அருட்செய்தி
Grace News
=============
குருத்தோலை பிடியுங்கள்
===============
1. குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு கர்த்தருக்கு பின் செல்லுங்கள்
யோவான் 12:13
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டு போகும்படி புறப்பட்டு: ஓசன்னா கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
சகரியா 9:9
சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்
வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
மத்தேயு 21:8
மாற்கு 11:8
லூக்கா 19:35,36
2. குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு கர்த்தருக்கு முன் நில்லுங்கள்
வெளிப்படுத்தல் 7:9,10
இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசன்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.
3. குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு கர்த்தருடைய சந்நிதிக்கு வாருங்கள்
லேவியராகமம் 23:40 (1-44)
முதல்நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழை்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்களை் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.
===========
Songster:
Rev. M. Aruldoss, M.A., B.D., M.Div., M.Th.,
ECI-Chennai Diocese
Cell: 8098440373
அருட்செய்தி
Grace News
===============
குருத்தோலை பயணமும்
கொல்கொதா பயணமும்
==============
குருத்தோலை பயணம்
==============
1. இஸ்ரவேலின் ராஜா என்று புகழ்ந்தனர்
யோவான் 12:13
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா கர்த்தருடைய நாமத்திலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
2. கர்த்தாவே இரட்சியும் என்று ஆரவாரமிட்டனர்
மத்தேயு 21:9
முன்நடப்பாரும் பின் நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா
மாற்கு 11:9,10
முன் நடப்பாரும் பின் நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா
3. வஸ்திரங்களை விரித்து இயேசுவை அழைத்தனர்
மத்தேயு 21:8
திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
4. கழுதை இயேசுவை சுமந்து சென்றது
யோவான் 12:14,15
சகரியா 9:9
இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.
மத்தேயு 21:2,4,7
மாற்கு 11:2
லூக்கா 19:30,33
கொல்கொதா பயணம்
===============
1. யூதருக்கு ராஜா என்று இகழ்ந்தனர்
மத்தேயு 27:29
முள்ளுகளால் ஒரு முடியைப் பன்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலது கையில் ஒரு கோலைக் கொடுத்துது, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,
2. சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டனர்
லூக்கா 23:21
அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய் கூக்குரலிட்டனர்.
மாற்கு 15:13,14
யோவான் 19:6,15
3. வஸ்திரங்களை உரிந்து இயேசுவை அவமதித்தனர்
மத்தேயு 27:35
சங்கீதம் 22:18
அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள்.
மாற்கு 15:24
லூக்கா 23:34
யோவான் 19:24
4. இயேசு சிலுவையைச் சுமந்து சென்றார்
யோவான் 19:17
இயேசு தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
===========
Songster:
Rev. M. Aruldoss, M.A., B.D., M.Div., M.Th.,
ECI-Chennai Diocese
Cell: 8098440373
அருட்செய்தி
Grace News
==============
இராஜாவாக வருகிறார் இயேசு கிறிஸ்து
===============
சங்கீதம் 118:25,26 (25-29)
கர்த்தாவே, இரட்சியும் கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்.
1. இராஜா வருகிறார் ஆயத்தப்படுவோம்
மத்தேயு 21:4,8 (1-9)
இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்.... (வஸ்திரங்களை விரித்தார்கள், மரக்கிளைகளையும் தறித்து பரப்பினார்கள்.)
சகரியா9:9
சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்
2. இராஜா வருகிறார் ஆர்ப்பரிப்போம்
யோவான் 12:12,13,14 (12-16)
லூக்கா 19:38
கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
வெளிப்படுத்தல் 7:9-12
பன்னிரண்டு கோத்திரங்களும், திரளான ஜனங்களும், வெள்ளை அங்கிகளைத் அணிந்து குருத்தோலைகளைப் பிடித்து தேவனையும், ஆட்டுக்கட்டியானவரையும் தொழுதுகொண்டு ஆர்ப்பரித்தார்கள்.
யோசுவா 6:5-20
எரிகோவில் ஆர்ப்பரிப்பு
1 சாமுவேல் 4:5,6
உடன்படிக்கைப் பெட்டிக்காக ஆர்ப்பரிப்பு
1 சாமுவேல் 10:24
சவுல் ராஜாவுக்காக ஆர்ப்பரிப்பு
எஸ்தர் 8:15
மொர்தெகாய்க்காக ஆர்ப்பரிப்பு
3. இராஜா வருகிறார் ஆராதிப்போம்
மத்தேயு 21:15,16
அவர் செய்த அதிசங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் கண்டு, கோபமடைந்து, அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம் கேட்கிறேன் குழந்தைகளின் வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.
சங்கீதம் 8:2
தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாளினால் பெலன் உண்டுபண்ணினீர்.
பெத்தானியா - எருசலேமிலிருந்து 3 கி.மீ,
ஒலிமலைக்குக் கிழக்கே உச்சியில் இருந்தது
===========
Songster:
Rev. M. Aruldoss, M.A., B.D., M.Div., M.Th.,
ECI-Chennai Diocese
Cell: 8098440373
அருட்செய்தி
Grace News
==============
ஒருவனும் ஒருக்காலும்
==============
1. ஒருவனும் ஒருக்காலும் பேசாத வார்த்தையை இயேசு பேசினார்
யோவான் 7:46 (37-46)
சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை.
ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
மத்தேயு 7:7
மத்தேயு 22:23
மாற்கு 1:22
லூக்கா 4:32
மத்தேயு 13:54
தாம் வளர்ந்த ஊரிலே வந்து: அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
2. ஒருவனும் ஒருக்காலும் ஏறாத கழுதையின்மேல் இயேசு ஏறிபோனார்
மாற்கு 11:2,7 (1-11)
லூக்கா 19:30
உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
3. ஒருவனும் ஒருக்காலும் வைக்காத கல்லயைில் இயேசு வைக்கப்பட்டார்
யோவான் 19:41 (38-42)
அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்த தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. (மரிமத்தியா ஊரானும், இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனான்)
மத்தேயு 27:60
மாற்கு 15:46
தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை (அவரை) வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப் போனான்.
லூக்கா 23:53
அவரை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாதுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
============
Songster:
Rev. M. Aruldoss, M.A., B.D., M.Div., M.Th.,
ECI-Chennai Diocese
Cell: 8098440373
அருட்கவி
ஆயர். மு. அருள்ததாள்
==============
கழுதையின் வருத்தமும்
சிலுவையின் திருத்தமும்
==============
இயேசுவைச் சுமந்த
என்னைவிட
இயேசுவைக் கொன்ற
உன்னை
புனிதமாக்கிவிட்டார்களே
என்று சிலுவையைப் பார்த்து...
வருத்தப்பட்டதாம் கழுதை
அதற்கு சிலுவை
கழுதையைப் பார்த்து சொன்னதாம்....
அவருக்குக் கிடைத்த
வஸ்திர விரிப்பு
உனக்கும் கிடைத்த,
அவருக்குக் கிடைத்த
முதன்மையான இடம்
உனக்கும் கிடைத்தது,
அவருக்குக் கிடைத்த
மதிப்பு, மரியாதை
உனக்கும் கிடைத்து!
ஆனால் என்னைச் சுமந்தவரை
நானும் சுமந்தேன்,
அவர் விழும்போது
நானும கீழே விழுந்தேன்,
அவ அடித்தபோது
அந்த அடி என்மீதும் விழுந்தது,
அவரில் ஆணி துளைத்தபோது
என்னிலும் துளைத்தது!
என்னிலும் துளைத்தது!
ஒதுக்கப்பட்டவனாய்
ஓரத்தில் கிடந்தேன்,
சேதுக்கப்பட்டவனாய்
சிகரத்தில்் நின்றேன்!
அதனால் தான்
வெறுக்கப்பட்ட நான்
விரும்ப்படலானேன்,
புறக்கணிக்கப்பட்ட நான்
புனிதமானேன்,
சபிக்கப்பட்ட நான்
சரித்திரமானேன்,
என்று திருத்தியது சிலுவை!
கழுதை தான் சொன்னதைக் குறித்து
வருத்தப்பட்டு,
மன்னிக்கனும் சிலுவையே,
பாடல்களை நான் சுகித்தேன்,
பாடுகளையோ நீசகித்தாய்!
ஆரவாரங்களை நான் சுகித்தேன்,
பாரங்களையோ நீ சகித்தாய்!
அதற்கு சிலுவை
கழுதையே வருத்தப்படாதே!
நாம் இருவருமே
இயேசுவைச் சுமந்ததினால்
பாக்கியம் பெற்றவர்கள் என்றதாம்.
அதுபோல நாமும் நம் இயேசுவை
இருதயத்தில் சுமப்போம்...
============
Songster:
Rev. M. Aruldoss, M.A., B.D., M.Div., M.Th.,
ECI-Chennai Diocese
Cell: 8098440373
அருட்கவி
ஆயர் மு. அருள்தாஸ்
==============
கிறிஸ்தவம் தந்த சமத்துவம்
==============
குருத்துவம்
மருத்தும்
இவை இரண்டும்
பிரதானமாய்
பிரமாணமாய்
கொண்டதேத கிறிஸ்தவம்
அது தான் இதன் மகத்துவம்
எனவே தான் இது தனித்துவம்
கிறிஸ்தவம்
மதத்தை
திணிப்பதற்காக அல்ல
மனித்தைக் கணிப்பததற்காகவும்
புனிதத்தைக்
காப்பதற்காகவும்
உருவானதே கிறிஸ்தவம்
பணத்தாலும்
நிறத்தாலும்
மொழியாலும்
சாதியாலும்
பிரிந்து கிடக்கிற
சமூகத்தை
சமத்துவ கொள்கைக்கு
அழைப்பதே கிறிஸ்தவம்
அடிமைகளாய்
கைக்கட்டி நின்றவர்களை
சுதந்தரமாய் வாழ்ந்திட
கைத்தட்டி
வாழ்த்வதே கிறிஸ்தவம்
பாவத்தாலும்
சாபத்தாலும்
அழியும் மாந்தர்களை
காப்பாற்றுவதே கிறிஸ்தவம்
பரிசுத்த வேதத்தைக்
கடைபிடிக்கவும்
பரமனின் பாத்தை
வழிகாட்டுவதே கிறிஸ்தவம்
தீய வாழ்வை
வெறுக்கவும்
தூய வாழ்வை
விரும்பவும்
வழிநடத்துவதே
கிறிஸ்தவம்
அடக்கு முறையை
எதிர்க்கவு
ஒடுக்கு முறையை
தடுக்கவும்
போராடுவதே கிறிஸ்தவம்
கிறிஸ்து இல்லையெனில்
கிறிஸ்தவம் இல்லை
கிறிஸ்தவம் இல்லையெனில்
சமத்துவம் இல்லை
எனவே
கிறிஸ்துவை தேடுவோம்!
கிறிஸ்தவத்தை நாடுவோம்!
சமத்துவமாய் கூடுவோம்!
============
Songster:
Rev. M. Aruldoss, M.A., B.D., M.Div., M.Th.,
ECI-Chennai Diocese
Cell: 8098440373