=================
எஸ்றாவின் புஸ்தகம், 4-ம் அதிகாரம் (பகுதி-1)
==================
1. எருசலேம் தேவாலய வேலையில் தடை ஏற்பட்டு, எதுவரை அது நிறுத்தப்பட்டிருந்தது?
சகரியா 1:1
2. யார் காலம் முதல், யார் காலம் வரையிலுமாக, ஆலயம் கட்டுவோர் முயற்சிகளை சீர்குலைக்கும்படிக்கு அரச அலுவலர்களுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டது?
3. எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா ராஜாவுக்கு யார் யார் மனு எழுதினார்கள்?
4. யூதா எருசலேம் ஜனங்களுக்கு எதிராக, யாருடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலும் அவனுக்கு குற்றச்சாட்டு எழுதப்பட்டதாக கூறப்பட்டுள்ளது?
5. அர்தசஷ்டாவின் உத்தரவை வாசிக்கக்கேட்ட யார், எவ்விதத்தில் செயல்பட்டு, ஆலய வேலையை நிறுத்தினார்கள்?
6. கர்த்தருக்கு ஆலயம் கட்டுவதைக் கேள்விப்பட்ட யார், எதுமுதற்கொண்டு தாங்களும் அவருக்கு பலியிட்டு வருவதாக கூறி உரிமைபாராட்டினார்கள்?
2 இராஜாக்கள் 17:41
7. அவர்களே ஆலயம் கட்டுகிறவர்களின் கையைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு சங்கடப்படுத்தியதாக, எங்கு உள்ளது?
எஸ்றா 3:3
============
எஸ்றாவின் புஸ்தகம், 4-ம் அதிகாரம் (பகுதி-2)
==============
1. அர்தசஷ்டாவிற்கு கொடுக்கப்பட்ட மனுவில், அவனது முன்னோர்களின் வரலாற்று ஏடுகளில், எருசலேம் பற்றி எவையெவற்றைக் கண்டறியலாமென சுட்டிக்காட்டப்பட்டிருந்தது?
எஸ்தர் 3:8
2. யூதர், எத்தகைய பட்டணத்தில் அஸ்திபாரமிட்டு, மதில்கள் எழுப்பிக் கட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது?
3. அர்தசஷ்டாவும் தனது பிரதியுத்தரத்தில், எருசலேம் குறித்து குறிப்பிட்டவைகளென்ன?
யாத்திராகமம் 23:31
யோசுவா 1:4
4. பட்டணம் கட்டப்பட்டு, அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டால், அர்தசஷ்டாவிற்கு எப்படியான பாதிப்புகள் நேரிடுமென எச்சரிக்கை செய்யப்பட்டது?
எஸ்றா 7:24
5. தானியேல் 6:2 நினைவுக்கு வரும்படியாக, நஷ்டம் சேதத்தைக் குறிப்பிட்டு, ராஜாவும் என்ன எதிர்க்கேள்வி எழுப்பியிருந்தான்?
6. உண்மையிலேயே, யாருக்காக, யாரின் கட்டளைப்படி, தேவாலயமே கட்டப்படுவதாக, யூதா பென்யமீன் சத்துருக்களிடம் செருபாபேல் உள்ளிட்டோர் கூறியிருந்தார்கள்?
7. சத்துருக்களின் எதிரான செயல்களால் தேவாலயக் கட்டுமானப்பணியில் தடையேற்பட்டதை, எந்தெந்த வசனங்களில் அறியலாம்?
சகரியா 4:6-10
=================
எஸ்றாவின் புஸ்தகம், 5-ம் அதிகாரம்
=================
1. தடைகளை நீக்கும் (மீகா 2:13) தேவனின் கண்காணிப்பில் ஆலய வேலையை நடத்தியவர்கள் இருந்ததை உணர்த்துவிக்கும் வசனம் எது?
ஏசாயா 66:14
2. கர்த்தருடைய தீர்க்கதரிசனங்கள் தீர்க்கதரிசிகள், இவர்களை வழிநடத்தி பெலப்படுத்தியதையும் எந்தெந்த வசனங்களில் அறிய இயலும்?
