=============================
நியமிக்கப்படுதல்
ESPOUSED...ORDAINED
=============================
திருமணத்திலும் .....
இரட்சிப்பிலும்....
@ நியமிக்கப்படுதல் என்ற வார்த்தை திருமணத்தில் மிகவும் முக்கியமானது..
@ அப்படியே இரட்சிப்பிலும் முக்கியமானதே..
@ நியமிக்கப்படுதல் திருமணத்தில் உறுதியை ( நிச்சயத்தை ) காட்டுகிறது..
@ அப்படியே இரட்சிப்பிலும் உறுதியானதே ( நிச்சயமானதே )..
*Erusin* (אירוסין) is the Hebrew term for betrothal. ...
In Hebrew and classical rabbinic literature, betrothal is frequently referred to as sanctification (Hebrew: Kiddushin, קידושין), on account of the bride becoming *"sanctified" (dedicated) to the groom.*
*மணமகனுக்கென்று மணமகள் பிரித்தெடுக்கப்படுதல் அல்லது பரிசுத்தமாக்கப்படுதல் ..*
The Talmud states that there are some methods of performing *erusin* ; by *handing the woman a coin*
*வெளிக்காசு*
or object of nominal value, by handing *her a document.*
*ஆவணம் அல்லது பத்திரம்*
In both cases the woman's consent is required; however, it can be implied by her silence.
*மணமகளுடைய மௌனமே சம்மதமே இதில் பிரதானம்* ..
--------------------------------------------------------------
நியமிக்கப்படுதலின் அவசியம்
ஆதியாகமம் 24:14
நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.
நியமிக்கப்படுதலின் வெளிப்பாடு
ஆதியாகமம் 24.44
நீ குடி என்றும், உன் ஓட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன்.
நியமிக்கப்படுதலின் பாதுகாப்பு
ஓசியா 2.19
நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு *நியமித்துக்* கொள்ளுவேன், நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்.
நியமிக்கப்படுதலின் உண்மை
ஓசியா 2:20
உண்மையாய் உன்னை எனக்கு *நியமித்துக்கொள்ளுவேன்* , நீ கர்த்தரை அறிந்து கொள்ளுவாய்.
நியமிக்கப்படுதல் இரட்சிப்பின் அம்சங்களில் பிரதானமானது
2 கொரிந்தியர் 11:2
நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க *நியமித்தபடியால்* , உங்களுக்காகத் தேவவைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
2 Corinthians 11:2
For I am jealous over you with godly jealousy: for I have *espoused* you to one husband, that I may present you as a chaste virgin to Christ.
தேவனுடைய நியமிக்கப்படுதல் இல்லாமல் இரட்சிப்பை அடைய முடியாது
அப்போஸ்தலர் 13:48
புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.
Acts 13:48
And when the Gentiles heard this, they were glad, and glorified the word of the Lord: and as many as were ordained to eternal life believed.
திருமணத்தில் நியமிக்கப்படாதவர்கள்
யாத்திராகமம் 22:16
நியமிக்கப்படாத* ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன்.
Exodus 22:16
And if a man entice a maid that is not *betrothed* , and lie with her, He shall surely endow her to be his wife.
இரட்சிப்பில் நியமிக்கப்படாதவர்கள்
1 பேதுரு 2.8
அவர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள். அதற்கென்றே *நியமிக்கப்பட்டவர்களாயும்* இருக்கிறார்கள்.
1 Peter 2:8
And a stone of stumbling, and a rock of offence, even to them which stumble at the word, being disobedient: whereunto also they were appointed
இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் தாயின் நிச்சயிக்கப்படுதல்
மத்தேயு 1.18
இயேசுகிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு *நியமிக்கப்பட்டிருக்கையில்* , அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
Matthew 1:18
Now the birth of Jesus Christ was on this wise: When as his mother Mary was *espoused* to Joseph, before they came together, she was found with child of the Holy Ghost.
Closing thought
மகிமைக்காக எத்தனமாக்கப்பட்ட கிருபா பாத்திரம்..*
Vessel prepared unto Glory
தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல்_ தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய்,
அழிவுக்கு எத்தனமாக்கப்பட் கோபாக்கினை பாத்திரம்
Vessel fitted to wrath
ரோமர் 9:23
அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல்_ மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?
