=============
கேள்விகள்
விடுகதை: அவள் யார்?
==============
1. ஒன்பது எழுத்து பெயருடையவள். முதல் பாதி தன் ஊரைக் கொண்டவள். இரண்டாம் பகுதி பாக்கியவதியைக் கொண்டவள். - அவள் யார்?
2. கண்களுக்கு மையிட்டு தலையைச் சிங்காரித்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து டமார் என்று கீழே விழுந்து படார் என்று மண்டை உடைந்தது. - அவள் யார்?
3. செத்த ஏழு பிணத்தை காவல் காத்தாளாம் ஒருத்தி அவள் யார்?
4. பேலியாளின் மகனுக்கு புத்திசாலி மனைவி, முரடணான கணவனுக்கு ரூபவதி மனைவி அவள் யார்?
5. பதான் அராம் ஊர்க்காரி பத்தரை மாற்று தங்கக்காரி பக்குவமான பணிவிடைக்காரி அவள் யார்?
.
6. கண்களுக்குப் பிரியமானவள் கனிதரும் செடியைப் பெற்றவள். - அவள் யார்?
7. B. A. , B. L. படிக்கல
Black கோட்டும் போடல
Best ஆக நியாயம் தீர்த்த
First ஆன தீர்க்கதரிசி
- அவள் யார்?
8. எருசலேம் எக்ஸ்பிரசில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் ஒரு பெண் பரிசோதகர் தீர்ப்பு கொடுத்து நிற்கிறாள். - அவள் யார்?
9. இவளுக்கு பெயர் இரண்டுண்டு. இகத்தில் வாழ்வும் இரண்டுண்டு. நண்பர்கள் வட்டம் உடனுண்டு. - அவள் யார்?
10. கண்டுபிடிப்பதில் அரிதாம். முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்ததாம். என்றும் அணையா விளக்காம். - அவள் யார்?
விடுகதை: அவள் யார்? (பதில்கள்)
========
1. ஒன்பது எழுத்து பெயருடையவள். முதல் பாதி தன் ஊரைக் கொண்டவள். இரண்டாம் பகுதி பாக்கியவதியைக் கொண்டவள். - அவள் யார்?
Answer: மகதலேனா மரியாள்.
மத்தேயு 28:1
Answer: கிலேயோப்பா மரியாள்
யோவான் 19:25
2. கண்களுக்கு மையிட்டு தலையைச் சிங்காரித்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து டமார் என்று கீழே விழுந்து படார் என்று மண்டை உடைந்தது. - அவள் யார்?
Answer: யேசபேல்
2 இராஜாக்கள் 9:30
3. செத்த ஏழு பிணத்தை காவல் காத்தாளாம் ஒருத்தி - அவள் யார்?
Answer: ரிஸ்பாள்
2 சாமுவேல் 21:9,10
4. பேலியாளின் மகனுக்கு புத்திசாலி மனைவி, முரடணான கணவனுக்கு ரூபவதி மனைவி. - அவள் யார்?
Answer: அபிகாயில்
1 சாமுவேல் 25:3,17
5. பதான் அராம் ஊர்க்காரி பத்தரை மாற்று தங்கக்காரி பக்குவமான பணிவிடைக்காரி. - அவள் யார்?
Answer: ரெபேக்காள்
ஆதியாகமம் 24:15-21
6. கண்களுக்குப் பிரியமானவள் கனிதரும் செடியைப் பெற்றவள். - அவள் யார்?
Answer: ராகேல்
ஆதியாகமம் 30:22-24
ஆதியாகமம் 49:22
7. B. A. , B. L. படிக்கல
Black கோட்டும் போடல
Best ஆக நியாயம் தீர்த்த
First ஆன தீர்க்கதரிசி
அவள் யார்?
Answer: தெபொராள்
நியாயாதிபதி 4:4,5
8. எருசலேம் எக்ஸ்பிரசில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் ஒரு பெண் பரிசோதகர் தீர்ப்பு கொடுத்து நிற்கிறாள். - அவள் யார்?
Answer: உல்தாள்
2 நாளாகமம் 34:22-25
9. இவளுக்கு பெயர் இரண்டுண்டு. இகத்தில் வாழ்வும் இரண்டுண்டு. நண்பர்கள் வட்டம் உடனுண்டு. - அவள் யார்?
Answer: தொற்காள்
அப்போஸ்தலர் 9:36-40
10. கண்டுபிடிப்பதில் அரிதாம். முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்ததாம். என்றும் அணையா விளக்காம். - அவள் யார்?
Answer: குணசாலியான ஸ்திரீ
நீதிமொழிகள் 31:10
===========
கண்டுபிடி: பாதரட்சை
============
1. உன் கால்களில் இருக்கிற பாதரட்சையை கழற்றி போடு என சொல்லப்பட்ட இருவர் யார்?
2. ----------, --------- உன் பாதரட்சையின் கீழிருக்கும்.
3. உன் கால்களில் இருக்கிற பாதரட்ச்சைகளை கழற்று என யாருக்கு சொல்லப்பட்டது ?
