====================
கேள்விகள் வேதாகமத்தில் "போல" என ஒப்பிடப்பட்டவை
====================
1) மணல் போல தானியம் சேர்த்தது யார்?
2) தூள் போல எதை பெருகப் பண்ணுவேன் என கர்த்தர் வாக்கு?
3) யாருடைய முகம் நேற்று முந்தைநாள் போல இல்லை?
4) முத்துப் போல இருந்தது எது?
5) நட்சத்திரங்கள் போல திரட்சியானவர்கள் யார்?
6) எது போல தேவன் சிட்சிக்கிறார்?
7) எங்கு செய்தது போல தேவனை பரிட்சை செய்ய வேண்டாம்?
8)ஒரு செடியை போலப் பிடுங்கப்பட்டது எது?
9) கடலைத் தைலம் போலக் கலக்கும் ஏது?
10) காண்டாமிருகம் குட்டிகள் போல எது துள்ளும்?
11) ஆத்துமா எது போல கதறுகிறது?
12) நிழலைப் போல நிலை நிற்காமல் ஒடிப்போகிறவன் யார்?
கேள்விகள் வேதாகமத்தில் " போல" என ஒப்பிடப்பட்டவை
==========================
1) மணல் போல தானியம் சேர்த்தது யார்?
Answer: யோசேப்பு
ஆதியாகமம் 41:49
2) தூள் போல எதை பெருகப் பண்ணுவேன் என கர்த்தர் வாக்கு?
Answer: ஆபிராமின் சந்ததி
ஆதியாகமம் 13:16
3) யாருடைய முகம் நேற்று முந்தைநாள் போல இல்லை?
Answer: லாபானின் முகம்
ஆதியாகமம் 31:2
4) முத்துப் போல இருந்தது எது?
Answer: மன்னா
எண்ணாகமம் 11:7
5) நட்சத்திரங்கள் போல திரட்சியானவர்கள் யார்?
Answer: 70 பேராய் எகிப்துக்கு போன பிதாக்கள்
உபாகமம் 10:22
6) எது போல தேவன் சிட்சிக்கிறார்?
Answer: தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல
நீதிமொழிகள் 3:12
7) எங்கு செய்தது போல தேவனை பரிட்சை செய்ய வேண்டாம்?
Answer: மாசாவிலே
உபாகமம் 6:16
8)ஒரு செடியை போலப் பிடுங்கப்பட்டது எது?
Answer: நம்பிக்கையை
யோபு 19:10
9) கடலைத் தைலம் போலக் கலக்கும் ஏது?
Answer: லிவியாதான்
யோபு 41:31
10) காண்டாமிருகம் குட்டிகள் போல எது துள்ளும்?
Answer: லீபனோன் சீரியோன்
சங்கீதம் 29:6
11) ஆத்துமா எது போல கதறுகிறது?
Answer: மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,* தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது
சங்கீதம் 42:1
12) நிழலைப் போல நிலை நிற்காமல் ஒடிப்போகிறவன் யார்?
Answer: ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன்
யோபு 14:1
============================
வேதாகம விடுகதை கேள்விகளுக்கு விடையளிக்கவும்
========================
1. மரத்துக்கு கீழே நன்மையைத் தேடினான் பரிசுத்தன் எனும் பட்டத்தை வாங்கினான். - அவன் யார்⁉️
2. தோகையை விரிச்சி மயிலொன்னு ஆடுது புத்திகெட்ட வாயாலே மலைகளிலே வாடுது - அது யார்⁉️
3. கால்கள் நின்ற இடத்திலே கை செய்த வேலையால் வாய்க்கு வந்தது வாழ்வாம் கண்கள் கண்டது பலனாம் - விடை என்ன⁉️
4. வினை விதைத்து, வினை அறுத்தாள் விதவையாகி, வாழ்வை இழந்தாள் - அவள் யார்⁉️
5. போடலாம் சீட்டு வைக்கலாம் வேட்டு ஆட்களைக் கூட்டு நீதியை நாட்டு
- எதற்கு எதிராக⁉️
வேதாகம கேள்விகளுக்கு விடையளிக்கவும்
1.
A) வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு நடனமாடியது யார் ⁉️
B) வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு தீர்க்கதரிசனம் சொன்னது யார் ⁉️
2.