சகரியா 8:9
3. எதிரிடையானவர்களே, ஆலயப்பணி கைகூடிவருவதையும், ஆலயம் எவ்விதத்தில் அமைந்திருப்பதையும் அறிக்கையிட்டனர்?
4. ஆலயம்கட்டுவோர் தங்களை விசாரித்தவர்களிடம், தேவனை மகிமைப்படுத்தி அறிக்கை செய்து கூறியதை, எந்த வசனத்தில் காணலாம்?
2 நாளாகமம் 3:1,2
5. இவர்களிடம் வினாக்களை எழுப்பியவர்கள் யார்?
விசாரித்த விபரங்களை, அவர்கள் யாருக்கு கடிதம் எழுதியதாகவும் தெரியவருகிறது?
6. கர்த்தரின் கோபத்தின் விளைவு எத்தகையதென்று கூறப்பட்டிருந்தது?
2 நாளாகமம் 36:16
7. எருசலேம் தேவாலயத்திற்கு அஸ்திபாரமிட்டது யாரென்று தெரிவிக்கப்பட்டது?
8. தேவ ஆவியின் எழுப்புதலைப் பெற்ற யார்மூலம் (2 நாளா 36:22) தேவாலயம் கட்ட கட்டளையிடப்பட்டதாகவும் சொல்லப்பட்டது?
மேலும் தேவசித்தம் செய்ய அவன் எவ்விதத்தில் உதவியதும் வெளிப்படுத்தப்பட்டது?
எஸ்றா 1:7
====================
எஸ்றாவின் புஸ்தகம், 7-ம் அதிகாரம் (பகுதி-1)
===================
1. கர்த்தரை எஸ்றா எவைகளினிமித்தம் ஸ்தோத்தரித்தான்?
எரேமியா 32:19
2. எஸ்றா ஆசாரியன் என்பதை எந்தெந்த வசனத்தைக் கொண்டு அறியலாம்?
3. ராஜாவே இவன் கேட்டவைகளையெல்லாம் கொடுக்க, என்ன காரணமென கூறப்பட்டுள்ளது?
ஏசாயா 41:20
4. மேலும் இவனோடு கர்த்தருடைய கரம் கூட இருந்ததற்கு எடுத்துக்காட்டாக, என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறது?
5. எவையெவற்றை படித்துத் தேறின வேதபாரகன் எஸ்றா என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது?
6. இவன் தேவனால் அருளப்பட்ட ஞானத்தைப் பெற்றவனென்று அர்தசஷ்டா எங்கு சுட்டிக்காட்டி, அதினடிப்படையில் எப்படிப்பட்டவர்களை ஏற்படுத்தவும் எஸ்றாவிற்கு அதிகாரம் கொடுத்தான்?
யாத்திராகமம் 18:21,26
7. எஸ்றா எவையெவைகளில் தனது இருதயத்தை பக்குவப்படுத்தியிருந்தான்?
உபாகமம் 33:10
==========
எஸ்றாவின் புஸ்தகம், 8-ம் அதிகாரம் (பகுதி-1)
============
1. சிறைப்பட்டு மீண்டவர்களால், எருசலேமிலே, இஸ்ரவேல் அனைத்தினிமித்தமும், தேவனுக்கு சர்வாங்க தகனபலியாக செலுத்தப்பட்டவைகளென்ன?
2 நாளாகமம் 29:24
2. ராஜாவிடம் எஸ்ரா மற்றும் அவனோடிருந்தவர்கள், தேவனைக் குறித்து எப்படி அறிக்கையிட்டிருந்தார்கள்?
சங்கீதம் 34:10
உபாகமம் 31:17
3. ஏற்கனவே இஸ்ரவேலரைத் தப்புவித்திருந்த தேவ கண்ணுக்கு ஒப்பாக (எஸ்றா 5:5), இவர்களையும் தேவகரம் எத்தகையவர்களின் கைக்குத் தப்புவித்தது?
4. சத்துருவை எதிர்கொள்ள, ராஜாவின் படைபலத்தை கேளாது உபவாசம் மேற்கொண்டு ஜெயம் பெற்றது, எங்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது?
நீதிமொழிகள் 21:31
5. தேவ காரியத்திலும், லேவியரைத் தேர்வு செய்வதில், கர்த்தரின் கரம் கூட இருந்ததால் காரியம் வாய்த்ததை, எவ்வசனங்களால் அறியலாம்?