4. உன் பாதரட்சையை உன் பாதங்களில் தொடுத்து கொள் என யாரிடம் சொல்லப்பட்டது?
5. உன் அறையைக் கட்டி உன் பாதரட்ச்சைகளை தொடுத்து கொள் யார் யாரிடம் சொன்னது?
6. சுவிசேஷத்திற்குரிய பாதரட்சை எது?
7. இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு என்ன?
8. தன் கால்களில் இருந்த பாதரட்சையில் ரத்தத்தை வடிய விட்டவன் யார்?
9. எத்தனை வருஷம் பாதரட்சைகள் பழையதாய் போகவில்லை?
10. எதின் மேல் பாதரட்சையை எறிவேன்?
பதில்: பாதரட்சை
============
1. உன் கால்களில் இருக்கிற பாதரட்சையை கழற்றி போடு என சொல்லப்பட்ட இருவர் யார்?
Answer: மோசே
யாத்திராகமம் 3:4,5
Answer: யோசுவா
யோசுவா 5:15
2. -----------, ------------ உன் பாதரட்சையின் கீழிருக்கும்.
Answer: இரும்பும், வெண்கலமும்.
உபாகமம் 33:25
3. உன் கால்களில் இருக்கிற பாதரட்சைகளை கழற்று என யாருக்கு சொல்லப்பட்டது ?
Answer: ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவிற்கு
ஏசாயா 20:2
4. உன் பாதரட்சையை உன் பாதங்களில் தொடுத்துக்கொள் என யாரிடம் சொல்லப்பட்டது?
Answer: எசேக்கியேலிடம்
எசேக்கியேல் 24:17
5. 'உன் அறையைக் கட்டி உன் பாதரட்சைகளை தொடுத்துக்கொள்' யார் யாரிடம் சொன்னது?
Answer: கர்த்தருடைய தூதன் பேதுருவிடம்
அப்போஸ்தலர் 12:8
6. சுவிசேஷத்திற்குரிய பாதரட்சை எது?
Answer: ஆயத்தம் என்னும் பாதரட்சை
எபேசியர் 6:15
7. இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு என்ன?
Answer: ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி மற்றவனுக்கு கொடுப்பான்
ரூத் 4:7
8. தன் கால்களில் இருந்த பாதரட்சையில் ரத்தத்தை வடிய விட்டவன் யார்?
Answer: செருயாவின் குமாரன் யோவாப்
1 இராஜாக்கள் 2:5
9. எத்தனை வருஷம் பாதரட்சைகள் பழையதாய் போகவில்லை?
Answer: 40 வருஷம்
உபாகமம் 29:5
10. எதின் மேல் பாதரட்சையை எறிவேன்?
Answer: ஏதோமின் மேல்
சங்கீதம் 60:8
சங்கீதம் 108:9
==============
மலைளை (பொருத்துக)
==============
1. பேழை - சேயீர்
2. கிழக்கேயுள்ள மலை - ஓர்
3. ஏசா - ஒலிவமலை
4. யாக்கோபு - சீனாய்
5. கர்த்தருடைய மகிமை - கில்போவா
6. ஆபரணங்கள் - சீயோன்
7. ஆரோன் - ஓரேப்
8. மோசே - கீலேயாத்
9. பாராக் - மோரியா
10. யோதாம் - செப்பார்
11. அபிமெலேக்கு - அரராத்
12. சவுல் - சல்மோன்
13.சாலொமோன் - தாபோர்
14. நரிகள் - அபாரீம்
15. இயேசு - கெரிசீம்
மலைளை (பொருத்துக)
==============
1. பேழை - அரராத்
ஆதியாகமம் 8 : 4
2. கிழக்கேயுள்ள - செப்பார்
ஆதியாகமம் 10:30
3. ஏசா - சேயீர்
ஆதியாகமம் 36:8
4. யாக்கோபு - கீலேயாத்
ஆதியாகமம் 31:20,21
5. கர்த்தருடைய மகிமை - சீனாய்
ஆதியாகமம் 24:16
6. ஆபரணங்கள் - ஓரேப் யாத்திராகமம்
ஆதியாகமம் 33:6
7. ஆரோன் - ஓர் எண்ணாகமம்
ஆதியாகமம் 33:39
8. மோசே - அபாரீம் எண்ணாகமம்
ஆதியாகமம் 27:12
9. பாராக் - தாபோர் நியாயாதிபதிகள்
ஆதியாகமம் 4:12
10. யோதாம் - கெரிசீம் நியாயாதிபதி
ஆதியாகமம் 9:7
11. அபிமெலேக்கு - சல்மோன் நியாயாதிபதிகள்
ஆதியாகமம் 9:48
12. சவுல் - கில்போவா 1 சாமுவேல்
ஆதியாகமம் 31:8
13. சாலமோன் - மோரியா 2நாளாகமம்
ஆதியாகமம் 3:1
14. நரிகள் - சீயோன் புலம்பல்
ஆதியாகமம் 5:18
15. இயேசு - ஒலிவமலை யோவான்
ஆதியாகமம் 8:1