=========================
அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தின் 1 முதல் 10 ஆம் வரை உள்ள அதிகாரங்களி லிருந்து கேள்விகள்
========================
1. 11 அப்போஸ்தலர்களுடன் கூட சேர்த்துக் கொள்ளப்பட்டது யார்?
2: பெந்தேகோஸ்தே நாளில் எத்தனை பேர் சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்?
3. விசுவாசத்திலும் வல்லமையிலும் நிறைந்தவன் யார்?
4. யார் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்?
5. தேவனிடத்தில் தயவு பெற்ற மனிதன் யார்?
6. சமாரியா நாட்டு மக்களை பிரமிக்க வைத்தது யார்?
7. சமாரியாவுக்கு வந்த அப்போஸ்தலர்கள் பெயர்கள் என்ன?
8. தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிருபங்களை கேட்டு வாங்கியது யார்?
9. அப்போஸ்தலனாகிய பவுல் கர்த்தரிடம் பேசிய முதல் வார்த்தை என்ன?
10. உன் துர்க்குணத்தை விட்டு மனந்திருந்தி தேவனை வேண்டிக்கொள் கூப்பிடு என்று யார் யாரிடம் சொன்னான்?
11. எட்டு வருடமாய் கட்டிலின் மேல் திமிர்வாதமுள்ளவனாய் கிடந்தது யார்?
12. நான் அசைக்கப்படாதபடி கர்த்தர் என் வலது பாரிசத்தில் இருக்கிறார் என்றது யார்?
13. இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று யார் யாரிடம் சொன்னான்?
14. யோப்பா பட்டணத்தில் சீயோனிடத்தில் தங்கியிருந்தது
யார்?
15.பரிசுத்த ஆவியினாலும் வல்லமையாலும் அபிஷேகம் பெற்றது யார்?
பதில்கள்
=============
1. 11 அப்போஸ்தலர்களுடன் கூட சேர்த்துக் கொள்ளப்பட்டது யார்?
பதில்: மத்தியா
அப்போஸ்தலர் நடபடிகள் 1:26
2. பெந்தேகோஸ்தே நாளில் எத்தனை பேர் சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்?
பதில்: ஏறக்குறைய 3000 பேர்
அப்போஸ்தலர் நடபடிகள் 2:41
3. விசுவாசத்திலும் வல்லமையிலும் நிறைந்தவன் யார்?
பதில்: ஸ்தேவான்
அப்போஸ்தலர் நடபடிகள் 6:8
4. யார் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்?
பதில்: அனனியாவும் அவள் மனைவியாகிய சப்பீராளும்
அப்போஸ்தலர் நடபடிகள் 5:1
5. தேவனிடத்தில் தயவு பெற்ற மனிதன் யார்?
பதில்: தாவீது
அப்போஸ்தலர் நடபடிகள் 7:45-46
6. சமாரியா நாட்டு மக்களை பிரமிக்க வைத்தது யார்?
பதில்: சீமோன்
அப்போஸ்தலர் நடபடிகள் 8:9
7. சமாரியாவுக்கு வந்த அப்போஸ்தலர்கள் யார்?
பதில்: பேதுரு, யோவான்
அப்போஸ்தலர் நடபடிகள் 8:14
8. தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிருபங்களை கேட்டு வாங்கியது யார்?
பதில்: சவுல்
அப்போஸ்தலர் நடபடிகள் 9:1-2
9. அப்போஸ்தலனாகிய பவுல் கர்த்தரிடம் பேசிய முதல் வார்த்தை என்ன?
பதில்: ஆண்டவரே, நீர் யார் என்றான்
அப்போஸ்தலர் நடபடிகள் 9:5-6
10. உன் துர்க்குணத்தை விட்டு மனந்திருந்தி தேவனை நோக்கி வேண்டிக்கொள் என்று யார் யாரிடம் சொன்னான்?
பதில்: பேதுரு - சீமோனிடம்
அப்போஸ்தலர் நடபடிகள் 8:20,22
11. எட்டு வருடமாய் கட்டிலின் மேல் திமிர்வாதமுள்ளவனாய் கிடந்தது யார்?
பதில்: ஐனேயா என்னும் பேருள்ள மனுஷன்
அப்போஸ்தலர் நடபடிகள் 9:33
12. நான் அசைக்கப்படாதபடி கர்த்தர் என் வலது பாரிசத்தில் இருக்கிறார் என்றது யார்?
பதில்: தாவீது
அப்போஸ்தலர் நடபடிகள் 2:25
13. ”இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறேன்” யார் யாரிடம் சொன்னான்?
பதில்: எத்தியோப்பிய மந்திரி - பிலிப்புவிடம்
அப்போஸ்தலர் நடபடிகள் 8:37
14. யோப்பா பட்டணத்தில் சீமோனிடத்தில் தங்கியிருந்தது யார்?
