===================
புருஷன் - மனைவி (பொருத்துக)
===================
1. ஆபிராம் - அகோலிபாமாள்
2. ஈசாக்கு - யேசபேல்
3. ஏசா - மெகேதபேல்
4. பேலிக்ஸ் - தாபாத்
5. யோசேப்பு - சாராய்
6. மோசே - எலிசபாள்
7. ஆரோன் - சிப்போராள்
8. நாகோர் - சிரேஷ்
9. எலிமெலேக்கு - ஆஸ்நாத்
10. எல்க்கானா - நகோமி
11. அபினதாப் - அன்னாள்
12. ஆகாப் - துருசில்லாள்
13. ஆதாத் - ரெபெக்காள்
14. ஆமான் - எலிசபெத்து
15. சகரியா - மில்க்காள்
புருஷன் - மனைவி (பொருத்துக விடை)
====================
1 .ஆபிராம் - சாராய்
ஆதியாகமம் 16:3
2. ஈசாக்கு - ரெபெக்காள்
ஆதியாகமம் 24:67
3. ஏசா - அகோலிபாமாள்
ஆதியாகமம் 36:14
4. பேலிக்ஸ் - துருசில்லாள்
அப்போஸ்தலர் 24:24
5. யோசேப்பு - ஆஸ்நாத்
ஆதியாகமம் 41:45
6. மோசே - சிப்போராள்
யாத்திராகமம் 2:21
7. ஆரோன் - எலிசபாள்
யாத்திராகமம் 6:23
8. நாகோர் - மில்க்காள்
ஆதியாகமம் 21:29
9. எலிமெலேக்கு - நகோமி
ரூத் 1:2
10. எல்க்கானா - அன்னாள்
1 சாமுவேல் 1:1,2
11. அபினதாப் - தாபாத்
1 இரா 4:11
12. ஆகாப் - யேசபேல்
1 இரா 21:25
13. ஆதாத் - மெகேதபேல்
1 நாளா 1:50
14. ஆமான் - சிரேஷ்
எஸ்தர் 5:10
15. சகரியா - எலிசபெத்து
லூக்கா 1:5
சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்
=================
1) பிரகாசமுள்ள விடிவேள்ளி நட்சத்திரம் யார்?
1️⃣ சவுல்
2️⃣ தாவீது
3️⃣ யோனத்தான்
2) ஐயோ என்ற வார்த்தை ஒரு வசனத்தில் நான்கு முறை வரும். வசனம் எங்கே?
1️⃣ புலம்பல்
2️⃣ எரேமியா
3️⃣ நெகேமியா
3) ஐந்து இடங்களில் *நாளை* என்ற வார்த்தை குறிப்பிடும் வசனம் எங்கே?
1️⃣ யாத்திராகமம்
2️⃣ லேவியராகமம்
3️⃣ எண்ணாகமம்
4) யாருக்கு என்ற வார்த்தை ஓரே வசனத்தில் ஐந்து முறை வருகிறது. அது எங்கே?
1️⃣ சங்கீதம்
2️⃣ நீதிமொழிகள்
3️⃣ பிரசங்கி
5) லோதை ஓனா எனற ஊர் பெயர் உள்ள வசனம் எங்கே?
1️⃣ 1 நாளாகமம்
2️⃣ 2 நாளாகமம்
3️⃣ எண்ணாகமம்
6) கீசின் குமாரன் யார்?
1️⃣ தானியேல்
2️⃣ தாவீது
3️⃣ சவுல்
7) யூதாவின் குமார்கள் எத்தனை பேர் ?
1️⃣ மூன்று
2️⃣ நான்கு
3️⃣ ஐந்து
8) அம்மெதாத்தாவின் குமாரன் பெயர் ஏன்ன?
1️⃣ யோராம்
2️⃣ ஆமான்
3️⃣ ஆபியா
9) புதுப்பட்டையை அரையிலே கட்டிக்கொண்டவன் யார்?
1️⃣ இஸ்பிபெனேப்
2️⃣ பெலிஸ்தர்
3️⃣ பார்வோன்
10)ஆறாம் தூதன் முத்திரையை உடைக்கும்போது எது இரத்தம் போலாயிற்று?
1️⃣ சூரியன்
2️⃣ சந்திரன்
3️⃣ நட்சத்திரம்
சரியான பதில்
===============
1) பிரகாசமுள்ள விடிவேள்ளி நட்சத்திரம் யார்?
Answer: 2️⃣ தாவீது
வெளிப்படுத்தல் 22:16
2) ஐயோ என்ற வார்த்தை ஒரு வசனத்தில் நான்கு முறை வரும். வசனம் எங்கே?
Answer: 2️⃣ எரேமியா
எரேமியா 22:18
3) ஐந்து இடங்களில் நாளை என்ற வார்த்தை குறிப்பிடும் வசனம் எங்கே?
Answer: 3️⃣ எண்ணாகமம்
எண்ணாகமம் 11:19
4) யாருக்கு என்ற வார்த்தை ஓரே வசனத்தில் ஐந்து முறை வருகிறது. அது எங்கே?
Answer: 2️⃣ நீதிமொழிகள்
நீதமொழிகள் 23:29
5) லோதை ஓனா எனற ஊர் பெயர் உள்ள வசனம் எங்கே?
