி மனித ஒழுக்கத்தை காத்து இவர்கள் எழுந்து மரியாதை செய்தது எனக்கு வியப்பளித்தது,
சந்தோஷமடையச் செய்தது, எதிர் கால மாணவர்களைப் பற்றிய ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது,
ஆகையால் இவர்களை பாராட்டுவதன் மூலம், ஒட்டு மொத்த மாணவச் சமுதாயத்திற்கு இதை செய்தியாக உங்களின் மூலமாக நான் சொல்ல விரும்பியே உங்கள் அனைவரையும் அழைத்தேன் என்று முடித்தபோது மாணிக்கம் அவர் பெயரில் மட்டுமில்லாமல் செயலிலும் உயர்ந்து ஜொலித்தார்.
என் அன்பு வாசகர்களே,
மற்றவர் செயலை பாராட்டுதல் என்பது மிக உயரிய குணமாகும். ஒரு சில கடைகளில் இந்த வாசகத்தை கவனித்திருப்பீர்கள், "நிறைகளை மற்றவர்களிடம் சொல்லுங்கள், குறைகளை எங்களிடம் சொல்லுங்கள்" என்று. ஏனெனில் குறைகளை, குறை உள்ளவர்களிடம் சொன்னால் மட்டுமே அந்த குறை நிறைவாகும்.
எல்லா மனிதர்களுடைய மனதிலும் இருக்கும் ஒரு எண்ணம், நாம் என்ன செய்தாலும் அதை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் மேலும் அநேகரிடம் அதை சொல்லி பெருமை அடைய வேண்டும் என்பதே. ஆனால் நாம் மற்றவர்களுக்கு அவ்வாறு செய்கிறோமா?? என்றால் இல்லை. நம்மால் செய்ய முடியாத நற்கிரியைகளை ஒருவர் செய்தால் அவரை மனமுவந்து பாராட்ட வேண்டும் அப்படி பாராட்ட மனதில்லாதிருந்தால் நாம் நியாயப்பிரமானத்தை மீறுகிறோம் என்று வேதம் சொல்கிறது.
ஒரு மனிதன் ஒரு முறை பாராட்டு பெறுகிறான் என்றால் அவன் தொடர்ந்து அந்த காரியத்தை செய்து கொண்டு தான் இருப்பான் அது நல்லதோ?? கெட்டதோ?? எதுவாயினும். தேவ பிள்ளைகளாகிய நாம் பாராட்டப்படக்கூடிய மனிதனாகவோ அல்லது மற்றவர்களை பாராட்டுகிற மனப்பான்மை உடைய மனிதனாகவோ தான் இருக்க வேண்டுமே ஒழிய மற்றவர்களை குறித்து பொறாமை படக்கூடாது.
To get daily message and prayer requests in whats app contact +917904957814
இயேசு கிறிஸ்துவும் தன்னுடைய மலை பிரசங்கத்தில் இவ்வாறு கூறுகிறார்,
மத்தேயு 7:12
ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள், இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம்.
மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை முதலில் அந்த மனிதர்களுக்கு செய்யுங்கள் ஏனெனில் அது தான் நியாயப்பிரமாணம் என்று வேதம் கூறுகிறது.
எனவே நியாயப்பிரமானத்தையும், தீர்க்கதரிசனத்தையும் கடைப்பிடிப்போம் தேவ பிள்ளைகளாய் ஜீவிப்போம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
=============
ஓர் குட்டிக் கதை
பொம்மைவிற்கும் பொியவர்
=============
(மனதை உலுக்கிய உண்மை சம்பவத்தோடும், அதற்கான வசனத்தோடும் உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.)
எப்போதும் சாதாரண மக்களுடன் இயல்பாக பழகும் குணம் உடைய ஒருவா் தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு பெரியவர் வெயிலிலும், மழையிலும் பொம்மைகள் விற்றுக் கொண்டு இருப்பதை தினமும் பாா்க்கிறாா்....
ஒருநாள் மாலை, பொம்மை விற்ற பொியவாிடம் இவா், அவருடைய குழந்தைக்கு ஒரு பொம்மை வாங்கலாம் என்று பொியவரிடம்.. வியாபாரம் பேசும் போது நடந்தவற்றை அவரே சொல்லுகிறதை படிக்கும்போதே நம் மனது கனத்துப் போகிறது. . .
ஒரு வெள்ளை நிற பூனை பொம்மை குடுங்கய்யா என்றேன்.
அவர் 80 ருபாய் என்றார், பணக்கார கடைகளில் பேரம் பேசாமல் ஏழைகளிடம் தானே நாம் பேரம் பேசுவோம், அதுதானே சராசரி மனிதர்களின் இயல்பு...
