============
கேள்விகள்
எஸ்தர் 1-5
===========
1. குடிக்கும்படி உட்கார்ந்தார்கள் யார் யார்?2. ஸ்திரீகளை காவல்பண்ணுகிற பிரதானி யார்?
3. ஒவ்வொரு பெண்ணும் 12 மாதங்கள் என்ன செய்யப்பட்டார்கள்?
4. அகாஸ்வேரு ராஜா யாரை மேன்மைப்படுத்தி ஆசனத்தை உயர்த்தி வைத்தான்?
5. ராஜபதவியை வேறொரு ஸ்திரீக்கு கொடுக்க சொன்னது யார்?
6. ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக யாரை ராஜவினிடத்தில் அழைத்துவர கூறப்பட்டது?
7. ஆத்தாக் ராஜாவுக்கு யாராயிருந்தான்?
8. சீமேயியின் பேரன் யார்?
9. தேபேத் மாதம் எத்தனையாவது மாதம்?
10. எஸ்தரின் பணிவிடைக்காரனாகிய பிரதானி யார்?
11. நீ கேட்கிறது என்ன? அது உனக்கு கொடுக்கப்படும். சரியா? தவறா?
12. மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து எனக்காக உபவாசம் பண்ணுங்கள் என்று யார் யாரிடம் கூறியது?
13. ராஜா தன் கையில் இருக்கிற மோதிரத்தை கழற்றி யாரிடம் கொடுத்தான்?
14. தன்னை காண்கிற எல்லாருடைய கண்களிலும் தயவு கிடைத்தது யாருக்கு?
15. ராஜா தன் மகத்துவத்தின் பிரதாபத்தை எத்தனை நாள் விளங்கச்செய்து கொண்டிருந்தான்?

=============
கேள்வி பதில்கள்
எஸ்தர் 1-5
=============
1. குடிக்கும்படி உட்கார்ந்தார்கள் யார் யார்?Answer: அகாஸ்வேரு ராஜாவும் ஆமானும்
எஸ்தர் 3:15
2. ஸ்திரீகளை காவல்பண்ணுகிற பிரதானி யார்?
Answer: யேகாய்
எஸ்தர் 2:3
3. ஒவ்வொரு பெண்ணும் 12 மாதங்கள் என்ன செய்யப்பட்டார்கள்?
Answer: ஜோடிக்கப்பட்டார்கள்
எஸ்தர் 2:12
4. அகாஸ்வேரு ராஜா யாரை மேன்மைப்படுத்தி ஆசனத்தை உயர்த்தி வைத்தான்?
Answer: ஆமான் என்னும் ஆகாகியன்
எஸ்தர் 3:1
5. ராஜபதவியை வேறொரு ஸ்திரீக்கு கொடுக்க சொன்னது யார்?
Answer: மெமுகான்
எஸ்தர் 1:16,19
6. ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக யாரை ராஜவினிடத்தில் அழைத்துவர கூறப்பட்டது?
Answer: வஸ்தியை
எஸ்தர் 1:10
7. ஆத்தாக் ராஜாவுக்கு யாராயிருந்தான்?
Answer: பிரதானி
எஸ்தர் 4:5
8. சீமேயியின் பேரன் யார்?
Answer: மொர்தேகாய்
எஸ்தர் 2:5
9. தேபேத் மாதம் எத்தனையாவது மாதம்?
Answer: பத்தாம் மாதம்
எஸ்தர் 2:16
10. எஸ்தரின் பணிவிடைக்காரனாகிய பிரதானி யார்?
Answer: ஆத்தாகு
எஸ்தர் 4:5
11. நீ கேட்கிறது என்ன? அது உனக்கு கொடுக்கப்படும். சரியா? தவறா?
Answer: தவறு
எஸ்தர் 5:6
12. மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து எனக்காக உபவாசம் பண்ணுங்கள் என்று யார் யாரிடம் கூறியது?
Answer: எஸ்தர் மொர்தேகாயிடம்
எஸ்தர் 4:16
13. ராஜா தன் கையில் இருக்கிற மோதிரத்தை கழற்றி யாரிடம் கொடுத்தான்?
Answer: மான்
எஸ்தர் 3:10
14. தன்னை காண்கிற எல்லாருடைய கண்களிலும் தயவு கிடைத்தது யாருக்கு?
Answer: எஸ்தருக்கு
எஸ்தர் 2:15
15. ராஜா தன் மகத்துவத்தின் பிரதாபத்தை எத்தனை நாள் விளங்கச்செய்து கொண்டிருந்தான்?