6. ராஜாவின் 'சன்னதுகள்' (மடல்கள்) யார் யாரின் எப்படிப்பட்ட உதவிகளைப்பெற ஏதுவாயின?
சங்கீதம் 118:7
7. எஸ்றா, அகாவா நதியண்டையிலே, உபவாசம் அறிவித்ததின் நோக்கங்களென்ன?
சங்கீதம் 107:7
=================
எஸ்றாவின் புஸ்தகம், 8-ம் அதிகாரம் (பகுதி-2)
==================
1. எஸ்றா எருசலேம் வந்த நான்காம் நாளிலே, (பின்நாட்களிலே ஆலயப் பழுதுபார்ப்பிற்கு உதவும் வகையில்; நெகேமியா 3:4,21 / நெகேமியா 11:16 / நெகேமியா 3:24), எவையெவை, யார் யாரிடம் ஒப்புவிக்கப்பட்டன?
2. ஏற்கனவே எஸ்றா யாரை பரிசுத்தமானவர்களென்றும், எவையெவை பரிசுத்தமானவையென்றும் கூறியிருந்தான்?
லேவியராகமம் 22:2,3
3. எஸ்றா 7:15,16-ல் உள்ளபடி, இவை யார் யாரால் கொடுக்கப்பட்டவை என்று இங்கும் எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது?
4. முதலில், பிரித்து எடுக்கப்பட்டவர்களிடம் கையளிக்கப்பட்டவைகளின் விபரமென்ன?
5. இப்பொருட்களை கொண்டுவர செவ்வையான வழிகளுக்காக உபவாசமிருந்ததையும், வழியிலே தேவகரம் பாதுகாத்துக் கொண்டதையும் வெளிப்படுத்தும் இரு வசனங்கள் எவையெவை?
6. பிரித்தெடுக்கப்பட்ட இவர்களும், எதுவரை விழிப்பாயிருந்து ஒப்புவிக்கப்பட்டவைகளை காத்துக்கொள்ளும்படி எஸ்றாவால் அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்?
7. இவ்வதிகாரத்தின் 16 முதல் 20 வரையிலான வசனங்கள் செயல்படுத்தப்படும் வகையில், எஸ்றா எங்கு யாரைக் காணவில்லை?
====================
எஸ்றாவின் புஸ்தகம், 9-ம் அதிகாரம் (பகுதி-1)
=====================
1. பாவ உணர்வடைந்த எஸ்றா, தேவ சமூகத்திலே, கர்த்தர் கற்பித்த எவைகளை விட்டுவிட்டதாக அறிக்கை செய்தான்?
உபாகமம் 11:9
2. தேவ வார்த்தைகளுக்கு நடுங்குகிற யாவரும், எதினிமித்தம் இவனோடு இணைந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
சங்கீதம் 119:120,136
3. எஸ்றாவிடம் யார் யார் சொல்லியபடி, ஆசாரியர் லேவியர் உள்ளிட்ட யார், எந்தெந்த தேச ஜனங்களின் பாவங்களுக்கு விலகியிருக்கவில்லை?
எஸ்றா 6:21
4. என்னென்ன பாவங்கள் எவரையும் தப்பவிடாதபடி, தேவகோபத்தை ஏற்படுத்தி நிர்மூலமாக்குமென எஸ்றா அறிக்கை செய்தான்?
நெகேமியா 13:27
5. யார் யார் உடந்தையாயிருக்க, பரிசுத்த வித்து தேச ஜனங்களோடு கலக்கும்படிக்கு, என்ன நேர்ந்ததாக பிரபுக்கள் எஸ்றாவிடம் முறையிட்டிருந்தார்கள்?
உபாகமம் 7:1-4
6. இஸ்ரவேலர் பலத்து, சந்ததியோடு ஆசீர்வதிக்கப்பட, கர்த்தர் விதித்திருந்த நிபந்தனையை (யாத்திராகமம் 34:11-16) தொடர்புபடுத்தி, எஸ்றா தேவனிடம் கூறியதென்ன?
