===============
எஸ்றா
கேள்வி - பதில்கள்
=================
1) யூதாவின் அதிபதி யார்?
2) சாலமனுடைய வேலை ஆட்களின் புத்திரர் எத்தனை பேர்?
3) எஸ்ரா புத்தகத்தில் காணப்படும் பண்டிகைகள் எவை?
4) லேவியரில் தாளங்களை கொட்டுகிறவர்கள் யார்?
5) ஆலோசனை தலைவன் யார்?
6) ஆலயத்தை கட்டுகிறவர்களுக்கு திடன் சொன்னவர்கள் யார்?
7) கோரேஸ் ராஜா கட்டளை இட்ட சுருள் எங்கு அகப்பட்டது?
8) எந்த ராஜாவின் இருதயம் யூதா, பென்யமின் புத்திரரின் பட்சத்தில் இருந்தது?
9) உத்தம வேதபாரகன் யார்?
10) புத்திமான்கள் யார்?
11) புத்தியுள்ளவர்கள் எத்தனை பேர்?
12) எந்த நதி அண்டையில் உபவாசம் அறிவிக்கப்பட்டது?
13) பொன்னைப் போல் எண்ணப்பட்டவைகள் என்ன?
14) குற்றத்தில் முந்திய கைகள் யாருடையவை?
15) கற்பனைகளை கற்பித்த தேவனுடைய ஊழியக்காரர் யார்?
16) யாருடைய பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது?
எஸ்றா (பதில்கள்)
=======================
1) யூதாவின் அதிபதி யார்?
Answer: சேஸ்பாத்சார்
எஸ்றா 1:8
2) சாலொமோனுடைய வேலை ஆட்களின் புத்திரர் எத்தனை பேர்?
Answer: முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர் (392)
எஸ்றா 2:58
3) எஸ்ரா புத்தகத்தில் காணப்படும் பண்டிகைகள் எவை?
Answer:
1. கூடாரப்பண்டிகை
எஸ்றா 3:4
2. புளிப்பில்லா அப்பப்பண்டிகை
எஸ்றா 6:22
4) லேவியரில் தாளங்களை கொட்டுகிறவர்கள் யார்?
Answer: ஆசாபின் குமாரர்
எஸ்றா 3:10
5) ஆலோசனை தலைவன் யார்?
Answer: ரெகூம்
எஸ்றா 4:8
6) ஆலயத்தை கட்டுகிறவர்களுக்கு திடன் சொன்னவர்கள் யார்?
Answer: ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எழும்பினார்கள். எழும்பின எல்லாரைச் *சுற்றிலும் குடியிருக்கிற யாவரும்திடப்படுத்தினார்கள்
எஸ்றா 1:5,6
7) கோரேஸ் ராஜா கட்டளை இட்ட சுருள் எங்கு அகப்பட்டது?
Answer: மேதிய சீமையிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரமனையிலே ஒரு சுருள் அகப்பட்டது
எஸ்றா 6:2
8) எந்த ராஜாவின் இருதயம் யூதா, பென்யமீன் புத்திரரின் பட்சத்தில் இருந்தது?
Answer: அசீரியருடைய ராஜாவின் இருதயம்
எஸ்றா 6:22
9) உத்தம வேதபாரகன் யார்?
Answer: எஸ்றா
எஸ்றா 7:12
10) புத்திமான்கள் யார்?
Answer: யோயாரிப், எல்நாத்தான் என்னும் புத்திமான்கள்
எஸ்றா 8:16
11) புத்தியுள்ளவர்கள் எத்தனை பேர்?
Answer: பதினெட்டுப்பேர்
எஸ்றா 8:18
12) எந்த நதி அண்டையில் உபவாசம் அறிவிக்கப்பட்டது?
Answer: அகாவா நதியண்டையிலே
எஸ்றா 8:21
13) பொன்னைப் போல் எண்ணப்பட்டவைகள் என்ன?
