======================
சரீர உறுப்புகள் பற்றிய கேள்விகள்
=====================
1. சூரியனைப்போல் பிரகாசித்த முகம் யாருடையது?
2. நாவின் பிரதியுத்தரம் யாரால் வரும்?
3. ஞானியின் ________________ அறிவை நாடும்.
4. எந்த உறுப்பைப்போல் என்னைக் காத்தருளும் ஒன்று தாவீது ஜெபித்தான்?
5. உன்நடையை சீர்தூக்கிப் பார்ப்பது எது?
6. ஆரோக்கியமுள்ள ஜீவவிருட்சம் எது?
7. ஞானியின் உதடுகள் எதை இறைக்கும்?
8. பாவிகள் எதைச் சுத்திகரிக்க வேண்டும் என்று யாக்கோபு சொல்கிறான்?
9. இது தேவனுடைய விரல் என்று யார் யாரிடம் சொன்னது?
10. கர்மேல் மலைப்போல் இருப்பது எது?
11. நீதிமானுடைய வாய் எதை வெளிப்படுத்தும்?
12) சத்தியவேதம் அவன் _________ இருந்தது. அவனுடைய உதடுகளில் _________ காணப்படவில்லை .
13. உன் காதுகளில் _________, உன் தலையின் மேல் _______, _________ தரித்தேன்.
சரீர உறுப்புகள் பற்றிய கேள்விக்கான பதில்கள்
=======================
1. சூரியனைப்போல் பிரகாசித்த முகம் யாருடையது?
Answer: இயேசு கிறிஸ்து
மத்தேயு 17:2
2. நாவின் பிரதியுத்தரம் யாரால் வரும்?
Answer: கர்த்தரால்
நீதிமொழிகள் 16:1
3. ஞானியின் ________________ அறிவை நாடும்.
Answer: செவி
நீதிமொழிகள் 18:5
4. எந்த உறுப்பைப்போல் என்னைக் காத்தருளும் என்று தாவீது ஜெபித்தான்?
Answer: கண்மணி
சங்கீதம் 17:8
5. உன்நடையை சீர்தூக்கிப் பார்ப்பது எது?
Answer: கால்
நீதிமொழிகள் 4:26
6. ஆரோக்கியமுள்ள ஜீவவிருட்சம் எது?
Answer: நாவு
நீதிமொழிகள் 15:4
7. ஞானியின் உதடுகள் எதை இறைக்கும்?
Answer: அறிவை
நீதிமொழிகள் 15:7
8. பாவிகள் எதைச் சுத்திகரிக்க வேண்டும் என்று யாக்கோபு சொல்கிறான்?
Answer: கைகளை
யாக்கோபு 4:8
9. இது தேவனுடைய விரல் என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: மந்திரவாதி பார்வோனை நோக்கி
யாத்திராகமம் 8:19
10. கர்மேல் மலைப்போல் இருப்பது எது?
Answer: சிரசு
உன்னதப்பாட்டு 7:5
11. நீதிமானுடைய வாய் எதை வெளிப்படுத்தும்?
Answer: ஞானத்தை
நீதிமொழிகள் 10:31
12) சத்தியவேதம் அவன் _________ இருந்தது. அவனுடைய உதடுகளில் _________ காணப்படவில்லை .
Answer: வாயில், அநியாயம்
மல்கியா 2:6
13. உன் காதுகளில் _________, உன் தலையின் மேல் _______, _________ தரித்தேன்.
Answer: காதணியையும், சிங்காரமான கீரிடத்தையும்
எசேக்கியேல் 16:12
========
தகப்பன்
=========
01) ஒரு பட்டணத்தைக்கட்டி அதற்குத்தன் மகன் பேரைத்தரித்த தகப்பன் யார்?
02) தன் மகள் கேட்ட ஆசிர்வாதத்தை மறுக்காமல் அவளுக்குத் கொடுத்த தகப்பன் யார்?
03) தன் மகனுக்குத் தன் உறவுக்குள்தான் பெண் கொள்ள வேண்டும் என உறுதியாக இருந்த தகப்பன்மார் யார்?
04) தான் நேசித்த மகனுக்காக Special Dress தைத்துக் கொடுத்த தகப்பன்?
05) தன்னைக் கொலை செய்ய நினைத்த மகன் கொல்லப்பட்டதை அறிந்து அழுது புலம்பிய பாசக்கார அப்பா யார்?
06) தன் மகன் பிறந்ததும் தன் தகப்பன் வீட்டைப் பற்றிய கவலையை மறந்த தகப்பன் யார்?
07) தன் மகனுக்காக பெரிய விருந்து பண்ணின தகப்பன் யார்?
08) தன்னை விட்டுச்சென்ற தன் மகனின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த தகப்பன் யார்?
09) எந்த தகப்பனுடைய ஜீவன் தன் மகனுடைய ஜீவனோடு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது
10) தான் நேசித்த மகனை ஆசிர்வதிக்க முடியாமல் தவித்த தகப்பன் யார்?
11) தன் மகன்களை தேசத்தில் நியாயாதிபதிகளாக வைத்த தகப்பன் யார்?
12) தன் மகனைக் கொல்ல வந்தவர்களிடம் அவனைக் காப்பாற்றிய தகப்பன் யார்?
13) தன் இளைய மகனை தீர்க்கத்தரிசியின் விருந்துக்கு அழைக்கத் தவறிய தகப்பன் யார்?
14) தன் மகனுக்காக என்ன செய்வேன் என கவலைப்பட்டுக் கலங்கிய தகப்பன் யார்?
15) தன் பிள்ளைகளுக்காக தவறாமல் சர்வாங்க தகனபலிகளை செலுத்திய தகப்பன் யார்?