7. பாவ உணர்வு எஸ்றாவை, வஸ்திரம் சால்வையைக் கிழித்த நிலையில் இருக்கச் செய்ததை, எவ்வசனங்களில் அறிய இயலும்?
யோவேல் 2:12,13
==================
எஸ்றாவின் புஸ்தகம், 9-ம் அதிகாரம் (பகுதி-2)
===================
1. கர்த்தரிடம் எஸ்றா, பிதாக்கள் காலம் முதலான குற்றங்கள் அக்கிரமங்கள் எந்நிலைகளுக்கு ஒப்புவிக்கப்பட வழிவகுத்ததாக கூறினான்?
உபாகமம் 28:25,37
2. தாங்கள் சுதந்தரிக்க கர்த்தர் அனுமதித்த தேசம் எத்தகையதென்று அவரால் வெளிப்படுத்தப்பட்டதாக சொன்னான்?
3. பரிசுத்தத்திற்கு தேர்ந்துகொள்ளப்பட்டதை நினைத்து (லேவியராகமம் 20:26 / லேவியராகமம் 10:3), எதினிமித்தம் வெட்கிக் கலங்குவதாக இவன் பாவ அறிக்கை செய்தான்?
4. கர்த்தருடைய கட்டளையை (உபாகமம் 18:9) மீறி பொல்லாப்புச் செய்திருந்தும், அக்கிரமத்துக்குத் தக்க ஆக்கினை இடாது தப்ப விட்டதை எங்கு குறிப்பிட்டிருக்கிறான்?
சங்கீதம் 103:10
5. மேலும், தங்கள் கண்களை பிரகாசிப்பித்த தேவனால், எவ்விதங்களில் கிருபை கிடைத்ததாகவும் பிரஸ்தாபித்திருக்கிறான்?
சங்கீதம் 19:8
6. தேவசமூகத்தில் நிற்கவும் தகுதியற்ற தாங்கள், தப்பி மீந்திருக்க காரணம் என்னவென்று எஸ்றா சுட்டிக்காட்டியிருக்கிறான்?
சங்கீதம் 145:17
7. பாவத்திற்கும் சத்துருக்களுக்கும் அடிமைகளாகிப் போன நிலைகளிலும் கர்த்தர் கைவிடாமல் எவ்விதங்களில் தயை கிடைக்கச் செய்ததாக சாட்சியிட்டிருக்கிறான்?
ஏசாயா 43:1
ஏசாயா 44:26
ஏசாயா 48:20
ஏசாயா 52:9
ஏசாயா 63:9
=================
எஸ்றாவின் புஸ்தகம், 10-ம் அதிகாரம் (பகுதி-1)
===================
1. சங்கீதம் 102:4 நினைவுக்கு வரும்படியாக, இங்கும் யார், எதினிமித்தம், எப்படி துக்கித்துக்கொண்டிருந்ததாக தெரியவருகிறது?
2. எஸ்றா தேவ சமூகத்தில் அறிக்கையிட்டு அழுதபோது, அவனோடு அழுதவர்கள் யார்?
2 நாளாகமம் 20:9
3. இவ்வதிகாரத்தின் 20-ம் வசனம் முதல் 43-ம் வசனம் வரையிலுமாக பெயர் குறிப்பிடப்பட்டவர்களின் விபரமென்ன என்று உள்ளது?
4. இத்தகைய ஸ்திரிகள் மற்றும் அவர்கள் பிள்ளைகள் தொடர்பாக தேவனோடு எத்தகைய உடன்படிக்கை செய்ய தீர்மானிக்கப்பட்டது?
1 இராஜாக்கள் 11:2
5. இப்பாவத்தில், எந்தெந்த ஆசாரியர்களும் பங்குள்ளவர்களென கூறப்பட்டுள்ளது?
2 நாளாகமம் 30:15
6. செக்கனியாவின் ஆலோசனைப்படியே எஸ்றா உடன்படிக்கைக்கு உட்படுத்தி யார் யாரை ஆணையிடச் செய்தான்?
7. மேலும் அவன் எருசலேமிலே கூடச் செய்தவர்களையும், பாவ அறிக்கை செய்து தேவசித்தம் செய்யத் தூண்டியதை, எவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது?
மல்கியா 2:10-16