Answer: பளபளப்பான இரண்டு நல்ல வெண்கலப் பாத்திரங்கள்
எஸ்றா 8:27
14) குற்றத்தில் முந்திய கைகள் யாருடையவை?
Answer: பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது.
எஸ்றா 9:2
15) கற்பனைகளை கற்பித்த தேவனுடைய ஊழியக்காரர் யார்?
Answer: ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள்
எஸ்றா 9:10
16) யாருடைய பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது?
Answer: தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தவர்கள், சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் அவற்றை அகற்றிப்போடுவோம் என்றும், நியாயப்பிரமாணத்தின்படியே செய்வோம் என்றும் தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவர்கள். எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்ற
பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் மூன்றுநாளைக்குள்ளே வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம் ஜப்திசெய்யப்பட்டு, சபைக்கு புறம்பாக்கப்படுவான்
எஸ்றா 10:8
=================
வேதாகம பகுதி:எஸ்றா (கேள்விகள்)
==================
1) தேவனுடைய ஆலயத்தை கட்ட தொடங்கினவன் யார்?2) வாசல் காவலாளி பெயர்கள் எத்தனை? அவர்கள் பெயர்?
3) தன் இருதயத்தை பக்குவப்படுத்தினவன் யார்?
4) ஜனங்கள் ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று எந்த சத்துருக்கள் கேள்விப்பட்டார்கள்?
5) கர்த்தர் யாருடைய ஆவி ஏவினார்?
6) எதை முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்?
7) பரலோகத்தின் தேவனுக்கு சுகந்த வாசனையாக பலிகளை செலுத்தினது யார்?
8) போஜனபானத்தையும் எண்ணெய்யையும் கொடுத்தவர்கள் யார் யார்?
9) எந்த ராஜாவுக்கு மனுவின் நகல் அனுப்பப்பட்டது?
10) தேசத்தின் ஜனங்களோடு கலந்து போனது எது?
11) யாருடைய காரியம் கைக்கூடி வந்தது?
வேதாகம பகுதி: எஸ்றா (பதில்கள்)
========================
1) தேவனுடைய ஆலயத்தை கட்ட தொடங்கினவன் யார்?
Answer: செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும்
எஸ்றா 5:2
2) பாடகரான ஆசாபின் புத்திரர் எத்தனைபேர்?
Answer: நூற்றிருபத்தெட்டு பேர் (128)
2) பாடகரான ஆசாபின் புத்திரர் எத்தனைபேர்?
Answer: நூற்றிருபத்தெட்டு பேர் (128)
எஸ்றா 2:41
3) தன் இருதயத்தை பக்குவப்படுத்தினவன் யார்?
Answer: எஸ்றா
எஸ்றா 7:10
Answer: யூதாவிலும், பென்யமீனிலுமிருந்த சத்துருக்கள்
எஸ்றா 4:1
5) கர்த்தர் யாருடைய ஆவி ஏவினார்?
Answer: பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின்
எஸ்றா 1:1
6) எதை முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்?
Answer: அந்நிய ஜாதியான ஸ்திரிகளின் காரியத்தை
எஸ்றா 10:17
7) பரலோகத்தின் தேவனுக்கு சுகந்த வாசனையாக பலிகளை செலுத்தினது யார்?
Answer: எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள்
Answer: எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள்
எஸ்றா 6:10
8) யாருக்கு போஜனபானத்தையும் எண்ணெய்யையும் கொடுத்தார்கள்?
Answer: சீதோனியருக்கும், தீரியருக்கும்
எஸ்றா 3:7
9) எந்த ராஜாவுக்கு மனுவின் நகல் அனுப்பப்பட்டது?
Answer: அர்தசஷ்டா
எஸ்றா 4:11
10) தேசத்தின் ஜனங்களோடு கலந்து போனது எது?
Answer: பரிசுத்த வித்து
எஸ்றா 9:2
11) யார் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடி, அவர்கள் காரியம் கைக்கூடி வந்தது?
Answer: ஆகாயும், இத்தோவின் குமாரன் சகரியாவும்
எஸ்றா 6:14