Romans 9:22-23
22. What if God, willing to shew his wrath, and to make his power known, endured with much longsuffering the vessels of wrath *fitted to destruction:*
23. And that He might make known the riches of his glory on the vessels of mercy, which He had afore prepared unto glory,
@@@ உங்களுடைய இரட்சிப்பில் தேவனுடைய நிச்சயித்தலை தேவனுடைய பொறுமை விளங்க வைக்கிறது..
@@@ நீங்கள் இரட்சிப்பை ஏற்றுக்கொண்டீர்களானால் நீங்கள் தேவனால் நியமிக்கப்பட்டவர்கள்..
சிந்திக்க
ரோமர் 11:33
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புக்கள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301
=========================
மனிதன் மரித்தால் அவன் திரும்ப வாழமுடியுமா?
=========================
செயற்கை நுண்ணறிவு AI ஆய்வும் வளர்ச்சியும் முன்னேற்றமும் உள்ள இந்த நாட்களில் எதுவும் சாத்தியம் என்பது மனிதன் எண்ணத்தில் ஓங்கி நிற்கிறது..
செயற்கை மனிதர்கள் வுறுவாக்கபடுகிறரர்கள்..
artificial men.. Robot
அவர்களுக்கு மரணம் கிடையாது..
அழிவு என்பது இல்லை..
தொடர்ந்து இயற்கை மனிதர்களும் ஏன் அழிவில்லாமல் வாழக்கூடது என்கிற எண்ணமும் செயற்கை நுண்ணறிவு மருத்துவ வுலகில் இல்லமல் இல்லை..
========================
*Verse for meditation..*
_மனுஷன் செத்தப்பின் பிழைப்பானோ ?_ எனக்கு மாறுதல் எப்போது வருமென்று உனக்கு குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.
யோபு 14:14
========================
மனிதனுக்கு தொடக்கம் உண்டு ஆனால் முடிவு கிடையாது
1. எல்லா கல்லறைகளும் திறக்கப்படும்
யோவான் 5:28
இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்: ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்.
2. சிலர் நித்திய வாழ்வின் உயிர்தெழுதலுக்காக எழுப்பப்படுவர்
யோவான் 5:29
அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
3. சிலர் நித்திய ஆக்கினைக்காக உயிர்த்தெழுவார்கள்
யோவான் 5:29
அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
4. இரட்சிக்கப்பட்டோர் நித்திய மகிமைக்காக எழுப்புவார்கள்
1 கொரிந்தியர் 15:43
கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும். பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.
5. இரட்சிக்கப்படாதோர் நித்திய ஆக்கினைக்காக எழுப்புவார்கள்
தானியேல் 12:2
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
========================
அப்படியென்றால்
*நீங்கள் ஏன் இரட்சிப்பில்லாமல் மரிக்க வேண்டும்?*
*Verse for meditation..*
எசேக்கியேல் 33:11
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள், *நீங்கள் ஏன் சாகவேண்டும்* என்கிறார் என்று அவர்களோடே சொல்லு.
1. கிறிஸ்துவில் எல்லோருக்கும் வாழ்கை உள்ளது
யோவான் 5:26
ஏனெனில்,பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார்.
2. தேவன் நித்திய ஜீவனை எல்லோருக்கும் தருகின்றார்
ரோமர் 6:23
பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
3. வாழ்விற்கான வழி எளிமையானது
யோவான் 5:24
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
4. வாழ்வில் நிலைத்திருப்பது நிச்சயமானது
1 யோவான் 5:11-12
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.
குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
5. வாழ்வின் நித்தியம் மகிமையானது
1 யோவான் 5:11-12
இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
ரோமர் 6:22
6. வாழ்வை புறக்கணிப்பது அழிவானதாகும்
அப்போஸ்தலர் 13:46
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி; முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது. நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
Closing thought.
*கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் மட்டுமே பிழைப்பீர்கள்..*
யோவான் 6:69
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301