===========================
தரிசனம் (கேள்வி பதில்கள்)
==========================
1) கர்த்தர் ஆபிராமுக்கு முதன் முதலில் தரிசனமானது எங்கே?
2) கர்ததர் சாமுவேலுக்கு முதன் முதலில் தரிசனம்
தந்தது எங்கே?
3) யூத ராஜாக்கள் நான்கு பேரின் நாட்களில் யூதாவையும் எருசலேமையும் குறித்து தரிசனம் கண்டவன் யார்?
4) சொல்லப்பட்ட இராப் பகல்களின் தரிசனம்
5) தரிசனம் பார்க்க்கிறவன் யார்?
6) தரிசனம் சொல்லும் போது போர்த்துக் கொள்வது எது?
7) தரிசனம் பற்றி இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?
8) ஒபதியாவின் தரிசனம் எதைக் குறித்து ஆண்டவர் சொல்லுகிறார்?
9) அவன் தரிசனம் சொல்லும் போது யார் அவனைக் குத்திப் போடுவார்கள்?
10) உயிர்த்தெழுந்த இயேசு திபேரியாக் கடற்கரையில் சீஷர்களுக்கு அருளினது எத்தனையாவது தரிசனம்?
தரிசனம் (விடைகள்)
=====================
1. கர்த்தர் ஆபிராமுக்கு முதன்முதலில் தரிசனமானது எங்கே?
Answer: மோரே என்னும் சமபூமியில்
ஆதியாகமம் 12:.7
2.கர்ததர் சாமுவேலுக்கு முதன்முதலில் தரிசனம் தந்தது எங்கே?
Answer: சீலோவிலே
1 சாமுவேல் 3:21
3. யூத ராஜாக்கள் நான்கு பேரின் நாட்களில் யூதாவையும் எருசலேமையும் குறித்து தரிசனம் கண்டவன் யார்?
Answer: ஏசாயா
ஏசாயா 1:1
4. சொல்லப்பட்ட இராப் பகல்களின் தரிசனம் _______________
Answer: சத்தியமாயிருக்கிறது
தானியேல் 8:26
5. தரிசனம் பார்க்க்கிறவன் யார்?
Answer: ஆமோஸ்
ஆமோஸ் 7:12
.6. தரிசனம் சொல்லும்போது போர்த்துக் கொள்வது எது?
Answer: மயிர்ப்போர்வை
சகரியா 13:4
7 தரிசனம் பற்றி இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?
Answer: நாட்கள் நீடிக்கும். தரிசனம் எல்லாம் அவமாகும்
எசேக்கியேல் 12:22
8. ஒபதியாவின் தரிசனம் எதைக் குறித்து ஆண்டவர் சொல்லுகிறார்?
Answer: ஏதோமைக் குறித்து
ஒபதியா 1:1
9. அவன் தரிசனம் சொல்லும்போது யார் அவனைக் குத்திப்போடுவார்கள்?
Answer: அவன் தகப்பனும், அவன் தாயும்
சகரியா 13:3
10. உயிர்த்தெழுந்த இயேசு திபேரியாக் கடற்கரையில் சீஷர்களுக்கு அருளினது எத்தனையாவது தரிசனம்?
Answer: மூன்றாவது
யோவான் 21:14
========================
கேள்விகள் (கர்வாலி மரம்)
=========================
1) கர்வாலி மரத்தண்டையில் ராஜாவாக்கபட்டது யார்?
2) கர்வாலி மரத்தின் கீழ் அடக்கம் பண்ணப்பட்டது யார்?
3) கர்வாலி மரம் போல் வைரமாய் இருந்தது யார்?
4) கர்வாலி மரத்தில் தலை மாட்டிக் கொண்டது யார்?
5) அந்நிய தெய்வங்களை கர்வாலி மரத்தின் கீழ் புதைத்து போட்டது யார்?
6) யாருடைய எலும்புகள் கர்வாலி மரத்தின் கீழ் அடக்கம் பண்ணப்பட்டது?
7) பெரிய கல்லை கர்வாலி மரத்தின் கீழ் நாட்டியது யார்?
8) கர்வாலி மரங்கள் அருகே தன் கூடாரங்களை போட்டது யார்?
9) தீருவிற்கு கர்வாலி மரங்களால் எதை செய்தார்கள்?
10) ஓப்ராவில் கர்வாலி மரத்தின் கீழ் இருந்தது யார்?
கேள்விக்கு பதில் (கர்வாலி மரம்)
============================
1) கர்வாலி மரத்தண்டையில் ராஜாவாக்கபட்டது யார்?
Answer: அபிமெலேக்கு
நியாயாதிபதிகள் 9:6
2) கர்வாலி மரத்தின் கீழ் அடக்கம் பண்ணப்பட்டது யார்?