A) தகப்பனும் தாயும் இல்லாதவர் என சொல்லப்பட்டவர் யார்⁉️
B) தாயும் தகப்பனும் இல்லாதவள் என சொல்லப்பட்டவள் யார்⁉️
3.
A) பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்து உயிர்த் தப்பியது யார்⁉️
B) பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்து உயிரிழந்தது யார்⁉️
4.
A) உன் உயிரை வாங்கத் தேடினவர்கள் செத்துவிட்டார்கள் என்று யாரிடம் சொல்லப்பட்டது⁉️
B) பிள்ளையின் உயிரை வாங்கத் தேடினவர்கள் செத்துவிட்டார்கள் என்று யாரிடம் சொல்லப்பட்டது⁉️
5.
A) தவிட்டினால் வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டது யார்⁉️
B) துணிக்கைகளால் தன் பசியை ஆற்ற ஆசைப்பட்டது யார்⁉️
6.
A) பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள் என்றது யார்⁉️
B) அன்பின் முத்தத்தோடு வாழ்த்துங்கள் என்றது யார்⁉️
Answer:
வேதாகம விடுகதை கேள்விகளுக்கு விடையளிக்கவும்
======================
1. மரத்துக்குக் கீழே நன்மையைத் தேடினான் பரிசுத்தன் எனும் பட்டத்தை வாங்கினான் - அவன் யார்⁉️
Answer: நாத்தான் வேல்
யோவான் 1:46-51
2. தோகையை விரிச்சி மயிலொன்னு ஆடுது புத்திகெட்ட வாயாலே மலைகளிலே வாடுது - அது யார்⁉️
Answer: யெப்தாவின் குமாரத்தி
நியாயாதிபதிகள் 11:34-40
3. கால்கள் நின்ற இடத்திலே கை செய்த வேலையால் வாய்க்கு வந்தது வாழ்வாம் கண்கள் கண்டது பலனாம் - விடை என்ன⁉️
Answer: யோனத்தான் தேனை ருசித்தது
1 சாமுயேல் 14:27-29
4. வினை விதைத்து, வினை அறுத்தாள் விதவையாகி, வாழ்வை இழந்தாள். - அவள் யார்⁉️
Answer: சிரேஷ்
எஸ்தர் 5:14
எஸ்தர் 7:9,10
5. போடலாம் சீட்டு வைக்கலாம் வேட்டு ஆட்களைக் கூட்டு நீதியை நாட்டு - எதற்கு எதிராக⁉️
Answer: எஸ்தர் கிபியாவுக்கு எதிராக
நியாயாதிபதிகள் 20:9-44
வேதாகம கேள்விகளுக்கு விடையளிக்கவும்
1.
A)வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு நடனமாடியது யார் ⁉️
Answer: தாவீது
2 சாமுயேல் 6:14-20
B) வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு தீர்க்கதரிசனம் சொன்னது யார் ⁉️
Answer: சவுல்
1 சாமுயேல் 19:24
2.
A) தகப்பனும் தாயும் இல்லாதவர் என சொல்லப்பட்டவர் யார்⁉️
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 7:3
B) தாயும் தகப்பனும் இல்லாதவள் என சொல்லப்பட்டவள் யார் ⁉️
Answer: எஸ்தர்
எஸ்தர் 2:7
3.
A) பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்து உயிர்த் தப்பியது யார் ⁉️
Answer: அதோனியா
1 இராஜாக்கள் 1:50-53
B) பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்து உயிரிழந்தது யார் ⁉️
Answer: யோவாப்
1 இராஜாக்கள் 2:29-31
4.
A) உன் உயிரை வாங்கத் தேடினவர்கள் செத்துவிட்டார்கள் என்று யாரிடம் சொல்லப்பட்டது⁉️
Answer: மோசேயிடம்
யாத்திராகமம் 4:19
B) பிள்ளையின் உயிரை வாங்கத் தேடினவர்கள் செத்துவிட்டார்கள் என்று யாரிடம் சொல்லப்பட்டது⁉️
Answer: யோசேப்பிடம்
மத்தேயு 2:19,20
5.