அதனால் நான் என்னங்கைய்யா ஒரு குழந்தை பொம்மை 80 ரூபாயா, 70 ரூபாய்க்கு குடுங்க என்றேன், அவர் என் கண்களை உற்றுப்பார்த்து இதை குழந்தைகளுக்கா வாங்கறீங்க என்றார் .
நான் ஆமாம் என்றேன்.. அவர் கொஞ்சம் மெதுவான குரலில் சரி ரூ .70 குடுங்க என்றார் .
அவர் கண்கள் லேசாக கலங்கியதை நான் கவனித்தேன்.. அது மனதை என்னவோ செய்ய.... ஏன் அய்யா என்னாச்சு, ஏன் அழறீங்கன்னு கேட்டேன், ஒன்னும் இல்ல சார் என்றார் , நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி கேட்க, அவர் மெதுவாக சொல்ல ஆரம்பித்தார் .
என் பெயர் ஆவுடையப்பன் (77), என் மனைவியின் பெயர் பார்வதி (73 )
எங்களுக்கு ஆறு குழந்தைகள்..
மிகவும்ஏழ்மையான குடும்பம்..
மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் பிள்ளைகளை வளர்தோம், பலநாட்கள் நானும், மனைவியும் சாப்பிடுவது கூட இல்லை, இருப்பதை பிள்ளைகளுக்குக் கொடுத்து விடுவோம் . பலநாள் இரவு பட்டினி இருந்திருக்கிறோம். ஒரு நாள்கூட என் மனைவி இதற்காக என்னோடு சண்டை போட்டதில்லை..
பிள்ளைகள் எல்லாம் திருமணம் முடித்து அவரவர்கள் தனித்தனி குடும்பமாகச் சென்று விட்டனர். எங்களுக்கோ தடுமாறும் வயது, அதனால் பெற்ற மக்களின் வீட்டில் போய் இருக்கலாம் என்ற எண்ணத்தில், மூத்த மகனிடம் விபரத்தைச் சொன்னேன்.
அதற்கு அவன், என்னால் இருவரையும் கூட்டிக் கொண்டு போய் வைத்து பராமரிக்க முடியாது, யாரவது ஒருவர் வரலாம் என்றான். அப்படி நான் மூத்த மகன் வீட்டிற்கும், மனைவி வேறு ஒரு மகன் வீட்டிற்கும் சென்றோம் வேறு வழியின்றி.
47 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த மனைவியை பிரிந்து தனிமையில் இருப்பது பிடிக்காமல் பல நாட்கள் அழுது இருக்கிறேன் . மனைவியின் நினைவுகள் மனதில் போராட இறுதியில் என் மனைவி இருக்கும் மகன் ஊருக்குச் சென்றேன்.
என் மனைவியிடம் சொன்னேன், நாம் இருவரும் ஒன்றாக வேறு எங்காவது போய் விடலாமா என்று, மனைவியும் அழுது கொண்டே சம்மதித்தாள். மகன்கள் வீட்டிலிருந்து நாங்கள் வெளியே வந்து ஒரு வருடமாகிறது.
பிழைப்புக்காக நான் குழந்தைகளின் பொம்மைகளை நடந்து சென்று விற்கிறேன், தினமும் 80 ரூபாய் முதல் 100 வரை லாபம் கிடைக்கும், இதை வைத்துக் கொண்டு ஜீவனாம்சம் செய்து கொண்டுள்ளோம், இப்போது எனக்கு வயது 77 ஆகிறது, எப்போது வேண்டுமானாலும் நான் இறந்து போகலாம்..
வரும் 100 ரூபாய் வருமானத்தில் கொஞ்சம் மிச்சம் பிடித்து சேமிக்கிறேன், அது எங்கள் மரண செலவிற்க்கு, என் பிள்ளைகளுக்கு அந்த செலவுத் தொந்தரவுகூட வேண்டாம் என அதை மனைவியிடம் கொடுத்து வைக்கிறேன் .
ஒரு நாள், இந்தப் பணம் எதற்கு சேமிக்கிறீர்கள் என்று என்மனைவி கேட்டாள். நம் மரணச்செலவிற்கு என்றேன், சத்தமாக கத்தி அழுது விட்டாள். இப்போது என்மனைவியின் பிரார்த்தனை, என் கணவர் மரணிக்கும் அதே நேரத்தில் எனக்கும் மரணத்தைக் கொடுத்து விடு கடவுளே என்று!!
"என் பிரார்த்தனையும் அதுவே தான்" என்று அவர் சொல்லவும் ,
இதை கேட்டுக்கொண்டிருந்த நான் மனதால் நொறுங்கிப் போனேன் .