Answer: 180 நாள்
எஸ்தர் 1:4
=========
எஸ்தரின் புத்தகம்
6-10 அதிகாரங்கள்
=========
1) தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானம் உண்டாக பேசுகிறவனுமாயிருந்தவன் யார்?2) அம்மெதாத்தாவின் குமாரன் யார?
3) ராஜாவின் நன்மைக்காக பேசினது யார்?
4) சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக் கொண்டு தன்வீட்டிற்கு தீவிரித்து போனவன் யார்?
5) மொர்தெகாயைக் குறித்த ஐந்து காரியங்கள் எவை?
6) யூதர்கள் பூரீம் பண்டிகை விருந்து எதற்காக செய்தார்கள்?
7) எந்த ராஜாக்களின் நடபடி புத்தகத்தில் மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தம் எழுதியுள்ளது?
8) ஆகாஸ்வேரு ராஜா தேசத்தின் மேலும் எவைகளின் பகுதி ஏற்படுத்தினான்?
9) ஆமானின் வீட்டுக்கு அருகாமையில் இருந்தது என்ன?
10) யூதர்கள் யாவர் மேலும் கடனாக நியமிதுக்கொண்டது என்ன?
11) யூதருடைய சத்துருவின் குமாரர்கள் எத்தனை பேர்? என்ன ஆனார்கள்?
12) யூதருக்கு துணை நின்றவர்கள் யார் யார் யார்?
13) யாருக்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டது?
14) அரண்மனை வெளி முற்றத்தில் நின்றது யார்?
15) யூதர்கள் விரோதிகளில் எத்தனை பேரை கொன்று போட்டார்கள்?
============
எஸ்தரின் புத்தகம்
6-10 அதிகாரங்கள் (பதில்)
============
1) தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானம் உண்டாக பேசுகிறவனுமாயிருந்தவன் யார்?Answer: மொர்தெகாய்
எஸ்தர் 10:3
2) அம்மெதாத்தாவின் குமாரன் யார்?
Answer: ஆமான்
எஸ்தர் 8:5
3) ராஜாவின் நன்மைக்காக பேசினது யார்?
Answer: மொர்தெகாய்
எஸ்தர் 7:9
4) சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக் கொண்டு தன்வீட்டிற்கு தீவிரித்து போனவன் யார்?
Answer: ஆமான்
எஸ்தர் 6:12
5) மொர்தெகாயைக் குறித்த ஐந்து காரியங்கள் எவை?
Answer: அ) ஆகாஸ்வேருக்கு இரண்டாவதானவன்
ஆ) யூதருக்குள் பெரியவன்
இ) சகோதரருக்குப் பிரியமானவன்
ஈ) தன் ஜனங்களுடைய நன்மையை நாடுகிறவன்
உ) தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானம் உண்டாக பேசுகிறவன்
எஸ்தர் 10:3
6) யூதர்கள் பூரீம் பண்டிகை விருந்து எதற்காக செய்தார்கள்?
Answer: இளைப்பாறுதல் அடைந்தநாட்களாகவும், சஞ்சலம் சந்தோஷமாகவும், துக்கம் மகிழ்ச்சியாக மாறினதற்காக
எஸ்தர் 9:21
7) எந்த ராஜாக்களின் நடபடி புத்தகத்தில் மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தம் எழுதியுள்ளது?
Answer: மேதியா, பெர்சியா
எஸ்தர் 10:2
8) ஆகாஸ்வேரு ராஜா தேசத்தின் மேலும் எவைகளின் பகுதி ஏற்படுத்தினான்?
Answer: தேசத்தின் மேலும் சமுத்திரத்தின் தீவு
எஸ்தர் 10:1
9) ஆமானின் வீட்டுக்கு அருகாமையில் இருந்தது என்ன?
Answer: 50 முழ உயரமான மொர்தெகாயுக்கு ஆயத்தம் பண்ணின தூக்குமரம்
எஸ்தர் 7:9
10) யூதர்கள் யாவர் மேலும் கடனாக நியமிதுக்கொண்டது என்ன?
Answer: பூரீம் என்னும் பண்டிகை நாட்கள்
எஸ்தர் 9:28
11) யூதருடைய சத்துருவின் குமாரர்கள் எத்தனை பேர்? என்ன ஆனார்கள் ?
Answer: 10 பேர். யூதர்கள் கொன்று போட்டார்கள்
எஸ்தர் 9:9
12) யூதருக்கு துணை நின்றவர்கள் யார் யார் யார்?