Answer: 1️⃣ 1 நாளாகமம்
1 நாளாகமம் 8:12
6) கீசின் குமாரன் யார்?
Answer: 3️⃣ சவுல்
1 சாமுவேல் 10:21
7) யூதாவின் குமார்கள் எத்தனை பேர் ?
Answer: 3️⃣ ஐந்து
1 நாளாகமம் 2:3,4
ஆதியாகமம் 26:12
8) அம்மெதாத்தாவின் குமாரன் பெயர் என்ன?
Answer: 2️⃣ ஆமான்
எஸ்தர் 8:5
9) புதுப்பட்டையை அரையிலே கட்டிக்கொண்டவன் யார்?
Answer: 1️⃣ இஸ்பிபெனேப்
2 சாமுவேல் 21:16
10) ஆறாம் தூதன் முத்திரையை உடைக்கும்போது எது இரத்தம் போலாயிற்று?
Answer: 2️⃣ சந்திரன்
வெளிப்படுத்தல் 6:12
==================
சரியான விடையை வசன இருப்பிடத்துடன் எழுதவும்
==================
1) உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள் என்று எந்தப் பட்டணத்தில் சொல்லப்பட்டது?
A) தெசலோனிக்கே
B) ரோமாபுரி
C) பிலிப்பி
D) எபேசு
2) ஜனங்களெல்லாரும் கெட்டுப் போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்று சொன்னவன் யார்?
A) காய்பா
B) அன்னா
C) பரிசேயன்
D) சவுல்
3) ஏரோதிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவன் பெயரென்ன?
A) அர்கெலாயு
B) பிலிப்பு
C) பிலாத்து
D) அகிரிப்பா
4) ஒரு மனிதன் தன்னுடைய மகாபலத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தும்படி அவளை நயஞ் செய்வதற்காக 1100 வெள்ளிக்காசு கொடுக்கப்பட்ட ஸ்திரீ யார்?
A) லேயாள்
B) அன்னாள்
C) தீனாள்
D) தெலீலாள்
5) இயேசு கிறிஸ்துவால் குணமாக்கப்பட்ட பத்துக் குஷ்டரோகிகளில் அவருக்கு ஸ்தோத்திரஞ் செலுத்திய ஒரு குஷ்டரோகி எந்த நாட்டைச் சேர்ந்தவன்?
A) யூதேயா நாட்டான்
B) கலிலேயன்
C) சமாரியன்
D) ரோமன்
6) ஆபிரகாமின் இரண்டாவது மனைவி பெயர் என்ன?
A) சாராள்
B) கேத்தூராள்
C) தீனாள்
D) பத்சேபாள்
7) ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் எதைச் செய்யும்படி நியமிக்கப்படுகிறான்
A) காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி
B) துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்தும்படி
C) தூபங்காட்டுதலையும் புகழையும் செலுத்தும்படி
D) ஜெபத்தையும் துதிகளையும் செலுத்தும்படி
8) அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றவன் யார்?
A) ஆதாம்
B) ஏனோக்கு
C) யோவான்
D) ஆபிரகாம்
9) உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்று கூறியது யார்?
A) ரெபேக்காள்
B) யோபு
C) நகோமி
D) தாவீது
10.) நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ? என்று கேட்டது யார்?
A) யோசேப்பு
B) யாக்கோபு
C) யூதா
D) ஆபிரகாம்
சரியான விடைகள்
==============
1. உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள் என்று எந்தப் பட்டணத்தில் சொல்லப்பட்டது?
Answer: A. தெசலோனிக்கே
அப்போஸ்தலர் 17:1,6
2. ஜனங்களெல்லாரும் கெட்டுப் போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்று சொன்னவன் யார்?
Answer: A. காய்பா
யோவான் 11:49,50
யோவான் 18:14
3. ஏரோதிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவன் பெயரென்ன?
Answer: A. அர்கெலாயு
மத்தேயு 2:22
4. ஒரு மனிதன் தன்னுடைய மகாபலத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தும்படி அவளை நயஞ்செய்வதற்காக 1100 வெள்ளிக்காசு கொடுக்கப்பட்ட ஸ்திரீ யார்?
Answer: D. தெலீலாள்
நியாயாதிபதிகள் 16:4,5
5. இயேசு கிறிஸ்துவால் குணமாக்கப்பட்ட பத்துக் குஷ்டரோகிகளில் அவருக்கு ஸ்தோத்திரஞ் செலுத்திய ஒரு குஷ்டரோகி எந்த நாட்டைச் சேர்ந்தவன்?
Answer: C. சமாரியன்
லூக்கா 17:16
6. ஆபிரகாமின் இரண்டாவது மனைவி பெயர் என்ன?
Answer: B. கேத்தூராள்
ஆதியாகமம் 25:1
7. ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் எதைச் செய்யும்படி நியமிக்கப்படுகிறான்
Answer: A. காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி
எபிரெயர் 8:3
8. அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றவன் யார்?
Answer: B. ஏனோக்கு
எபிரெயர் 11:5
9. உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்று கூறியது யார்?
Answer: C. நகோமி
ரூத் 2:20
10. நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ? என்று கேட்டது யார்?
Answer: B. யாக்கோபு
ஆதியாகமம் 37:10