நீங்கள் இங்கே இருப்பது உங்கள் பிள்ளைகளுக்கு தெரியுமா என்றேன் ?
அவர்களுக்குத் தெரியாது என்றார்.
எனக்கு மனம் கனத்துப் போனது.
சாதாரண மக்களிடம்தான் எத்தனை எத்தனை வலிகள் மனதில் புதைந்திருக்கின்றன...
சின்ன சின்ன வியாபாரிகளிடமும் பழக்கடைக்காரர்களிடமும் பேரம் பேசாமல் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்ற படிப்பினையை நான் இம் முதியவரிடம் உரையாடியதன் மூலம் தெரிந்து கொண்டேன்...
என் அன்புக்குாியவா்களே,
பொியவாின் வாழ்க்கையை படித்ததும் நம் மனமும் சற்று கணக்கத்தான் செய்கிறது ..
ஆனால் தேவன் சொல்வதை பாருங்கள்...
தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். (ஏசாயா 46:3,4)
பெற்ற மக்கள் கைவிட்டாலும் கல்லறை போய் சேரும் வரை நம் தேவனாகிய கா்த்தா் உங்களை கரம் பிடித்து நடத்துவாா்.
தேவன்..
உங்களுக்கு தினமும் வேண்டிய ஆகாரத்தையும், சரீர பெலனையும் தருவாா். மனதுக்கு சந்தோஷம் தரும் சூழ்நிலையில் உங்களை வைத்துக் கொள்வாா்.
திருமணமான நாளிலிருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையை வளமாக்க பற்பல வேலைகளை செய்ததையும், வீட்டைகட்டி பிள்ளைகளை பெற்றெடுத்து, நல்ல நல்ல சாப்பாடு கொடுத்து, வளா்த்ததையும், அவா்களை நல்ல ஸ்கூலில் படிக்க வைத்து ஆளாக்கி வேலை வாங்கிக் கொடுத்து ,திருமணம் செய்து வைத்து குடும்பமாக்கி,
இப்படி நீங்கள் பிள்ளைகளுக்குச்செய்த எல்லாவற்றையும் இதுவரை தேவன் பார்த்துக் கொண்டு தான் இருந்தாா். அதனால் இந்த முதிா்வயதிலே உங்களை கை விடமாட்டாா்.
பைபிள் வசனத்தை பாருங்கள்.
கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,
அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியம் பசுமையுமாயிருப்பார்கள். (சங்கீதம் 92:13-15)
என் அன்புக்குரிய முதியவா்களே!
நீங்கள் கா்ததரை நம்புங்கள். நீங்கள் பெற்றப் பிள்ளைகளை விட தேவன் மேலானவர். அவா் உங்களை பாதுகாக்கிறவா். அவா் உங்களை கைவிடாமல் நடத்துவாா், போஷிப்பாா்.
அதனால் அவா் சமூகத்தில் தினமும் ஜெபம் பண்ணுங்கள். வேதம் வாசியுங்கள். அவாிடம் மனம் விட்டு பேசுவதே ஜெபமாகும். எனவே தேவனிடம் மனம் விட்டு பேசுங்கள். பைபிளில் ஒரு வயதானவர் செய்த ஜெபததை பாருங்கள்.
இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.
அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.
என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர். (சங்கீதம் 71:18-21)
To get daily story and prayer support contact +917904957814
கா்ததா் உங்களை சவுக்கியம், ஆரோக்கியம், சுகம்,பெலன் சகல ஆசீா்வாதங்களையெல்லாம், தரும் போது ....
நான் இளைஞனாயிருந்தேன், தற்போது முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் இதுவரையில் காணவில்லை.(சங்கீதம் 37 :25) என்று சொல்வீா்கள்.
அன்புக்குாிய குடும்பத்தினரே,
உங்களை பெற்றெடுத்த உங்கள் வயதான பெற்றோா்களை, உங்கள் மாமனார், மாமியாரை உங்கள் தாத்தா, பாட்டியை உதாசீனப் படுத்தாதீா்கள். நீங்கள் இவ்வளவு தூரம் நன்றாக இருப்பதற்கு யார் காரணம்.??? அவர்கள் தானல்லவா
உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே. (நீதிமொழி 23 :22)
பேரக் குழந்தைகளே,
நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படுவாயாக, நான் கர்த்தர். (லேவி. 19:32) என்று கா்ததா் சொல்கிற வசனத்தை கா்த்தருக்குப் பயந்து நிறைவேற்றுங்கள். ..
ஒருபோதும் தேவன் தம்முடையவா்களை இதுவரை கைவிட்டதில்லை. இனியும் கைவிடமாட்டாா்.
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள்!!!