================
ஓர் குட்டிக் கதை
எண்ணங்களை சிறைப்படுத்து
================
வாழ்க்கையில் உயா்வதற்கு தடையாயிருப்பது ஒவ்வொருவாின் எண்ணங்களும், சிந்தனை களும் தான். என்பதை புாிந்து கொண்டு அவை களை சாிபண்ணிவிட்டாலே வாழ்க்கையில் முன்னேறிவிடலாம்.
பவுல் சொல்கிறாா்..
2 கொரிந்தியர் 10:4,5
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்ற வைகளாயிராமல், அரண்களை நிா்மூலமாக்கு கிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால்நாங்கள் தா்க்கங்களையும் தேவ னை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிற வா்களாயிருக்கிறோம். -
எண்ணங்களே அரண்களாக அல்லது கோட்டை சுவராகக் கட்டியெழுப்பப்படுகிறது. அது உயர்வுக்கான வழிகளை அறிந்து கொள்வதற் கான மனதில் அறிவு என்ற பகுதியை அறிந்து கொள்ளத் தடைபண்ணி பயத்தையும் உன்னால் முடியாது எதிா்மறையான எண்ணங்களைக் கொடுக்கிறது.
இதை அகற்றிவிட தேவபெலம்என்ற ஆயுதத்தை விட வேறு எதனாலும் முடியாது. தேவபெலம் என்றால் என்னஅதை எப்படிபெற்றுக் கொள்வது என்று கேட்பீா்களென்றால் ...
பைபிள் சொல்கிறது.
ஆவியானவரே தன் பெலனைத் தருகிறாா். அது உலகத்திலுள்ள எல்லா சக்தியை விட 100 கோடி சூாியனின் சக்தியை விட மிக அதிகம் என்றே செல்லலாம். அவ்வளவு பொிய சக்தி..
பாிசுத்தஆவியானவா் உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனைப் பெற்றுக் கொள்வீா்கள். (அப்போஸ்தலர் 1:8)
தேவனிடத்தில் ஜெபம் பண்ணி கேளுங்கள். கட்டாயம் தருவாா்.மனுஷா் யாவருக்கும் கொடுக் கத்தானே வாக்குப் பண்ணியிருக்கிறாா்.
இயேசு சொல்வதை பாருங்கள்.
உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?
பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளை களுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக் கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக் குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். (லூக்கா 11:11-13)
எனவே தேவபெலனைப் பெற்றுக் கொண்டு எதிா்மறையான சிந்தனையின் கோட்டைகளை நிா்மூலமாக்குங்கள். பாதகமான வாழ்வின் உயாவைக் கெடுக்கிற,உன்னால் முடியாது, நீ ஒன்றுக்கும் தகுதியில்லை,நீ ஒன்றுக்கும் உதவாதவன் என்ற தாழ்வு மனபான்மையைக் கொண்டு வரும் எந்த எண்ணத்தை சிறைப்பிடித்து அழித்து விடுங்கள்.
இல்லாவிட்டால் அது உங்கள் வாழ்வை வீணாக்கி அழித்து விடும். இதை விளக்கும் ஒரு கதையை படியுங்கள். புாிந்து கொள்வீா்கள்.
===========
குரங்குமனது
===========
ஒரு துறவியொருவர் அந்த ஊர் மடத்தில் வந்து தங்கியிருந்தார். உள்ளூர்க்காரன் ஒருவன் அவரைத் தேடி வந்தான்.
என்னால் வாழ்க்கையில் முன்னேறவே முடியவில்லை. என் வயதுத் தோழர்கள், என் உடன் படித்தவர்கள், ஏன்... அடுத்த வீட்டுக்காரன் உள்பட எல்லோரும் எங்கெங்கேயோ போய் விட்டார்கள்.
நான் இன்னும் ஒரு துளிகூட முன்னேறவில்லை. நான் என்ன செய்யட்டும் ஐயா?’’ என்று கேட்டான்.
இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் அவன் துறவியிடம் வேண்டி வந்திருந்தான். துறவி அவனிடம் சில கேள்விகள் கேட்டார்.
``என்ன வேலை பார்க்கிறாய்?’’
``கூலி வேலை.’’
``வருமானம்?’’
``போதுமான அளவுக்கு இல்லை. இருக்கிறதை வைத்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.’’
``வேறு வேலைக்கு முயற்சி செய்யவில்லையா?’’
``பயமாக இருக்கிறது. புது இடம், புது எஜமானன் சரியில்லை என்றால் என்ன செய்வது என்கிற அச்சம்...’’
``சுயதொழில் செய்ய உனக்கு ஆர்வம் இல்லையா?’’ இருக்கிறது.
ஆனால், அதுவும் பயமாக இருக்கிறது. தொழில் தொடங்கி நான் அதில் என் பொருளை இழந்து விட்டால் என்ன செய்வது? என்னிடம் வியாபார நிமித்தமாக வருபவர்கள் என்னை ஏமாற்றி விட்டால் நான் என்ன செய்வேன்?
இதையெல்லாம் யோசித்துத்தான்நான் தொழில் தொடங்குவதை தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறேன்...’’
துறவி அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தார்.
சொல்லுங்கள் குருவே... நான் என்ன செய்ய வேண்டும்? என் வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைக்கிற உபாயம் ஏதாவது இருக்கிறதா?
எத்தனை நாள் பயிற்சி எடுக்க வேண்டும்? அதற் கான மந்திரங்கள் இருந்தால்கூட சொல்லுங்கள். நிச்சயம் அதைக் கடைப்பிடிக்கிறேன்...’’
உன் பிரச்னை தீர ஒரு வழி இருக்கிறது.அதைக் கடைப்பிடிப்பாயா?’
வந்தவனின்முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது நிச்ச யமாக குருவே நீங்கள் என்ன சொன்னாலும் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.’’ - அவன் குரலில் அப்படி ஓர் உறுதி.
சரி, இன்றைக்கு ஒரு நாள் இரவு மட்டும் நான் சொல்கிறபடி செய். உன் பிரச்சனை தீா்ந்துவிடும்’’ என்றார்.
ஒரு நாளில் என் பிரச்சனை தீா்ந்துவிடுமா, அப்படி என்ன அற்புத மந்திரம் அது? உடனே சொல்லுங்கள் குருவே...’’ என்றான்.
``மந்திரம் எல்லாம் இல்லை. இன்று இரவு மட்டும் நீ குரங்குகளைப் பற்றி நினைக்கக் கூடாது.’’
``என்னது குரங்கா... நினைக்கக் கூடாதா? மந்திரம் எல்லாம் ஒன்றும் இல்லையா?’’
``எதிா்க் கேள்வி கேட்காதே! நான் சொல்கிறதை மட்டும் செய்!’’
துறவியின் குரலில் உஷ்ணம் ஏறிக் கிடந்ததை உணர்ந்தான். அவருக்கு நன்றி கூறிவிட்டு வீடு நோக்கி நடந்தான்.
வழியிலேயே துறவி கூறியதுதான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தது. குரங்கு, அதன் வால், பற்கள், உருண்டைக் கண்கள், சேட்டைகள்... ``சே!’’ என்று தலையை உதறிக்கொண்டான். ஏன், துறவி குரங்கு பற்றி நினைக்க வேண்டாம் எனச் சொன்னார்? நான் குரங்குக்கு ஏதாவது துன்பம் இழைத்திருப்பேனோ? அப்படி ஒன்றும் நினைவில்லையே.
ஒருநாள் மலையில் ஒரு குரங்கைப் பார்த்த போது அதுவல்லவா என் சோற்று மூட்டையைப் பறித்துக்கொண்டு ஓடியது? அந்தச் சமயத்தில் கூட நான் அதை ஒன்றும் செய்யவில்லையே! ஒரு சிறு கல்லைக்கூடத் தூக்கிப் போட வில்லையே!
