====================
1 நாளாகமம், 20-ம் அதிகாரம்
=====================
1. 2 சாமுவேல் 21:19-ல் உள்ளபடி யார் யாரால் கொல்லப்பட்டதாக இங்கும் சொல்லப்பட்டிருக்கிறது?
2. அதேவிதமாக, சிபெக்காய் யாரைக் கொன்றான்?
3. 2 சாமுவேல் 21: 20, 21 நிகழ்வு, இந்த அதிகாரத்தில் எங்கு உள்ளது?
4. தாவீது மற்றும் அவன் சேவகர் கையினால் மடிந்த இவர்களின் வம்சம்பற்றி சுட்டிக்காட்டப்பட்டிருப்பதென்ன?
(2 சாமுவேல் 21: 22)
5. சங்கீதம் 89: 23, 24 மற்றும் சங்கீதம் 23: 5 நிறைவேறத்தக்கதாக, எத்தகைய சூழ்நிலையில் யாரின் கிரீடம், தாவீதின் தலையிலேறிற்று?
6. தாவீது தான் சிறைப்படுத்திய அம்மோனியரை, எவையெவற்றைக் கொண்டு வேலை செய்யவைத்தார்?
7. கோலியாத்தின் ஈட்டிக்கு ஒப்பானதாக (1 சாமுவேல் 17: 4, 7) இங்கு யாரின் ஈட்டியும் இருந்ததாக அறியமுடிகிறது?
============
1 நாளாகமம் 21
=============
(இரண்டாம் பகுதி)
1. எதினால் தாவீதால் எங்கிருந்த மோசே அமைத்திருந்த தேவசந்நிதிக்குப் போய் விசாரிக்கக் கூடாதிருந்தது?
2. தாவீது ஏறெடுத்துப் பார்க்கையில், எத்தகைய தூதன் அத்தகைய பட்டயத்தை எதின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்?
3. பட்டயத்தைக்குறித்து கர்த்தர் தேவதூதனுக்கு இட்ட கட்டளை என்ன?
4. தண்டிக்கிற கர்த்தராயிருப்பினும் மறுபுறம் அவரது குணாதிசயத்தை விளங்கப்பண்ணும்படியாக, யாத்திராகமம் 32:14 மற்றும் யோனா 3:10-க்கு ஒப்பாக இங்கும் சொல்லப்பட்டிருப்பதென்ன?
5. எண்ணிக்கையிடப்படும் ஆத்துமாக்கள் அதற்கான ஈடு செலுத்த வேண்டுமென்பது கட்டளையாகயிருந்தாலும் (யாத்திராகமம் 30:12), அவர்களுக்காக திறப்பிலே நின்ற தாவீது எப்படி மன்றாடினான்?
6. இலக்கம் பார்க்கப்பட்ட இத்தகையோர், எத்தனை பேரென்று உள்ளது? இவர்களுள் மடிந்தோர் எண்ணிக்கையென்ன?
7. இவர்களினிமித்தம் எண்ணாகமம் 14:5-க்கு ஒப்பாக, மூப்பர்களோடு தாவீது எந்நிலையில் முகங்குப்புற விழுந்தான்?
=============
1 நாளாகமம், 21
=============
(மூன்றாம் பகுதி)
1. கர்த்தர், எங்கு பலிபீடம் உண்டாக்கப்பட வேண்டுமென முன்குறித்திருந்ததை அறியமுடிகிறது?
தாவீதும் அங்கு பலியிட்டதாக எங்கு உள்ளது?
(2 நாளாகமம் 3:1)
2. ஒர்னான் பலிக்கு உதவும்படிக்கு, கூடவே எவையெவற்றையும் கொடுக்க முன்வந்தான்?
3. யோவேல் 2:12-13-ன்படி தாவீது செயல்பட்டதை எந்த வசனத்தின் மூலமாக அறிய இயலும்?
4. கர்த்தரிடம் தாவீது, தான் பாவஞ்செய்ததாக அறிக்கைசெய்திருப்பதை, எந்தெந்த வசனங்கள் குறிப்பிடுகின்றன?
(சங்கீதம் 32:5)
(நீதிமொழிகள் 28:13)
5. மேலும் அவன் பாவநிவர்த்திக்காக, எத்தகைய பலிகளோடு கர்த்தரிடம் விண்ணப்பம் செய்தான்?
6. எதற்காக தனக்கு நிலம் வேண்டுமென்று தாவீது ஒர்னானிடம் சுட்டிக்காட்டியிருந்தான்?
7. எதினால், யார் யார், யோவாபால் கணக்கிடப்படவில்லை?
===========
1 நாளாகமம் 22
===========
(இரண்டாம் பகுதி)
1. யார் தனக்கு ஆலயம் கட்டவேண்டும் என்பது தேவசித்தமாயிருந்தது?
