======================
விவிலிய வினா விடைகள்
======================
1. யார் யார் தாகத்தினால் சோர்ந்து போவார்கள்?
2. யாக்கோபு ஓடிப்போனதை எத்தனை நாள் கழித்து லாபானுக்கு அறிவித்தார்கள்?
3. எந்த மிருகம் தும்மினால் ஒளிவீசும்?
4. இறந்தவர்களை பரிசுத்த ஸ்தலத்திலிருந்து கொண்டு போனவர்கள் யார்?
5. பரிசுத்தம் என்று எதை நேர்ந்து கொள்ளக்கூடாது?
6. யார் இராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்?
7. யாரைப் பார்த்து சகோதரி என்றும் யாரைப் பார்த்து நீ என் இனத்தான் என்றும் சொல்ல வேண்டும்?
8. பாதாளத்தின் தூதன் பெயர் என்ன?
9. விடுதலை வருஷத்தில் கடனை யாரிடம் மட்டும் கேட்கலாம்?
10. இரவும் பகலும் இளைப்பாறுதல் இராது யாருக்கு?
11. கர்த்தர் இஸ்ரயேலரோடு உடன்படிக்கை செய்த இடம் எது?
12. கர்த்தர் கொடுத்த தேசத்தின் மலைகளில் எதை வெட்டி எடுக்கலாம்?
13. கோரேசின் நிருபம் கண்டெடுக்கப்பட்ட இடம் எது?
14. உன்னதமானவரின் வாயிலிருந்து புறப்படுகிறவை எவையெவை?
15. இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயத்தை அவனவன் நிலையிலே கட்டிக்கொண்டு சுற்றி நின்றவர்கள் எத்தனை பேர்?
ANSWER
==========
1. யார் யார் தாகத்தினால் சோர்ந்து போவார்கள்?
Answer: அந்நாளிலே சௌந்தரியமுள்ள கன்னிகைகளும் வாலிபரும் தாகத்தினால் சோர்ந்து போவார்கள்.
ஆமோஸ் 8:13
2. யாக்கோபு ஓடிப்போனதை எத்தனை நாள் கழித்து லாபானுக்கு அறிவித்தார்கள்?
Answer: யாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு அறிவிக்கப்பட்டது.
ஆதியாகமம் 31:22
3. எந்த மிருகம் தும்மினால் ஒளிவீசும்?
Answer: லிவியாதானை* தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ?
அது தும்முகையில் ஒளி, வீசும், அதின் கண்கள் அருணோதயத்தின் புருவங்களைப்போல் இருக்கிறது.
யோபு 41:1,18
4. இறந்தவர்களை பரிசுத்த ஸ்தலத்திலிருந்து கொண்டு போனவர்கள் யார்?
Answer: பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்டவந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டு போங்கள் என்றான்.
லேவியராகமம 10:4
5. பரிசுத்தம் என்று எதை நேர்ந்து கொள்ளக்கூடாது?
Answer: தலையீற்றானவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் *தலையீற்றாகிய* *மிருகஜீவனைப்* பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.
லேவியராகமம் 27:26
6. யார் இராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்?
Answer: தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
நீதிமொழிகள் 22:29
7. யாரைப் பார்த்து சகோதரி என்றும் யாரைப் பார்த்து நீ என் இனத்தாள் என்றும் சொல்ல வேண்டும்?
Answer: ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.
நீதிமொழிகள் 7:5
8. பாதாளத்தின் தூதன் பெயர் என்ன?
Answer: அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; *எபிரெயுபாஷையிலே* *அபெத்தோன்* என்றும், *கிரேக்கு* *பாஷையிலே* *அப்பொல்லியோன்* என்றும் அவனுக்குப் பெயர்
வெளி விசேஷம் 9:11
9. விடுதலை வருஷத்தில் கடனை யாரிடம் மட்டும் கேட்கலாம் ?*
Answer: அந்நிய* *ஜாதியான்* கையிலே நீ கடனைத் தண்டலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடக்கடவது.
உபாகமம் 15:3
10. இரவும் பகலும் இளைப்பாறுதல் இராது யாருக்கு?
Answer: அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.
வெளி.விசேஷம் 14:11
11. கர்த்தர் இஸ்ரயேலரோடு உடன்படிக்கை செய்த இடம் எது?
Answer: நம்முடைய தேவனாகிய கர்த்தர் *ஓரேபிலே* நம்மோடே உடன்படிக்கைபண்ணினார்.
.அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் பண்ணாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம்மெல்லாரோடும் பண்ணினார்.
உபாகமம் 5:2,3
12. கர்த்தர் கொடுத்த தேசத்தின் மலைகளில் எதை வெட்டி எடுக்கலாம்?
Answer: அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், *செம்பு* வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம்.
உபாகமம் 8:9
13. கோரேசின் நிருபம் கண்டெடுக்கப்பட்ட இடம் எது?
Answer: மேதிய* *சீமையிலிருக்கிற* *அக்மேதா* *பட்டணத்தின்* அரமனையிலே ஒரு சுருள் அகப்பட்டது; அதிலே எழுதியிருந்த விபரமாவது:
ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக் குறித்துப் பிறப்பித்த உத்தரவு என்னவென்றால்: தேவாலயமானது பலி சட்டசெலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக; அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாயிருக்கவேண்டும்.
எஸ்தர் 6:2,3
14. உன்னதமானவரின் வாயிலிருந்து புறப்படுகிறவை எவையெவை?
Answer: உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ
புலம்பல் 3 : 38
15. இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயத்தை அவனவன் நிலையிலே கட்டிக்கொண்டு சுற்றி நின்றவர்கள் எத்தனை பேர்?
Answer: இதோ, சாலொமோனுடைய மஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள.
இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.
உன்னதப்பாட்டு 3:7,8
==============
வேதத்தில் ஏழு
==============
1) யாருடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு?
2) யார் ஏழு மடங்கு கொடுத்துத் தீர வேண்டும்?
3) ஏழு பேரில் ஒருவன் யார்?
4. வருஷந்தோறும் ஏழு நாள் கர்த்தருக்கு எந்த பண்டிகையை ஆசரிக்க
வேண்டும்?
5) பரிபூரணமுள்ள வருஷங்கள் எத்தனை? பஞ்சமுள்ளவருஷங்கள் எத்தனை ?
6) காயீனுக்காக எத்தனை பழிசுமருமானால் லாமேக்குக்காக எத்தனை பழி சுமரும்?
7) இயேசுவை அறிவேன் பவுலையும் அறிவேன் நீங்கள் யார்? என்று பொல்லாத ஆவியிடம் மாட்டிக்கொண்டவர்கள் யார்?
8) கர்த்தர் யோவானுக்கு வெளிப்படுத்தினதை ஆசியாவிலிருக்கிற யாருக்கு அனுப்பச் சொன்னார்.?
9) எப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய ராஜ்யங்களாயின?
10) இளைய குமாரத்திக்காக மாமனிடம் ஏழு வருஷம் வேலை செய்தவன் யார்?
11) புளிப்பில்லாத அப்பத்தை எத்தனை நாளைவும் புசிக்க வேண்டும்?
12) காத்தருடைய சமுகத்தில் மலையின் மேல் தூக்கிப் போடப்பட்டவர்கள் யார்?
13) ஏழு தரம் ஸ்நானம் பண்ணி சுத்தமானவன் யார்?
14) ஏழு வயதில் இராஜாவானவன் யார்?
15 தேவன் ஆசீர்வதித்து பரிசுத்தமாக்கின நாள் எது?
வேதத்தில் ஏழு
==================
1) யாருடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.?
Answer: பகைஞன்
நீதிமொழிகள் 26:24-25
2) யார் ஏழு மடங்கு கொடுத்துத் தீர வேண்டும்?
Answer: பசியை ஆற்ற திருடிய திருடன்
நீதிமொழிகள் 6:30-31
3) ஏழு பேரில் ஒருவன் யார்?
Answer: பிலிப்பு
அப்போஸ்தலர் 21:8
4. வருஷந்தோறும் ஏழு நாள் கர்த்தருக்கு எந்த பண்டிகையை ஆசரிக்க வேண்டும்?
Answer: கூடாரப்பண்டிகை
லேவியராகமம் 23:41,34
5) பரிபூரணமுள்ள வருஷங்கள் எத்தனை? பஞ்சமுள்ள வருஷங்கள் எத்தனை?
Answer: 7 வருஷம்
ஆதியாகமம் 41:29-30
6) காயீனுக்காக எத்தனை பழிசுமருமானால் லாமேக்குக்காக எத்தனை பழி சுமரும்?
Answer: காயீனுக்காக ஏழு பலி, லாமேக்குக்காக எழுபத்தேழு பலி
ஆதியாகமம் 4:24
7) இயேசுவை அறிவேன் பவுலையும் அறிவேன் நீங்கள் யார்? என்று பொல்லாத ஆவியிடம் மாட்டிக்கொண்டவர்கள் யார்?
