=============
யோசுவாவின் புஸ்தகம் 11-15 அதிகாரங்கள்
==============
1) ராஜாக்கலெல்லாரும் கூடி யாருடன் யுத்தம் பண்ண வந்தார்கள்?
2) ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையாக இருந்த பட்டணம் எது?
3) இஸ்ரவேலர் யுத்த ஜனங்களை எந்த பள்ளத்தாக்கு வரை துரத்தினார்கள்?
4) இஸ்ரவேல் புத்திரரோடு சமாதானம் பண்ணினவர்கள் யார்?
5) யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்ஙளும் முறியடித்த ராஜாக்கள் எத்தனை?
6) நான்கு எழுத்து பெயருடைய இரு இடங்களுக்கு மூன்றாம் எழுத்தே வேறு. பெயர் என்ன?
7) லேவி கோத்திரத்தின் உடைமை எது?
8)யோர்தானுக்கு கிழக்கே மோசே எவர்களுக்கு உடைமையாக கொடுத்தார்?
9) இஸ்ரவேலரிடையே இந்நாள் வரைக்கும் வாழ்கின்றவர்கள் யாவர்?
10) தேசத்தை உளவறிய போனது யார்? அவனின் வயது என்ன?
11) ஒரு ஊரின் பாதி பெயரும் என் பெயரும் ஒன்றே. நான் யார்?
12) இரண்டு கோத்திரங்களானவர் யார்?
13) ஒரே இடத்திற்கு இரண்டு வேறு பெயர்களும உண்டு. பெயர்கள் என்ன?
14) எங்களால் இவர்களை வெளியேற்ற முடியவில்லை. அவர்களும் எங்களோடவே இருக்கிறார்கள். நாங்கள் யார்? அவர்கள் யார்?
15) ஏனாக்கின் தகப்பனுடைய பட்டணம் எது?
யோசுவாவின் புஸ்தகம் 11-15 அதிகாரங்கள்
பதில்
================
1) ராஜாக்கலெல்லாரும் கூடி யாருடன் யுத்தம் பண்ண வந்தார்கள்
Answer: இஸ்ரவேலரோடு
யோசுவா 11:5
2) ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையாக இருந்த பட்டணம் எது?
Answer: ஆத்சோர்
யோசுவா 11:10
3) இஸ்ரவேலர் யுத்த ஜனங்களை எந்த பள்ளத்தாக்கு வரை துரத்தினார்கள்?
Answer: மிஸ்பே பள்ளத்தாக்கு வரை
யோசுவா 11:8
4) இஸ்ரவேல் புத்திரரோடு சமாதானம் பண்ணினவர்கள் யார்?
Answer: கிபியோனின் குடிகளாகிய ஏவியர்
யோசுவா 11:19
5) யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்ஙளும் முறியடித்த ராஜாக்கள் எத்தனை?
Answer: முப்பத்தொரு ராஜாக்கள்
யோசுவா 12:8,24
6) நான்கு எழுத்து பெயருடைய இரு இடங்களுக்கு மூன்றாம் எழுத்தே வேறு. பெயர் என்ன?
Answer: எக்லோன் எக்ரோன்
யோசுவா 12:12
யோசுவா 13:2
7) லேவி கோத்திரத்தின் உடைமை எது?
Answer: தகனபலிகள்
யோசுவா 13:14
8)யோர்தானுக்கு கிழக்கே மோசே எவர்களுக்கு உடைமையாக கொடுத்தார்?
Answer: மனாசேயின் பாதி கோத்திரத்தார் ரூபனியர், காத்தியர்
யோசுவா 13:8
9) இஸ்ரவேலரிடையே இந்நாள் வரைக்கும் வாழ்கின்றவர்கள் யாவர்?
Answer: கெசூரியர், மகாத்தியர்
யோசுவா 13:13
10) தேசத்தை உளவறிய போனது யார்? அவனின் வயது என்ன?
Answer: காலேப், நாற்பது வயது
யோசுவா 14:7
11) ஒரு ஊரின் பாதி பெயரும் என் பெயரும் ஒன்றே. நான் யார்?
Answer: அர்பா
யோசுவா 14:15
12) இரண்டு கோத்திரங்களானவர் யார்?
