============
கெடுக்கும்
============
1) ஆகாத சம்பாஷணை நல்லொழுக்கங்களை கெடுக்கும் 1 கொரிந்தியர் 15:33
2) பரிதானம் இருதயத்தை கெடுக்கும்
2) பரிதானம் இருதயத்தை கெடுக்கும்
பிரசகீதம் 7:7
3) பாவியான ஒருவன் மிகுந்த நன்மையை கெடுப்பான்
3) பாவியான ஒருவன் மிகுந்த நன்மையை கெடுப்பான்
பிரசங்கி 9:18
4) அவர்கள் நாவுகளே அவர்களை கெடுக்கும்
4) அவர்கள் நாவுகளே அவர்களை கெடுக்கும்
சங்கீதம் 64:8
5) பிசாசு மனதை கெடுப்பான்
5) பிசாசு மனதை கெடுப்பான்
2 கொரிந்தியர் 11:3
6) மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்
6) மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்
நீதிமொழிகள் 11:9
==========================
மகிழ்ச்சியான வாழ்விற்கான விசுவாச அறிக்கைகள்
=============================
1. என் தேவனாகிய யெகோவாவின் சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருப்பேன் லேவியராகமம் 23:40
2. நான் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து மகிழ்ச்சியாய் இருப்பேன். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே எனக்கு பெலன்
2. நான் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து மகிழ்ச்சியாய் இருப்பேன். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே எனக்கு பெலன்
நெகேமியா 8:10
3. எனக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று.
3. எனக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று.
எஸ்தர் 8:16
4. யெகோவா என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினார், மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினார்.
4. யெகோவா என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினார், மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினார்.
சங்கீதம் 30:11
5. யெகோவா தமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினார், அவர் கரத்தின் கிரியைகளினிமித்தம் நான் ஆனந்தசத்தமிடுவேன்.
5. யெகோவா தமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினார், அவர் கரத்தின் கிரியைகளினிமித்தம் நான் ஆனந்தசத்தமிடுவேன்.
சங்கீதம் 92:4
6. எனக்காக வெளிச்சமும், மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.
சங்கீதம் 97:11
7. இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழுவேன்.
7. இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழுவேன்.
சங்கீதம் 118:24
8. மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்
8. மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்
பிரசங்கி 3:12
9. தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எனக்குக் கொடுத்திருக்கிறார், நான் அதிலே புசிக்கவும், என் பங்கைப் பெறவும், என் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் எனக்கு அதிகாரம் அளித்திருக்கிறார்
9. தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எனக்குக் கொடுத்திருக்கிறார், நான் அதிலே புசிக்கவும், என் பங்கைப் பெறவும், என் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் எனக்கு அதிகாரம் அளித்திருக்கிறார்
பிரசங்கி 5:19
10. வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்
10. வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்
ஏசாயா 35:1
=====================
விசுவாசிக்கு இல்லை
(யோவான்)
=====================
1) தாகம் இல்லை
யோவான் 4:14
2) பசி இல்லை
2) பசி இல்லை
யோவான் 6:35
3) கெட்டு போவதில்லை
யோவான் 10:28
4) பறிக்கபடுவதில்லை
யோவான் 10:28
5) இருளில் இல்லை
யோவான் 8:12
6) ஆக்கினை தீர்ப்பு இல்லை
யோவான் 5:24
7) மரணம் இல்லை
யோவான் 11:26
==================
தேவபிள்ளைகள் எப்படிபட்ட வார்த்தைகளை பேச கூடாது
=====================
1) அதிகம் பேச கூடாது சொற்களின் மிகுதியால் பாவமில்லாமல் போகாது (நீதி 10:19). இன்றைக்கு தேவபிள்ளைகள் phone ல் அதிகம் பேசுவதை காணலாம். சிலர் பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார்கள். உன் வாயின் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக (பிரச 5:2). மூடன் மிகுதியாய் பேசுகிறான் (பிரச 10:14) நாவை அடக்காதவன் தேவபக்தி வீண் (யாக் 1:26). தேவனோடு அதிகம் பேசுகிறவன் மனிதனோடு அதிகம் பேச மாட்டான்.