(2 சாமுவேல் 7:12-14)
2. இந்தப் பணியில் கேதுரு மரங்கள் தந்து உதவியவர்கள் யார்?
(1 இராஜாக்கள் 5:5,6)
3. சாலமோனிடம் தாவீது எவைகளுக்கு கணக்கில்லை என்றும் கூறியிருந்தான்?
4. இரும்பும் வெண்கலமும் தாவீதால் எதற்காக தயார்செய்யப்பட்டிருந்ததாக அறியமுடிகிறது?
5. 1 நாளா.28:2,3-ல் தாவீதால் கூறப்பட்டது இங்கும் அவனால் எங்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது?
6. சாலமோன் ராஜாங்கத்தின் சிங்காசனம்குறித்த கர்த்தரின் வாக்குத்தத்தம் (2சாமுவேல் 7:13), இங்கும் எங்கு நினைவுகூரப்பட்டிருக்கிறது?
7. 1 நாளாகமம் 21:18,28 நிகழ்வுகளைத் தொடர்ந்து, அந்த ஸ்தலம் தொடர்பாக தாவீதால் கூறப்பட்டதென்ன?
(2 நாளாகமம் 3:1)
=====================
1 நாளாகமம், 23-ம் அதிகாரம் (முதல் பகுதி)
=====================
1. தாவீதின் இறுதி வார்த்தைகளின்படி, லேவியரில் எத்தனை வயதுடையோர் பதிவுசெய்யப்பட்டிருந்தனர்?
2. 1 நாளா.15:16-ல் தாவீதால் நிர்ணயிக்கப்பட்டபடி, லேவியரில் எத்தனைபேர் கர்த்தரைத் துதிக்க நியமிக்கப்பட்டனர்?
3 .1 நாளா.9:33-ஐ நினைவுகூரும்படியாக இவர்கள் ஊழியம் இருந்ததை, இங்குள்ள எந்த வசனத்தைக்கொண்டு அறிய இயலும்?
4. எண்.3:9-ல் கர்த்தரால் மோசேக்கு சொல்லப்பட்டபடி, தேவாலய ஊழியங்களைச் செய்த லேவியர்கள் யாருக்குக் கீழ்ப்பட்டிருந்தார்கள்?
5. எண்.8:24-ல் கூறப்பட்டபடி, இங்கும் மொத்தமாக எண்ணிக்கையிடப்பட்ட லேவியரின் தொகையென்ன?
6. இவர்களுள் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தோர் எத்தகையோராய் இருந்ததாக அறியமுடிகிறது? (எண்ணாகமம் 4:3)
7. கர்த்தரால் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்த தாவீது (1 நாளாகமம் 29:28), எந்நிலையில் யாரை இஸ்ரவேலுக்கு ராஜாவாக்கினான்?
=====================
1 நாளாகமம், 23-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
=====================
1. மோசேயின் குமாரரும், எந்தக் கோத்திரத்திற்குள் எண்ணப்பட்டனர்?
2. தாவீது, லேவியர் எவைகளை சுமக்கத் தேவையில்லை என்று கூறியிருந்தான்?
(உபாகமம் 10:8)
3. ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுக்கப்பட்டிருந்த பொறுப்புகளென்ன?
(யாத்திராகமம் 30:7-10)
(எண்ணாகமம் 6:23)
4. வாசல் காக்கிறவர்களாக நியமனம்பெற்ற லேவியர் எத்தனைபேர்?
எந்தெந்த காவலைக் காப்பது இவர்கள் கடமையாயிருந்தது?
(நெகேமியா 12:45)
5. தேவாலய வேலையை விசாரிப்பவர்கள் மற்றும் தலைவர் மணியக்காரராய் ஊழியஞ்செய்தவர்கள் எத்தனையெத்தனைபேர்?
(2 நாளாகமம் 34:13)
6. எவையெவற்றை விசாரிப்பது இவர்களின் பொறுப்பாக இருந்ததாக அறியமுடியும்?
(2 நாளாகமம் 29:15)
(1 நாளாகமம் 9:29,32)
7. தேவ வாக்குத்தத்தத்தை (1 நாளாகமம் 22:9) விசுவாசித்த தாவீது, அதன் அடிப்படையில் எவ்வாறு அறிக்கை செய்தான்?
===================
1 நாளாகமம், 24-ம் அதிகாரம்
===================
1. இந்த அதிகாரத்தில், 7-ம் வசனம் முதல் 18-ம் வசனம் வரை பெயர் குறிப்பிடப்பட்டவர்கள், எவ்விதத்தில் எதற்காக பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள்?