Answer: யோசேப்பின் புத்திரர் மனாசே, எப்பிராயீம்
யோசுவா 14:4
13) ஒரே இடத்திற்கு இரண்டு வேறு பெயர்களும உண்டு. பெயர்கள் என்ன?
Answer: தெபீர் - கீரியாத் செப்பேர்
Answer: கீரியாத் சன்னா
யோசுவா 15:15,49
14) எங்களால் இவர்களை வெளியேற்ற முடியவில்லை. அவர்களும் எங்களோடவே இருக்கிறார்கள். நாங்கள் யார்? அவர்கள் யார்?
Answer: யூதா புத்திரர், எபூசியர்
யோசுவா 15:63
15) எனாக்கின் தகப்பனுடைய பட்டணம் எது?
Answer: எபிரோன்
யோசுவா 15:13
யோசுவா 16-19 கேள்விகள்
===============
1. யாருக்கு பிரத்தியேகமான பட்டணங்கள் கொடுக்கப்பட்டது?
2. பட்டணத்தை க் கட்டி அதிலே குடியிருந்தது யார்?
3. தென் நாடு யாருடையது. வட நாடு யாருடையது?
4. யாருடைய எல்லை ஒடுக்கமாய் இருந்தது?
5. எரிகோ எந்த கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட பட்டணம்?
6. அரணிப்பான பட்டணம் என்று சொல்லப்பட்டது எது?
7. நீங்கள் எந்த மட்டும் அசதியாய் இருப்பீர்கள் என்றது யார்?
8. என்னிடத்தில் திரும்பி வாருங்கள் யார் யாரிடம் கூறியது?
9. எரிகோவிற்கு அருகே இருப்பது எது?
10. யுத்த மனுஷன் யார்?
11. யாருடைய பங்கு மிச்சமாய் இருந்தது?
12. இஸ்ரவேல் புத்திரர் யாருக்கு தங்கள் நடுவே சுதந்தரம் கொடுத்தார்கள்?
13. சூனேம் பட்டணம் யாருக்கு கிடைத்தது?
14. கீரியாத் பாகால் பட்டணம் யாருடையது?
15. நீங்கள் ஜனம் பெருத்தவர்கள் ..யார் யாரிடம் கூறியது?
பதில் யோசுவா 16-19
================
1. யாருக்கு பிரத்தியேகமான பட்டணங்கள் கொடுக்கப்பட்டது?
Answer: எப்பிராயீம் புத்திரருக்கு
யோசுவா 16:9
2. பட்டணத்தைக் கட்டி அதிலே குடியிருந்தது யார்?
Answer: நூனின் குமாரனாகிய யோசுவா
யோசுவா 19:50
3. தென் நாடு யாருடையது. வட நாடு யாருடையது?
Answer: தென் நாடு - எப்பிராயீம்
வட நாடு - மனாசே
யோசுவா 17:10
4. யாருடைய எல்லை ஒடுக்கமாய் இருந்தது?
Answer: தாண் புத்திரரின் எல்லை
யோசுவா 19:47
5. எரிகோ எந்த கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட பட்டணம்?
Answer: பென்யமீன் கோத்திரத்திற்கு.
யோசுவா 18:21
6. அரணிப்பான பட்டணம் என சொல்லப்பட்டது எது?
Answer: தீரு
யோசுவா 19:29
7. நீங்கள் எந்த மட்டும் அசதியாய் இருப்பீர்கள் என்றது யார்?
Answer: யோசுவா
யோசுவா 18 :3
8. என்னிடத்தில் திரும்பி வாருங்கள் யார் யாரிடம் கூறியது?
Answer: யோசுவா, தேசத்தை குறித்து விவரம் எழுத போகிறவர்களிடம்.
யோசுவா 18:8
9. எரிகோவிற்கு அருகே இருப்பது எது?
Answer: யோர்தான்
யோசுவா 16:1
10. யுத்த மனுஷன் யார்?
Answer: மாகீர்
யோசுவா17:1
11. யாருடைய பங்கு மிச்சமாய் இருந்தது?
Answer: யூதா புத்திரரின் பங்கு.
யோசுவா 19:9
12. இஸ்ரவேல் புத்திரர் யாருக்கு தங்கள் நடுவே சுதந்தரம் கொடுத்தார்கள்?
Answer: நூனின் குமாரனாகிய யோசுவாவிற்கு.
யோசுவா 19:49
13.சூனேம் பட்டணம் யாருக்கு?