2) மற்றவர்களுக்கு விரோதமாக பேச கூடாது
2) மற்றவர்களுக்கு விரோதமாக பேச கூடாது
சிலர் எப்போது பார்த்தாலும் மற்றவர்களுக்கு விரோதமாக பேசுவதை பார்க்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் கடித்து பட்சித்தீர்களானால் அழிவீர்கள் (கலா 5:15)
ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்
(யாக் 5:9) ஆரோனும், மிரியாமும் மோசேக்கு விரோதமாக பேசினதால் மிரியாம் ஆனான் (மோசே செய்தது தவறுதான்) (எண் 12:1,10)
அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது,
(ரோமர் 3:14)
3) கடுஞ் சொற்கள் பேச கூடாது

கணவன் மனைவி இடம், மனைவி கணவன் இடம் பேசும் போது கடுஞ் சொற்களை பேச கூடாது. கடுஞ் சொற்கள் கோபத்தை எழுப்பும் (நீதி 15:1) இனிய நாவு எலும்பையும் நொறுக்கும் (நீதி் 25 :15)
4) மற்றவர்கள் குறைகளை பேச கூடாது
சிலர் பேசும் போது மற்றவர்கள் இடம் காணப்படுகின்ற குறைகளை பேசுவதை காணலாம். இயேசு அதனால் "உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை பார்க்காமல், உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை பார்க்கிறது என்ன ? (மத் 7:3) குற்றத்தை முடுகிறவன் சிநேகித்த்தை நாடுகிறான் (நீதி 17:9). குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை (நீதி 19:11). மற்றவர்களை குற்றவாளியாக தீர்க்க நீ யார் ? (ரோ 2:1). சகோதரர் மேல் குற்றஞ் சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டு போனான் (வெளி 12:10). யோசேப்பு சிறையில் இருந்த போது போத்திபார் மனைவிதான் இதற்கு காரணம் என்று அவளை பற்றி மற்றவர்கள் இடம் குறை கூறவில்லை. ஆ எவ்வளவு மேன்மையான சுபாவம்.
5) வீண் வார்த்தைகள் பேச கூடாது
5) வீண் வார்த்தைகள் பேச கூடாது
மனுஷர் இடம் பேசும் வார்த்தைகள் பெரும்பாலும் வீணான வார்த்தைகள்தான். வீண் பேச்சு = பிரயோஜனமில்லாத பேச்சு. வீண் பேச்சு அவபக்தியை உண்டாக்கும் (2 தீமோ 2:16). பேசும் வீண் வார்த்தைகளுக்கு நீயாயத்தீர்ப்பு உண்டு (மத் 12:30). ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கத்தை கெடுக்கும் (1 கொரி 15:33)
6) துர் செய்தியை பேச கூடாது
6) துர் செய்தியை பேச கூடாது
துர் செய்தியை நாம் ஒருபோதும் மற்றவர்கள் இடம் பேச கூடாது.(துர் செய்தி = மற்றவர்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள்). இன்றைய நாட்களில் நல்ல செய்தியை விட துர்செய்தி வேகமாக பரவுகிறது. துர் செய்தி உண்மையாக இருந்தாலும் நம் மூலம் அது வெளிவரக்கூடாது. கானான் தேசத்தை வேவு பார்க்க சென்றவர்கள் துர்செய்தியை பரப்பினார்கள் (எண் 13:33). கேட்டதைச் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்து விடுகிறான் (நீதி 17:9)
7) உலக மனிதர்கள், அவிசுவாசிகள் இடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்
7) உலக மனிதர்கள், அவிசுவாசிகள் இடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்
நாம் உலகத்தில்தான் இருக்கிறோம். உலக மக்கள் இடம் பேசும் போது மிகவும் கவனமாக, ஞானமாக பேச வேண்டும். வார்த்தைகளினால் பாவம் செய்து விடக்கூடாது. என் நாவினால் பாவஞ் செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கி வைப்பேன் (சங் 39:1) புத்திமானோ தன் வாயை அடக்கி கொண்டிருக்கிறான் (நீதி 11:12). உலக மனிதர்கள் இடம் பேசும் போது 1 அல்லது 2 வார்த்தைகள் பேசி விட்டு இடத்தை காலி செய்ய வேண்டும்.
8) மாயையை (உலக காரியங்களை) அதிகம் பேச கூடாது( சங் 144:8)
8) மாயையை (உலக காரியங்களை) அதிகம் பேச கூடாது( சங் 144:8)
மாயை = உலகம். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் (லூக் 6:45). தேவ ஜனமே உனது இருதயம் எதனால் நிரம்பி இருக்கிறது? உனது இருதயம் வேத வசனத்தால் (சங் 37:31) துதியால் (சங் 138:1) கர்த்தரை பாடும் பாடலால் (கொலோ 3:16) நிரம்பி இருந்தால் உன்னுடைய பேச்சில் உலக காரியங்கள் அதிகம் காணப்படாது. ஒரு limit க்கு மேல் உலக காரியங்களை பேச கூடாது. அப்படி பேசினால் நமது உள்ளமும் உலக காரியத்தால் நிரம்பி விடும்.
9) மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பேச கூடாது
9) மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பேச கூடாது
சிலர் விளையாட்டாக பேசும் வார்த்தைகள் மற்றவர்கள் மனதை புண்படுத்துவதை காணலாம். வேதத்தில் இது "புத்தியினமான பேச்சு" (எபேசி 5:4) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தன் வாயையும் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
(நீதிமொழிகள் 21:23)
நாவும் நெருப்புத்தான், நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச் சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! (யாக் 3:6)
என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.
(சங்கீதம் 19:14) என்று தாவீதை போல நீ பேசும் வார்த்தைகள் பரிசுத்தமாக இருக்க தினமும் ஜெபி.
யோபு தன் உதடுகளினால் பாவஞ் செய்யவில்லை (யோபு 2:10)