2. லேவியரில் சம்பிரதி (எழுத்தர்) ஆகிய யார், யார் யாருக்கு முன்பாக அவர்கள் பெயர்களை எழுதினான்?
3. தாவீது, யார் யாரின் துணையோடு ஆசாரிய ஊழியத்தைச் செய்ய அவர்களை வகுத்தான்?
4. ஏற்கனவே ஆசாரிய ஊழியம் செய்துவந்த ஆரோனின் புதல்வர்கள் இருவர் யார் யார்?
5. வசனம் 20 முதல் 30 வரை பெயருள்ளவர்கள் (லேவியின் மற்றப் புத்திரர்), யார் யாருக்கு முன்பாக, யாரைப் பின்பற்றி, எவ்விதத்தில் சீட்டுப் போட்டுக்கொண்டனர்?
6. எலெயாசாரின் புத்திரருள் தலைமையானவர்கள், யாரின் புத்திரரிலும் அதிகமென தெரியவருகிறது?
7. இவர்களிடையே எதினால் சீட்டுக்குலுக்கல் முறையில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன?
=====================
1 நாளாகமம், 25-ம் அதிகாரம்
=====================
1. முறைப்பணிக்காக (முறைவரிசைக்காக), யார் யார், எந்த விதத்தில், சீட்டுப் போட்டுக்கொண்டனர்?
2. ஆசாப், எதுத்தூன், ஏமான் வசத்திலிருந்த யார், எத்தகைய தேவாலய ஊழிய நிமித்தமாக, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாக, எந்த ஒரே வசனத்தின் மூலமாக அறியமுடியும்?
3. ஏமானுக்கு எத்தனை பிள்ளைகள் என்று கூறப்பட்டுள்ளது?
இதில் அவன் குமாரர்களின் பெயர்களென்ன?
4. இந்த ஏமான் யாரென்றும், கூடவே ஆசாப் எதுத்தூனும் என்ன ஊழியங்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவருகிறது?
5. மொத்தத்தில் கர்த்தரைப் பாடும் பாடல்களில் தேர்ச்சி பெற்றிருந்தோர் எத்தனைபேர்?
6. தாவீதின் கட்டளைப்படி, தீர்க்கதரிசனம் சொல்ல நியமனம் பெற்றிருந்தோர் யார்?
7. கொம்பைத் தொனிக்கப்பண்ணும் பொறுப்பு, யார் யாருக்கு கொடுக்கப்பட்டிருந்தது?
8. சுரமண்டலங்களை வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தோர் யார்?
=====================
1 நாளாகமம், 26-ம் அதிகாரம்
=====================
1. செலோமித்து மற்றும் அவன் சகோதரர் கையின்கீழ் இருந்தவைகளென்ன?
2. இவர்கள் எதை விசாரிக்கிறவர்களாய் இருந்தனர் என்று சொல்லப்பட்டுள்ளது?
(2 சாமுவேல் 8:11,12)
3. இவ்வதிகாரத்தின் 1-ம் வசனமுதல் 11-ம் வசனம் வரையிலுமாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், எதற்கென நியமிக்கப்பட்டிருந்ததை அறியமுடிகிறது?
4. எங்கு எத்தனை பராக்கிரமசாலிகள், கர்த்தரின் மற்றும் ராஜாவின் வேலைக்காக வைக்கப்பட்டனர்?
5. எரியாவின் சகோதரர்களான எத்தகைய எத்தனைபேர் தாவீதால் எப்படியான பொறுப்புகளில் வைக்கப்பட்டனர்?
6.14 முதல் 18 வரையிலான வசனங்கள், எதினிமித்தம் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களின் விவரத்தை தெரிவித்திருக்கிறது?
7. லேவியரில் அகியா, எவைகளை விசாரிக்கிறவனாக இருந்தான்?
=====================
1 நாளாகமம், 26-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
=====================
1. அகியாவைப்போல, பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாக இருந்தவர்கள், யார் யார்?
2. 1 நாளாகமம் 9:21, இந்த அதிகாரத்தின் எந்த வசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது?
3. பொக்கிஷப் பிரதானியாக, தலைமைப் பொறுப்பேற்றிருந்தவன் யார்?
(1 நாளாகமம் 23:16)
4. உபாகமம் 17:8-13-ஐ நிறைவேற்றும்படி, தேசகாரியங்களை பார்க்கும்படி வைக்கப்பட்டிருந்தவர்கள் யார்?
5. தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட யாரைப்பற்றியும் அவன் சந்ததியைப் பற்றியும் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது?
(2 சாமுவேல் 6:9-11)
6. ஓபேத்ஏதோம் சந்ததி மற்றும் அவர்கள் சகோதரர் சிறப்புகளை சாட்சிபகர்ந்திருக்கும் மற்றுமொரு வசனம் எது?