தகப்பன் - Answer
===================
01) ஒரு பட்டணத்தைக்கட்டி அதற்குத்தன் மகன் பேரைத்தரித்த தகப்பன் யார்?
Answer: காயீன்
ஆதிமொழிகள் 04:17
02) தன் மகள் கேட்ட ஆசிர்வாதத்தை மறுக்காமல் அவளுக்குத் கொடுத்த தகப்பன் யார்?
Answer: காலேப்
நியாயாதிபதிகள் 01:15
03) தன் மகனுக்குத் தன் உறவுக்குள்தான் பெண் கொள்ள வேண்டும் என உறுதியாக இருந்த தகப்பன்மார் யார்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 24:3,4
Answer: ஈசாக்கு
ஆதியாகமம் 28:1,2
04) தான் நேசித்த மகனுக்காக Special Dress தைத்துக் கொடுத்த தகப்பன்
Answer: இஸ்ரவேல்
ஆதியாகமம் 37:3
05) தன்னைக் கொலை செய்ய நினைத்த மகன் கொல்லப்பட்டதை அறிந்து அழுது புலம்பிய பாசக்கார அப்பா யார்?
Answer: தாவீது
2 சாமுவேல் 18:33
06) தன் மகன் பிறந்ததும் தன் தகப்பன் வீட்டைப் பற்றிய கவலையை மறந்த தகப்பன் யார்?
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 41:51
07) தன் மகனுக்காக பெரிய விருந்து பண்ணின தகப்பன் யார்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 21:08
08) தன்னை விட்டுச்சென்ற தன் மகனின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த தகப்பன் யார்?
Answer: காணாமல் போன இளைய மகனின் தகப்பன்
லூக்கா 15:20
09) எந்த தகப்பனுடைய ஜீவன் தன் மகனுடைய ஜீவனோடு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 44:30
10) தான் நேசித்த மகனை ஆசிர்வதிக்க முடியாமல் தவித்த தகப்பன் யார்?
Answer: ஈசாக்கு
ஆதியாகமம் 27:37
11) தன் மகன்களை தேசத்தில் நியாயாதிபதிகளாக வைத்த தகப்பன் யார்?
Answer: சாமுவேல்
1 சாமுவேல் 08:01
12) தன் மகனைக் கொல்ல வந்தவர்களிடம் அவனைக் காப்பாற்றிய தகப்பன் யார்?
Answer: யோவாஸ்
நியாயாதிபதிகள் 06:30,31
13) தன் இளைய மகனை தீர்க்கத்தரிசியின் விருந்துக்கு அழைக்கத் தவறிய தகப்பன் யார்?
Answer: ஈசாய்
1 சாமுவேல் 16:5,11
14) தன் மகனுக்காக என்ன செய்வேன் என கவலைப்பட்டுக் கலங்கிய தகப்பன் யார்?
Answer: சவுலின் தகப்பன் கீஸ்
1 சாமுவேல் 10:2
15) தன் பிள்ளைகளுக்காக தவறாமல் சர்வாங்க தகனபலிகளை செலுத்திய தகப்பன் யார்?
Answer: யோபு
யோபு 1:5
==========================
இன்றைய கேள்வி - இராத்திரியில் நடந்தவை
===========================
1) ஒரு இராத்திரியிலே முளைத்த செடி எது?
2) இராத்திரி களத்திலே தூற்றப்படுவது எது?
3) இராத்திரியிலே கொலை செய்யப்பட்ட ராஜா யார்?
4) இராத்திரியில் எங்கே மகா கூக்குரல் உண்டாயிற்று?
5) இராத்திரியிலே சிறைச்சாலையின கதவுகளைத் திறந்தது யார்?
6) இராத்திரியிலே யாருடைய ஆத்துமா எடுத்துக் கொள்ளப்படும்?
7) இராத்திரி ஓடிப்போய் தன்னை தப்புவித்துக் கொண்டது யார்?
8) இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தது யார்?
9) இராத்திரிக்கு பிலேயாமிடத்தில் தங்கியது யார்?
10) இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்தது யார்?
பதில்கள் (இராத்திரியில் நடந்தவை)
========================
1) ஒரு இராத்திரியிலே முளைத்த செடி எது?
Answer: ஆமணக்கு செடி
யோனா 4:10
2) இராத்திரி களத்திலே தூற்றப்படுவது எது?
Answer: வாற்கோதுமை
ரூத் 3:2
3) இராத்திரியிலே கொலை செய்யப்பட்ட ராஜா யார்?
Answer: கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார்
தானியேல் 5:30
4) இராத்திரியில் எங்கே மகா கூக்குரல் உண்டாயிற்று?
Answer: எகிப்திலே
யாத்திராகமம் 12:30
5) இராத்திரியிலே சிறைச்சாலையின கதவுகளைத் திறந்தது யார்?
Answer: கர்த்தருடைய தூதன்
அப்போஸ்தலர் 5:19
6) இராத்திரியிலே யாருடைய ஆத்துமா எடுத்துக் கொள்ளப்படும்?
Answer: மதிகேடனுடைய
லூக்கா 12:20
7) இராத்திரி ஓடிப்போய் தன்னைக் தப்புவித்துக் கொண்டது யார்?
Answer: தாவீது
1 சாமுவேல் 19:10
8) இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தது யார்?
Answer: மேய்ப்பர்கள்
லூக்கா 2:8
9) இராத்திரிக்கு பிலேயாமிடத்தில் தங்கியது யார்?
Answer: மோவாபின் பிரபுக்கள்
எண்ணாகமம் 22:8
10) இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்தது யார்?
Answer: நிக்கொதேமு
யோவான் 3:1,2