ஒருவேளை கடந்த பிறவியில் குரங்குக்கு ஏதாவது தீங்கிழைத்திருப்பேனோ! சரி... துறவியே சொல்லிவிட்டாா்.
அதனால், நிச்சயம் இதில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆனால், கண்டிப்பாக இரவில் குரங்கை மட்டும் நினைக்கக் கூடாது’ என்று மனதுக்குள் நினைத்தபடி வீட்டுக்கு நடந்தான். இரவு நெருங்கியது. வேலைகளை முடித்துவிட்டு தூங்கத் தயாரானான். தூக்கம் வரவில்லை. குரங்கு குறித்த சிந்தனையே அவனைத் துரத்தியது.
ஜன்னலில் ஒரு குரங்கு ஏறி அவனையே பார்ப்பதாக எண்ணம். கதவைப் பிராண்டுவதாக உள்ளுணர்வு. நெடு நேரத்துக்கு அவனுக்குத் தூக்கம் வரவில்லை.
ஒரு கட்டத்துக்கு மேல், களைப்பால் கண்ணயர்ந் தான். கனவிலும் குரங்கள் அவனைத் துரத்தின. நிஜத்தில் அவனை ஒரு குரங்கு பிராண்ட வில்லையே தவிர,
மற்ற எல்லாம் நடந்தது. குரங்குச் சிந்தனை அவனைப் பாடாகப்படுத்தி எடுத்துவிட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் அந்தச் சிந்தனையை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பைத்தியம் பிடித்தவனைப்போல் ஆகிவிட்டான்.
எப்போது விடியும் எனக் காத்திருந்து துறவி தங்கியிருந்த மடத்துக்கு ஓடினான். அவரைச் சரணடைந்தான்.
`குருவே, நான் முதலாளி ஆக வேண்டாம். இதை விட அதிகமாகக் கூலி கிடைக்கும் வேலைகூட வேண்டாம். தயவு செய்து, அந்தக் குரங்களிடம் இருந்து மட்டும் என்னைக் காப்பாற்றுங்கள்’’ மன்றாடியவன் மேலும் தொடர்ந்தான்.
``ஒன்று மட்டும் உண்மை. நான் குரங்குக்கு ஏதோ பாவம் இழைத்துவிட்டேன் என்பது மட்டும் தெரிகிறது. அதற்கு என்ன பரிகாரம் வேண்டுமானாலும் செய்துவிடுகிறேன். இந்தக் குரங்குச் சிந்தனை என்னை தற்கொலை செய்துகொள்வது வரை தூண்டுகிறது. காப்பாற்றுங்கள் குருவே!’’
அந்த குரு மென்மையாகச் சிரித்தார். ``உண்மையில் நீ எந்தக் குரங்குக்கும் பாவம் செய்யவில்லை. இதைப் புரிந்துகொள். குரங்குக்கும் உனக்கும் எந்தச்சம்பந்தமுமில்லை. முதலில் நிம்மதிகொள்’’ என்றாா்
துறவியின் பதில் கேட்டு அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். ``என்ன... குரங்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? அப்படி என்றால் என்னை ஏன் குரங்குகள் விடாமல் துரத்துகின் றன?’’ என்றான்.
சில நிமிட அமைதி காத்த பிறகு குரு அவனுக்கு விளக்கத் தொடங்கினார்.
``உன் எண்ணங்களுக்கு நீயே அதிபதி.அவற்றை நீயே தீர்மானிக்கிறாய். வெளியிலிருந்து யாரும் மற்றொருவரின்எண்ணத்தைக் கட்டுபடுத்தவோ, மாற்றவோ முடியாது. உனக்கு எது தேவையோ அதைப் பற்றி மட்டுமே சிந்திக்கக் கற்றுக்கொள்.
குரங்கைப் பற்றி நினைக்கக் கூடாது என்றதும் நீ அதைப் பற்றியே நினைத்தாய். உன் சிந்தனை அதிலேயே இருந்தது.