பதில்: பேதுரு
அப்போஸ்தலர் நடபடிகள் 9:43,40
15. பரிசுத்த ஆவியினாலும் வல்லமையாலும் அபிஷேகம் பெற்றது யார்?
பதில்: நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்
அப்போஸ்தலர் நடபடிகள் 10:38
=============================
அப்போஸ்தலர் நடபடிகள் கேள்வி பதில்கள்
11-ஆம் அதிகாரத்திலிருந்து 20-ஆம் அதிகாரம் வரை
==============================
1. போதுருவோடு கூட செகரியாவுக்கு சென்றவர்கள் எத்தனை பேர்?
2. யாருடைய நாட்களில் கொடிய பஞ்சம் உண்டாயிற்று?
3. புழுபுழுத்து இறந்தவன் யார்?
4. எவர்களை ஊழியத்திற்காக பிரித்து விடும்படி பரிசுத்த ஆவியானவர் திரிவுளம்பற்றினார்?
5) எதின் வழியாக நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்?
6. ஓய்வு நாள் தோறும் ஜெப ஆலயங்களில் எது வாசிக்கப்பட்டு வந்தது?
7. யூதாவின் மறு பெயர் என்ன?
8. பிரதான ஆசாரியனான ஸ்கேவாவிற்கு எத்தனை குமாரர்கள்?
9. நியாயாசனத்திற்கு முன்பாக யார் யாரை ஆடித்தார்கள?
10.அரங்கசாலைக்கு இழுத்துச் செல்லப் பட்டவர்கள் யார்?
11. பவுலும் பர்னபாவும் பிரிந்து போகும்படியாக வாக்கேவாதம் உண்டாவதற்கு காரணம் யார்?
A) சீலா
B) தீமோத்தேயு
C) மாற்கு
D) தீத்து
12.உலகத்தை கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள் என்று எந்தப் பட்டணத்தில் சொல்லப்பட்டது?
A) பிலிப்பி
B) ஏபேசு
C) தெசலோனிக்கே
D) ரோமாபுரி
13. அவர்களுடனே சம்பாஷித்து ____________ ____________ பிரசங்கித்தான்
14. பர்னபாவை __________ என்றும் பவுலை _____________ என்றும் சொன்னார்கள்
15. ஒருவனுடைய ____________ _____________ _____________ நான் இச்சிக்கவில்லை.
ACTS Chapter 11-20 Answer's
==========================
1. போதுருவோடு கூட செகரியாவுக்கு சென்றவர்கள் எத்தனை பேர்?
பதில்: 6 பேர்
அப்போஸ்தலர் 11:12
2. யாருடைய நாட்களில் கொடிய பஞ்சம் உண்டாயிற்று?
பதில்: கிலவுதியுராயனுடைய நாட்களில்
அப்போஸ்தலர் 11:28
3. புழுபுழுத்து இறந்தவன் யார் ?
பதில்: ஏரோது
அப்போஸ்தலர் 12:23,21
4. எவர்களை ஊழியத்திற்காக பிரித்து விடும்படி பரிசுத்த ஆவியானவர் திரிவுளம்பற்றினார் ?
பதில்: பர்னபாவையும் சவுலையும்
அப்போஸ்தலர் 13:2
5) எதின் வழியாக நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்?
பதில்: அநேக உபத்திரவங்களின் வழியாக
அப்போஸ்தலர் 14:22
6. ஓய்வு நாள் தோறும் ஜெப ஆலயங்களில் எது வாசிக்கப்பட்டு வந்தது?
பதில்: மோசேயின் ஆகமங்கள்
அப்போஸ்தலர் 15:21
7. யூதாவின் மறு பெயர் என்ன?
பதில்: பர்சபா
அப்போஸ்தலர் 15:22
8. பிரதான ஆசாரியனான ஸ்கேவாவிற்கு எத்தனை குமாரர்கள்?
பதில்: ஏழு குமாரர்கள்
அப்போஸ்தலர் 19:14
9. நியாயாசனத்திற்கு முன்பாக யார் யாரை ஆடித்தார்கள?
பதில்: கிரேக்கரெல்லாம் நியாயாசனத்திற்கு முன்பாக சொஸ்தேனே என்பவனை அடித்தார்கள்
அப்போஸ்தலர் 18:17
10. அரங்கசாலைக்கு இழுத்துச் செல்லப்பட்டவர்கள் யார்?
பதில்: காயு, அரிஸ்தர்க்கு
அப்போஸ்தலர் 19:29
11. பவுலும் பர்னபாவும் பிரிந்து போகும்படியாக வாக்குவாதம் உண்டாவதற்கு காரணம் யார்?