Answer: நாடுகளின் அதிகாரிகளும், தேசாதிபதிகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும்
எஸ்தர் 9:3
13) யாருக்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டது?
Answer: மொர்தெகாயுக்கு
எஸ்தர் 6:3,10
14) அரண்மனை வெளி முற்றத்தில் நின்றது யார்?
Answer: ஆமான்
எஸ்தர் 6:4
15) யூதர்கள் விரோதிகளில் எத்தனை பேரை கொன்று போட்டார்கள்
Answer: எழுபத்தையாயிரம் பேரை
எஸ்தர் 9:16
=============
கேள்வி - பதில்கள்
வேதபகுதி: எஸ்தர்
=============
I. சரியான பதிலை எழுதுக:
1) ஸ்திரிகளை காவல் பண்ணுகிற ராஜாவின் பிரதானி யார்?
2) எஸ்தரின் மறுபெயர் என்ன?
3) வாசலைக் காத்த ராஜாவின் பிரதானிகளில் இருவர் யார்?
4) ராஜாவின் ஊழியக்காரர் யாரை நமஸ்கரித்து வணங்கினார்கள்?
5) யூதர்களை அழிக்க ஆமான் செலுத்துவதாக சொன்ன காணிக்கை என்ன?
6) யூதர்களின் சத்துரு யார்?
7) யார் குடிக்கும்படி உட்கார்ந்த போது எந்த நகரம் கலங்கிற்று?
8) சட்டத்தை மீறி ராஜாவிடம் பிரவேசித்தது யார்?
9) எஸ்தர் கற்பித்தபடியெல்லாம் செய்தது யார்?
10) ஆமான் செய்தது என்ன? அதன் அளவு என்ன?
பொருத்துக - வசன ஆதாரத்துடன்
1) தேபேத் - 3 ம் மாதம்
2) ஆதார் - சீட்டு
3) பூர் - 10 ம் மாதம்
4) சீவான் - பண்டிகை
5) பூரிம் - 12 ம் மாதம்
இன்றைய கேள்விக்கான பதில்
வேதபகுதி: எஸ்தர்
================
1) ஸ்திரிகளை காவல் பண்ணுகிற ராஜாவின் பிரதானி யார்?
Answer: யேகாய்
(எஸ்தர் 2:3)
2) எஸ்தரின் மறுபெயர் என்ன?
Answer: அத்சாள்
(எஸ்தர் 2:7)
3) வாசலைக்காத்த ராஜாவின் பிரதானிகளில் இருவர் யார்?
Answer: பிக்தான், தேரேசு
(எஸ்தர் 2:21)
4) ராஜாவின் ஊழியக்காரர் யாரை நமஸ்கரித்து வணங்கினார்கள்?
Answer: ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்
(எஸ்தர் 3:2)
5) யூதர்களை அழிக்க ஆமான் செலுத்துவதாக சொன்ன காணிக்கை என்ன?
Answer: பதினாயிரம் தாலந்து வெள்ளி
(எஸ்தர் 3:9)
6) யூதர்களின் சத்துரு யார்?
Answer: ஆமான்
(எஸ்தர் 3:10)
7) யார் யார் குடிக்கும்படி உட்கார்ந்த போது எந்த நகரம் கலங்கிற்று?
Answer: ராஜாவும் ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்த போது சூசான் நகரம் கலங்கிற்று
(எஸ்தர் 3:15)
8) சட்டத்தை மீறி ராஜாவிடம் பிரவேசித்தது யார்?
Answer: எஸ்தர்
(எஸ்தர் 4:16)
9) எஸ்தர் கற்பித்தபடியெல்லாம் செய்தது யார்?
Answer: மொர்தெகாய்
(எஸ்தர் 4:17)
10) ஆமான் செய்தது என்ன? அதன் அளவு என்ன?
Answer: ஒரு தூக்குமரம், ஐம்பதுமுழ உயரம்
(எஸ்தர் 5:14)
பொருத்துக - வசன ஆதாரத்துடன்
1) தேபேத் = 10 ம் மாதம்
(எஸ்தர் 2:16)
2) ஆதார் = 12 ம் மாதம்
(எஸ்தர் 3:7)
3) பூர் = சீட்டு
(எஸ்தர் 3:7)
4) சீவான் = 3 ம் மாதம்
(எஸ்தர் 8:9)
5) பூரிம் = பண்டிகை
(எஸ்தர் 9:28)