எனவே, உனக்குப் பயன்படாத ஒன்றைப் பற்றி சிந்திக்காதே. எதுவும் நன்றாக நடக்கும்’ என்று நம்பு. ஒன்றை ஆரம்பிக்கும்போதே இப்படி நடந்து விடுமோ என நீயாக ஒரு முடிவுக்கு வந்து குழம்பிக்கொள்ளாதே.
இந்த எதிர்மறை எண்ணம்தான் உன் முன்னேற் றத்துக்கு முட்டுக்கட்டை. அதை விட்டுவிட்டு நேர்மறை எண்ணத்தை வளர்த்துக்கொள். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்கிக்கொள்.’’ என்றான்...
என் அன்புக்குாியவா்களே,
இந்த போதனை அவனுக்கு மட்டுமானதல்ல. இது, நம் எல்லோருக்குமானது. நம் ஊரில், மருந்துகுடிக்கும்போது குரங்கை நினைக்காதே!’ என ஒரு வாசகம் உண்டு.
அதுவும் இதற்குப் பொருந்தும். நோ்மறை எண்ணங்களை வளா்த்துக்கொள்ள, அதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். வேறு ஏதுவும் தேவையில்லை. எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
உங்கள் மனதின் எண்ணங்களைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். எதை நினைக்கிறீா் களோ அதுவாகவே மாறிவிடுவீா்கள். நீங்கள் நினைப்பதைத்தான் பேசுவீா்கள். எதை பேசுவீா் களை அது உங்கள் வாழ்வில் நடந்து விடும்.
To get daily story contact +918148663456
எண்ணங்கள் சிந்தனைகள்,நினைவுகள் வாா்த்தைகள் ஆகிய சக்தியுள்ளதும் அவைகள் ஒன்றை ஒன்று சாா்ந்திருக்கிறது என்பதை புாிந்து கொள்ளுங்கள்.
இயேசு சொன்னாா். இருதயத்தின் நினைவு எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான். (நீதிமொழிகள் 23:7)
இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கி ஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக் காட்டு கிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய், அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார். (மத்தேயு 12:34-37)
எனவே நல்ல நினைவுகளையும், எண்ணங்களையும் வேதத்தை படித்து உருவாக்குங்கள். அதை பேசுங்கள். உங்கள் வாழ்வில் சகல ஆசீா்வாதம் களையும், மேன்மை, உயா்வுகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !!!
===========
ஓர் குட்டிக் கதை
சோம்பேறி
===========
விடியற்காலையை பார்த்ததில்லை.
சூரியனை காலை பொழுதில் கண்டதில்லை.
விரைந்து சென்று இயற்கையை இரசித்ததில்லை.
நண்பர்களுடன் பேசி விளையாடியதில்லை.
இப்படி எல்லாம் ஒரு நாளும் சங்கர் என்பவனை வெளியில் பார்த்தில்லை.
சோம்பேறித்தனம் என்றால் இந்த ஊரில் உதாரணம் சங்கர் என்று கூறலாம். சங்கர் அவன் வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் துங்கி கொண்டு இருப்பான். அவனை போன்று யாரும் இருத்தில்லை. சங்கருடைய அன்றாட வேலை என்றால் மூன்று வேலையும் நன்றாக சாப்பிட்டுவிட்டு துங்குவது தான்.சங்கரை பார்த்தால் யாருக்கு வேண்டுமானாலும் கோபம் வந்து மழையாக கொட்டும். யாருடைய பேச்சையும் கேட்கமாட்டான். சொல் அறிவும் கிடையாது. சுய அறிவும் கிடையாது. முட்டாள் வெகுளி என்றும் சொல்லலாம். ஆனால் சில விஷயங்களில் சங்கர் விவரமாக இருப்பான். வீட்டில் பலகாரங்கள் செய்தால் யாருக்கும் வைக்காமல் அவனே தின்று விடுவான். சங்கருக்கு அதில் ஒரு அலாதியான சந்தோசம்.
