அருட்செய்தி- Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
==============
மலைகள் சொல்லும் நிலைகள்
===============
1 இராஜாக்கள் 20:28
கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், *மலைகளின் தேவனாயிருக்கிறார்.
ஏசாயா 26:4
கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா *நித்திய கன்மலையாயிருக்கிறார்.
1 சாமுவேல் 2:2
கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.
1 கொரிந்தியர் 10:4
எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
1. அரராத் மலை
நோவா- பேழை
ஆதியாகமம் 8:4(1-22)
ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.
அரராத் மலை (Mount Ararat) துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இது ஆர்மேனியா நாட்டின் எல்லைக்கு 32 கி.மீ. தெற்காகவும், ஈரான் எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளது.
2. மோரியா மலை
ஆபிரகாம்- ஈசாக்கு (பலி)
ஆதியாகமம் 22:2(1-18)
அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
3. சீனாய் மலை
மோசே- 10 கட்டளை
யாத்திராகமம் 19:20(1-25)
கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.
யாத்திராகமம் 24:16
கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது; ஏழாம்நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.
யாத்திராகமம் 31:18; 34:2
சினாய் மலை (அரபு: جبل موسى), அல்லது கெபல் மூசா அல்லது ஜபல் மூசா (மோசேயின் மலை) எகிப்தின் சினாய் குடாவிலுள்ள ஒரு மலையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 2,285 மீட்டர் உயரமானதாகும். சூழவுள்ள சமவெளியிலிருந்து செங்குத்தாக உயர்ந்து காணப்படுகிறது.
3. சீயோன் மலை
தாவீதின் நகரம்- பரிசுத்த மலை
2 சாமுவேல் 5:7
ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.
எபூசியர்களின் கோட்டை நகரமாகிய எபூசுவின் பெயர்தான் சீயோன். இது எருசலேமின் தென்கிழக்கு மலைமீது இருந்தது. தாவீது இந்த நகரத்தைக் கைப்பற்றிய பின்பு, இங்கே தன் அரண்மனையைக் கட்டினார். இது “தாவீதின் நகரம்” என்று அழைக்கப்பட்டது. (2 சாமுவேல் 5:7, 9) ஒப்பந்தப் பெட்டியை தாவீது சீயோனுக்குக் கொண்டுவந்த பின்பு, இந்த மலை யெகோவாவுக்குப் பரிசுத்தமான மலையாக ஆனது
சங்கீதம் 14:7
சங்கீதம் 20:2
சங்கீதம் 48:2
சங்கீதம் 78:68
சங்கீதம் 87:2
சங்கீதம் 128:5
சங்கீதம் 134:3
4. கர்மேல் மலை
எலியா- 450 பாகால் தீர்க்கத்தரிசிகள்
1 இராஜாக்கள் 18:39(1-40)
ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.
கார்மேல் மலை (Mount Carmel, எபிரேயம்: הַר הַכַּרְמֶל, Har HaKarmel / Har ha Karmell (அர்த்தம்: கடவுளின் திராட்சைத் தோட்டம்); கிரேக்க மொழி: Κάρμηλος, Kármēlos; அரபு மொழி: الكرمل, Kurmul or جبل مار إلياس Jabal Mar Elyas 'Mount Saint Elias') என்பது தென் இசுரேலில் மத்தியதரையிலிருந்து தென் கிழக்காக நீண்டிருக்கும் கடற்கரையோர மலைத்தொடராகும். இத்தொடர் யுனெஸ்கோவின் உயிர்க்கோளம் ஓதுக்கீட்டுப் பகுதியும் பல நகரங்களினைக் கொண்டதும் ஆகும். குறிப்பாக, இசுரேலின் மூன்றாவது பெரிய நகரான கைஃபா இதன் தென் சரிவில் அமைந்துள்ளது.
5. ஒலிவ மலை
இயேசுவின் ஜெபம்- வருகை
லூக்கா 21:37
அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
அப்போஸ்தலர் 1:11(1-12)
கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
ஒலிவ மலை (Mount of Olives அல்லது Mount Olivet, எபிரேயம்: הַר הַזֵּיתִים, Har HaZeitim; அரபு மொழி: جبل الزيتون, الطور, Jabal az-Zaytūn, Aț-Țūr) என்பது எருசலேம் பழைய நகருடன் கிழக்கிலிருந்து இணையும் மலைத் தொடராகும்.[1] இதன் சரிவுப் பகுதிகளை ஒலிவ மரங்கள் மூடியிருந்ததால் இதற்கு ஒலிவ மலை என்ற பெயர் கிடைத்தது.
இதன் தென் பகுதி பண்டைய யூதேய அரசின் இடுகாடாகவிருந்தது.[2] இம்மலை யூதப் பாரம்பரியத்தின் மத்தியமாகவிருக்கிறது. இது 3,000 வருடங்களாக யூதர்களின் இடுகாடாக இருந்து வந்து, கிட்டத்தட்ட 150,000 சமாதிகளைக் கொண்டுள்ளது.[3] இயேசுவின் வாழ்வின் சில முக்கிய சம்பவங்கள் நற்செய்திகளில் தொடர்புள்ளவாறு இங்கு இடம்பெற்றுள்ளன. திருத்தூதர் பணிகள் இங்கிருந்துதான் இயேசு விண்ணகம் சென்றார் எனக் குறிப்பிடுகின்றது.