பதில்: C. மாற்கு
அப்போஸ்தலர் 15:36-39
12. உலகத்தை கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள் என்று எந்தப் பட்டணத்தில் சொல்லப்பட்டது?
பதில்: C. தெசலோனிக்கே
அப்போஸ்தலர் 17:1,6
13. பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து ____________ ____________ பிரசங்கித்தான்.
பதில்: நடுராத்திரி, மட்டும்
அப்போஸ்தலர் 20:7
14. பர்னபாவை __________ என்றும் பவுலை _____________ என்றும் சொன்னார்கள்
பதில்: பர்னபா - யூப்பித்தர்
பவுல் - மெர்க்கூரி
அப்போஸ்தலர் 14:12
15. ஒருவனுடைய ____________ _____________ _____________ நான் இச்சிக்கவில்லை.
பதில்: வெள்ளியையாகிலும், பொன்னையாகிலும், வஸ்த்திரத்தையாகிலும்
அப்போஸ்தலர் 20:33
==================
கேள்வி
(அப்போஸ்தலர் 21-28)
=================
1) வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் தங்கி வருவோர், போவோரை ஏற்றுக் கொண்ட மனிதன் யார்?
2. கப்பல் தேசத்திலிருந்து மெலித்தா தீவின் கரையை அடைந்த அந்நியர்களைத் அத்தீவில் உள்ள யார் ஏற்றுக் கொண்டு உபசரித்தான்?
3. தேவன் உனக்கு தயவு பண்ணீனார் என்று தூதன்_________ சொன்னான்.
4.__________________உயித்தெழுதல் இல்லை யென்றும் ____________ ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிகிறார்கள்
5. கமாலியேலின் பாத்தருகே வளர்ந்தவன் யார்?
6. பவுல் எந்த தீர்க்கதரிசியின் வாக்கயங்களை யூத ஜனங்களுக்கு எடுத்துச் சொன்னான்?
7.பவுல் ஜெபம் பண்ணி குணமாக்கியவன் யார்?
8. பேலிக்ஸ்சிற்கு பிறகு வந்த தேசாதிபதி யார்?
9. தாங்கள் பவுலைக் கொலை செய்யுமளவும் புசிப்பதுமில்லை, குடிப்பதுமில்லை என்று சபதம் பண்ணிக் கொண்டோர் எத்தனை பேர்?
10. தர்சு பட்டணம் எந்த நாட்டில் உள்ளது?
====================
பதில்கள்
(அப்போஸ்தலர் 21-28)
==================
1) வாடகைக்கு எடுக்கப் பட்ட வீட்டில் தங்கி வருவோர், போவோரை ஏற்றுக்கொண்ட மனிதன் யார்?
பதில்: பவுல்
அப்போஸ்தலர் 28:30
2. கப்பல் தேசத்திலிருந்து மெலித்தா தீவின் கரையை அடைந்த அந்நியர்களைத் அத்தீவில் உள்ள யார் ஏற்றுக்கொண்டு உபசரித்தான்?
பதில்: புபிலியு
அப்போஸ்தலர் 27:44
அப்போஸ்தலர் 28:7
3. தேவன் உனக்கு தயவு பண்ணீனார் என்று தூதன் யாரிடம் சொன்னான்?
பதில்: பவுலிடம்
அப்போஸ்தலர் 27:23,24
4. யார் உயித்தெழுதல் இல்லை யென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிகிறார்கள்?
பதில்: சதுசேயர்
அப்போஸ்தலர் 23:8
5. கமாலியேலின் பாத்தருகே வளர்ந்தவன் யார்?
பதில்: பவுல்
அப்போஸ்தலர் 22:3
6. பவுல் எந்த தீர்க்கதரிசியின் வாக்கியங்களை யூத ஜனங்களுக்கு எடுத்துச் சொன்னான்?
பதில்: ஏசாயா தீர்க்கதரிசியைக் கொண்டு
அப்போஸ்தலர் 28:27
7. பவுல் யாரை ஜெபம் பண்ணி குணமாக்கினான்?
பதில்: புவிலியுவின் தகப்பனை
அப்போஸ்தலர் 28:8
8. பேலிக்ஸ்சிற்கு பிறகு வந்த தேசாதிபதி யார்?
பதில்: பொர்க்கியுபெஸ்து
அப்போஸ்தலர் 24:27
9. தாங்கள் பவுலைக் கொலை செய்யுமளவும் புசிப்பதுமில்லை, குடிப்பதுமில்லை என்று சபதம் பண்ணிக் கொண்டோர் எத்தனை பேர்?
பதில்: நாற்பது பேருக்கு அதிகமானோர்
அப்போஸ்தலர் 23:12,13
10. தர்சு பட்டணம் எந்த நாட்டில் உள்ளது?
பதில்: சிலிசியா நாட்டில்
அப்போஸ்தலர் 21:39