பிறர் சாப்பிட்டார்களா இல்லையா என்று கூட கேட்க மாட்டன் சங்கர். சங்கரின் பெற்றோரும் வெளியுலகம் தெரியாமல் அவனை வளர்த்து விட்டார்கள். அதனால் சங்கருக்கு உலகம் என்பது தெரியாது. சங்கருக்கு நண்பர்களுடன் பழக்கமும் இல்லை. ஷங்கரிடம் இருந்து எதுவேண்டுமானாலும் அவனை மிரட்டினால் வாங்கிவிடலாம். அந்தளவிற்கு அப்பாவி. காலம் சென்றுகொண்டிருக்கிறது சங்கருக்கு வயது 28 ஆகின்றது. சங்கருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முயற்சி செய்கிறார்கள். சங்கரை பார்த்த பெண்கள் இவனது சோம்பேறித்தனத்தை பற்றி அறிந்து இவனை திருமணம் செய்ய முன்வரவில்லை. காலங்கள் சென்றுகொண்டே இருக்கிறது. பெண் தேடும் படலமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. காலப்போக்கில் சங்கரின் நிலைமை கண்டு அவனது அம்மாவும் அப்பாவும் கவலைப்பட்டு இறந்து விடுகிறார்கள்.
சங்கரால் அவனது அப்பாவும் அம்மாவும் இறந்ததை தாங்கி கொள்ள முடியவில்லை. தனியாக இருந்து கஷ்டப்பட்டான். இருந்த சொந்த பந்தங்களும் அவனது அம்மா அப்பா காரியத்தை முடித்து விட்டு அவரவர் சொந்த ஊருக்குச் சென்று விட்டார்கள். வறுமையில் வாடினான். வேலைக்கும் செல்லவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான். வெளி உலகம் தெரியாமல் வளர்ந்ததால் வீட்டிலேயே முடங்கி கிடந்தான். பசி வாட்டியது.
யாரும் அவனுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. எப்பொழுதும் போல சங்கர் இருக்கும் சோபாவில் படுத்துக்கொண்டு உறங்கினான். காலங்கள் செல்லச் செல்ல சங்கருக்கு வயது ஆயிற்று. இறுதியில் தனிமையில் கிடந்து கிடந்து ஒரு மனநலம் பாதிக்கப்பட்டு வெளியில் சுற்றத் தொடங்கினான். தன்னிலை மறந்து திரிந்து கொண்டிருந்தான். சங்கரின் இந்த நிலைமை கண்டு பரிதாபப்படுவதா இல்லை பெற்றோரின் தவறால் சங்கர் வாலிப வயதில் வெளியில் சென்று உலகத்தை அனுபவிக்கத் தெரியாதவன் சங்கரின் தவறா தெரியவில்லை இறுதியாக சங்கரின் நிலைமை பரிதாபத்துக்குரிய தாயிற்று.
என் அன்பு வாசகர்களே:
கதையில் இருந்து நாம் அறிவது என்னவென்றால் எப்பொழுதும் சோம்பேறி தனமாக இருக்கக்கூடாது. நாம் நல்லதையும் கெட்டதையும் தெரிந்து கொண்டால்தான் இந்த உலகத்தை வெல்ல முடியும். இல்லையென்றால் சங்கரின் நிலைமையும் தான் நமக்கும் ஏற்படும். ஆதலால் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் வெளி உலகத்தை தெரிந்தும் நடந்து கொள்ள வேண்டும்.
சோம்பேறியை பற்றி வேதம் அநேக இடங்களில் அநேக காரியத்தை தெளிவுபடுத்துகின்றது. சோம்பேறியால் யாருக்கும் ஏன் அந்த சோம்பேறிக்கும் கூட பிரயோஜனம் இல்லை. அவனால் மற்றவர்களுக்கு துன்பமேயன்றி இன்பமில்லை.
தனக்கு பசித்தாலும் யாரேனும் கொண்டு கொடுத்தால் தான் சாப்பிடுவானேயன்றி மற்றபடி சாப்பிடுவதில்லை. யாராவது வேலை செய்து கொண்டிருக்கும் பட்சத்தில் இவன் சென்றால் அவர்களின் வேலையையும் கெடுத்து விடுவான். ஏனெனில் அவனைப்போல எல்லோரும் சோம்பேறியாய் இருக்க வேண்டும் என்பதே அவனது ஆசை.