Answer: ஸ்கேவாவின் குமாரர் ஏழுபேர்
அப்போஸ்தலர் 19:14-15
8) கர்த்தர் யோவானுக்கு வெளிப்படுத்தினதை ஆசியாவிலிருக்கிற யாருக்கு அனுப்பச் சொன்னார்?
Answer: ஏழு சபைகளுக்கு
வெளிப்படுத்தல் 1:4
9) எப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய ராஜ்யங்களாயின?
Answer: ஏழாம் தூதன் எக்காளம் ஊதினபோது
வெளிப்படுத்தல் 11:15
10) இளைய குமாரத்திக்காக மாமனிடம் ஏழு வருஷம் வேலை செய்தவன் யார்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 29:18
11) புளிப்பில்லாத அப்பத்தை எத்தனை நாளளவும் புசிக்க வேண்டும்?
Answer: ஏழுநாள்
யாத்திராகமம் 13:6
12) காத்தருடைய சமுகத்தில் மலையின் மேல் தூக்கிப் போடப்பட்டவர்கள் யார்?
Answer: சவுலின் குமாரர் 7 பேர்
2 சாமுவேல் 21:6
13) ஏழு தரம் ஸ்நானம் பண்ணி சுத்தமானவன் யார்?
Answer: நாகமான்
2 இராஜாக்கள் 5:14
14) ஏழு வயதில் இராஜாவானவன் யார்?
Answer: யோவாஸ்
2 இராஜாக்கள் 11:21
15 தேவன் ஆசீர்வதித்து பரிசுத்தமாக்கின நாள் எது?
Answer: ஏழாம்நாள்
ஆதியாகமம் 2:3
=======================
கேள்விகளுக்கு விடை கூறவும்
=======================
1) முதலாவது மரணத்தை சந்தித்த முதல் மனிதன் யார் ?
2) இஸ்ரவேலரின் முதல் மாதத்தின் பெயர் என்ன?
3) தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி என்ன?
4) நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பட்ட சுவிசேஷம் எது?
5) உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது பார்த்தது யார்?
6) இயேசு சிலுவையில் பேசின முதலாவது வார்த்தை என்ன?
7) இந்தியாவிற்கு முதலாவது சுவிசேஷத்தை கொண்டு வந்த இயேசுவின் சீஷர்கள் யார்?
8) முதலாவது அல்லேலுயா என்ற வார்த்தை வேதாகமத்தில் எங்கே வருகிறது?
9) இஸ்ரவேலின் முதல் நியாயாதிபதி யார்?
10) வேதாகமத்தில் முதலாவது தீர்க்கதரிசி யார்?
கேள்விக்கான பதில்கள்
====================
1. முதலாவது மரணத்தை சந்தித்த முதல் மனிதன் யார்
Answer: ஆபேல்
ஆதியாகமம் 4:8
2. இஸ்ரவேலரின் முதல் மாதத்தின் பெயர் என்ன
Answer: ஆபிப் (நிசான்)
யாத்திராகமம் 12:12
யாத்திராகமம் 13:4
உபாகமம் 16:1
எஸ்தர் 3:7
3. தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி என்ன?
Answer: நீ எங்கே இருக்கிறாய்?
ஆதியாகமம் 3:9
4. நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பட்ட சுவிசேஷம் எது?
Answer: மாற்கு எழுதின சுவிசேஷம்
5. உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது பார்த்தது யார்?
Answer: மகதலேனா மரியாள்
மாற்கு 16:9-10
6. இயேசு சிலுவையில் பேசின முதலாவது வார்த்தை என்ன?
Answer: பிதாவே இவர்களுக்கு மன்னியும்
லூக்கா 23:24
7. இந்தியாவிற்கு முதலாவது சுவிசேஷத்தை கொண்டு வந்த இயேசுவின் சீஷர்கள் யார்?
Answer: தோமா பர்த்தெலெமேயு
8. முதலாவது அல்லேலுயா என்ற வார்த்தை வேதாகமத்தில் எங்கே வருகிறது?
Answer: சங்கீதம் 104:35
9. இஸ்ரவேலின் முதல் நியாயாதிபதி யார்?
Answer: ஒத்தனியேல்
நியாயாதிபதிகள் 3:9-10
10. வேதாகமத்தில் முதலாவது தீர்க்கதரிசி யார்?
Answer: ஏனோக்கு
யூதா 14-15
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 20:7