7. கொல்கொதா மலை
இயேசு- சிலுவை
யோவான் 19:17
அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
மத்தேயு 27:33
மாற்கு 15:22
கொல்கொதா (Golgotha) என்பது பழங்கால எருசலேம் நகரின் மதில்சுவர்களுக்கு வெளியே இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடத்துக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது கல்வாரி (Calvary) அல்லது கபாலஸ்தலம் என்றும் புதிய ஏற்பாட்டில் அழைக்கப்படுகிறது
--------------------
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
EC-Chennai Diocese
8098440373, 8344571502
அருட்செய்தி- Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
=============
தயவு (தயை) பெற்றவர்கள்
=============
நீதிமொழிகள் 12:2
நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்
சங்கீதம் 145:9
சங்கீதம் 68:10
1. யோசேப்புக்கு தயவு
ஆதியாகமம் 39:21
கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.
2. தானியேலுக்கு தயவு
தானியேல் 1:9
தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.
3. தாவீதுக்கு தயவு
1 சாமுவேல் 16:22
சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என் கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்று சொல்லச் சொன்னான்.
4. யோவாபுக்கு தயவு
2 சாமுவேல் 14:22
அப்பொழுது யோவாப் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி, ராஜாவை வாழ்த்தி, ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததினால், என் ஆண்டவனாகிய ராஜாவின் கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.
5. ரூத்துக்கு தயவு
ரூத் 2:10
அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.
6. அன்னாளுக்கு தயவு
1 சாமுவேல் 1:18
அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.
7. எஸ்தருக்கு தயவு
எஸ்தர் 2:9,15,17
அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயை கிடைத்தது;
----------------
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502
அருட்செய்தி-GRACE NEWS
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
============
விலையேறப்பெற்றது
Very precious
=============
1. விலையேறப்பெற்ற இரத்தம்
1 பேதுரு 1:19
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
2. விலையேறப்பெற்ற விசுவாசம்
1 பேதுரு 1:7,19
அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
3. விலையேறப்பெற்ற கல்
1 பேதுரு 2:4
மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்...
4. விலையேறப்பெற்ற குணம்
1 பேதுரு 3:4
அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
5. விலையேறப்பெற்ற தைலம்
யோவான் 12:3
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
6. விலையேறப்பெற்ற ஞானம்
நீதிமொழிகள் 3:13-15
13]ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
14]அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.
15]முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.
7. விலையேறப்பெற்ற வஸ்திரம்
லூக்கா 16:19
ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.
===========
தியானத்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
8098440373
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
=============
நம்மை விட்டுவிடாத கர்த்தர்
==============
1. நம்மைத் தெரிந்துகொண்டவர் வெறுத்துவிடவில்லை
ஏசாயா 41:9(8-14)
நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் *உன்னை வெறுத்துவிடவில்லை* என்று சொன்னேன்.
ஏசாயா 42:1
ஏசாயா 44:1
ஏசாயா 48:10
லேவியராகமம் 26:44
2. நம்மை அறிந்துகொண்டவர் தள்ளிவிடவில்லை
ரோமர் 11:2(1-4)
வன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை
ஓசியா 13:5
நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன்.
ஆமோஸ் 3:2
3. நம்மைப் புரிந்துகொண்டவர் கைவிடவில்லை
நெகேமியா 9:19(1-24)
நீர் உம்முடைய மிகுந்த மனவுருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும் அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை.
உபாகமம் 4:31
உபாகமம் 31:6,8
யோசுவா 1:5
1 நாளாகமம் 28:20
எபிரெயர் 13:5
===========
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
================
கர்த்தரின் கருத்தான வார்த்தைகள்
===============
1. நான் தெரிந்துகொண்டேன்
ஏசாயா 41:9
நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.
ஏசாயா 48:10
ஆகாய் 2:23
யோவான் 15:16
1 சாமுவேல் 16:1
1 இராஜாக்கள் 8:10
1 இராஜாக்கள் 11:37
1 நாளாகமம் 28:6
2 நாளாகமம் 6:6
2. நான் அறிந்துகொண்டேன்
ஓசியா 13:5(4-9)
நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன்.
ஆமோஸ் 3:2
3. நான் மீட்டுக்கொண்டேன்
ஏசாயா 43:1
பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
ஏசாயா 44:22
சகரியா 10:8
4. நான் காத்துகொண்டேன்
யோவான் 17:12
நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்
5. நான் வேண்டிக்கொண்டேன்
லூக்கா 23:32
நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து என்றார்.
===========
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI- Chennai Diocese
8098440373, 8344571502