To Get Daily Story In What's App Contact +917904957814
வேதம் சொல்கிறது,
நீதிமொழிகள் 19:24
சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.
நம்முடைய பிள்ளைகள் வளர்கின்ற பருவத்திலேயே அவர்களுக்கு உழைப்பை பற்றியும், உழைப்பால் எப்படி உயர்வது என்பதை பற்றியும் சொல்லி வளர்க்க வேண்டும் இல்லையேல் பெற்றோர்கள் இருக்கும்வரை எந்த பிரச்சனையும் இல்லை. அதீத பாசம் கூட சிலரை சோம்பேறியாய் மாற்றி விடுகிறது. ஒருவேளை இன்றைய கதையில் வருவது போல் பெற்றோர்கள் இல்லையெனில் அந்த பிள்ளையின் நிலைமை அந்தோ பரிதாபம் தான்.
எனவே நம் பிள்ளைகளை சோம்பேறிகளாய் அல்ல நல்ல ஆரோக்கியமுள்ளவர்களாய், நல்ல சுறுசுறுப்போடு வளர்ப்போம் அவர்களை தங்கள் சொந்த காலில் நிறுத்த பிரயாசப்படுவோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
===========
ஓர் குட்டிக் கதை
சொர்க்கத்தில் தாடி மீசை வளருமா?
============
ஒருமுறை, பீர்பாலின் செல்வாக்கு நாளுக்குநாள் மன்னரிடம் அதிகரிப்பது கண்டு, பீர்பாலை நிரந்தரமாக மன்னரிடம் இருந்து பிரிக்க எண்ணிய சில அமைச்சர்கள், ஒருதிட்டம் போட்டு அதன்படி, மன்னரின் முடித்திருத்துபவனை அழைத்து, பொன்னையும் பொருளையும் அளித்து ஆசை வார்த்தை கூறி, தங்கள் இரகசியதிட்டத்திற்கு அவனை சம்மதிக்கவைத்து, திட்டம் நிறைவேறியபின், மேலும் பொன்னை அளிப்பதாகக்கூறி தங்கள் சதித்திட்டத்தை தயார்செய்தனர்.
எதிர்பார்த்ததுபோல, ஒருநாள் மன்னரிடமிருந்து முடித்திருத்துபவனுக்கு அழைப்புவர, மன்னரின் முடியை வெட்டிக்கொண்டே அவன் "மன்னா, தங்கள் தந்தை முடிபோல தங்களுக்கும் முடி அழகாக இருக்கிறது, இருந்தாலும் நீங்கள் உங்கள் தந்தையாரின் நலன்மீது அக்கறை செலுத்துவதில்லை, இப்போது தந்தையாரின் தலைமுடி நீண்டு வளர்ந்து, அவருடைய முக அழகை கெடுத்துவிட்டது. அவர் நலனை விசாரியுங்கள் என்றான்.
"என்ன உளறுகிறாய்? என்தந்தை காலமாகி நெடுநாட்களாகிவிட்டன. இப்போது எப்படி அவருக்கு முடிவளர்ந்திருக்கும்? இறந்துபோனவரிடம் எப்படி நலம் விசாரிக்கமுடியும்? புத்திபேதலித்துவிட்டதா உனக்கு? என மன்னர் கடிந்து கொண்டார்.
அவன் பவ்யமாக "முடியும் மன்னா! ஒரு மந்திரவாதி இருக்கிறான், அவன் உயிருடன் ஒருவரை சுடுகாட்டுக்கு கொண்டுசென்று விஷேச மந்திரங்களை சொல்லி, அவன் உடலை எரிப்பார். நம் கண்களுக்குத்தான் உடலை நெருப்பு எரிப்பதாகத்தெரியும், மந்திரவாதியின் சக்தியால், அந்த நபரின் உடல் தீயில்வேகாமல் மேலோகம் சென்று நம் முன்னோரை கண்டுவரும். என்ன, ஒரு நம்பிக்கையான ஆள் மட்டும்வேண்டும்." என்று மன்னரிடம் கூறினார்.