Answer: இசக்கார் புத்திரருக்கு
யோசுவா 19:18
14. கீரியாத் பாகால் பட்டணம் யாருடையது?
Answer: யூதா புத்திரருடையது.
யோசுவா18:14
15. நீங்கள் ஜனம் பெருத்தவர்கள் யார் யாரிடம் கூறியது?
Answer: யோசுவா, யோசேப்பு வம்சத்தாராகிய எப்பி ராயீமர்,மனாசேயரிடம்.
யோசுவா 17:17
யோசுவா 20 - 24 கேள்விகள்
=============
1. அடைக்கலப் பட்டணமாக எதை ஏற்படுத்தி எதைக் குறித்து வைத்தார்கள்?
2. இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவேயிருக்கிற லேவியரின் பட்டணங்கள் எத்தனை?
3. தங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போனவர்கள் யார்?
4. கர்த்தர் எதை எல்லையாக வைத்தார்?
5. யுத்தம் பண்ணும்படி எங்கே கூடினார்கள்?
6. எதைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்?
7. குளவிகளால் துரத்தி விடப்பட்ட ராஜாக்கள் யார்?
8. யோசுவா ஜனங்களோடே உடன்படிக்கை பண்ணின இடம் எது?
9. யோசுவாவை அடக்கம் பண்ணின இடம் எது?
10. இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிற வழியே போகிறேன் சொன்னது யார்?
11. நப்தலியின் மலை தேசம் எது?
12. ராமோத் எந்த தேசத்தில் உள்ளது?
பொருத்துக:
11. பினெகாஸ் - சீலோ
12. ஏத் - சீகேம்
13. கானான் தேசம் - எலெயாசார்
14. யோசேப்பின் எலும்புகள் - அடைக்கலப் பட்டணம்
15. இரத்தப் பழி -கர்த்தரே தேவன்.
யோசுவா 20 - 24
கேள்வியும் பதிலும்
=================
1. அடைக்கலப்பட்டணமாக எதை ஏற்படுத்தி எதைக் குறித்து வைத்தார்கள்?
Answer: கேதேஸ், சீகேம், கீரியாத் அர்பாவை ஏற்படுத்தி, பேசேர், ராமோத், கோலானை குறித்து வைத்தார்கள்
யோசுவா 20:7
2. இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின்
பட்டணங்கள் எத்தனை?
Answer: நாற்பத்தெட்டு
யோசுவா 21:41
3. தங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போனவர்கள் யார்?
Answer: ரூபனியர், காத்தியர், மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்
யோசுவா 22:1,6
4. கர்த்தர் எதை எல்லையாக வைத்தார்?
Answer: யோர்தானை
யோசுவா 22:25
5. யுத்தம் பண்ணும்படி எங்கே கூடினார்கள்?
Answer: சீலோவிலே
யோசுவா 22:12
6. எதைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்?
Answer: உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து
யோசுவா 23:11
7. குளவிகளால் தூரத்தி விடப்பட்ட ராஜாக்கள் யார்?
Answer: எமோரியரின் இரண்டு ராஜாக்கள்
யோசுவா24:12
8 யோசுவா ஜனங்களோடே உடன்படிக்கை பண்ணின இடம் எது?
Answer: சீகேம்
யோசுவா 24:25
9. யோசுவா அடக்கம் பண்ணப்பட்ட இடம் எது?
Answer: திம்னாத் சோரா
யோசுவா 24:29
10. இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிற வழியே போகிறேன் - சொன்னது யார்?
Answer: யோசுவா
யோசுவா 23:14
11. நப்தலியின் மலை தேசம் எது?
Answer: கலிலேயா
யோசுவா 20:7
12. ராமோத் எந்த தேசத்தில் உள்ளது?
Answer: கீலேயாத் தேசம்
யோசுவா 20:8
பொருத்துக:
11. பினெகாஸ் - எலெயாசார்
யோசுவா 22:13
12. ஏத் - கர்த்தரே தேவன்
யோசுவா 22:34
13. கானான் தேசம் - சீலோ
யோசுவா 21:1
14. யோ சேப்பின் எலும்புகள் - சீகேம்
யோசுவா 24:32
15. இரத்தப்பழி - அடைக் கலப்பட்டணம்
யோசுவா 20:2,3