ஆதி திருச்சபையில் சங்கீதங்களின் பயன்பாடு | வந்து பாருங்கள் - COME AND SEE | மனிதன் மரித்தால் அவன் திரும்ப வாழமுடியுமா?
==================
ஆதி திருச்சபையில் சங்கீதங்களின் பயன்பாடு
==================
PSALMS..
HEBREW..
@ SEPHER TIHILLIM.. துதித்தல்
@ TEPHILLOTH..
ஜெபித்தல்
GREEK..
@ PSALMOI..
பாடுதல்
@ PSALTERION..
இசையுடன் பாடுதல்..
1 நாளாகமம் 16.4-8
1. சபை கூடிவரும்போது
1 கொரிந்தியர் 14:26
நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான். ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.
2. சபை உண்மை ஐக்கியத்தை வெளிப்படுத்தும் போது
யாக்கோபு 5:13
உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன். ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.
3. சபையில் ஒருவருக்கொருவர் போதிக்கப்படும் போது
கொலோசெயர் 3:16-17
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; *சங்கீதங்களினாலும்* கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி; வார்த்தைகளினாலாவது கிரியைகளினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
4. சபையில் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லப்படும் போது
எபேசியர் 5:19-21
19. சங்கீதங்களினாலும்* கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
21. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
5. சபையில் அப்பம் பிட்கும்போது
மாற்கு 14:22-26
லூக்கா 24.44-45
அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள் வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
சிந்தனைக்கு கர்த்தரை சுவிசேஷமாக அறிவிக்கும் போது அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது:
கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள் அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
1 நாளாகமம் 16:9
shalomjjj@gmail.com
whatsapp:+91 9965050301
=====================
ஆராதனை ஆயத்த தியானம்
வந்து பாருங்கள்
COME AND SEE
======================
1. தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்
சங்கீதம் 66:5
அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.
2. கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள்
சங்கீதம் 46:8
பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள்.
3. தேவ ஆட்டுக்குட்டியை வந்து பாருங்கள்
யோவான் 1:36,38
36. இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
38. அவர்: வந்து பாருங்கள் என்றார், அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.
4. கர்த்தருடைய சர்வ ஞானத்தை வந்து பாருங்கள்
யோவான் 4:29
நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்: அவரை வந்து பாருங்கள்: அவர் கிற்ஸ்துதானா என்றாள்.
5. நன்மை அளிக்கும் கர்த்தரை வந்து பாருங்கள்
யோவான் 1:46
அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
6. உயிர்த்தெழுந்த கர்த்தரை வந்து பாருங்கள்
மத்தேயு 28:6
அவர் இங்கே இல்லை, தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்
7. கர்த்தருடைய வருகையின் பயங்கரத்தை வந்து பாருங்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 6:1
ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ *வந்து பார்* என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301
=============================
மனிதன் மரித்தால் அவன் திரும்ப வாழமுடியுமா?
=============================
செயற்கை நுண்ணறிவு AI ஆய்வும் வளர்ச்சியும் முன்னேற்றமும் உள்ள இந்த நாட்களில் எதுவும் சாத்தியம் என்பது மனிதன் எண்ணத்தில் ஓங்கி நிற்கிறது..
செயற்கை மனிதர்கள் வுறுவாக்கபடுகிறரர்கள்..
artificial men.. Robot
அவர்களுக்கு மரணம் கிடையாது..
அழிவு என்பது இல்லை..
தொடர்ந்து இயற்கை மனிதர்களும் ஏன் அழிவில்லாமல் வாழக்கூடது என்கிற எண்ணமும் செயற்கை நுண்ணறிவு மருத்துவ வுலகில் இல்லமல் இல்லை..
Verse for meditation
யோபு 14:14
மனுஷன் செத்தப்பின் பிழைப்பானோ ?_ எனக்கு மாறுதல் எப்போது வருமென்று உனக்கு குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.
மனிதனுக்கு தொடக்கம் உண்டு ஆனால் முடிவு கிடையாது
1. எல்லா கல்லறைகளும் திறக்கப்படும்
யோவான் 5:28
இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்: ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்.
2. சிலர் நித்திய வாழ்வின் உயிர்தெழுதலுக்காக எழுப்பப்படுவர்
யோவான் 5:29
அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
3. சிலர் நித்திய ஆக்கினைக்காக உயிர்த்தெழுவார்கள்
யோவான் 5:29
அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
4. இரட்சிக்கப்பட்டோர் நித்திய மகிமைக்காக எழுப்புவார்கள்
1 கொரிந்தியர் 15:43
கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும். பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.
5. இரட்சிக்கப்படாதோர் நித்திய ஆக்கினைக்காக எழுப்புவார்கள்
தானியேல் 12:2
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
அப்படியென்றால்*
நீங்கள் ஏன் இரட்சிப்பில்லாமல் மரிக்க வேண்டும்?
Verse for meditation
எசேக்கியேல் 33:11
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள், *நீங்கள் ஏன் சாகவேண்டும்* என்கிறார் என்று அவர்களோடே சொல்லு.
1. கிறிஸ்துவில் எல்லோருக்கும் வாழ்கை உள்ளது
யோவான் 5:26
ஏனெனில்,பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார்.
2. தேவன் நித்திய ஜீவனை எல்லோருக்கும் தருகின்றார்
ரோமர் 6:23
பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
3. வாழ்விற்கான வழி எளிமையானது
யோவான் 5:24
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
4. வாழ்வில் நிலைத்திருப்பது நிச்சயமானது
1 யோவான் 5:11-12
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.
குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
5. வாழ்வின் நித்தியம் மகிமையானது
ரோமர் 6:22
இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
6. வாழ்வை புறக்கணிப்பது அழிவானதாகும்
அப்போஸ்தலர் 13:46
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி; முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது. நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
Closing thought.
கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் மட்டுமே பிழைப்பீர்கள்
யோவான் 6:69
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301