மன்னர் இறந்த தந்தையின் நலம் விசாரிக்க இப்படி ஒருவழி இருப்பது தெரியாமல் போய்விட்டதே என வருந்தி, யாரை அனுப்பலாம் என யோசித்தார்.
"யோசனை ஏன் அரசே? தங்கள் அவையில் புத்திசாலியும் தங்களின் நன்மதிப்பையும் கொண்ட ஒரே அமைச்சர் பீர்பால்தான். நீங்கள் சொன்னால் தட்டாமல் அவரே ஒப்புக்கொண்டு தங்கள் தந்தையின் நலம் விசாரித்துவருவார்" என்று சொல்ல, மன்னர் பீர்பாலை அவைக்கு அழைத்தார்.
அமைச்சரவை கூடியதும், பீர்பாலிடம் மன்னர் விசயத்தைக்கூறி, "இந்த காரியத்தை நல்லமுறையில் செய்து முடிக்க தங்களைவிட சிறந்தவர் யாருமில்லை, தாங்கள் சொர்க்கத்திற்கு சென்று என் தந்தையின் நிலையறிந்து வருக!" எனக்கூறினார்,
ஒரு வினாடி அதிர்ந்த பீர்பால் இவை பொறாமைக்காரர்களின் சதி என்பதை நொடிப்பொழுதில் உணர்ந்து மன்னரிடம், " மன்னா!! தங்கள் ஆணையை ஏற்று நான் செயல்பட எனக்கு மூன்று மாத அவகாசம் வேண்டும். அந்தசமயம் நான் தங்களை சந்திக்க இயலாது, மேலும் என்குடும்பத்துக்கு நான் ஆற்றவேண்டிய சில கடமைகளை அதற்குள் முடித்தபின், நீங்கள் செல்லப்பணித்த சொர்க்கம் சென்று வருகிறேன்" என்று கூறி, மன்னரின் சம்மதம் பெற்று வெளியில் வந்து, யோசித்தார்.
மூன்றுமாதம் கழித்து பீர்பால் மன்னரிடம் நான் தயார் என்றுகூற, முடித்திருத்துபவன் கூறிய மந்திரவாதி மூட்டிய சுடுகாட்டுதீயில், பீர்பாலை எரிக்க, அதில் சூழ்ந்த புகைமூட்டத்தில் பீர்பால் யாரும் அறியாவண்ணம், தான் ஏற்கெனவே செய்துவைத்திருந்த சுரங்கப்பாதையின் வழியே அருகிலுள்ள காட்டை அடைந்து அங்கிருந்து தன் வீட்டுக்கு சென்று மறைந்துகொண்டார். கழிந்தது ஆறுமாதம். இதற்குள் சுடுகாட்டு நெருப்பில் ஒழிந்தான் பீர்பால், இனிநாம் அவன் இடையூறின்றி மன்னரிடம் செல்வாக்கு பெறலாம் என அமைச்சர்கள் எல்லாம் மனப்பால் குடித்தனர்.
ஒருநாள் வயதான சாமியார் அரசவைக்கு வந்தார், மன்னரிடம் சென்று "மன்னா, நான்தான் பீர்பால், தங்கள் தந்தையை சொர்க்கத்தில் சந்தித்துவிட்டு நேராக இங்கே வருகிறேன், இந்த ஓலையை தந்தை தங்களிடம் அளிக்கச்சொன்னார் என்றுகூற, ஓலையில் மகனே!! எனக்கு தாடியும் மீசையும் வளர்ந்து அதை சரிசெய்ய முடிதிருத்துவோர் யாருமில்லை.. நீ நமது அரண்மனை முடிதிருத்துபவனை உடனே அனுப்பிவை.!" என்றிருந்தது. படித்தபின் மன்னர், மாமன்னரான எனது தந்தை வாடுவதா என அரண்மனை முடிதிருத்துவோனை அழைத்து விபரம் கூறி, உடனே சொர்க்கத்திற்கு செல்லக்கூற, அவன் "தொபுக்கடீர்" என மன்னர் காலில் விழுந்தான்.