Answer: ரெபேக்காளின் தாதியாகிய தெபோராள்
ஆதியாகமம் 35:8
3) கர்வாலி மரம் போல் வைரமாய் இருந்தது யார்?
Answer: எமோரியன்
ஆமோஸ் 2:9
4) கர்வாலி மரத்தில் தலை மாட்டிக் கொண்டது யார்?
Answer: அப்சலோம்
2 சாமுவேல் 18:9
5) அந்நிய தெய்வங்களை கர்வாலி மரத்தின் கீழ் புதைத்து போட்டது யார்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 35:4
6) யாருடைய எலும்புகள் கர்வாலி மரத்தின் கீழ் அடக்கம் பண்ணப்பட்டது?
Answer: சவுல், அவன் குமாரர்
1 நாளாகமம் 10:12
7) பெரிய கல்லை கர்வாலி மரத்தின் கீழ் நாட்டியது யார்?
Answer: யோசுவா
யோசுவா 24:26
8) கர்வாலி மரங்கள் அருகே தன் கூடாரங்களை போட்டது யார்?
Answer: கேனியனான ஒபேர்
நியாயாதிபதிகள் 4:11
9) தீருவிற்கு கர்வாலி மரங்களால் எதை செய்தார்கள்?
Answer: துடுப்புகளை
எசேக்கியேல் 27:6
10) ஒப்ராவில் கர்வாலி மரத்தின் கீழ் இருந்தது யார்?
Answer: கர்த்தருடைய தூதனானவர்
நியாயாதிபதிகள் 6:10
==============
வைராக்கியம்
===============
1) எதைக் குறித்து உண்டான பக்தி வைராக்கியம் என்னைப் பட்சித்தது?
2) பாதாளத்தை விடக் கொடிதாயிருப்பது எது?
3) எதினால் என் பக்தி வைராக்கியம் என்னைப் பட்சித்தது?
4) இஸ்ரவேலின் நடுவில் பக்தி வைராக்கியம் காண்பித்து கர்த்தரின் உக்கிரத்தைத் திருப்பினவன் யார்?
5) மோசேக்காக பக்தி வைராக்கியம் காண்பித்தவன் யார்?
6) எங்கே கலகமும் துர்ச் செய்கைகளும் உண்டு?
7) எதில் வைராக்கியம் பாராட்டுவது நல்லது?
8) சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்தி வைராக்கியமாய்
இருந்தவன் யார்?
9) தேவனுக்காக பக்தி வைராக்கியம் காண்பித்து நித்திய ஆசாரியப்பட்டத்திற்குரிய உடன்படிக்கையைப் பெற்றவன் யார்?
10) சேனைகளின் கர்த்தர் ...................., ........................ மகா வைராக்கியம் கொண்டிருக்கிறார்
கேள்விக்கான பதில் (வைராக்கியம்)
=========================
1) எதைக் குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது?
Answer: உம்முடைய வீட்டைக் குறித்து
சங்கீதம் 69:9
2) பாதாளத்தை விடக் கொடிதாயிருப்பது எது?
Answer: நேச வைராக்கியம்
உன்னதபாட்டு 8:6
3) எதினால் என் பக்தி வைராக்கியம் என்னைப் பட்சித்தது?
Answer: என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால்
சங்கீதம் 119:139
4) இஸ்ரவேலின் நடுவில் பக்தி வைராக்கியம் காண்பித்து கர்த்தரின் உக்கிரத்தைத் திருப்பினவன் யார்?
Answer: பினெகாஸ்
எண்ணாகமம் 25:11
5) மோசேக்காக பக்தி வைராக்கியம் காண்பித்தவன் யார்?
Answer: யோசுவா
எண்ணாகமம் 11:28,29
6) எங்கே கலகமும் துர்ச் செய்கைகளும் உண்டு?
Answer: வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ அங்கே
யாக்கோபு 3:16
7) எதில் வைராக்கியம் பாராட்டுவது நல்லது?
Answer: நல்விஷயத்தில்
கலாத்தியர் 4:18
8) சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்தி வைராக்கியமாய்
இருந்தவன் யார்?
Answer: எலியா
I இராஜாக்கள் 19:14
9) தேவனுக்காக பக்தி வைராக்கியம் காண்பித்து நித்திய ஆசாரியப்பட்டத்திற்குரிய உடன்படிக்கையைப் பெற்றவன் யார்?
Answer: பினெகாஸ்
எண்ணாகமம் 25:11,13
10) சேனைகளின் கர்த்தர் ...................., ........................ மகா வைராக்கியம் கொண்டிருக்கிறார்?
Answer: எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும்
சகரியா 1:14