A) தவிட்டினால் வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டது யார்⁉️
Answer: இளைய குமார்
லூக்கா 15:16
B) துணிக்கைகளால் தன் பசியை ஆற்ற ஆசைப்பட்டது யார்⁉️
Answer: லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரன்
லூக்கா 16:20,21
6.
A) பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள் என்றது யார்⁉️
Answer: பவுல்
ரோமர் 16:16
II கொரிந்தியர் 13:12
B) அன்பின் முத்தத்தோடு வாழ்த்துங்கள் என்றது யார்⁉️
Answer: பேதுரு
I பேதுரு 5:14
======================
கண்களை பற்றிய கேள்விகள்
======================
1. கூச்சப் பார்வையாயிருந்தது யாருடைய கண்கள்?
2. யாருடைய கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயிருக்கும்?
3. சாகும்வரை கண்கள் இருளடையாமல் இருந்தது யாருக்கு?
4. தேனைச் சாப்பிட்டு கண்கள் தெளிந்தது யார்?
5. கண் திறக்கப்பட்டவன் யார்?
6. பார்க்கக்கூடாதபடி கண்கள் மங்கலாயிருந்த ஆசாரியன் யார்?
7. பிறவிக் குருடனுடைய கண்களைத் திறந்தது யார்?
8 தேவன் யாருடைய கண்களைத் திறந்தார்?
9. கண்டு, மனதுருகி, பராமரித்தவன் யார்?
10. கண்டதினாலே விசுவாசித்தவன் யார்?
11. கண்கள் பிடுங்கப்பட்டு மாவரைத்துக் கொண்டு இருந்தவன்யார்?
12. கண்கள் பிடுங்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு போகப்பட்டவன் யார்?
13.காணும்படி வெகுநாளாய் ஆசை கொண்டிருந்தவன் யார்?
14. கண்களால் மருட்டிப்பார்ப்பவர்கள் யார்?
15. எது இருதயத்தைப் பூரிப்பாக்கும்?
கண்களை பற்றிய கேள்விகள்
====================
1. கூச்சப் பார்வையாயிருந்தது யாருடைய கண்கள்?
Answer: லேயாள்
ஆதியாகமம் 29:17
2. யாருடைய கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயிருக்கும்?
Answer: யூதா
ஆதியாகமம் 49:9,12
3. சாகும்வரை கண்கள் இருளடையாமல் இருந்தது யார்?
Answer: மோசேக்கு
உபாகமம் 34:7
4. தேனைச் சாப்பிட்டு கண்கள் தெளிவடைந்த வாலிபன் யார்?
Answer: யோனத்தான்
1 சாமுவேல் 14:27-29
5. கண் திறக்கப்பட்டவன் யார்?
Answer: பிலேயாம்
எண்ணாகமம் 24:3
6. பார்க்கக்கூடாதபடி கண்கள் மங்கலாயிருந்த ஆசாரியன் யார்?
Answer: ஏலி
I சாமுவேல் 4:15
7. பிறவிக் குருடனுடைய கண்களைத் திறந்தது யார்?
Answer: இயேசு
யோவான் 9:32,35
8. தேவன் யாருடைய கண்களைத் திறந்தார்?
Answer: ஆகாரின்
ஆதியாகமம் 21:14,19
9. கண்டு, மனதுருகி, பராமரித்தவன் யார்?
Answer: சமாரியன்
லூக்கா 10:33
10. கண்டதினாலே விசுவாசித்தவன் யார்?
Answer: தோமா
யோவான் 20:29
11. கண்கள் பிடுங்கப்பட்டு மாவரைத்துக் கொண்டு இருந்தவன் யார்?
Answer: சிம்சோன்
நியாயாதிபதிகள் 16:21
12. கண்கள் பிடுங்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்ட ராஜா யார்?
Answer: சிதேக்கியா
11 இராஜாக்கள் 25:7
13. இயேசுவைக் காணும்படி வெகுநாளாய் ஆசை கொண்டிருந்தவன் யார்?
Answer: ஏரோது
லூக்கா 23:8
14. கண்களால் மருட்டிப் பார்ப்பவர்கள் யார்?
Answer: சீயோன் குமாரத்திகள்
ஏசாயா 3:16
15. எது இருதயத்தைப் பூரிப்பாக்கும்?
Answer: கண்களின் ஒளி
நீதிமொழிகள் 15:30