"பொருளுக்கு ஆசைப்பட்டு அமைச்சர்கள் சொன்ன சதிச்செயலில் ஈடுபட்டுவிட்டேன்.. என்னை மன்னித்துவிடுங்கள் மன்னா! எனக்கதறினான். யோசித்த மன்னர் மனிதர்களால் எப்படி இந்த உடம்புடன் சொர்க்கத்திற்கு சென்று திரும்பிவரமுடியும்.. இது பீர்பாலைக் கொல்ல அமைச்சர்கள் செய்தசதிதான் என்று உணர்ந்து, பொறாமைக்கார அமைச்சர்களையும், பேராசை கொண்ட முடி திருத்துபவனையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சதியால் நண்பனை இழக்க இருந்தேனே என்று வருந்தி, பீர்பாலை கட்டித்தழுவினார்.
என் அன்பு வாசகர்களே:
சொர்க்கம் என்பது நமது சொல் வழக்கில் சொல்ல வேண்டுமெனில் "பரலோகம்" என்பதாகும். பரலோகத்தில் என்னென்ன இருக்கும் எப்படி எப்படி இருக்கும் என்பதை யோவானுக்கு தேவன் வெளிப்படுத்தியிருப்பதை வெளிப்படுத்தின விசேஷம் 21 ஆம் அதிகாரத்தில் தெளிவாய் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் மரித்தால் தான் ஒன்று பரலோகத்திற்கு அல்லது நரகத்திற்கு செல்ல முடியும். ஆனால் வேதாகமத்தில் உள்ள தீர்க்கதரிசிகள் அநேகர் அந்த பரலோகத்தை கண்டு நாம் அறிந்து கொள்ளும் வகையில் வேதாகமத்தில் எழுதியிருக்கிறார்கள். நம்மால் அந்த பரலோகத்தை பூமியில் கொண்டு வர முடியுமா?? என்றால் நிச்சயம் முடியும்.
ஆம் இந்த உலகத்தில் நாம் வாழும்போது நம் குடும்பம் ஒரு சொர்க்கத்தை போல இருத்தல் வேண்டும். ஏனெனில் நம் குடும்பத்திலிருந்து தான் ஆசீர்வாதங்கள் வெளிப்படும். நம் வீடு ஒரு குட்டி பரலோகமாய் இருக்கும்போது நம் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படும். இன்றைய கதையிலும் கூட அவர்கள் குடும்பமாய் இருந்த காரணத்தால் தான் ராஜா தன் தகப்பன் ஆசையை நிறைவேற்ற முற்பட்டான்.
To Get Daily Story In What's App Contact +917904957814
அதுபோலவே குடும்பமாய் எல்லோரும் கூடி இருக்கும் பட்சத்தில் எல்லாருடைய தேவைகளும் சந்திக்கப்படும். இன்றைய நாட்களில் அலைபேசியையே அநேகர் குடும்பமாய் கொண்டுள்ளார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பது என்பதை உலக அதிசயங்களில் ஒன்றை போல மாற துவங்கிவிட்டது. ஒரு மனிதன்/மனுஷி தன் குடும்பத்திற்காக நேரத்தை செலவிட துவங்கினால் அதுதான் உண்மையான பரலோகம்/சொர்க்கம்.
குடும்பத்தில் தான் தேவன் அநேக ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார். அதிலும் சபையாகிய குடும்பத்தின் மூலம் தேவன் கிரகிக்க முடியாத அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்கிறார்.
வேதம் சொல்கிறது,
எரேமியா 33:14
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.
எனவே சபையாகிய குடும்பத்தில் ஒவ்வொருவரும் அங்கத்தினர்களாய் மாறுவோம், ஆசீர்வாதங்களை சுதந்தரிப்போம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!