7.எரியா குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருப்பவைகள் என்னென்ன?
=====================
1 நாளாகமம், 28-ம் அதிகாரம் (முதல் பகுதி)
=====================
1. இஸ்ரவேலரும் சந்ததியினரும் தேசத்தை சுதந்தரித்து அனுபவிக்க, தாவீது அவர்களுக்கு கற்பித்ததென்ன?
(உபாகமம் 6:1-3)
2.எருசலேமிலே தாவீது யார் யாரை கூடிவரச் செய்திருந்தான்?
3. கர்த்தரால் சாலமோன் எவைகளுக்காக தெரிந்துகொள்ளப்பட்டவன் எனறு தாவீது கூறினான்?
(1 நாளாகமம் 17:12,14)
4. 2 நாளாகமம் 6:6-ன்படி, கர்த்தரால் தான் எதற்காக தெரிந்து கொள்ளப்பட்டவனென்றும் தாவீது சொன்னான்?
5. சாலமோனின் ஆளுகை என்றென்றும் திடப்படவும் கர்த்தர் விதித்திருந்த நிபந்தனை என்ன?
(1 நாளாகமம் 22:13)
6. உபாகமம் 31:6 நினைவுக்கு வரும்படியாக, தேவசித்தத்தை நிறைவேற்ற, சாலமோனை என்னசொல்லி தாவீது உற்சாகப்படுத்தினான்?
7. யாத்திராகமம் 25:9, மற்றும் 31:18 நினைவுக்கு வரும்படியாகவும் தாவீது சாலமோனுக்கு சொன்னதென்ன?
=====================
1 நாளாகமம், 28-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
=====================
1. கர்த்தர் தேடினால் வெளிப்படுகிறவர் (2 நாளா.15:2), என்னும் கருத்து, இங்கும் எங்கு சொல்லப்பட்டுள்ளது?
2. சாலமோனிடம் தாவீது, எத்தகையோர் அவனோடு உண்டு என்றான்?
3. தாவீதின் இருதய வாஞ்சை என்ன? (சங்கீதம்132:1-5)
எனினும் எதினால் அது கர்த்தரால் நிராகரிக்கப்பட்டது? (1 இராஜாக்கள் 5:3)
4. ஆயினும் ஆலயக் கட்டுமானம் தொடர்பான சகல வேலைகளையும், கர்த்தரே தாவீதுக்கு தெரியப்படுத்தியதாக எங்கு உள்ளது?
5. தாவீது சாலமோனுக்கு எவையெவற்றின் மாதிரியைக் கொடுத்ததாகவும் அறியமுடிகிறது? (யாத்திராகமம் 25:8,9)
6. 1 நாளாகமம் 17:13-ல் கர்த்தரால் சாலமோன் யாரென வெளிப்படுத்தப்பட்டது இங்கும் எங்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது?
7. தாவீது சாலமோனுக்கு எவைகளினிமித்தம் பொன்னும் வெள்ளியும் கொடுத்ததாக, எந்தெந்த வசனங்களின் மூலமாக அறிய இயலும்?
8. மேலும் இவனால் அவனுக்கு, எவைகளுக்குமான கட்டளைகளும் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது?
=====================
1 நாளாகமம், 29-ம் அதிகாரம் (இரண்டாம் பகுதி)
=====================
1. தாவீது சபையினருக்கு முன்பாக கர்த்தரை ஸ்தோத்தரித்ததையும், சபையினரையும் ஸ்தோத்தரிக்கத் தூண்டியதையும் எந்தெந்த வசனங்கள் குறிப்பிட்டுள்ளன?
2. 'மனப்பூர்வமாக' காணிக்கை செலுத்த முன்வருவோர் யாரெனக் கேட்டதாகவும், கொடுத்தவர்களும் 'மனப்பூர்வமாகவே' கொடுத்ததும் எங்கெங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது?
3. கர்த்தருடைய கரத்தைக் குறித்து தாவீது சொன்னவைகளென்ன?
4. என்னென்ன நிலைகளில் தாவீதும் சபையினரும் மிகச் சந்தோஷமடைந்ததை அறிய இயலும்?
5. சாலமோனுக்கு எவைகளினிமித்தம் உத்தம இருதயத்தை அருளும்படிக்கு, கர்த்தரிடம் தாவீது வேண்டினான்? (1இராஜாக்கள் 11:4)
6. 1 நாளாகமம் 3:4, இங்கும் எங்கு கூறப்பட்டுள்ளது?
7. எந்தெந்தக் குறிப்பேடுகளில் (பிரபந்தங்களில்), தாவீதைக்குறித்து என்னென்ன எழுதப்பட்டிருக்கிறது?